Pages

Search This Blog

Tuesday, January 7, 2025

அமரன் - வெண்ணிலவு சாரல் நீ

வெண்ணிலவு சாரல் நீ

வீசும் குளிர் காதல் நீ

வெண்ணிலவு சாரல் நீ
வீசும் குளிர் காதல் நீ
ஆசை வந்து ஆசை தீர
ஆடுகின்ற ஊஞ்சல் நீ

கொட்டும் பனி மாயம் நீ
கோடை வெயில் சாயம் நீ
துள்ளி விளையாடும் அன்பில்
தூகையாகும் காலம் நீ

மின்னல் மோதும் வாசல் நீயே
செல்லமான மீறல் நீயே
நெஞ்சமே ஏங்கும் தேடல் நீ

வெண்ணிலவு சாரல் நீ
வீசும் குளிர் காதல் நீ
ஆசை வந்து ஆசை தீர
ஆடுகின்ற ஊஞ்சல் நீ

வெண்ணிலவு சாரல் நீ
வீசும் குளிர் காதல் நீ

பாதி நீயே என் பாதி நீயே
நீயில்லாமல் நான் ஏது கண்ணே
ஆதி நீயே என் ஆயுள் நீயே
ஆணி வேரை நீங்காது மண்ணே

எங்கே இருள் என்றாலும்
அங்கே ஒளி நீதானே
கண்ணா எனை நீயே காக்க
கண்ணீரையும் காணேனே
நீண்ட தூரம் போன போதும்
நீங்குமோ காதலே

வெண்ணிலவு சாரல் நீ
வீசும் குளிர் காதல் நீ
ஆசை வந்து ஆசை தீர
ஆடுகின்ற ஊஞ்சல் நீ

கொட்டும் பனி மாயம் நீ
கோடை வெயில் சாயம் நீ
துள்ளி விளையாடும் அன்பில்
தூகையாகும் காலம் நீ

மின்னல் மோதும் வாசல் நீயே
செல்லமான மீறல் நீயே
நெஞ்சமே ஏங்கும் தேடல் நீ




Amaran - Vennilavu Saaral

அமரன் - ஹேய் மின்னலே

 ஹேய் மின்னலே ஹே மின்னலே

என் கண்ணிலே நெஞ்சிலே
சொல்லோனா கண்ணாலே

சக்கரே என் சக்கரே
மெல்மெல்லமாய் செல்லமாய்
கொஞ்சுதே மௌனமே

சிநேகமோ……பிரேமாமோ……
ஈடிலா நேயமோ
பேரிலா மாயமோ
கேள்வியே சுகமோ…..

யாவுமே மாறுதே
பூமிதான் இதுவோ
சக்கரே……சக்கரே……சக்கரே……

கரைமீதிலே இரு பாதமாய்
வா வாழலாம் வாழலாம்
மௌனமாய் தேடலாம்

கடல் மீதிலே
விழும் தூறலாய்
நாம் தூறலம்
தூரியே தீரலாம்

இருள் இருள் பூசிய நெடுஞ்சாலையில்
ஒலி போல் சிரிப்பால்
விரல் விரல் சூடிய
நறும்பூவென விரலை பிடிப்பாய்

சிறு குடை மீறிய
மலை போலவே நாள் போகுதே
பெரும் வரம் வாங்கிய
தவம் போலவே வாழ்வானதே

ஹேய் மின்னலே ஹே மின்னலே
என் கண்ணிலே நெஞ்சிலே
சொல்லோனா கண்ணாலே

என் உள்ளிலே என் உள்ளிலே
மெல்மெல்லமாய் செல்லமாய்
கொஞ்சுதே மௌனமே

சிநேகமோ……பிரேமாமோ……
ஈடிலா நேயமோ
பேரிலா மாயமோ
கேள்வியே சுகமோ…..

யாவுமே மாறுதே
பூமிதான் இதுவோ
சக்கரே……சக்கரே……சக்கரே




Amaran - Hey Minnale

அமரன் - உயிரே உயிரே உறையும் உயிரே

 அதிகாலை மழை தானா

அவனோடு இனி நானா
இது நான் கேட்ட காலங்கள் தானா

இதிகாசம் இது தானா
இவளோடு நடந்தேனா
இந்த மாயத்தில் நானும் விழுந்தேனா

உயிரே உயிரே உறையும் உயிரே
இனிமேல் நீதானா
உயிரே உயிரே உறையும் உயிரே
இனிமேல் நீதானா

அவசரமாய் அச்சாகும்
நாம் கைகோர்த்த காதல் கதை
அழகழகாய் பேசிடும்
நாம் மண்ணோடு வாழும் வரை

உன் மேல் சட்டை வாசம்
என் மூச்சோடு பேசும்
பொய் பூசாத நேசங்களே

உயிரே உயிரே உறையும் உயிரே
இனிமேல் நீதானா
உயிரே உயிரே உறையும் உயிரே
இனிமேல் நீதானா




Amaran - Uyirey Uyirey

ஜெயிலர் - ரத்தமாரே

 ரத்தமாரே ரத்தமாரே 

ரத்தமாரே மொத்தமாரே 
ரத்தமாரே....மொத்தமாரே 
ரத்தமாரே 

பெத்ததாரே உன்ன பெத்ததாரே
கத்தி கூறே என் மக்கமாரே 
மொத்தமாரே....மொத்தமாரே 
ரத்தமாரே 

என் முகம் கொண்ட....என் உயிரே 
என் பெயர் காக்க....பிறந்தவனே 
என் குணம் கொண்ட....என் உலகே 
எவனையும் தாண்டி....சிறந்தவனே 
எனக்கு பின் என்னை....தொடர்பவன் நீ 
நான் நம்ப தகுந்த....நல்லவன் நீ 

புதல்வா....புதல்வா வா 
புதல்வா....புதல்வா வா 
புகழ் பூக்கள் தூவிட 
புவி எங்கும் வாழடா 

மகனே....மகனே வா 
மகனே....மகனே வா 
உன்னை பார்க்கும்போதெல்லாம் 
முகம் பூக்குதேனடா 

ரத்தமாரே ரத்தமாரே 
ரத்தமாரே மொத்தமாரே 
ரத்தமாரே....மொத்தமாரே 
ரத்தமாரே 

பெத்ததாரே உன்ன பெத்ததாரே
கத்தி கூறே என் மக்கமாரே 
மொத்தமாரே....மொத்தமாரே 
ரத்தமாரே 

தலைமுறை தாண்டி நிற்கும் 
தந்தை மகன் கூட்டணியில் 
வெற்றி கதைகள் நூறு 
நித்தம் கேட்கின்றேன் 

சிங்கம் பெற்ற பிள்ளை என்று 
ஊரே சொல்லும் ஓசையோடு 
ஒய்யாரமாக....ஓய்வெடுக்கின்றேன் 
அன்பை மட்டும் அள்ளி வீசும் வீடு 
அமைவது அழகு 
அதிசயம் அற்புதம் அதுவே

அமைத்த புதல்வா....புதல்வா வா 
புதல்வா....புதல்வா வா 
புகழ் பூக்கள் தூவிட 
புவி எங்கும் வாழடா 

மகனே....மகனே வா 
மகனே....மகனே வா 
உன்னை பார்க்கும்போதெல்லாம் 
முகம் பூக்குதேனடா 

ஏ ரத்தமாரே ரத்தமாரே 
ரத்தமாரே மொத்தமாரே 
ரத்தமாரே....மொத்தமாரே 
ரத்தமாரே 

பெத்ததாரே உன்ன பெத்ததாரே
கத்தி கூறே என் மக்கமாரே 
மொத்தமாரே....மொத்தமாரே 
ரத்தமாரே




jailer - Rathamaarey

ஜெயிலர் - ஜுஜுப்பி களவாணி கண்ணையா

களவாணி கண்ணையா
காலைக்கே கொம்பா சீவிப்புட்ட
அது முட்டி கிழிச்சு
வீசாம தான் விடுமா ஒண்ணய

களவாணி கண்ணையா
பாவத்த கணக்கா ஏத்திப்புட்டே
அது கூட்டி கழிச்சு
தீக்காம தான் விடுமா ஒண்ணய

பகையாகிப் போன
பலியாவா வீணா

ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி
ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி

ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி
ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி

ஓ..

ஜுஜுபி ஜுஜுபி

பணியாத ஆளு பாரு
பரியேறும் சாரு!
புரிஞ்சிடா பாத நூறு
இவன் ரூட்டே வேறு!

களவாணி
கண்ணையா கரண்ட்-ல கைய வெச்சுபுட்டா
அது தொட்டா ஒடனே
தூக்காம தான் விடுமா ஒண்ணய

களவாணி கண்ணையா புலியுக்கே
பசிய தூண்டிப்புட்ட
அது ரத்தக் காவு
வாங்காம தான் விடுமா ஒண்ணய

பொழுதாகி போனா
பசியாரும் தானா

ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி
ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி

ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி
ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி

ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி
ஜுஜுபி

ஜுஜுபி ஜுஜுபி 



Jailer - Jujubee Jujubee

Followers