Pages

Search This Blog

Friday, December 20, 2013

பாட்ஷா - ரா ரா ரா ராமையா

ஆண் : ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா
அட ரா ரா ரா ராமையா நான் புட்டு புட்டு வைக்க போறேன் பாரையா

===

ஆண் : முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல
நீ ரெண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல (இசை)

ஆண் : முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல
நீ ரெண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல
மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல
நீ நாலாம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல
எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ
எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ
நீ எந்த எட்டில் இப்ப இருக்க நெனச்சுக்கோ

ஆண் : ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா
அஹ ஹா... ரா ரா ரா ராமையா நான் புட்டு புட்டு வைக்க போறேன்
பாரையா ஓ ஹொ ஹொய்

===

ஆண் : ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல
நீ ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல (இசை)
ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல
நீ ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல

ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமில்லை
நீ எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதியில்லை
எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ
எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ
நீ எந்த எட்டில் இப்ப இருக்க நெனச்சுக்கோ ஓ ஹோ

ஆண் : ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா
அட ரா ரா ரா ராமையா நான் புட்டு புட்டு வைக்க போறேன் பாரையா
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா
திக்கு எட்டும்படி சொல்ல போறேன் கேளைய்யா இக்கட

பெண்குழு : ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா
அட ரா ரா ரா ராமையா நான் புட்டு புட்டு வைக்க போறேன் பாரையா

Baashha - Ra Ra Ramiyah

பாட்ஷா - ஸ்டைலு ஸ்டைலு

பெண் : ஸ்டைலு ஸ்டைலு தான் இது சூப்பர் ஸ்டைலு தான்
உன் ஸ்டைலுக் கேத்த மயிலு நானுதான்
ஸ்டைலு ஸ்டைலு தான் இது சூப்பர் ஸ்டைலு தான்
உன் ஸ்டைலுக்கேத்த மயிலு நானுதான்
ஹோய் டச்சு டச்சு டச்சு டச்சு என்ன டச்சு மீ
ஓ கிச்சு கிச்சு கிச்சு கிச்சு என்ன கிச்சுமீ
ஏழு மணிக்கு மேல நானும் இன்பலட்சுமி

ஆண் : பிகரு பிகரு தான் நீ சூப்பர் பிகரு தான்
இந்த பிகருக்கேத்த மைனர் நானு தான்
பிகரு பிகரு தான் நீ சூப்பர் பிகருதான்
இந்த பிகருக்கேத்த மைனர் நானு தான்
ஆ டச்சு டச்சு டச்சு டச்சு என்ன டச்சு மீ
ஒய்..கிச்சு கிச்சு கிச்சு கிச்சு என்ன கிச்சுமீ
ஏழு மணிக்கு மேல நீயும் இன்பலட்சுமி

பெண் : ஸ்டைலு ஸ்டைலு தான் இது சூப்பர் ஸ்டைலு தான்
உன் ஸ்டைலுக்கேத்த மயிலு நானு தான்

===

ஆண் : காதலிச்சா கவிதை வரும் கண்டு கொண்டேன் பெண்ணாலே
பெண் : கருப்பும் ஓர் அழகு என்று கண்டு கொண்டேன் உன்னாலே
ஆண் : எங்கெங்கே ஷாக் அடிக்கும் அறிந்துக்கொண்டேன் பெண்ணாலே
பெண் : எங்கெங்கே தேள் கடிக்கும் தெரிந்து கொண்டேன் உன்னாலே
ஆண் : காஷ்மீர் ரோஜாவே கைக்கு வந்தாயே
மோந்து பார்க்கும் முன்னே முள்ளெடுத்து குத்தாதே
பெண் : அழகு ராஜாவே அவசரம் ஆகாதே
மொட்டு மலரும் முன்னே முட்டி முட்டி சுத்தாதே
ஆண் : அடி ராத்திரி வரவே என் ரகசிய செலவே
ஒரு காத்தடிக்குது சேத்தணைக்கணும் காத்திரு நிலவே

பெண் : ஸ்டைலு ஸ்டைலு தான் இது சூப்பர் ஸ்டைலு தான்
உன் ஸ்டைலுக்கேத்த மயிலு நானுதான்
ஆண் : பிகரு பிகரு தான் நீ சூப்பர் பிகரு தான்
இந்த பிகருக்கேத்த மைனர் நானு தான்

===

பெண் : பச்சரிசி பல்லழகா வாய் சிரிப்பில் கொல்லாதே (இசை)
ஆண் : அழகு மணி தேரழகி அசைய விட்டு கொல்லாதே
பெண் : நெத்தி தொடும் முடியழகா ஒத்தை முடி தாராயோ
ஆண் : கட்டை மலர் குழலழகி ஒத்தை மலர் தாராயோ
பெண் : அங்கே தீண்டாதே ஆசை தூண்டாதே
சும்மா கிடந்த சங்க ஊதி விட்டு போகாதே
ஆண் : ஊடல் கொள்ளாதே உள்ளம் தாங்காதே தலைவி
காய்ச்சல் கொண்டால் தலையணையும் தூங்காதே
பெண் : அட கெட்டது மனசு வந்து முட்டுது வயசு
உன்ன பார்த்த பொழுது வேர்த்த
பெண்களில் நானொரு தினுசு

பெண் : ஸ்டைலு ஸ்டைலு தான் இது சூப்பர் ஸ்டைலு தான்
உன் ஸ்டைலுக்கேத்த மயிலு நானு தான்
ஆண் : பிகரு பிகரு தான் நீ சூப்பர் பிகரு தான்
இந்த பிகருக்கேத்த மைனர் நானு தான்
பெண் : ஆ டச்சு டச்சு டச்சு டச்சு என்ன டச்சு மீ
ஆண் : கிச்சு கிச்சு கிச்சு கிச்சு என்ன கிச்சு மீ
பெண் : ஏழு மணிக்கு மேல நானும் இன்பலட்சுமி

பெண் : ஸ்டைலு ஸ்டைலு தான்
ஆண் : ஹஹ..
பெண் : இது சூப்பர் ஸ்டைலு தான்
ஆண் : ஹஹ..
பெண் : உன் ஸ்டைலுக்கேத்த மயிலு நானுதான்

ஆண் : வாரே வா..பிகரு பிகரு தான் நீ சூப்பர் பிகரு தான்
இந்த பிகருக்கேத்த மைனர் நானு தான்

Baasha - Style Style

பாட்ஷா - தங்கமகன் இன்று

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
கட்டும் ஆடை என்
காதலன் கண்டதும் நழுவியதே
வெட்கத் தாழ்ப்பாள் அது
வேந்தனை கண்டதும் விலகியதே
ரத்தத் தாமரை முத்தம் கேக்குது
வா என் வாழ்வே வா

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்

===

சின்னக் கலைவாணி
நீ வண்ண சிலை மேனி
அது மஞ்சம் தனில் மாறன்
தலை வைக்கும் இன்பத் தலகாணி

ஆசைத் தலைவன் நீ
நான் அடிமை மகராணி
மங்கை இவள் அங்கம் எங்கும் பூச
நீ தான் மருதாணி

ஆண் : திறக்காத பூக்கள் வெடித்தாக வேண்டும்

தென்பாண்டி தென்றல் திரண்டாக வேண்டும்

என்ன சம்மதமா

இன்னும் தாமதமா

ஆண் : தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்

===

தூக்கம் வந்தாலே மனம்
தலையணை தேடாது
தானே வந்து காதல் கொள்ளும் உள்ளம்
ஜாதகம் பார்க்காது

மேகம் மழை தந்தால்
துளி மேலே போகாது
பெண்ணின் மனம் ஆணில் விழ வேண்டும்
விதிதான் மாறாது

என் பேரின் பின்னே நீ சேர வேண்டும்

கடல் கொண்ட கங்கை நிறம் மாற வேண்டும்

எனை மாற்றி விடு

இதழ் ஊற்றி கொடு

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்

கட்டும் ஆடை உன்
காதலன் கண்டதும் நழுவியதோ
வெட்கத் தாழ்ப்பாள் அது
வேந்தனை கண்டதும் விலகியதோ

முத்தம் என்பதன் அர்த்தம் பழகிட
வா என் வாழ்வே வா

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்ashha - Thanga Magan

அருணாசலம் - சிங்கம் ஒன்று புறப்பட்டதே

சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல
காலம் பொறந்திருக்கு நேரம் கனிஞ்சிருக்கு
ஊரும் தெளிஞ்சிருக்கு உண்மை புரிஞ்சிருக்கு
சிங்கம் ஒன்று புறப்பட்டதே

உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு
உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு
ரெண்டில் ஒன்று பார்க்கும் வரைக்கும்
அட ரெண்டு கண்ணில் இல்லை உறக்கம் சபதம் செய்து

சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல
காலம் பொறந்திருக்கு நேரம் கனிஞ்சிருக்கு
ஊரும் தெளிஞ்சிருக்கு உண்மை புரிஞ்சிருக்கு
சிங்கம் ஒன்று புறப்பட்டதே

பெத்தவர்கள் நினைத்ததை முடிப்பான் முடிப்பான்
மற்றவர்கள் சுகத்துக்கு உழைப்பான் உழைப்பான்
சத்தியத்தின் பாதை வழி நடப்பான் நடப்பான்
மக்கள் பணம் மக்களுக்கே கொடுப்பான் கொடுப்பான்
துன்பம் அது முடிகிறதே இவன் சொன்னால் இரவும் விடிகிறதே
ஆஹா ஒரு வார்த்தையிலே அட ஆகாயம்தான் விடிகிறதே
தீமை விலகிட நன்மை பெருகிட

சிங்கம் ஒன்று.. ஹேய்
சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல
காலம் பொறந்திருக்கு நேரம் கனிஞ்சிருக்கு
ஊரும் தெளிஞ்சிருக்கு உண்மை புரிஞ்சிருக்கு
சிங்கம் ஒன்று புறப்பட்டதே

பார்ப்பதற்கு பாமரன் போல் இருப்பான் இருப்பான்
வேளை வந்தால் விஸ்வரூபம் எடுப்பான் எடுப்பான்
கெட்டவங்க முகமூடி கிழிப்பான் கிழிப்பான்
நல்லவங்க சொல்லும் சொல்லை மதிப்பான் மதிப்பான்
பகையே நீ துள்ளாதே இவன் போகும் வழியில் நில்லாதே
சீறும் சிங்கம் இவனல்லோ இவனை புழுவாய் நீ எண்ணாதே
தீமை விலகிட நன்மை பெருகிட

சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல
காலம் பொறந்திருக்கு நேரம் கனிஞ்சிருக்கு
ஊரும் தெளிஞ்சிருக்கு உண்மை புரிஞ்சிருக்கு
சிங்கம் ஒன்று புறப்பட்டதே

Arunachalam - Singam Ondru

அருணாசலம் - நகுமோ ஹேய் சுகமோ

நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி

நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி
நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி
நகுமோ..

வெள்ளி கொலுசுகள் ஓசை ஓச்சை இட
வெள்ளிக் கிழமையில் ஆசை ஆசை வர
முத்தம் தருகையில் மீச மீச வந்து மோகம் தூண்டிவிடுதே
உச்சந்தலையில் என்னை எண்ணிக் கொண்டு
உள்ளங்கால் வரை பின்னி பின்னிக்கொண்டு
முத்தம் தருகையில் மோகமான கிளி உதடு கடிச்சு விட்டதே
நெசமா நெசந்தான்
காயமா பாரும்மா
நகுமோ ஹேய் சுகமோ
தேன் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது ஆடும் இளங்கொடி
நகுமோ ஹோ..

அல்லி மலர்வது இரவு நேரத்துல
மல்லி மலர்வது மாலை நேரத்துல
பெண்மை மலர்வது எந்த நேரத்துல
என்னை கண்டு பிடிச்ச
கட்டை விரல் கொண்டு கோலம் போடுகையில்
கண்ணின் கடைவிழி சாய்ந்து மூடுகையில்
காலின் கொலுசுகள் தாளம் மாறுகையில்
பெண்மை மலர்ந்து நிற்குமே
சரியா சரிதான்
பரிசு இதுதான்

நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி
நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி
நகுமோ..

Arunachalam -  Nagumo Hey Sugamo

அருணாசலம் - மாத்தாடு மாத்தாடு

மாத்தாடு மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு மல்லிகே

கிளி கிளி கிளி பச்ச பசுங்கிளி
வழி வழி வழி விட்டு விலகடி
இடுப்பு மடிப்பில் ஆள முடிக்கும் ஹே வேதவள்ளி

மாத்தாடு மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு மல்லிகே
அம்பிகே ராதிகே தேவிகே மேனகே

மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே

தல தல தல ரெண்டு சிவன் தல
நிற நிற நிறம் நீல கண்ணன் நிறம்
பொம்பள மனச சிரிச்ச பறீக்கும்
ஏய் அருணாச்சலம்
சின்னய்யா கண்ணையா செல்லய்யா சொல்லையா

மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே

அப்பாவி ஆனாலும் அடிமேல் அடிவாங்கும்
அடிச்சாலும் ஊர் கூடி ஆஹான்னு சொல்லுது
என்ன அது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
அடி மேலே அடி வாங்கி அனைவரையும் சொக்க வைக்கும்
மேளக்காரன் கொண்டு வந்த மிருதங்கம் தானே சொன்னது

ஒல்லி ஒல்லி சுப்பந்தான் ஒத்தக்காலு கருப்பன் தான்
ஒரு காலு இருந்தாலும் ஊனறது மேடையில்தான் யாரது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
ஒல்லி ஒல்லி சுப்பையா ஒத்தக்காலு கருப்பன் தான்
நீ சொன்ன ஜாடையெல்லாம் ஊது பத்திதான் அது சொன்னது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே

தாளமில்லா ஆடமிது தப்பான ஆட்டமது
பொம்பளைக்கு புடிக்காத ஆட்டம் அது என்னது என்னது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
சுத்தி சுத்தி ஆடுறது துட்டு கட்டி ஆடுறது
பொம்பளைக்கு புடிக்காத சூதாட்டம் தான் அது சொன்னது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே

ஹேய் மூனு கிளி மூணுக்குமே வேற குணம்
கூண்டுக்குள்ளே போட்டதுமே அத்தனையும் சிவப்பு நிறம் என்னது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
வெத்தலையும் சுண்ணாம்பும் வெட்டிவச்ச களிப்பாக்கும்
ஒன்னாக சேரும்போது சிவக்கிற தாம்புலம்தான் அது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே

ஒருத்தனக்கு கைக்கொடுத்தா ஒருத்தனுக்கு கால்கொடுத்தா
ஒருத்தனத்தான் மாரோடு கட்டிக்கிட்டா பொம்பள யாரது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
வளையலுக்கு கைக்கொடுத்தா கொலுசுக்குத்தான் கால் கொடுத்தா
முந்தானை சேலையைத்தான் மாரோட கட்டிக்கிட்டா பொம்பளை

ஹே ஒருத்தனத்தான் கழட்டிவிட்டா ஒருத்தனத்தான் கட்டிப்புட்டா
ஒருத்தனத்தான் கையோட வச்சிக்கிட்டா பொம்பள யாரது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
இளங்கண்ணை கழட்டிப்புட்டு பசுவைத்தான் கட்டிப்புட்டு
கையோடு ஏந்திக்கிட்டா பால் சொம்புதான் அது வேறெது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே

பலம் பலம் பலம் ரெண்டு வீரன் பலம்
நிறம் நிறம் நிறம் நீலக்கண்ணன் நிறம்
மாமன ஜெயிக்க யாரும் இல்ல
அவந்தாண்டி அருணாச்சலம்
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே

Arunachalam - Maathadu Maathadu

அண்ணாமலை - வந்தேண்டா பால்காரன்

ஹேய்..வந்தேண்டா பால்காரன் - அடடா
பசுமாட்ட பத்தி பாடப்போறேன்
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்
வந்தேண்டா பால்காரன் - அடடா
பசுமாட்ட பத்தி பாடப்போறேன்
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்
புல்லு குடுத்தா பாலு குடுக்கும்
உன்னால முடியாது தம்பி -அட
பாதி புள்ள பொறக்குதப்பா
பசும்பால தாய் பாலா நம்பி

வந்தேண்டா பால்காரன் - அடடா
பசுமாட்ட பத்தி பாடபோறேன்
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்

***

தன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாக பிரிப்பது
பசுவோட வேலையப்பா
அது பிரித்தாலும் பாலோடு தண்ணீரைக் கலப்பது
மனிதனின் மூளையப்பா
தன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாக பிரிப்பது
பசுவோட வேலையப்பா
அது பிரித்தாலும் பாலோடு தண்ணீரைக் கலப்பது
மனிதனின் மூளையப்பா
சாணம் விழுந்தா உரம் பாரு
எருவை எரிச்சா திருநீறு
உனக்கு என்ன வரலாறு
உண்மை சொன்னா தகராறு
நீ மாடு போல உழைக்கலியே - நீ
மனுஷனை ஏய்ச்சு பொழைக்கிறியே

வந்தேண்டா பால்காரன் - அடடா
பசுமாட்ட பத்தி பாடபோறேன்
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்

***

ஆ&பெ குழு : தந்தனா தந்தனா தந்தனா னா
தந்தனா தந்தனா தந்தனா னா
தந்தானனா தன தந்தானனா தன்
தந்தனா தந்தனா தந்தனா னா
தந்தனா தந்தனா தந்தனா..

அட மீன் செத்தா கருவாடு நீ செத்தா வெறும்கூடு
கண்ணதாசன் சொன்னதுங்க
பசு இருந்தாலும் பாலாகும் செத்தாலும் தோலாகும்
நான் கண்டு சொன்னதுங்க
அட மீன் செத்தா கருவாடு நீ செத்தா வெறும்கூடு
கண்ணதாசன் சொன்னதுங்க
பசு இருந்தாலும் பாலாகும் செத்தாலும் தோலாகும்
நான் கண்டு சொன்னதுங்க
அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம்
ஆயுள் வளர்க்கும் ஆட்டுப் பாலுங்க
அண்ணாமலை நான் குடுப்பதெல்லாம்
அன்பு வளர்க்கும் மாட்டுப் பாலுங்க
அன்னை வாரி கொடுத்தது தாய் பாலு
என்னை வாழ வைத்தது தமிழ் பாலு

வந்தேண்டா பால்காரன் - அடடா
பசுமாட்ட பத்தி பாடபோறேன்
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்
புல்லு குடுத்தா பாலு குடுக்கும்
உன்னால முடியாது தம்பி -அட
பாதி புள்ள பொறக்குதப்பா
பசும்பால தாய் பாலா நம்பி

வந்தேண்டா பால்காரன் - அடடா
பசுமாட்ட பத்தி பாடபோறேன்
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்
ஹா ஆஹா ஹா ஓஹோ ஓ
அஹா அஹா ஆஹா ஏய் ஏய் ஏய்
ஆங் ஆங் ஆங் அஹா அஹா ஆஹா
அஹா அஹா ஆஹா அஹா அஹா ஆங் ஆங் (இசை)

Annamalai - Vanthenda Paalkaran

Followers