Pages

Search This Blog

Monday, November 25, 2013

காதலுக்கு மரியாதை - இது சங்கீத திருநாளோ

இது சங்கீத திருநாளோ , புது சந்தோஷம் வரும்னாலோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ , சிறு பூவாக
மலர்ந்தளோ
சின்ன சின்ன அசைவில் சித்திரங்கள்
வரைந்தால்
முத்த மழை கன்னம் விழ நனைந்தாலே
கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நடை நடந்தளே

இது சங்கீத திருநாளோ , புது சந்தோஷம் வரும்னலோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ , சிறு பூவாக
மலர்ந்தளோ

கைகளில் பொம்மைகள் கொண்டு ஆடுவாள்
கண்களை பின்புறம் வந்து மூடுவல்
செல்லம் கொஞ்சி தமிழ்
பாடுவாள்
தோள்களில் கண்களை மெல்ல மூடுவல்
உறங்கும் பொழுதும் என்னை தேடுவாள்
அங்கும் இங்கும் துள்ளி
ஓடுவாள்
பூவெல்லாம் இவள் போல அழகில்லை
பூங்காற்று இவ ள் போல சுகமில்லை
இது போல சொந்தங்கள்
இனி இல்லை
எப்போதும் அன்புக்கு அழிவில்லை
இவள்
தானே நம் தேவதை

இது சங்கீத திருநாளோ சந்தோஷம் வரும்நாலோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ , சிறு பூவாக
மலர்ந்தளோ

நடக்கும் நடையில் ஓர் தேர் வானம்
சிரிக்கும் அழகில் ஒரு
கீர்த்தனம்
கண்ணில் மின்னும் ஒரு காவியம்
மனதில்
வரைந்து வைத்த ஒவயும்
நினைவில் நனைந்து நிற்கும்
பூவனம்
என்றும் எங்கும் இவள் ஞாபகம்
இவள் போகும் வழியெங்கும் பூவாவேன்
இரு பக்கம்
காக்கின்ற கரையவேன்
இவலடும் பொன்னூஞ்சல் நானாவேன்
இதயத்தில் சுமக்கின்ற தாயாவேன்
எப்போதும் தாலாட்டுவேன்

இது சங்கீத திருநாளோ , புது சந்தோஷம் வரும்னளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ , சிறு பூவாக
மலர்ந்தளோ

Kadhalukku Mariyadhai - Idhu Sangeetha Thirunalo

காதலுக்கு மரியாதை - ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே

ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே
ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே
காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே
வார்த்தை ஒன்றும் இல்லை அடி என்னிடத்திலே
அட காதல் இதுதானா..

பூச்சூட பூ வேணுமா
பூ இங்கே நீதானம்மா
அடி கல்யாண ஊர்க்கோலமா
இனி எப்போதும் கார்க்காலமா

ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே
பெண்குழு:தகதகதாம் தகதகதாம் தகதகதாம் தகதகதாம்} (ஓவர்லாப்)

ஆண் : ஏனோ மனது உன்னை கண்ட பொழுது
காற்றில் ஒரு மேகமென ஆச்சு

ஏனோ எனக்கு காதல் வந்த பிறகு
கண்ணாம்மூச்சி ஆடும்கதை ஆச்சு

உன்னை அழைத்தவன் நானே நானே
தன்னை தொலைத்தவன் ஆனேன் ஆனேன்

கூண்டு கிளி இங்கு நானே நானே
விட்டு விடுதலை ஆனேன் ஆனேன்

உன் சேலை நூலாகவா
நான் உன் கூந்தல் பூவாகவா
பெண்குழு:ஆ ஆ ஆ ஆ ஆ ஆ} (ஓவர்லாப்)

அடி நான் இன்று நீ ஆகவா

ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே

பூவான என் நெஞ்சம் போராட
தூங்காத கண்ணோடு நீராட

உறவான நிலவொன்று சதிராட
கடிதங்கள் வாராமல் உயிர் வாட
அஞ்சலகம் எங்கு என்று தேடுகின்றேன் நான்

பூஞ்சோலை நீதானம்மா
ஒரு பூ சிந்த பிடிவாதமா
மௌனங்கள் மொழியாகுமா

காதல் மனசும் தத்தளிக்கும் வயசும்
எப்பொழுதும் ஜன்னல் எட்டி பார்க்கும்

ராத்திரி பொழுதும் பௌர்ணமி நிலவும்
என் மனதை சுட்டு விட்டு போகும்

தனிமைகள் என்னை தொடுமே தொடுமே
பனித்துளி என்னை சுடுமே சுடுமே

தாகம் கொண்ட தங்க குடமே குடமே
அள்ளித்தர கங்கை வருமே வருமே

மேகங்கள் தேனூற்றுமே
புது மொட்டுக்கள் பூவாகுமே

ஒரு பூமாலை தோள் சேருமே

ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே

காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே
வார்த்தை ஒன்றும் இல்லை அது என்னிடத்திலே
அட காதல் இதுதானா..

பூச்சூட பூ வேணுமா
பூ இங்கே நீதானம்மா
அடி கல்யாண ஊர்க்கோலமா
இனி எப்போதும் கார்க்காலமா

ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே
பெண்குழு:தகதகதாம் தகதகதாம்
தகதகதாம் தகதகதாம்} (ஓவர்லாப்)

ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே
பெண்குழு:தகதகதாம் தகதகதாம்
தகதகதாம் தகதகதாம்

Kadhalukku Mariyadhai - Oru Pattam Poochi

காதலுக்கு மரியாதை - என்னை தாலாட்ட வருவாளோ

என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
ததளிக்கும் மனமே ததை வருவாள
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாள
கொஞ்சம் பொரு கொலுசொலி கேட்கிரதெய்

(என்னை தாலாட்ட...)

பூ விழி பார்வையில் மின்னல் காட்டினாள்
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவும் பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பேயரில் மாற்றினாள்
காதல் தாயை வந்து மூட்டினாள்
நான் கேட்கும் பதில் இன்று வாராத
நான் தூங்க மடி ஒன்று தாராத
தாகங்கள் தாபங்கள் தீராத
தாளங்கள் ராகங்கள் சேராத
வழியோரம் விழி வைக்கிரேன்


எனது இரவு அவள் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்களில்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்தையில்
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
நாளைக்கு நான் காண வருவாளோ
பாலுக்கு நீரூற்றி போவாளோ
வழியோரம் விழி வைக்கிறேன்

(என்னை தாலாட்ட...)

Kadhalukku Mariyadhai - Ennai Thalatta Varuvaaloa

காலமெல்லாம் காத்திருப்பேன் - அஞ்சாம் நம்பர் பஸ்ஸில்

அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி தந்தானக்குயிலே
ஆறுமுகனை பார்க்கப்போனேன் தந்தானக்குயிலே

அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி
தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே
ஆறுமுகனை பார்க்கப்போனேன்
தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே
சிவானந்தாக்காலனியில் பஸ்ஸு நின்னது
அந்த பஸ்ஸுக்காக வந்து நின்ன பொண்ணு என்னுது

அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி
தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே
ஆறுமுகனை பார்க்கப்போனேன்
தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே

ஒன்னு ரெண்டு நம்பெரெல்லாம்
ஒன்பதுல முடிஞ்சிடும்
முன்னபின்ன போட்டதெல்லாம்
இரண்டுபக்கம் வேல வரும்

எத்தனையோ தலமுறை
சொத்து இருக்கு எங்களுக்கு
அத்தனையும் சொல்லனும்னு
தேவையில்லை உங்களூக்கு

ஆலமரம் ஆறுகுளம் எங்க பேருல
இந்த அக்கா மக கூவுவது எங்க சேவல

எங்க ஊரு ஆரு எல்லாருக்கும் சேரும்
எங்க ஊரு ஆரு எங்களுக்கும் சேரும்

ஆத்துகுள்ள நீந்தி போனா
அக்கரை போய் சேரும்

அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி
தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே
ஆறுமுகனை பார்க்கப்போனேன்
தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே

கண்ணுமணி பொன்னுமணி
கண்டவங்க சொல்லும்படி
சின்னமணி சொன்னபடி
எல்லாமே அத்துபடி

சுத்தமடி சுத்தமடி நான்
சொல்றது புத்திமதி
புத்திமதி இல்லையனா
பக்கம் வந்து கத்துகடி

கத்து தற்றோம் கத்து தற்றோம்
கண்ணுமணிக்கு
பத்துதரம் பத்துதரம்
சின்னமணிக்கு

முந்தாநேத்து நேரம்
சொன்னாங்க ஒரு பாடம்
முந்தாநேத்து நேரம்
சொன்னாங்க ஒரு பாடம்

முந்தானைய முடிஞ்சு பஸ்ஸுல
உக்காருங்க போதும்

அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி
தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே.
முருகா..ஆஆ
ஆறுமுகனை பார்க்கப்போனேன்
தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே
ஹோய் சிவானந்தக்காலனியில் பஸ்ஸு நின்னுது
அந்த பஸ்ஸுக்காக வந்து நின்ன
பொண்ணு என்னுது ஹாங்.

அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி
தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே
ஆறுமுகனை பார்க்கப்போனேன்
தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே

Kaalamellam Kaaththipaen - Anjaam Number Busil

காலமெல்லாம் காத்திருப்பேன் - நில்லடி என்றது உள்மனது

நில்லடி என்றது உள்மனது
செல்லடி என்றது பெண்மனது
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு
இரவிலே அல்லியை அணைப்பதற்கு
நான் உன்னை அணைப்பேனே இரவெதற்கு

நில்லடி என்றது உள்மனது
செல்லடி என்றது பெண்மனது
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு
இரவிலே அல்லியை அணைப்பதற்கு
நான் உன்னை அணைப்பேனே

இரவெதற்கு

நில்லடி என்றது உள்மனது

சொல்லவா சொல்லவா நான் நல்ல சேதி
பக்கம் வா வெட்கமே நீ சரி பாதி
தாமதம் இன்னுமா இது நல்ல நேரம்

நெருங்கினேன் மயங்கினேன் மலை அருவி ஓரம்

கங்கைக் கரை ஓரம் வந்து
பாட்டு சொல்ல கூடாதா

மங்கை அந்த மாலைப் பொழுதில் மயங்குவேனே தானாக

ஈருடல் இனி ஓருயிர் என வாழப் போகும் காலமே

நில்லடி என்றது உள்மனது

செல்லடி என்றது

பெண்மனது
நில்லடி என்றது உள்மனது

ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ

ஆஆ ஆ ஆ

இருவிழி மலர்ந்தது உன் முகம் காண
இடைவெளி ஆனது இதற்காகத் தானா

வளர்வது வளர்ந்தது நம் காதல் கீதம்

மன்னவா அருகில் வா அது ஒன்று போதும்

கண்ணும் கண்ணும் கலந்ததினாலே
கண்ணன் மனம் கவி பாட
இன்னும் இன்னும் வேண்டும் என்று ராதை மனம் எனைத் தேட

ஒரு நாளிலே பல காலங்கள் நாம் வாழ்ந்த வாழ்வு காணுதே

நில்லடி என்றது
உள்மனது
செல்லடி என்றது
பெண்மனது
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு

இரவிலே அல்லியை அணைப்பதற்கு

நான் உன்னை அணைப்பேனே

இரவெதற்கு

நில்லடி என்றது
உள்மனது
செல்லடி என்றது
பெண்மனது
நில்லடி.

Kaalamellam Kaaththipaen -  Nilladi Endrathu

காலமெல்லாம் காத்திருப்பேன் - மணிமேகலையே மணியாகலையே

மணிமேகலையே மணியாகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மணவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்

மணிமேகலையே மணியாகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மணவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்
அந்த வானத்துக்கு ஒரு வென்னிலவு
இந்த மேகத்துக்கு ஒரு பெண்ணிலவு
உன் பாட்டுச்சத்தம் இனி கேட்கும் வரை
இந்த நீலக்குயில் பாடிக்கிட்டுதான் இருக்கும்
மணிமேகலையே மணியாகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மணவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்

நெற்றி பொட்ட மட்டும் வச்சி
தங்கநகை இல்லாமலே
கோடிக்கோடி பேரழகு உன் முகத்திலே
நெற்றி பொட்ட மட்டும் வச்சி
தங்கநகை இல்லாமலே
கோடிக்கோடி பேரழகு உன் முகத்திலே
செல்வம் என்னம்மா சொந்தம் சொல்லுமா
சொந்தம் பந்தமே அன்புதானம்மா
அந்த அன்பு என்னும் சின்ன நூலெடுத்து
நீ என்னைக்கட்டி போட்டிருக்கே கண்ணுக்குள்ளே
மணிமேகலையே மணியாகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மணவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்

ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ

செம்பருத்தி பூவப்போலே
சின்னச்சேலை நூலைப்போலே
சின்னப்பொன்னு என்ன சுத்தி
வந்து போவிய்யாஆஆஆஆ
செம்பருத்தி பூவப்போலே
சின்னச்சேலை நூலைப்போலே
சின்னப்பொன்னு என்ன சுத்தி
வந்து போவிய்யாஆஆஆஆ

தென்றல் வருமா சேதி சொல்லுமாஆஆஆ
பக்கம் வருமா என்னை தொடுமா
என்னைத்தொட்டுவிட்டாஆஆ இனி எப்பவுமே
உன் பேரை எழுதி என் நெஞ்சுக்குள்ளே வச்சுக்குவேன்

மணிமேகலையே மணியாகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மணவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்
அந்த வானத்துக்கு ஒரு வென்னிலவு
இந்த மேகத்துக்கு ஒரு பெண்ணிலவு
உன் பாட்டுச்சத்தம் இனி கேட்கும் வரை
இந்த நீலக்குயில் பாடிக்கிட்டுதான் இருக்கும்

மணிமேகலையே மணியாகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மணவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்

Kaalamellam Kaaththipaen - Manimekalaye Maniyakalaye

காதல் மன்னன் - வானும் மண்ணும் கட்டிக்

ஆண் : வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே
பெண் : ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே
ஆண் : காதல் இடம் பார்ப்பதில்லை
அது இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று பூத்திடுதே
பெண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

ஆண் : வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே
பெண் : ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே
ஆண் : காதல் இடம் பார்ப்பதில்லை
அது இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று பூத்திடுதே
பெண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

ஆண் : நியாயமா இது பாவமா என்று சொல்ல யாரும் இங்கு இல்லை
பெண் : மௌனமே மொழியானதால் அட பாஷை என்பதொரு தொல்லை
அடுத்தொன்றும் தோன்றவில்லை
ஆண் : வெண்ணிலா நீராற்றிலே என்றும் வீழ்ந்து பார்த்தவர்கள் இல்லை
பெண் : பெண்ணிலா தங்க சேற்றிலே இன்று வீழ்ந்து போனதொரு தொல்லை
இலக்கணம் பார்க்கவில்லை
ஆண் : பிறக்கும் மொட்டுகள் தேதி பார்ப்பதுவும் இல்லை
பெண் : உறவு மாறலாம் உந்தன் கையில் அது இல்லை
ஆண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

பெண் : எவ்விடம் மழை தூவலாம் என்று மேகம் யோசிப்பது உண்டோ
ஜாதகம் சுப யோகங்கள் கண்டு காதல் கூடுவது உண்டோ
உணர்ச்சிக்கு பாதை உண்டோ
ஆண் : விதியினும் காதல் வலியது இதில் வேறு வாதம் ஒன்று உண்டோ
காதலின் திசை ஆயிரம் அது கண்டு சொன்னவர்கள் உண்டோ
கனவுக்கு வேலியுண்டோ
பெண் : காலம் சொல்லுவதை காதல் கேட்பதுவும் இல்லை
ஆண் : ஆசையென்ற நதி அணையில் நிற்பதுவும் இல்லை
பெண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

Kaadhal Mannan - Vaannum Mannum

Followers