Pages

Search This Blog

Saturday, December 31, 2016

பூவேலி - இதற்கு பெயர் தான் காதலா

காண்பதெல்லாம் தலைகீழ் தோற்றம்
என்னோடு ஏனோ இத்தனை மாற்றம்

பூமி என்பது தூரமானதே
நட்ஷத்திரங்கள் பாக்கமானதே
மனிதர் பேசும் பாஷை மறந்தே
பறவைகளோடு பேச தோணுதே
காணும் பிம்பம் கண்ணில் மறைந்து
காணா உருவம் கண்ணில் தோணுதே
அன்பு திருமுகம் தேடி தேடி
கண்கள் என்னை தாண்டி போகுதே

இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா

புரியா மொழியோ புரிந்து போகும்
புரிந்த மொழியோ மறந்து போகும்
சரியாத உடை சரிசெய்வதாக
சரியாய் இருந்தும் சரிய செய்யும்
நிலவை போலவே இரவும் பிடிக்கும்
உணவை போலவே பசியும் ருசிக்கும்
எந்த பேனா வாங்கும் பொழுதும்
என்னவள் பெயர் தான் எழுதி பார்க்கும்

இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா

கண்ணாடி முன்னே பேசி பார்த்தால்
வார்தைகள் எல்லாம் முந்தி அடிக்கும்
முன்னாடி வந்து பேசும் பொழுதோ
வார்தைகள் எல்லாம் நொண்டி அடிக்கும்
பாதி பார்வை பார்கும் போதே
பட்டாம் பூச்சிகள் நெஞ்சில் பறக்கும்
கண்ணில் இருந்தும் கவிதை முளைக்கும்
ககிதம் மணக்கும் கண்ணீர் இனிக்கும்

இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா

கண்கள் என்னும் இரண்டு ஜன்னல்
திறந்து வைத்தும் மூடி கொள்ளும்
இதயம் என்னும் ஒற்றை கதவு
மூடி வைத்தும் திறந்து கொள்ளும்
நீ என்பது நீ மட்டும் அல்ல
மூளையின் மூலையில் ஒரு குரல் கேட்கும்
நான் என்பது இன்னோரு பாதி
யார் என்பது இதயம் கேட்கும்

இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா

Pooveli - Itharku Peyar Than

Followers