Pages

Search This Blog

Monday, November 25, 2013

காதல் கோட்டை - காலமெலாம் காதல் வாழ்க

காலமெலாம் காதல் வாழ்க காதலெனும் வேதம் வாழ்க
காதலே நிம்மதி கனவுகளே அதன் சன்னிதி
கவிதைகள் பாடி நீ காதலி நீ காதலி

(காலமெலாம்)

கண்ணும் கண்ணும் மோதுமம்மா நெஞ்சம் மட்டும் பேசுமம்மா காதல்
தூக்கம் கெட்டுப் பொகுமம்மா தூது செல்லத் தேடுமம்மா காதல்
ஆணுக்கும் பெண்ணுக்கும் அன்பையே போதிக்கும் காதல் தினம் தேவை
கெஞ்சினால் மிஞ்சிடும் மிஞ்சினால் கெஞ்சிடும் காதல் ஒரு போதை
காதலுக்குப் பள்ளி இல்லையே அது சொல்லித் தரும் பாடம் இல்லையே

(காலமெலாம்)

ஜாதி மதம் பார்ப்பதில்லை சீர்வரிசை ஏதுமில்லை காதல்
ஆதி அந்தம் ஏதுமில்லை ஆதம் ஏவாள் தப்புமில்லை காதல்
ஊரென்ன பேரென்ன தாய் தந்தை யாரென்ன காதல் ஒன்று சேரும்
நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை காதல் மனம் வழும்
ஜாதகங்கள் பார்ப்பதில்லையே காசு பணம் கேட்பதில்லையே

(காலமெல்லம்)

Kadhal Kottai - Kaalamellam Kadhal

அவள் வருவாளா - ருக்கு ருக்கு ருக்குமணி

ருக்கு ருக்கு ருக்குமணி
ரமணித் துளசி மணி
அப்போ அது அப்போ

சிக்குப் புக்கு சின்ன மணி
வெய்யில் பட்டா வெள்ளி பனி
இப்போ இது இப்போ

ருக்கு ருக்கு ருக்குமணி
ரமணித் துளசி மணி
அப்போ அது அப்போ

சிக்குப் புக்கு சின்ன மணி
வெய்யில் பட்டா வெள்ளி பனி
இப்போ இது இப்போ

சம்சார கலை அது
முகத்தில் தெரியுது
காமாட்சி விளக்கு ஜொலிக்குது

அம்மாடி மாப்பிள்ள
கொடுத்து வச்சவன்
மச்சங்கள் இவனுக்கு இருக்குது

ருக்கு ருக்கு ருக்குமணி ஹோ
ருக்கு ருக்கு ருக்குமணி
ரமணித் துளசி மணி
அப்போ அது அப்போ

சிக்குப் புக்கு சின்ன மணி
வெய்யில் பட்டா வெள்ளி பனி
இப்போ இது இப்போ

சிக்கிகிச்சம்மா சிக்கிகிச்சம்மா
கூடைக்குள்ள கோழி ஒண்ணு
சிக்கிகிச்சம்மா
வச்சிக்குடும்மா வச்சிக்குடும்மா
மாப்பிள்ளைக்கு புடிச்சது
கோழிகுருமா

====

பொண்ணு ஏனோ கேக்குறா
புதுசா உன்னப் பார்க்குறா
ஏதோ சொல்லத் தவிக்கிறா
எல்லாம் நெஞ்சில் மறைக்கிறா
பொண்ணப் பத்தி என்னிடத்தில் கேளு
இவ சின்னஞ் சிறு வயசில

அனுமார் வாலு

கண்ணகிக்கு பொட்டப் புள்ள உண்டா?
அது இருந்தா இவதான் நல்லாப் பாரு

கல்லு எறிஞ்சா காயும் விழலாம்
கண்ணடிச்சு வெண்ணிலவ
பூமியில விழ வச்ச
பொல்லாத மாப்பிள்ளைடா
பொண்ணு இவ
உன்னோட ஜோப்பிலடா
அடடா ருக்கு ருக்கு ருக்குமணி ஓ

ருக்கு ருக்கு ருக்குமணி
ரமணித் துளசி மணி
அப்போ அது அப்போ

சிக்குப் புக்கு சின்ன மணி
வெய்யில் பட்டா வெள்ளி பனி
இப்போ இது இப்போ

===

அழகும் அறிவும் பொருத்தம்தான்
அடடா இதன் பேர் அதிர்ஷ்டம்தான்
இரவும் பகலும் வாட்டுதா
இனிமேல் வாழ்க்கை ஸ்வீட்டுதான்
பச்சடியும் கிச்சடியும் சமமா
இவ பச்சரிசி பொங்க வச்சா

அதுதான் அல்வா

பத்துமணி ஆகும்வரைப் பொறுப்பா
நீ அப்புறமும் தாமதிச்சா

வெடியா வெடிப்பா

சின்னத்தம்பியே

ஹேய்

என்னைக் கேட்டுக்கோ

ஹேய்

தாலிக் கட்டி வாழும்
இந்த வாழ்க்கையில
நானும் ரொம்ப அனுபவசாலியடா
மாப்பிள்ள அதிர்ஷ்டசாலியடா

அடடா டா ருக்கு ருக்கு ருக்குமணி ஓ
ருக்கு ருக்கு ருக்குமணி
ரமணித் துளசி மணி
அப்போ அது அப்போ

சிக்குப் புக்கு சின்ன மணி
வெய்யில் பட்டா வெள்ளி பனி
இப்போ இது இப்போ

ருக்கு ருக்கு ருக்குமணி
ரமணித் துளசி மணி
அப்போ அது அப்போ

சிக்குப் புக்கு சின்ன மணி
வெய்யில் பட்டா வெள்ளி பனி
இப்போ இது இப்போ

சம்சார கலை அது
முகத்தில் தெரியுது
காமாட்சி விளக்கு ஜொலிக்குது

அம்மாடி மாப்பிள்ள
கொடுத்து வச்சவன்
மச்சங்கள் இவனுக்கு இருக்குது

ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஆஹா ஹேய்
ஹேய் ஹேஹே ஹேய் ஹேய்

Aval Varuvaala - Rukku Rukku

அவள் வருவாளா - சிக்கி முக்கி உய்யாலா

சிக்கி முக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளாம்
வத்துக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளாம்
மச்சான் கிட்ட முந்தானைய தந்து வைப்பாளாம்
சிக்கி முக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளாம்
முந்தானையை தந்துபுட்டு சும்மா நிப்பாளாம்
வத்துக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளாம்
பலனாள் பசி இருக்கு விருந்து வைப்பாளா
நீதான் படுப்பதற்கு புல்லா வைக்கோலா
விலகாமல் விடமாட்டேன் மச்சான் வேரோர் ஆளா
சிக்கி முக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளாம்
வத்துக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளாம்
மச்சான் கிட்ட முந்தானைய தந்து வைப்பாளாம்
முந்தானையை தந்துபுட்டு சும்மா நிப்பாளாம்

இடுப்பிலுள்ள மடிப்புக்குள் மாட்டிக்கிட்டேன் மானே
அதுக்குத்தானே இழுத்து இப்போ போத்திக்கிட்டேன் நானே
ஹே மொட்டு உடம்ப தொட்டு திறக்கும் தேதி ஒண்ணு சொல்லு சொல்லு
கட்டிப்புடிச்சா புயலடிக்கும் இப்பொ கொஞ்சம் தள்ளி நில்லு
அலுக்கி குலுக்கி எம்மனச கொள்ளையடிக்கிறீயே
விரட்டி விரட்டி பெண்மனசில் கிளி புடிக்கிறீயே
சூடேற்றி போகாம ஆற்றுப்பக்கம் வாடி

சிக்கிமுக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளாம்
வத்துக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளாம்
மச்சான்கிட்ட முந்தானைய தந்து வைப்பாளாம்
முந்தானையை தந்துபுட்டு சும்மா நிப்பாளாம்

மஞ்ச உடம்பு சிவந்திருக்கு மாமா உன்ன பாத்து
எனக்கும் இப்போ வேர்த்திருச்சி மச்சம் ஒண்ணை பாத்து
பட்டு உடலில் பட்டு தெறிக்கும் மின்னல் ஒண்ணு துள்ள துள்ள
வெட்கம் பிடிக்க விளக்கணைக்க ஜன்னல் கண்ணை மூடிக்கொள்ள
வெத்தலைய போடாமதான் உதடு சிவக்கணும்
பத்து நாளு கழிச்சி தாண்டி கதவ திறக்கணும்
பூமால மாத்தாமா வேணாம் ?ஜாலி

சிக்கிமுக்கி உய்யாலா சிக்கிக்கிட்டாளாம்
வத்துக்குச்சி இல்லாம பத்திக்கிட்டாளாம்
மச்சான்கிட்ட முந்தானையை தந்து வைப்பாளாம்
முந்தானையை தந்துபுட்டு சும்மா நிப்பாளாம்.

Aval Varuvaala - Sikki Mukki Uyala

அவள் வருவாளா - ஒ வந்தது பெண்ணா

ஒ வந்தது பெண்ணா ? வானவில் தான
பூமியிலே பூபரிக்கும் தேவதை தான
காதலிலே என் மனதை பறித்து நீதான
உன் பேரே kaadhal தான ?
தில்லான போல வந்த மானா ? (2)

வாலிபத்தை கிள்ளுதடி உந்தன் அழகு
வாசனைகள் பூசுதடி வண்ண கனவு
கண்ணுக்குள்ளே மிதந்தது ரெண்டு நிலவு
காணவில்லை இப்பொழுது எந்தன் மனது
சொல்லாமல் நூறு கதை சொல்லும் உறவு
சூடாக ஆனதடி காதல் இரவு
என்னோடு தான் நானில்லையே எல்லாமே நீதானா
உன் பேரே காதல் தான ?
தில்லான போல வந்த மானா ? (2)

(ஒ வந்தது ...)

என் ஆசை உனக்குள்ளே இருக்காத
விட்டு விட்டு இருதயம் துடிக்காத
உன் கூந்தல் மெல்ல என்னை மூடாதா
உன் காதை என் மூச்சு தேடாதா
என் தூக்கம் உந்தன் கண்ணில் கிடைக்காத
என் சிரிப்பு உன் இதழில் பூக்காதா
என் நெஞ்சிலே தோன்றும் இசை உன் நெஞ்சில் கேட்காதா
உன் பேரே காதல் தானா ?
தில்லானா போல வந்த மானா ? (2)

(ஒ வந்தது ...)

Aval Varuvala - Ooh Vandhadhu Penna

அவள் வருவாளா - சேலையில வீடு கட்டவா

சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க
ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க
மூக்குத்தியின் மின்னல் ஒரு தீபம் ஏற்றிவைத்துப் போக
சொக்குகின்ற வெட்கம் வந்து வண்ணக் கோலமொன்று போட
என்னை நான் உன்னிடம் அள்ளிக் கொடுக்க

(சேலையில)

தாவணி நழுவினால் இதயமும் நழுவுதே
அசந்ததும் உன் விழி அழகினைத் திருடுதே
ஓவியத்தைத் திரை மறைவில் ஒளித்துவைப்பதேனம்மா
காற்று மழைச் சாரலிலே நனையவிட்டால் நியாயமா
ரசிக்க வந்த ரசிகனின் விழியினை மூடாதே
விழியை மூடும்போதிலும் விரல்களாலே திருடாதே

(சேலையில)

மன்மதன் சன்னிதி முதன்முறை பார்க்கிறேன்
அதனால் தானடி பனியிலும் வேர்க்கிறேன்
முத்தங்களின் ஓசைகளே பூஜைமணி ஆனதே
செவ்விதழின் ஈரங்களே தீர்த்தமென்று தோணுதே
காலனேமென்பது காதலில் இல்லையா
காமதேவன் கோயிலில் கடிகாரங்கள் தேவையா

(சேலையில)

Aval Varuvala - Selaiyile Veedu

அவள் வருவாளா - காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா

காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா
கண்ணுக்குள் பாரம்மா நீயின்றி யாரம்மா
கோபங்கள் இன்னும் இங்கு ஏனம்மா
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா.. ஓ.. ஓ…
கூந்தல் வருடும் காற்று
அது நானா இருந்தேன் தெரியாதா
கொலுசு கொஞ்சும் பாட்டு
அதன் பல்லவி ஆனேன் புரியாதா
சின்ன சின்ன மூக்குத்தியில் வைரமாய்
மின்னுவதும் காதல் தரும் மொழிதான்
வெண்ணிலவு சிந்துகின்ற மழையாய்
உன்னைச்சுற்றி மூடுவதும் அதுதான்
பனிப்பூவில் வாசமாய் கலந்தேனே நானம்மா
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா.. ஓ..ஓ..
நிலவை உரசும் மேகம்
அந்த நினைவை நினைத்தே உருகாதா
உயிரை பருகும் காதல்
அது ஒரு நாள் உனையும் பருகாதா
நீ முடிந்த பூவிலொரு இதழாய்
வாழ்ந்து விட்டு போவதற்கு நினைத்தேன்
நீ நடந்த மண்ணெடுத்து சிலனாள்
சந்தனத்தின் வாசம் அதில் முகர்ந்தேன்
நிழல் தீண்டும் போதிலும் மனதோடு வேர்க்கிறேன்
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா.. ஓ ,..ஓ

Aval Varuvala - Kaadhal Enna Kannamoochi

அவள் வருவாளா - இது காதலின் சங்கீதம்

இது காதலின் சங்கீதம்
புது குங்கும சந்தோஷம்
மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும்
மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம்
மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம்

ஆணில் பாதி பெண்மை என்று வேதம் சொல்லியது
எந்த பாதி எங்கு சேரும் யார் தான் சொல்லுவது
தெய்வம் ஒன்று சேர்க்கும் சொந்தம் இங்கே சேர்கிறது
வேள்வி தீயில் சுயநலங்கள் வெந்து தீய்கிறது
நிலவினை கிரகணம் தீண்டியது
மறுபடி பௌர்ணமி தோன்றியது
விதியும் புதியது கதையும் புதியது
காலத்தின் தீர்ப்பு இது
தெய்வத்தின் சேர்ப்பு இது

இது காதலின் சங்கீதம்
புது குங்கும சந்தோஷம்
மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும்
மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம்

காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ராமன் கிடைப்பதில்லை
ராவணர்க்கு சீதையென்று பிரம்மன் எழுதவில்லை
புதியபாதை போட்டுக் கொள்ள எவரும் மறுப்பதில்லை
பழிகள் கேட்கும் பழமை தன்னை யாரும் பொறுப்பதில்லை
பெண்ணுக்கு பெண்ணிங்கே எதிரியில்லை
பெண்மையை காட்டிலும் தெய்வமில்லை
அத்தை கண்களில் அன்னை தோன்றினால்
தோன்றினும் மாகாளி
அவள் பரிசுத்த பொன் தாயி

இது காதலின் சங்கீதம்
புது குங்கும சந்தோஷம்
மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும்
மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம்
மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம்

Aval Varuvala - Idhu Kaadhalin Sangeetham

Followers