Pages

Search This Blog

Friday, September 21, 2018

பெரியண்ணா - ஏய் தன்னானே தாமரைப்பூ

பெண்: ஏய் தன்னானே தாமரைப்பூ 
மாமா தள்ளாடும் தண்ணியில...
ஏய் தாமர பூத்திருச்சே
மாமா தாவணி வாங்கிவாங்க...
ஊரெல்லாம் கூட்டிகிட்டு...
வந்திடுங்க மேளம் கொட்டி...

ஆண்: ஏய் தன்னானே தாமரைப்பூ 
புள்ள தள்ளாடும் தண்ணியில...
ஏய் தாமர பூத்திருச்சே
புள்ள தாவணி வாங்கிவாறேன்...

ஆண்: கொட்டுற பனியில நானும் உனக்கு
கொடையா மாறட்டுமா?
உன் வெட்டுற விழியில, மூட்டுற நெருப்புல 
குளிரும் காயட்டுமா?

பெண்: உனக்கும் எனக்கும் மனசு இப்ப
வக்கத் த்ரி ஆச்சி...
ஒளிவா, மறவா, பேசி சிரிக்க
ஓட கடயாட்சி...

ஆண்: கையில அணைக்கிற போது
நீ துள்ளி குதிக்கிற மானு...
பெண்: ஆத்துல குளிக்கிற போது
நீ ஆள கடிக்கிற மீனு...

ஆண்: உன் இடுப்பு சேல நழுவ
அத எடுத்து எடுத்து சொருவ...

பெண்: ஏய் தன்னானே தாமரைப்பூ 
மாமா தள்ளாடும் தண்ணியில...
ஆண்: ஏய் தாமர பூத்திருச்சே
புள்ள தாவணி வான்கிவாறேன்...

பெண்: தெனமும் என்ன தொரத்துதைய்யா
உங்க பெருமூச்சி...
ஆத்தி பூத்த மாலை போல
மாமா உன் பேச்சு...

ஆண்: கண்ணே உனக்கு, மின்மினி புடுச்சி
வெளக்கா ஏத்தட்டுமா?
விடியிற வரைக்கும் மடியில சாஞ்சி
வெசயம் சொல்லட்டுமா?

பெண்: மாமன் தரனும் சீரு,
ரெண்டு மாங்கா தட்டு சோறு...

ஆண்: நீ சிரிக்கிற தங்கத்தேரு
உன் தேவை என்ன கூறு...

பெண்: வெடல புள்ள நானும் 
ஒரு வெவரம் கேட்க வேணும்...

பெண்: ஏய் தன்னானே தாமரைப்பூ 
மாமா தள்ளாடும் தண்ணியில...
ஏய் தாமர பூத்திருச்சே
மாமா தாவணி வாங்கிவாங்க...
ஊரெல்லாம் கூட்டிகிட்டு...
வந்திடுங்க மேளம் கொட்டி...

ஆண்: ஏய் தன்னானே தாமரைப்பூ 
புள்ள தள்ளாடும் தண்ணியில...
ஏய் தாமர பூத்திருச்சே
புள்ள தாவணி வாங்கிவாறேன்...



Periyanna - Thanthane Thamara Poo

பெரியண்ணா - நிலவே நிலவே சரிகம பதநி பாடு

நிலவே நிலவே சரிகம பதநி பாடு
என் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு (

உன்னை ஒவ்வொரு இரவிலும் தேடுகிறேன் 
நீ தேய்கின்ற நாளில் வாடுகிறேன்
உன் மௌனத்தில் ஆயிரம் பாட்டு
நான் மயங்குகிறேன் அதைக் கேட்டு
நீ மாலையில் வருவதும் காலையில் மறைவதும் 
என்னடி விளையாட்டு 

நிலவே நிலவே சரிகம பதநி பாடு
என் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு 

காதல் பேசும் வயதுக்கு வந்த நிலா 
உன்னை நெஞ்சைத் தீண்ட அனுமதி தந்த நிலா
தன் மனதைச் சொல்லிவிட தயங்குது தங்க நிலா

அட ஆதாம் ஏவாள் பார்த்தது பழைய நிலா
என் ஆசை நெஞ்சை ஈரத்தது புதிய நிலா
தன் கனவுகளை மெல்ல முனகும் நிலா
என் ஆயுளையே அள்ளிப் பருகும் நிலா 

பகலுடன் இரவும் பதினெட்டு வருடம் 
வளர்ந்தது இந்த நிலா இது உனக்கே சொந்த நிலா

நிலவே நிலவே சரிகம பதநி பாடு
என் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு

கண்ணில் கண்ணில் கனவுகள் பூசுகிறாய்
என் காதல் நெஞ்சில் நினைவுகள் வீசுகிறாய் 
தொட தொட நான் வருகையிலே 
தொலைவினில் ஓடுகிறாய்
அட நானும் உன்னை பார்ப்பது தெரியாதா
நான் பேசும் வார்த்தை உனக்கது புரியாதா

அடி நான் இருந்தேன் உன் ஞாபகமாய் 
அது சொல்லுகிறேன் நான் சூசகமாய் 
அருகில் நானும் தொலைவில் நீயும் 
இருந்தால் காதல் எது
மனம் கேட்கும் கேள்வி இது 

நிலவே நிலவே சரிகம பதநி பாடு
என் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு

நிலவே நிலவே சரிகம பதநி பாடு
என் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு



Periyanna - Nilave nilave

Followers