Pages

Search This Blog

Wednesday, December 18, 2013

பக்தி பாடல் - கற்பூர நாயகியே

கற்பூர நாயகியே! கனகவல்லி!
காளி மகமாயி! கருமாரி அம்மா!
பொற்கோவில் கொண்ட சிவ காமியம்மா!
பூவிருந்த வல்லி தெய்வானையம்மா!
விற்கால வேதவல்லி விசாலாட்சி!
விழிக்கோல மாமதுரை மீனாட்சி!
சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே!
சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே!

(கற்பூர)

புவன முழுதாளுகின்ற புவனேஸ்வரி!
புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி!
நவநவமாய் வடிவாகும் நாகேஸ்வரி!
நம்பினவர் கைவிளக்கே ஸர்வேஸ்வரி!
கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி!
காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி!
உவமான பரம்பொருளே ஜகதீஸ்வரி!
உன்னடிமைச் சிறியேனை நீயாதரி!

(கற்பூர)

உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்த
உறைவிடத்தில் முறையிடுவேன் தாயே! எந்தன்
அன்னையவள் நீயிருக்க உலகில் மற்ற
அன்னியரைக் கெஞ்சிடுதல் முறையோ அம்மா!
கண்ணீரைத் துடைத்துவிட ஓடி வாம்மா!
காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா!
சின்னவளின் குரல்கேட்டுன் முகம் திருப்பு!
சிரித்தபடி என்னைத் தினம் வழி அனுப்பு!

(கற்பூர)

கண்ணிரண்டும் உன்னுருவே காண வேண்டும்!
காலிரண்டும் உன்னடியே நாட வேண்டும்!
பண்ணமைக்கும் நா உனையே பாட வேண்டும்!
பக்தியோடு கையுனையே கூடவேண்டும்!
எண்ணமெல்லாம் உன் நினைவே ஆக வேண்டும்!
இருப்பதெல்லாம் உன்னுடையதாக வேண்டும்!
மண்ணளக்கும் சமயபுர மாரியம்மா!
மகனுடைய குறைகளையும் தீருமம்மா!

(கற்பூர)

நெற்றியினுள் குங்குமமே நிறைய வேண்டும்!
நெஞ்சினுலும் உன் திருநாமம் வழியவேண்டும்!
கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்!
கவிதையிலே உன் நாமம் வாழ வேண்டும்!
சுற்றமெல்லாம் நீடுழி வாழ வேண்டும்!
ஜோதியிலே நீயிருந்து ஆள வேண்டும்!
மற்றதெல்லாம் நானுனக்குச் சொல்லலாமா!
மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா!

(கற்பூர)

அன்னைக்கு உபசாரம் செய்வதுண்டோ!
அருள் செய்ய இந்நேரம் ஆவதுண்டோ!
கண்ணுக்கு இமையின்றிக் காவலுண்டோ!
கன்றுக்கு பசுவின்றி சொந்தமுண்டோ!
முன்னைக்கும் பின்னைக்கும் பார்ப்பதுண்டோ!
முழுமைக்கும் நீ எந்தன் அன்னையன்றோ!
எண்ணெய்க்கும் விளக்குக்கும் பேதமுண்டோ!
என்றைக்கும் நானுந்தன் பிள்ளையன்றோ!

(கற்பூர)

அன்புக்கே நானடிமையாக வேண்டும்!
அறிவுக்கே என் காது கேட்க வேண்டும்!
வம்புக்கே போகாமல் இருக்க வேண்டும்!
வஞ்சத்தை என் நெஞ்சம் மறக்க வேண்டும்!
பண்புக்கே உயிர் வாழ ஆசை வேண்டும்!
பரிவுக்கே நானென்றும் பணிய வேண்டும்!
என்பக்கம் இவையெல்லாம் இருக்க வேண்டும்!
என்னோடு நீ என்றும் வாழ வேண்டும்!

(கற்பூர)

கும்பிடவோ கையிரண்டும் போதவில்லை!
கூப்பிடவோ நாவொன்றால் முடியவில்லை!
நம்பிடவோ மெய்தன்னில் சக்தியில்லை!
நடந்திடவோ காலிரண்டால் ஆகவில்லை!
செம்பவள வாயழகி உன்னெழிலோ!
சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை!
அம்பளவு விழியாலே உன்னை என்றும்
அடிபணியும் ஆசைக்கோர் அளவுமில்லை!

(கற்பூர)

காற்றாகி கனவாகிக் கடலாகினாய்!
கயிறாகி உயிராகி உடலாகினாய்!
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்!
நிலமாகி பயிராகி உணவாகினாய்!
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்!
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்!
போற்றாத நாளில்லை தாயே உன்னை!
பொருளோடும் புகழோடும் வைப்பாய் என்னை!

(கற்பூர)

Bakthi Paadal - Karpoora Naayagiye Kanagavalli

பக்தி பாடல் - சரணம் அய்யப்பா சுவாமி

ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

சரணகீர்த்தனம் சக்தமானசம்
பரணலோலுபம் நர்த்தனாலஸம்
அருணபாஸுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

ப்ரணயஸத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணதகல்பகம் ஸுப்ரபாஞ்சிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

துரகவாகனம் ஸுந்தரானனம்
வரகதாயுதம் வேதவ-வர்ணிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

த்ரிபுவனார்சிதம் தேவதாத்மகம்
த்ரனயனப்ரபும் திவ்யதேசிகம்
த்ரிதசபூஜிதம் சிந்திதப்ப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

பவபயாவஹம் பாவகாவுகம்
புவனமோகனம் பூதிபூஷணம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

களம்ருதஸ்மிதம் ஸுந்தரனானம்
களபகோமளம் காத்ரமோஹனம்
களபகேசரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

ச்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ச்ருதிவிபூஷணம் ஸாதுஜீவனம்
ச்ருதிமனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

Bakthi Paadal - Sharanam Ayyappa Swamy

நான் கடவுள் - மாதா உன் கோவிலில்

மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்
மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்
தாய் என்று உன்னைத் தான்
தாய் என்று உன்னைத் தான்
பிள்ளைக்கு காட்டினேன் மாதா

மாதா உன் கோவிலில் ...

Naan kadavul - Matha un kovilil

காதலில் விழுந்தேன் - உன் தலை முடி

உன் தலை முடி உதிர்வதை கூட தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒரு நொடி பிரிவினை கூட ஏற்க முடியாது கண்ணே
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்
உன்னை வானத்தில் தேடியே மேகம் காநீறாய் சிந்துதோ
உன்னை நான் சேரவே பூமி என்னோடு சுற்றுதோ

உன் தலை முடி உதிர்வதை கூட தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒரு நொடி பிரிவினை கூட ஏற்க முடியாது கண்ணே
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்

உச்சந்தலை மீது நீ குடுக்கும் முத்தம்
உயிரின் மீது பட்டு தெறிக்கும்
கைகள் பற்றி கொண்டே பேசி கொள்ளும் நேரம் ஏக்கம்
எதிர் வரும் காற்று உன் பெயரை என்மேல் தினமும் கிறுக்கி விட்டு போகும்
நெற்றி பொட்டுக்குள்ளே கொத்திவிட்டு என்னை மோதும்
உன் கண்ணில் பட்ட பூவை கூந்தலுக்குள் வைப்பேன்
காலில் பட்ட கல்லை மூக்குத்தியில் வைப்பேன்
கையில் பட்ட என்னை உன் இதயபையில் வைப்பேன்
என்னை கொடுப்பேன் .. ஒ ..

உன் தலை முடி உதிர்வதை கூட தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒரு நொடி பிரிவினை கூட ஏற்க முடியாது கண்ணே
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்

நீயும் என்னை நித்தம் சேர வேண்டும் என்று
தொலைந்து போக கொஞ்சம் ஆசை
நான் அணைத்து தூங்கும் மீசை வைத்த பொம்மை நீயே
நெஞ்சில் நிலமாக விழுந்து கிடக்கின்றேன்
தேய்ந்து கொள் என்னை முழுதும்
தொட்டு நின்று தூங்கும் என் பார்வை எந்தன் முத்தம் தினமும்
உன்னை பற்றி எழும் காதல் கோடி ஆனேன்
உன் கையெழுத்தை தாங்கும் காகிதம் நானே
உன் உள்ளங்கையில் சுற்றும் பம்பரமும் நானே
எந்தன் உயிரே ..ஒ ..

உன் தலை முடி ...

Kadhalil Vizhunthen - Un Thalai Mudi

காதலில் விழுந்தேன் - ஏய் அட்ரா அட்ரா

ஏய் அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க
அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க
அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க
ஏய் மாடு செத்தா மனுஷன் தின்னான்
தோல வெச்சி மேல கட்டி
அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க
அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க
அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க

அஹ ...ஆஹஹஹ் ..
ஏய் ஒய்யாரமா ஊட்டுல கோழி கொளம்பு கொதிக்குது
எலிபாண்டு காதுல கிச்க்மட்டேர் விக்குது
எல்லிசு ரோட்டுல புள்ளிமானு நிக்குது
வேட்டையாடி புடிங்கட வேகவெச்சி தின்னுங்கட
எங்கடா இன்கடா ஆல உடுங்க தேவுடா
அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க
அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க
அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க

அஹ ...ஆஹஹ் ..
ஏய்..ஏய் அப்டிபோடு ..ஆஹஹ்..ஏய்..ஆஹா
ஏய் குதாங்கல்லு பொட்டு வெச்சு ஓலைகுடிச நிக்குது
நட்டாங்கல்லு பொட்டு வெச்சு நாடாங்கல்லு இருக்குது
அச்சச்சோ மூனுபோகம் ஒரு போகம் ஆச்சுடா
காயவேச்ச நெல்லு இப்போ கடதெருவே போச்சுடா
நட்டு வெச்ச நாத்து இப்போ கருவாடா ஆச்சுடா
அரைவயிறு காவயிறு பசிதான் பட்டினி
சாவுதான் எத்தினி ? எங்கடா இங்கடா
அடிங்கடா அடிங்கடா ராஜாவுக்கு கேட்கட்டும்
அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க

அஹ ...ஓஹ் ஓஹ் ..ஆஹஹ்..ஓஹொஹ் ..ஒய் ஒய் ஒய் ஒய்..
கிருகிருகிறு ராட்டனம் தலைய சுத்தி ஓடுது
பரபரபர பட்டணம் ஆக்கபோலில் விழிக்குது
வெள்ளிக்காசு வேணுண்டா கன்னகாட்டு தேவுடா
அடிங்கடா அடிங்கடா
அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க

ஆஹா ..ஏய் அப்படிதான் ..ஏய் ஓஹொஹ் ..ஏய் ..இப்படித்தான்
விருவிருவிறு மீட்டெறு இங்கிலிசு மாட்டேரு
ராத்திரிக்கு குஅட்டேறு விடிஞ்சிரிச்சு எந்திரி
அட்ரா அட்ரா அட்ரா அட்ரா
அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க
அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க
ஆஹஹஹஹஹஹ் ..
ஆஹஹஹஹஹஹ்..
நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க நாக்கு
நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க நாக்கு
நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க நாக்கு

Kadhalil Vizhunthen - Nakku Mukka

காதலில் விழுந்தேன் - தோழியா என் காதலியா

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே(2)
மடி மீது தூங்கச் சொல்கிறாய்
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்
ஓ ஓ ஓ பெண்ணே

ஏனடி என்னைக் கொல்கிறாய்
உயிர் வரை சென்று தின்கிறாய்
மெழுகு போல் நான் உருகினேன்
என் கவிதையே என்னைக் காதல் செய்வாய்

கனவிலும் நீ வருகிறாய்
என் இமைகளைத் தொட்டுப் பிரிக்கிறாய்
இரவெல்லாம் செத்துப் பிழைக்கிறேன்
உன் பதில் என்ன அதை நீயே சொல்லடி

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே (2)

Lets get it down
Just wanna Give my heart to you
My love is just true
Wanna take you on spark
Come oh you Just be on my side
No I am gonna give it upto cool
Read that Because you
You let me let me get a hold of this
again a true true
First let me tell you who you are
Girl you are made for me forever
You get there but it ought to stop
Oh change your speed now

ஒரு துளி நீர் வேண்டி நின்றேன்
அடை மழை தந்து என்னை மிதக்க விட்டாய்
சிலுவைகள் நான் சுமந்து நின்றேன்
சுகங்களைத் தந்து என்னை நிமிர வைத்தாய்
விழிகள் ஓரம் நீர்த் துளியை
மகிழ்ச்சி தந்து உலர வைத்தாய்
பாலைவனத்தில் பூக்கள் தந்து
சொர்க்கங்களைக் கண்ணருகில் காட்டினாய்
கருப்பு நிறத்தில் கனவு கண்டேன்
காலை நேரத்தில் இரவு கண்டேன்
வெள்ளை நிறத்து தேவதையே
வண்ணங்களைத் தந்து விட்டு என்னருகில் வந்து நில்லு

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே(2)

நம்சனனம்....

இருட்டுக்குள்ளே தனித்து நின்றேன்
மின்மினிப் பூச்சிகள் மிதக்க விட்டாய்
தனி அறையில் அடைந்து விட்டேன்
சிறகுகள் கொடுத்தென்னைப் பறக்க விட்டாய்
அலைகள் அடித்து தொலைந்து விடும்
தீவைப் போல மாட்டிக் கொண்டேன்
இறுதிச் சடங்கில் மிதிகள் படும்
பூவைப் போல கசங்கி விட்டேன்
தெய்வம் பூமிக்கு வருவதில்லை
தாயைப் பதிலுக்கு அனுப்பி வைத்தான்
தாயும் இங்கு எனக்கு இல்லை
எனக்கொரு தாய் அவன் உன் உருவில் தந்து விட்டான்

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே(2)
மடி மீது தூங்கச் சொல்கிறாய்
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்
ஓ ஓ ஓ பெண்ணே

ஏனடி என்னைக் கொல்கிறாய்
உயிர் வரை சென்று தின்கிறாய்
மெழுகு போல் நான் உருகினேன்
என் கவிதையே என்னைக் காதல் செய்வாய்

கனவிலும் நீ வருகிறாய்
என் இமைகளைத் தொட்டுப் பிரிக்கிறாய்
இரவெல்லாம் செத்துப் பிழைக்கிறேன்
உன் பதில் என்ன அதை நீயே சொல்லடி

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே(2)

Kadhalil Vizhunthen - Thozhiya

அக்னி நட்சத்திரம் - ஒரு பூங்காவனம் புதுமணம்

ஒரு பூங்காவனம் புதுமணம்
அதில் ரோமாஞ்சனம் தினம் தினம்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

(ஒரு பூங்காவனம் )

நான் காலைநேரத் தாமரை
என் கானம் யாவும் தேன்மழை
நான் கால்னடக்கும் தேவதை
என் கோவிலிந்த மாளிகை
எந்நாளும் தென்றல் வந்து வீசிடும்
என்னோடு தோழி போலப் பேசிடும்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

(ஒரு பூங்காவனம் )

நான் வானவில்லை வேண்டினால்
ஓர் விலைகொடுத்து வாங்குவேன்
வெண் மேகக் கூட்டம் யாவையும்
என் மேத்தையாக்கித் தூங்குவேன்
சந்தோஷப் பூக்கள் எந்தன் சோலையில்
சங்கீதம் பாடும் அந்தி மாலையில்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

Agni Natchathiram - Oru Poonga Vanam

Followers