Pages

Search This Blog

Wednesday, November 6, 2013

மௌன ராகம் - பனிவிழும் இரவு

பனிவிழும் இரவு நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது பூங்காற்று தூங்காது
வா வா வா...

(பனிவிழும் இரவு)

பூவிலே ஒரு பாய் போட்டு பனித்துளி தூங்க
பூவிழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க
மாலை விளக்கேற்றும் நேரம் மனசில் ஒருகோடி பாரம்
தனித்து வாழ்ந்தென்ன லாபம் தேவையில்லாத சாபம்
தனிமையே போ போ இனிமையே வா
பூவும் முல்லாய் மாறிப்போகும்

(பனிவிழும் இரவு)

காவலில் நிலை கொள்ளாது தாவிடும் மனது
காரணம் துணையில்லாமல் வாடிடும் வயது
ஆசை கொல்லாமல் கொல்லும் அங்கம் தாளாமல் துள்ளும்
என்னைத் தீண்டாடும் மோகம் இதயம் உன்னோடு கூடும்
இதயமே ஓ உதயமோ சொல்
நீரும் வேரும் சேர வேண்டும்

(பனிவிழும் இரவு)

Mouna Ragam - Panivizhum Iravu

மௌன ராகம் - ஒஹோ மேகம் வந்ததோ

ஒஹோ மேகம் வந்ததோ ஏதோ தாகம் தந்தடோ
எல்லாம் பூவைக்காகத்தான் பாடும் பாவைக்காகத்தான்
பூக்கள் மேல் நீர்த்துளிகள் வெண் பாக்கள் பாடாதோ
தூறல் போடும் நேரம் பூஞ்சாரல் வீசாதோ

(ஒஹோ மேகம்)

யாரும் சொல்லாத காவியம் ஆடை கொண்டிங்கு ஆடுது
நேரம் வந்தாலென்ன பொன்னோவியம் வண்ணம் மாறாமல் மின்னுது
நான் பெண்ணானது கல்யாணம் தேடவா
ஓ கண்ணாலன் வந்து பூமாலை போடவா
ஏ அம்மாடியோ பெண் பார்க்கும் நாடகம்
யார் வந்தாலுமென்ன திரும்பாது ஞாபகம்
பூவிலங்கு தேவையில்லையே

(ஒஹோ மேகம்)

கால்கள் எங்கேயும் போகலாம் காதல் இல்லாமல் வாழலம்
வண்ண மின்னல்களாய் நின்றாடலாம் வாழ்வில் சங்கீதம் பாடலாம்
நாம் இன்னாளிலே சிட்டாக மாறலாம்
வா விண்மீதிலே விண்மீன்கள் ஆகலாம்
????
வாழ்க்கை என்ன வாழ்ந்து பார்க்கலாம்

(ஒஹோ மேகம்)

Mouna Ragam - Oho Megam Vandhadho

மௌன ராகம் - சின்னச் சின்ன வண்ணக்குயில்

சின்னச் சின்ன வண்ணக்குயில்... கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா..
புரியாத ஆனந்தம்.. புதிதாக ஆரம்பம்.. (2)
பூத்தாடும் தேன்மொட்டு நான்தானா..
சின்னச் சின்ன வண்ணக்குயில்... கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா..

(இசை)

மன்னவன் பேரைச் சொல்லி.. மல்லிகை சூடிக் கொண்டேன்..
மன்மதன் பாடல் ஒன்று.. நெஞ்சுக்குள் பாடிக் கொண்டேன்..
சொல்லத்தான் எண்ணியும் இல்லையே பாஷைகள்..
என்னமோ ஆசைகள்.. நெஞ்சத்தின் ஓசைகள்..
மாலை சூடி.. மஞ்சம் தேடி.. (2)
காதல் தேவன் சந்நிதி.. காண... காணக் காண..

சின்னச் சின்ன வண்ணக்குயில்... கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா..
புரியாத ஆனந்தம்.. புதிதாக ஆரம்பம்.. (2)
பூத்தாடும் தேன்மொட்டு நான்தானா..
சின்னச் சின்ன வண்ணக்குயில்... கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா..

(இசை)

மேனிக்குள் காற்று வந்து மெல்லத்தான் ஆடக் கண்டேன்;..
மங்கைக்குள் காதல் வந்து.. கங்கை போல் ஓடக் கண்டேன்..
இன்பத்தின் எல்லையோ.. இல்லையே இல்லையே..
அந்தியும் வந்ததால்.. தொல்லையே.. தொல்லையே..
காலம் தோறும்.. கேட்க வேண்டும் (2)
பருவம் என்னும் கீர்த்தனம் பாட.. பாடப்பாட..

சின்னச் சின்ன வண்ணக்குயில்... கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா..
புரியாத ஆனந்தம்.. புதிதாக ஆரம்பம்.. (2)
பூத்தாடும் தேன்மொட்டு நான்தானா..

சின்னச் சின்ன வண்ணக்குயில்... கொஞ்சிக் கொஞ்சிக்; கூவுதம்மா..(2)

Mouna Raagam - Chinna Chinna

புது புது அர்த்தங்கள் - குருவாயூரப்பா குருவாயூரப்பா

குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி
ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை என்னாளும் உன் பாதை

(குருவாயூரப்பா)

தேனாற்றங்கரையில் தெய்வீகக்குரலில் நாந்தானே ஒரு பாட்டிசைத்தேன்
தினந்தோறும் இரவில் நடு ஜாம நிலவில் நாந்தானே அதைக் கேட்டிருந்தேன்
அரங்கேற்றந்தான் ஆகாமல்தான் அலைபாயும் என் ஜீவந்தான்
மாது உன் மீது எப்போது என் மோகம் தீராதோ சொல் பூங்கொடியே

(குருவாயூரப்பா)

ஏகாந்த நினைவும் எரிகின்ற நிலவும் என் மேலே ஒரு போர் தொடுக்க
எனை வந்து தழுவு ஏனிந்தப் பிரிவு மானே வா உனை யார் தடுக்க
பரிமாறலாம் பசியாறலாம் பூமாலை நீ சூடும் நாள்
வா வா என் தேவா செம்பூவா என் தேகம் சேராதோ உன் கைகளிலே

(குருவாயூரப்பா

Pudhu Pudhu Arthangal - Guruvayurappa Guruvayurappa

புன்னகை மன்னன் - என்ன சத்தம் இந்த

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா
கிளிகள் முத்தம் தருதா அதனால் சத்தம் வருதா
அடடா..

(என்ன)

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே
கண்களில் ஏனிந்த கண்ணீர் அது யாராலே
கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே
காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே

மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு
ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு
ஆரிரரோ இவர் யார் எவரோ
பதில் சொல்வார் யாரோ

(என்ன)

கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ
தன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ
உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ

மங்கையிவள் வாய் திறந்தால் மல்லிகைப்பூ வாசம்
ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்
யாரிவர்கள் இரு பூங்குயில்கள்
இளங்காதல் மான்கள்

(என்ன)

punnagai mannan - Enna satham intha

புன்னகை மன்னன் - வான் மேகம்

வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்
தேகம் என்னவாகும் இன்பமாக நோகும்
மழைத்துளி தெரித்தது எனக்குள்ளே குளித்தது
நினைத்தது பலித்தது குடைக்கம்பி துளிர்த்தது
வானம் முத்துக்கள் சிந்தி
வாழுவு வென்றது காதல் வென்றது
மேகம் வந்தது பூக்கள் சிந்துது
ஆளுமில்லை சேர்த்தெடுக்க நூலுமில்லை கோர்த்தெடுக்க

(வான் மேகம்)

வானிலே வானிலே நீரின் தோரணங்களோ
என் மனம் பொங்குதே என்ன காரணங்களோ
அவன் விழி அசைந்ததில் இவள் மனம் அசைந்ததோ
தளிர்கரம் பிடிக்கையில் மலர்க்கொடி சிலிர்த்ததோ
சாலை எங்கும் இங்கே சங்கீத
மேடையானதோ வாடை பாடுதோ
தூரல் போடுதோ தோகை ஆடுதோ
பூமியெங்கும் கவியரங்கம் சாரல் பாடும் ஜலதரங்கம்

(வான் மேகம்)

punnagai mannan - vaan megam

புன்னகை மன்னன் - கவிதை கேளுங்கள்

ஆ ..ஆ ..
கவிதை  கேளுங்கள்  கருவில்  பிறந்தது  ராகம் (2)
நடனம்  பாருங்கள்  இதுவும்  ஒரு  வகை  யாகம்
பூமி  இங்கு  சுற்றும்  மட்டும்  ஆட  வந்தேன்  என்ன  நட்டம் (2)
ஓடும்  மேகம்  நின்று  பார்த்து  கைகள்  தட்டும்


கவிதை  கேளுங்கள்  கருவில்  பிறந்தது  ராகம்
நடனம்  பாருங்கள்  இதுவும்  ஒரு  வகை  யாகம்

நேற்று  என்  பாட்டில்  சுதியும்  விலகியதே
பாதை  சொல்லாமல்  விதியும்  விலகியதே
காலம்  நேரம்  சேரவில்லை 

காதல்  ரேகை  கையில்  இல்லை
சாக  போனேன்  சாகவில்லை
மூச்சு  உண்டு  வாழவில்லை
வாய்  திறந்தேன்  வார்த்தை  இல்லை
கண்  திறந்தேன்  பார்வை  இல்லை
தனிமையே  இளமையின்  சோதனை
இவள்  மனம்  புரியுமா ,இது  விடுகதை

கவிதை  கேளுங்கள்  கருவில்  பிறந்தது  ராகம்
கவிதை  கேளுங்கள்  நடனம்  பாருங்கள்  ஓ ...

ஜகன  ஜகன  ஜகன  ஜம்  ஜம் ....

ஓம்  ததீம்  ததீம்  பதங்கள்  பாட 
ஜகம்  நடுங்க  என்  பதங்கள்  ஆட 

ஜகன  ஜகன 
தம்  தம்  தக்க 

ஜகன  ஜகன 
தம்  தம்  தம் 
ஜகன  ஜகன 
தம்  தம்  தக்க 
ஜகன  ஜகன 
தம்  தம்  தம் 
ஜகன  தீம்த  ஜகன  தீம்த 
தீம்த  தீம்த  தீம்த  தீம்த 
ஓம்  ததீம்  ததீம்  பதங்கள்  பாட 
ஜகம்  நடுங்க  என்  பதங்கள்  ஆட

பாறை  மீது  பவள  மல்லிகை 

பதியம்  போட்டதாரு 
ஓடும்  நீரில்  காதல்  கடிதம் 
எழுதிவிட்டது  யாரு 
அடுப்பு  கூட்டி  அவிச்ச  நெல்லை 

விதைத்து  விட்டது  யாரு 
அலையில்  இருந்து  உலையில்  விழுந்து 
துடி  துடிக்கிது  மீனு 
இவள்  கனவுகள்  நனவாக  மறுபடி  ஒரு  உறவு 
சலங்கைகள்  புது  இசை  பாட  விடியட்டும்  இந்த  இரவு 
கிழக்கு  வெளிச்சம்  இருட்டை  கிழிக்கட்டும் 
இரவின்  முடிவில்  கனவு  பலிக்கட்டும் 
இருண்டு  கிடக்கும்  மனமும்  வெளுக்கட்டும் ...

ஓம் ....

ஓம்  ததீம்  ததீம்  பதங்கள்  பாட 

ஜகம்  நடுங்க  என்  பதங்கள்  ஆட
ஓம்  ததீம்  ததீம்  பதங்கள்  பாட 

ஜகம்  நடுங்க  என்  பதங்கள்  ஆட

Punnagai mannan - Kavidhai kelungal

Followers