Pages

Search This Blog

Showing posts with label Viduthalai. Show all posts
Showing posts with label Viduthalai. Show all posts

Tuesday, May 9, 2023

விடுதலை - ஒன்னோட நடந்தா

 ஆண்: ஒன்னோட நடந்தா கல்லான காடு

ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே


பெண்: நீ போகும் பாதை பூங்கால்களாலே
பொன்னான வழியாய் மாறிடுமே


ஆண்: ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
நீ போகும் பாதை பூங்கால்களாலே
பொன்னான வழியாய் மாறிடுமே


பெண்: ராசாவே உன்னால ஆகாசம் விடியம்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே


ஆண்: ராசத்தி ஆகாசம் உன்னால விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே


பெண்: சொல்லாத மாயங்கள்
உன்னால் நடக்குதே


ஆண்: ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே


பெண்: காத்தில் வரும் புழுதியப்போல்
நம்ம தூத்துகிற ஊரு இது
துக்கத்தில துவண்டிருந்தா
அது தூக்கிவிட நெனைக்காது


ஆண்: முன்னேறிப்போக
முட்டுக்கட்டை ஏது
பின் திரும்பி பாக்காதே
ஒந்துணைக்கு நாந்தான்
எந்துணைக்கு நீதான்
என்றும் இது மாறாதே


ஆண்: நல்வாக்கு ஊர் சொல்லும்
காலம் வரும்
அல்லல் இருளை விரட்டும்

பெண்: கல்லான காடு
ஒன்னோட நடந்தா
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே


ஆண்: பூத்தாடும் பூவனம் ஆகிடுமே


பெண்: ஆராரிராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ஆராரிராரோ
ஆராரிராராரி ராரிராரோ
ஆராரிராராரி ராரிராரோ


பெண்: ஏத்தி வச்ச தீபமொண்ணு
எந்த சாமிகளும் பாக்கலியே
சேத்து வச்ச கனவுகள
நிறைவேத்தி விட யாருமில்லையே


ஆண்: நிக்காத காலம் நேராக ஓடும்
எப்போதும் மாறாது
இல்லார்க்கும் ஏற்றம் என்றேனும் கொடுக்கும்
இல்லாமல் போகாது


ஆண்: நம்பிக்கை கொண்டார்க்கு
நாளை உண்டு
நம் வாழ்வில் என்றென்றும்
சந்தோஷம் பொங்கி வரும்


பெண்: கல்லான காடு ஒன்னோட நடந்தா
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
ராசாவே உன்னால ஆகாசம் விடியம்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே


ஆண்: ராசத்தி ஆகாசம் உன்னால விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே


பெண்: சொல்லாத மாயங்கள்
உன்னால் நடக்குதே


ஆண்: ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே





Viduthalai  - Unnoda Nadantha

விடுதலை - வழி நெடுக காட்டுமல்லி

ஆண் : வழி நெடுக காட்டுமல்லி…

யாரும் அத பாக்கலியே…
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள…
வருமா வருமா வீட்டுக்குள்ள…
காடே மணக்குது வாசத்துல…
என்னோட கலக்குது நேசத்துல…

ஆண் : வழி நெடுக காட்டுமல்லி…

பெண் : வழி நெடுக காட்டுமல்லி…
கண்பார்க்கும் கவனமில்லை…
பூக்குற நேரம் தெரியாது…
காத்திருப்பேன் நான் சலிக்காது…
பெண் : பூ மணம் புதுசா தெரியுதம்மா…
என் மனம் கரும்பா இனிக்குதம்மா…
வழி நெடுக காட்டுமல்லி

ஆண் : கனவெனக்கு வந்ததில்லை..
இது நிசமா கனவு இல்ல…
பெண் : கனவா போனது வாழ்க்க இல்ல…
வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல…
ஆண் : மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள…
போகுற வருகிற நினைவுகளே…
பெண் : ஒறங்குது உள்ளே ஒரு விசயம்…
ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்…
ஆண் : காத்திருப்பேன் நான் திரும்பி வர…
காட்டுமல்லியில அரும்பெடுக்க…
பெண் : வழி நெடுக காட்டுமல்லி…
கண்பார்க்கும் கவனமில்லை…
ஆண் : காடே மணக்குது வாசத்துல…
என்னோட கலக்குது நேசத்துல…

பெண் : கிட்ட வரும் நேரத்துல…
எட்டி போற தூரத்துல…
ஆண் : நீ இருக்க உள்ளுக்குள்ள…
உன்னவிட்டு போவதில்ல…

பெண் : ஒலகத்தில் எங்கோ மூலையில…
இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள…
ஆண் : இறு சிறு உசுரு துடிக்கிறது…
நெசமா யாருக்கும் தெரியாது…
பெண் : சாட்சி சொல்லும் இந்தக் காடறியும்…
காட்டுல வீசிடும் காத்தறியும்…
வழி நெடுக காட்டுமல்லி…
கண் பார்த்தும் கவனமில்லை…
ஆண் : எனக்கா பூத்தது காட்டுக்குள்ள…
வருமா வருமா வீட்டுக்குள்ள…
பெண் : பூ மணம் புதுசா தெரியுதம்மா…
என் மனம் கரும்பா இனிக்குதம்மா…
ஆண் & பெண் : வழி நெடுக காட்டுமல்லி…




Viduthalai - Vali Neduka Kaattumalli

Followers