Pages

Search This Blog

Wednesday, November 13, 2013

முத்து - குலுவாலிலே மொட்டு

குலுவாலிலே...

குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ
தட்டித் தட்டி வண்டு தொறந்தல்லோ
தேன்குடிக்க...ஹே தேன்குடிக்க நேரம் உண்டல்லோ
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ
முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ

(குலுவாலிலே)

ஓமணத் திங்கள் கீழாமோ நல்ல கோமளத் தாமரப்பூ...
பூவில் நெறஞ்ய மதுவோ பறி பூஜேந்து தண்டே இலாவோ...

ரங்கனாயகி ரங்கனாயகி ரங்கனாயகி ரங்கனாயகி
ரங்கனாயகி ரங்கனாயகி பச்ச மனச பறிச்சாயே
ஒம்ம முடி கலைவதுபோல் எம்மனச நீ கலச்சாயே
நான் என்ன கலைக்கிற ஆளா பழி சொல்லக் கூடாதே

(குலுவாலிலே)

மாணிக்க வீணையால் மலர்மகள் வாழ்த்துன்ன
மண்ணிலே ????மாய் ஈமலர்ந்தாட

என்ன கட்சி நம்ம கட்சி என்ன கட்சி நம்ம கட்சி
என்ன கட்சி நம்ம கட்சி நம்ம கட்சி OMN கட்சி
கட்சியெல்லாம் இப்பொ நமக்கெதுக்கு காலத்தின் கையில் அது இருக்கு
கனியட்டும் காலம் நேரம் உமக்கு என்னவோ திட்டம் இருக்கு

(குலுவாலிலே)

Muthu - Kuluvalilae

முத்து - ஒருவன் ஒருவன் முதலாளி

ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு ஆசை துறந்தால் அகிலம் உனக்கு

சைய்ய சைய்யார சைய்யார சைய்ய
சைய்ய சைய்யார சைய்யார சைய்ய

மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை
மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம்தான் உணர மறுக்கிறது
கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்
வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு

ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு ஆசை துறந்தால் அகிலம் உனக்கு

வானம் உனக்கு பூமியும் உனக்கு வறப்புகளோடு சண்டைகள் எதற்கு
வாழச் சொல்லுது இயற்கையடா வாழ்வில் துன்பம் செயற்கையடா
பறவைகள் என்னைப் பார்க்கும்போது நலமா நலமா என்கிறது
மொட்டுக்கள் மெல்லத் திறக்கும்போது முத்து முத்து என்கிறதே
இனிமை இனிமேல் போகாது முதுமை எனக்கு வாராது

ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு ஆசை துறந்தால் அகிலம் உனக்கு

Muthu - Oruvan Oruvan

மஜ்னு - குல்முகர் மலரே குல்முகர் மலரே

மலரே மலரே மலரே மலரே முகவரி என்ன ?
உன் மனதில் மனதில் மனதில் உள்ள முதல் வரி என்ன ?
குல்முகர் மலரே குல்முகர் மலரே கொல்ல பார்க்காதே
உன் துபட்டாவில் என்னை கட்டி தூக்கில் போடாதே (2)
மலரின் தொழிலே உயிரை கொள்ளுவதில்லை யடி
மனிதன் உயிரை கொன்றால் அதன் பேர் மலரே இல்லையடி
அதன் பேர் மலரே இல்லையடி
(குல்முகர் மலரே ...) (மலரே மலரே ...)
உயிரை திருகி உந்தன் கூந்தல் சூடிகொள்ளாதே
என் உதிரம் கொண்டு உதட்டு சாயம் பூசிகொல்லாதே
விண்மீன் பறிக்க வழியில்லை என்று கண்ங்களை பறிக்காதே
என இரவை எடுத்து குழைத்து குழித்து கண் மை பூசாதே
என்னை விடவும் என்னை அறிந்தும் யார் நீ என்று கேட்காதே
இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும்
என்னையும் கவிஞன் ஆக்காதே (2)
(குல்முகர் மலரே ...)
உடைந்த வார்த்தையில் உன் பெயர் சொல்லி உடனே ஓடுகிறாய்
என் ரத்த குழாயில் புகுந்து கொண்டு சத்தம் போடுகிறாய்
கண்ணாடி நெஞ்சில் கல்லை எரிந்து கலகம் மூட்டுகிராய்
இன்று ஐந்தரை மணிக்குள் காதல் வருமென அறி குறி காட்டுகிறாய்
மௌனம் என்பது உறவா பகையா வயது தீயில் வாடுகிராய்
முதற் கனவே மனம் எரிமலை தானே ஏனடே பெட்ரோல் ஊற்றுகிறாய்
(குல்முகர் மலரே ...)

Majunu - Gulmohar Malare

மஜ்னு - முதற்கனவே முதற்கனவே

முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன்வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
விழித்தெழுந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா
விழி திறக்கையில் கனவென்னை துறத்துது நிஜமா நிஜமா
முதற் கனவு முதற் கனவு மூச்சுள்ளவரையிலும் வருமல்லவா
கனவுகள் தீர்ந்துபோனால் வாழ்வில்லை அல்லவா
கனவல்லவே கனவல்லவே கண்மணி நாமும் நிஜமல்லவா
சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா
முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன்வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
விழித்தெழுந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா
விழி திறக்கையில் கனவென்னை துறத்துது நிஜமா நிஜமா
எங்கே எங்கே......... நீ எங்கே என்று
காடு மேடு தேடி ஓடி இரு விழி தொலைத்துவிட்டேன்
இங்கே இங்கே நீ வருவாயென்று
சின்ன கண்கள் சிந்துகின்ற துளிகளில் துளிகளில் உயிர்வளர்த்தேன்
தொலைந்த என் கண்களை பாத்ததும் கொடுத்து விட்டாய்
கண்களை கொடுத்து இதயத்தை எடுத்துவிட்டாய்
இதயத்தை பறித்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய்
முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன்வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
விழித்தெழுந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா
விழி திறக்கையில் கனவென்னை துறத்துது நிஜமா நிஜமா
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... ......
ஊடல் வேண்டாம் ஓடல்கள் வேண்டாம்
ஓசையோடு நாதம் போல உயிரினில் உயிரினில் கலந்துவிடு
கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல மடியினில் மடியினில் உறங்கிவிடு
நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை
நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை
வண்ண போக்கள் வேர்க்குமுன்னே வரச்சொல்லு தென்றலை
வரச்சொல்லு தென்றலை.........
தாமரையே தாமரையே நீரினில் ஒளியாதே
நீ நீரில் ஒளியாதே
தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன்
அனுதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன்
சூரியனே சூரியனே தாமரை முகவரி தேவை இல்லை
விண்ணில் நீயும் இருந்து கொண்டே விரல் நீட்டி திறக்கிறாய்
மரம் கொத்தியே மரம் கொத்தியே மனதை கொத்தி துளையிடுவாய்
குளத்துக்குள் விளக்கடித்து தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்...........தூங்கும் காதல் எழுப்புவாய்
நீ தூங்கும் காதல் எழுப்புவாய்...
தூங்கும் காதல் எழுப்புவாய்.

Majunu - Mudhal Kanave

மின்னலே - வெண்மதி வெண்மதியே நில்லு

வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானத்துக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கு இல்லை ஒரு நஷ்டம்..
உன்னை இன்றோடு நான் மறப்பேனே
நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில்
பூத்த காதல் மேலும் மேலும்
துன்பம் துன்பம் வேண்டாம்..

ஐன்னலின் வழி வந்து விழுந்தது
மின்னலின் ஒளி அதில் தெரிந்தது
அழகு தேவதை அதிசய முகமே
தீப்பொறி என் இரு விழிகளும்
தீக்குச்சி என என்னை உரசிட
கோடிப் பூக்களாய் மலர்ந்தது மனமே
அவள் அழகைப் பாட ஒரு மொழி இல்லையே
அளந்து பார்க்க பல விழி இல்லையே
என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே

வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானத்துக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கு இல்லை ஒரு நஷ்டம்..
உன்னை இன்றோடு நான் மறப்பேனே
நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில்
பூத்த காதல் மேலும் மேலும்
துன்பம் துன்பம் வேண்டாம்..

ஐஞ்சு நாள் வரை அவள்
பொழிந்தது ஆசையின் மழை
அதில் நலைந்தது நூறு
ஜென்மங்கள் நினைவினில் இருக்கும்
அது போல் எந்த நாள் வரும்
உயிர் உருகிய அந்த நாள் சுகம்
அதை நினைக்கையில்
ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்
ஒரு நிமிசம் கூட என்னை பிரியவில்லை
விபரம் ஏதும் அவள் அறிய வில்லை
என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே..

உன்னை இன்றோடு நான் மறப்பேனே
நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில்
பூத்த காதல் மேலும் மேலும்
துன்பம் துன்பம் வேண்டாம்..

Minnale - Venmathi Venmathiye

மின்னலே - இரு விழி உனது

ம்ம்ம்...

இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது

இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது

நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஒரே ஞாபகம் ஒரே ஞாபகம்

இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது

நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஒஹோ ஹோ...ஒரே ஞாபகம்
ஒஹோ ஹோ...உந்தன் ஞாபகம்
காதல் காயம் நேரும்போது
தூக்கம் இங்கே ஏது
ஒரே ஞாபகம் ஒரே ஞாபகம்

Minnale - Iru Vizhi Unadhu

மின்னலே - வசீகரா என் நெஞ்சினிக்க

வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்க முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்க முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே

அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சில நேரம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி எனை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையேதான் எதிர்பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள் நான் வேண்டும்

(வசீகரா)

தினம் நீ குளித்ததும் எனைத் தேடி
என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீர் என்று
பின்னாலிருந்து எனை நீ அணைப்பாயே அது கவிதை
யாரேனும் மணி கேட்டால் அதை சொல்லக் கூடத் தெரியாதே
காதலெனும் முடி??? கடிகார நேரம் கிடையாதே


(வசீகரா)

Minnale - Vaseegara

Followers