Pages

Search This Blog

Tuesday, November 26, 2013

நையாண்டி - ஏண்டி பாதகத்தி என்ன

ஏண்டி பாதகத்தி என்ன நீயும் ஏச்சிபுட்ட
ஒருத்தி நீ ஒருத்தி உயிர் காத்த தீச்சிபுட்ட
இப்படியா என் பொழப்பு
என்ன தாண்டி உன் நெனப்பு
இப்படியா என் பொழப்பு
என்ன தாண்டி உன் நெனப்பு

ஏண்டி பாதகத்தி ... பாதகத்தி ...

சிக்கி முக்கி கண்ணாலே என் நெஞ்ச எரிச்சவளே
பட்டாம்பூச்சிய தான் சவுக்கால அடிச்சவளே
என் நெலம தான் மோசம்
இதில் என்ன சந்தோஷம்
என் நெலம தான் மோசம்
இதில் என்ன சந்தோஷம்

ஏண்டி பாதகத்தி ... பாதகத்தி ...
 

Naiyaandi - Yendi Paathagathi

நையாண்டி - முன்னாடி போற புள்ள

முன்னாடி போற புள்ள கள்ளு கொடமா
தள்ளாடி நிக்கிறேனே முழு தடமா

முன்னாடி போற புள்ள கள்ளு கொடமா
தள்ளாடி நிக்கிறேனே முழு தடமா
பின்னாடி நீயும் வர வெட்கம் விடுமா
சொல்லாத ஆச வந்து சொக்கி விழுமா
அ பட பட பட படவென
பந்தயம் வச்சானே
அடி நாக்கில் சின்ன பையன்
சக்கர வச்சானே
ம் மல மல மல மல மலன்னு
சம்மளம் கொண்டேனே
வெடுக்குன்னு பிடிச்சு வைப்போம்
தெம்புல நின்னேனே
ஆசையா தாக்குர ...

எடு புள்ள பம்பம் என் புத்திக்குள்ள
ரம்பம் உன் கண்ணுகுள்ள
பிம்பம் என் நெஞ்சுக்குள்ள
பம்பம் பம்பம் (2)

ஒரு துளி மழையில குழித்தேன் குழித்தேன்
தலை முதல் கால் வரை சிரிச்சேன் சிரிச்சேன்
காயவச்ச ஈரத்துணி தானா வீசுதா
காடு முட்ட கண்ணுகுள்ள
காதல் அரிக்குதே
நீ பாத்த நான் பாத்தே
ஆத்தாடி கண்ணு ஆச்சி பிள்ளதாச்சி

எடு புள்ள ...

முன்னாடி போற புள்ள ....

தொண தொண தொணவென பேச பேச
நகக்குறி பதிக்கணும் கூச கூச
வீட்டுகுள்ள வானவில்ல
நீதான் விரிக்கிற ஏய் ஏய் ஏய் .
நாய் குறைக்கும் ஓசையிலும் நீ தான் கேட்குற
காலாற நீ நடந்தா கேணி தண்ணி
எட்டி எட்டி உன்னப் பாக்கும்

முன்னாடி போற புள்ள ....

எடு புள்ள ....

Naiyaandi - Munnadi Pora Pulla

நையாண்டி - இனிக்க இனிக்க

இனிக்க இனிக்க பார்ப்பதென்ன
இரண்டு நதிகள் பாய்வதென்ன
பனியில் கடலும் தூங்கியதே
துவைக்க துவைக்க தேடல் என்ன
தவணை முறையில் ஊடல் என்ன
காற்று மலையை சாய்க்கிறதே
சிலந்தி வலையில் வெளிச்சம் போல
எனக்குள் பரவுவாய்
நகங்கள் வேர்க்கும் இனிய பொழுதில்
சலனம் கூட்டுவாய்

இனிக்க இனிக்க பார்ப்பதென்ன
இரண்டு நதிகள் பாய்வதென்ன
பனியில் கடலும் தூங்கியதே

மரண நேர வாழ்க்கை
இது மடியில் கரையும் வேட்கை
நம் அழுது சிரிக்கும் சேட்டை
அட திமிரி தெளியும் வேட்டை

யாரின் தோளில் யாரோ
அடி யாரின் காலில் யாரோ
நாமும் இரண்டு பேரோ
அடி கிழிந்த ஒன்றைத் தாளோ
சதையே சிதையா
அடடா விதையா
ஒரு கோடி காமம் கூடி கூடி
கோற்று மேட்டில் ஞானம் காணுதோ

இனிக்க இனிக்க ....

இனிக்க இனிக்க பார்ப்பதென்ன
இரண்டு தடவை கேட்பதென்ன
வேர்வை புழுவை யாக்கிறது

Naiyaandi - Inikka Inikka

Monday, November 25, 2013

காதலன் - கோபாலா கோபாலா

பெண் : ஏய் எர்ரானி குரதானி கோபாலா
அஹ சுரு மந்தி நீ சூப்பு நா கேளா
எர்ரானி குரதானி கோபாலா
அஹ சுரு மந்தி நீ சூப்பு நா கேளா
கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா
அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா
மொசக் குட்டி தேடி வந்த கோபாலா
அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா

ஆண்குழு : கோபாலா கோபாலா
மலை ஏறு கோபாலா
கோபாலா கோபாலா
மலை ஏறு கோபாலா

பெண் : பழம் கண்ட பின்னாலும்
தின்னாத வெளவாலா

ஆண்குழு : மலை ஏறு கோபாலா

பெண் : கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா
அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா
மொசக் குட்டி தேடி வந்த கோபாலா
அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா

***

ஆண் : இந்த ஒரு பூவுக்குத்தான்
அம்முலு ஏழு மலைத் தாண்டி வந்தேன்

பெண் : காமன் வந்து சண்டப் புடிக்க
மொத்தத்தில் காரம்புளிக் கொறச்சுக்கிட்டேன்

ஆண் : அச்சாரம் போடத்தான் ஐநூறு கிலோமீட்டர் வந்தேனே

பெண்குழு : தேனே தேனே தேனே செந்தேனே தேனே னே

பெண் : ஆதாரம் காட்டத்தான்
அதக் கொஞ்சம் இதக் கொஞ்சம் தந்தேனே

ஆண்குழு : யானைப் பசி எனக்கு
போங்கடி கீரைத்தண்டு எதுக்கு

பெண்குழு : இடைவேள முடிஞ்சு
பாரைய்யா என்னென்னமோ இருக்கு

ஆண் : அடியே உன் தேகம் ரத்த ஓட்டம் பாய்கிற தந்தம்

பெண் : அட டா உன் நெஞ்சில் புது புது கவிதைகள் பொங்கும்
கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா
அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா
மொசக் குட்டி தேடி வந்த கோபாலா
அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா

கம்யூ.குரல் : கோபாலா கோபாலா
மலை ஏறு கோபாலா

பெண்குழு : கோபாலா கோபாலா
மலை ஏறு கோபாலா

பெண் : பழம் கண்ட பின்னாலும்
தின்னாத வெளவாலா

பெண் : மலை ஏறு கோபாலா

பெண் : எர்ரானி குரதானி கோபாலா
ஆஹா சுரு மந்தி நீ சொப்பு நா கேளா
சத்தானி சுக்கநேனு கோபாலா
நேனு சிக்குதானு செய்யண்ட இய்யாலா

***

ஆண்குழு : ஓராபாய் ஓராபாய் ஓராபாய் ஓராபாய்

பெண் : நெத்தியில முத்தம் கொடுத்தா
நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி படபடக்கும்

ஆண் : காதுக்குள்ளே முத்தம் கொடுத்தா
யம்மம்மா கண்ணுக்குள்ளே வெடி வெடிக்கும்

பெண் : மச்சானே மச்சானே
அச்சம் விட்டுப் போனது தன்னாலே

பெண்குழு : லே லே லே லே தன்னாலே லே லே லே

ஆண் : அச்சச்சோ அச்சச்சோ
அச்சு வெல்லம் கசக்குது உன்னாலே

பெண்குழு : சிக்குபுக்கு ரயிலே
எங்கேயோ பத்திக்கிச்சு நெருப்பு

ஆண்குழு : எக்கு தப்பு நடந்தா
அம்மணி ரெண்டு பேரும் பொறுப்பு

பெண் : அடடா இப்போது உலகத்த மறந்தது உள்ளம்

ஆண் : இதுதான் பெண்பூவே உயிர் வரைப் பாய்கிற வெள்ளம்

பெண் : கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா
அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா
மொசக் குட்டி தேடி வந்த கோபாலா
அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா

ஆண்குழு : கோபாலா கோபாலா
மலை ஏறு கோபாலா

கம்யூ.குரல் : கோபாலா கோபாலா
மலை ஏறு கோபாலா

பெண் : பழம் கண்ட பின்னாலும்
தின்னாத வெளவாலா

கம்யூ.குரல் : மலை ஏறு கோபாலா

பெண் : ஆஹா எர்ரானி குரதானி கோபாலா
ஆஹா சுரு மந்தி நீ சூப்பு நா கேளா
சத்தானி சுக்கநேனு கோபாலா
நேனு சிக்குதானு செய்யண்ட இய்யாலா

பெண்குழு : எர்ரானி குரதானி கோபாலா
ஆஹா சுரு மந்தி நீ சூப்பு நா கேளா

கம்யூ.குரல் : சத்தானி சுக்கநேனு கோபாலா

பெண்குழு : நேனு சிக்குதானு செய்யண்ட இய்யாலா
 

Kadhalan - Gopala Gopala

காதலன் - காதலிக்கும் பெண்ணின்

காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவம் கூட பவளம் தானே
சிந்தும் வேர்வை, தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை மோட்ஷம் ஆகும்
காதலின் சங்கீதமே
ம்.. ஹும் பூமியின் பூபாளமே
காதலின் சங்கீதமே
ம்.. ஹும் பூமியின் பூபாளமே

காதலிக்கும் பெண் எழுதும் கை எழுத்திலே
கண்ட பிழைகள் கூட கவிதை ஆகுமே

காதல் ஒன்றும் சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே
எச்சில் கூட புனிதம் ஆகுமே

குண்டு மல்லி ரெண்டு ரூபாய்
உன் கூந்தல் ஏறி உதிரும் பூ கோடி ரூபாய்

பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று தந்ததால் லட்ஷ ரூபாய்

காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவம் கூட பவளம் தானே
சிந்தும் வேர்வை, தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை மோட்ஷம் ஆகும்
காதலின் சங்கீதமே
ம்.. ஹும் பூமியின் பூபாளமே
காதலின் சங்கீதமே
ம்.. ஹும் பூமியின் பூபாளமே

காதல் ஒன்றும் நல்ல நேரம் பார்ப்பதில்லையே
ராகு காலம் கூட ராசி ஆகுமே

காதலுக்கு அன்னபட்ஷி தேவை இல்லையே
காக்கை கூட தூது போகுமே

காதல் ஜோடி புகைவதில்லை
காதல் என்றும் குற்றமே பார்ப்பதில்லை

இடில் அர்ப்பமானது எதுவும் இல்லை
இன்த நுட்பம் ஊருக்கு புரியவில்லை

வானும் மண்ணும் மாறியே போகும்
காதல் என்றும் வாழுமே
ஆதாம் ஏவாள் பாடிய பாடல்
காற்றில் என்றும் கேட்குமே
காதல் கெட்ட வார்தையா என்ன யாரும் சொல்லலாம்
நீ சொல்லவேண்டும் இன்று
காதல் முள்ளின் வேலியா என்ன யாரும் செல்லலாம்
நீ செல்லவேண்டும் இன்று

Kadhalan - Kadhalikkum Pennin kaikal

கஜினி - ரங்கோலா ஹோலா

ரங்கோலா ஹோலா ஹோலா
பெண்ணே நீ தானோ
உனை முத்தம் இட்டு ஒட்டிக் கொண்ட
வண்ணம் நான் தானோ

ரங்கோலா ...

கோமள வள்ளி வள்ளி
கண்களால் கொல்லும் வில்லி
திரும்பினால் நிக்க சொல்லி
வச்சு விடவா மல்லி
காத்தவ ராயா ராயா
மல்லிப்பூ வேணாம் போயா
மாலைய வாங்கித்தாயா
என்னை நீ தோளு மேலே தூக்கிப் போயா

ரங்கோலா ...

ஓ நிலா நிலா பறந்து வாயேன்
உலகினை மறந்து வாயேன்
அழகினால் நெருங்கி வாயேன்
அலை அலையாய்
தொடாமலே அணைக்குறாயே
தடால் என இழுக்கிறானே
விடாமலே துரத்துறானே
அடாவடியா
நான் ஒரு தல ராவணன் புள்ள
உனை மணந்திட உடைக்கவா வில்ல
குருங்கடல் போல கொதிக்குது ஆசை
குளிக்கலாம் வா மெல்ல
என் இடுப்புல குலுங்குது சாவி
அத வெடக்குன்னு எடுக்கிற பாவி
கைகளை தொட்டு கசமுசா செஞ்சா
கத்திடுவேன் கூவி

ஓ ரங்கோலா ...

இளமையை வருடுவானே
இதயத்தை திருடுறானே
உயிரினை நெருடுறானே சுகம் சுகமா
ஓ தளிர் என இருக்குறாளே
பளீர் என சிரிக்குறாளே
சுளீர் என முறைக்குறாளே
அழகழகா..
உன் மரக்கட வண்டி மீது
நான் மெனக்கெட்டு ஏறும் போது
கட கட என்று தட தட என்று
இழுத்தவன் நீதானே
நான் சடுகுடு ஆடும் போது
நீ தொடுகிற எல்லைக் கோடு
விடு விடு என்று பட பட என்று
பறந்தவள் நீ தானே

ஓ ரங்கோலா ...

Ghajini - Rangola

எஜமான் - அடி ராக்குமுத்து ராக்கு

அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு
வளை காப்பு தங்க காப்பு இவ கை பிடிச்சு பூட்டு
அட வேலாண்டி பால்பாண்டி வேட்டிய கட்டுங்கடா
அட மாயாண்டி முனியாண்டி மத்தளம் கொட்டுங்கடா
கிளி மூக்கு முத்தம்மா என் வாக்கு சுத்தம்மா
வானவராயனுக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு
பெண்குழு : அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு

***

வான்சுமந்த வான்சுமந்த வெண்ணிலவ வெண்ணிலவ
தான்சுமந்த தான்சுமந்த பெண்நிலவே பெண்நிலவே
பெண்குழு : மூணு மாசம் ஆன பின்னே முத்துவரும் முத்துவரும்
ஆண்குழு : பூர்வஜென்மம் சேர்த்து வச்ச சொத்துவரும் சொத்துவரும்

வெள்ளிமணி தொட்டில் ஒண்ணு
விட்டத்தின் மேலே மாட்டிடனும்
தங்கமணி கண்ணுறங்க தாலேலோ பாடி ஆட்டிடனும்

குழு : அடி வாடி ரங்கம்மா தெரு கோடி அங்கம்மா
வானவராயருக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு

அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு

***

பெண்குழு : ஏழு சட்டி மார்கழிக்கும் பொங்கவச்சி பொங்கவச்சி
மாவிளக்கும் பூவிளக்கும் ஏற்றிடனும் ஏற்றிடனும்

வாரிசு ஒண்ணு தந்தற்கு நன்றி சொல்லி நன்றி சொல்லி
ஏழைக்கெல்லாம் கூழு காய்ச்சி ஊத்திடனும் ஊத்திடனும்
அம்மன் அருள் இல்லையின்னா
பெண்ணிங்கு தாயாய் ஆவதெங்கே
பிள்ளை செல்வம் இல்லையென்ற பேச்சுக்கள்
பொய்யாய் போனதிங்கே

குழு : ஊரில் எல்லாரும் ஒண்ணு சேரும் இந்நேரம்
வானவராயருக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு

அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு

ஆண்குழு : அட வேலாண்டி பால்பாண்டி வேட்டிய கட்டுங்கடா
அட மாயாண்டி முனியாண்டி மத்தளம் கொட்டுங்கடா

பெண்குழு: கிளி மூக்கு முத்தம்மா அவர் வாக்கு சுத்தம்மா
வானவராயருக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு

அடி ராக்குமுத்து ராக்கு புது ராக்குடியை சூட்டு

குழு : அடி ராக்குமுத்து ராக்கு ராக்குடியை சூட்டு
காப்பு தங்க காப்பு கை பிடிச்சு பூட்டு

Ejamaan - Raakku Muthu

Followers