Pages

Search This Blog

Friday, October 25, 2013

லவ் டுடே - ஏன் பெண்ணென்று

ஏன் பெண்ணென்று பிறந்தாய்?
ஏன் என் கண்ணில் விழுந்தாய்?
ஏன் ஒரு பாதி சிரித்தாய்?
என் உயிர் பூவை எரித்தாய்?
முதல் நாள் பார்த்தாய்... உறக்கம் கெடுத்தாய்!
முறையா என்றேன், கண்கள் பறித்தாய்!
என் வலி தீர ஒரு வழி என்ன?
என் பனிப் பூவே மீண்டும் பார்த்தால் என்ன?
(ஏன்)
நீ சூடும் ஒரு பூ தந்தால்,
என் ஆஸ்தி எல்லாம் கொடுப்பேன்!
உன் வாயால் என் பேர் சொன்னால்,
உன் காலடியில் கிடப்பேன்!
தூக்கத்தை தொலைத்தேனே, துடிக்குது நெஞ்சம்!
தலை போன சேவல் போல், தவிக்குது அங்கம்!
இரண்டில் ஒன்று சொல்லிவிடு!
இல்லை நீயே கொள்ளியிடு...!
(ஏன்)
நோகாமல், பிறர் காணாமல்,
உந்தன் ஆடை நுனி தொடுவேன்!
என்ன ஆனாலும், உயிர் போனாலும்,
ஒரு தென்றல் என்றே வருவேன்!
நீ என்னைப் பார்த்தால் தான் துடிக்குது உள்ளம்!
நீ என்னைப் பிரிந்தாலோ உள்ளம் வெறும் பள்ளம்!
இமயம் கேட்கும் என் துடிப்பு!
ஏனோ உனக்குள் கதவடைப்பு!
(ஏன்)

Love Today - Yen Pennendru

மறுபடியும் - நலம் வாழ எந்நாளும்

நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்!
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன்வாசல் வந்தாடும்!
இளந் தென்றல் உன்மீது பண்பாடும்!

மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்!
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்!
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்!
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்!

விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு!
இதிலென்ன பாவம்.....!
எதற்கிந்த சோகம்? கிளியே..!

கிழக்கினில் தினம்தோறும் கதிரானது!
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது!
கடல்களில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது!

நிலவினை நம்பி இரவுகள் இல்லை!
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை!
ஒரு வாசல் மூடி......!
மறுவாசல் வைப்பான் இறைவன்!..

Marupadiyum - Nalam Vazha

பூமகள் ஊர்வலம் - அந்த வானுக்கு

அந்த வானுக்கு இரண்டு தீபங்கள்
அவை சூரியச் சந்திரரே
என் வாழ்வுக்கு இரண்டு தீபங்கள்
என் தாயொடு தந்தையரே

அந்த வானின் தீபங்கள் இல்லையென்றால்
இந்த மண்ணில் உயிர்கள் இல்லையே
என் பாசதீபம் இரண்டும் இல்லையென்றால்
என் வாழ்வில் ஒளியும் இல்லையே
ஒரு தாய் தந்தை போலே
உலகில் உறவில்லையே

தாய்தானே அன்புக்கு ஆதாரம்
தந்தைதானே அறிவுக்கு ஆதாரம்

நூறு தெய்வங்கள் ஒன்றாகக் கூடி
தாய்க்குப் பூசைகள் செய்க
இமயமலைகளும் ஏழு கடல்களும்
தந்தை நாமமே சொல்க

சுடு கோபங்கள் நானும் பார்த்ததில்லை
ஒரு சுடு சொல்லுக் கூடக் கேட்டதில்லை
ஒரு ஏழைத்தாய் போல்
உலகில் தெய்வம் இல்லை.

தந்தை காலடி தாயின் திருவடி
நல்ல மகனுக்குக் கோயில்
அன்பின் முகவரி என்ன என்பதை
கண்டு கொள்கிறேன் தாயில்

நான் உறவென்ற தீபம்
ஏற்றி வைத்தேன்
அதில் உயிரென்ற எண்ணெய்
ஊற்றி வைத்தேன்
நான் என்னில் கண்ணில்
இருவரைச் சுமந்திருப்பேன்.

Poomagal Oorvalam - Antha Vaanukku

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - எங்கே எனது கவிதை

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

விழியில் கரைந்துவிட்டதா
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்
தொலைந்த முகத்தை மனம் தேடுதே
வெயில் தாரொழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை
உருகி உருகி மனம் தேடுதே

அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்
அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன்

விரை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
விரை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட
ஒரே தொடுதல் மனம் ஏங்குதே
முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது
நித்தம் வேண்டும் என்றும் ஏங்குதே

வேர்வை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்று
ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்பக் கணம் கேட்குதே
கேட்குதே...

பாறையில் செய்ததும் என் மனம் என்று
தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் முளைத்து விட்டாய்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை...

Kandukondain Kandukondain - Yengae Enathu Kavithai

சேட்டை - எதத்தான் கண்டுட்ட

எதத்தான் கண்டுட்ட நீ புதுசா
என்கிட்ட இல்லாதத பெருசா பெருசா
எதுகுடி மாரிட நீ தினுசா
என் கூட பழகினது பழசா பழசா

அடி வாடி என்கிட்ட... பன்னாத சேட்டை...
மாதாத ரூட்ட பூட்டாத கேட்ட - நீ
பாத்துட துட்டதான் வரமாட்ட கிட்டத்தான்

நீதான்டி ஒஸ்தி பொண்ணா...
அட நான்தானே டஸ்டு பின்னா...
நீதான்டி ஒஸ்தி பொண்ணா...
அட நான்தானே டஸ்டு பின்னா...

பாத்து ரேட்ட போசுடா
அவளுக்கு first ஓனரு நானுடா
ஆர் சீ புக்ககு பாருடா இது f சீ பன்ன காருடா
அடி நீதான்டி ஒஸ்தி பொண்ணா...
அட நான்தானே டஸ்டு பின்னா...

அடி நீதான்டி ஒஸ்தி பொண்ணா...
அட நான்தானே டஸ்டு பின்னா...
பாத்து ரேட்ட போசுடா
அவளுக்கு first ஓனரு நானுடா
ஆர் சீ புக்ககு பாருடா இது f சீ பன்ன காருடா

அடி நீதான்டி ஒஸ்தி பொண்ணா...
அட நான்தானே டஸ்டு பின்னா...

Settai - Edhathaan Kanduttey Nee Pudhusa

சேட்டை - என் அர்ஜுனா அர்ஜுனா

என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே
உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன்
அந்த அச்சத்தில் மிச்சத்தை மரந்திடுவேன்
வரும் வெட்கத்தில் தல்லாடி விழுவேன்

என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே
உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன்

அருகினில் வந்தால் அனைத்திடு என்றாய்
ஏன் மௌனம் கொண்டாய் ஓ...
தொலைவினில் சென்றாய் உருத்தினேன் அன்பால்
விழி முடிக்கொண்டாய்...
(என் அர்ஜுனா)

தூரத்து சூரியன் நான் பனியேன உருகுகிறேன்
மலரென நீ சிரித்தாலோ மடியினில் உதிர்ந்திடுவேன்
ஏஹே தொட்டால் சுடும் வலி காய்ச்சல் வரும்
முத்தாய் மழை இடை வந்தே விழும்
முத்தாய் அதில் நனநை;திட நனைந்திட சுகமே...

தரையிலே மீனாய் கிடக்கிறேன் நானாய்
நீ எங்கே போனாய் ஓ...
சரிகிறேன் தானாய் தாங்க வா தூனாய்
என் வாழ்வாய் ஆனாய்...
(என் அர்ஜுனா)

Settai - En Arjuna Arjuna

சேட்டை - லைலா லல் லைலா

லைலா லல் லைலா உன் நெஞ்சில் தங்கிட
வாடகை கேட்கிறாய் லைலா ஓ ஸ்டைலா ஸ்டைல் ஸ்டைலா
உன் கண்ணுல காதுல மூக்குக்ல வேர்கிர லைலா

நாம் தொட்டது போதையிலே
விரல் பட்டதும் போதையிலே
நான் தொட்டதும் சட்டென கைகளை விட்டதும் போத
இது காதல் லீலை இல்ல அதற்கு இங்கே வேலை இல்ல
என்ன கொஞ்சி குலவிட நூறு முகம் வரும்
நிரந்தரம் யாரும் இல்ல லைலா... லைலா...

லைலா லல லைலா உன் நெஞ்சில் தங்கிட
வாடகை கேட்கிறாய் லைலா

எத்துனை பாசை உண்டோ எனக்கு அது அத்துபடி
வார்த்தையை வீட்டில் விட்டு மௌனமாய் கட்டிபுடி
இங்கு நீ உன்னை காண்பாய் உள்ளது உள்ளபடி
(நாம் தொட்டது)

ஹேய்... லைலா லா லைலா உன் நெஞ்சில் தங்கிட
வாடகை கேட்கிறாய் லைலா...

Settai - Laila Laila

Followers