Pages

Search This Blog

Thursday, January 2, 2014

தளபதி - காட்டுக்குயிலு மனசுக்குள்ள

காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கொண்ணும் பஞ்சமில்ல பாடத்தான்
கவலைக்கட்டு விட்டுப்புட்டு தவிலைத் தட்டுத் துள்ளிக்கிட்டு ஆடத்தான்
எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ சத்தத்திலே
ஒண்ணான நேரத்திலே உல்லாச நெஞ்சத்திலே

(காட்டுக்குயிலு)

போடா எல்லாம் விட்டுத்தள்ளு பழசையெல்லாம் சுட்டுத்தள்ளு
புதுசா இப்பப் பொறந்தோமுன்னு எண்ணிக்கொள்ளடா
பயணம் எங்கே போனாலென்ன பாதை நூறு ஆனாலென்ன
தோட்டம் வெச்சவன் தண்ணீர் விடுவான் சும்மா நில்லடா டோய்
ஊதக் காத்து வீச ஒடம்புக்குல்ள கூச
குப்ப கூடம் பத்தவச்சுக் காயலாம்
தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை
பொங்கப் பான வெள்ளம் போலப் பாயலாம்
அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கரும்பு
அத்தனையும் தித்திக்கிற நாள்தான் ஹோய்

(காட்டுக்குயிலு)

பந்தம் என்ன சொந்தம் என்ன போனா என்ன வந்தா என்ன
உறவுக்கெல்லாம் கவலப்பட்ட ஜன்மம் நானில்ல
பாசம் வெக்க நேசம் வெக்க தோழன் உண்டு வாழவெக்க
அவனைத்தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே
உள்ளமட்டும் நானே என் உசிரக் கூடத்தானே
என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்
என் நண்பன் போட்ட சோறு நிதமும் தின்னேன் பாரு
நட்பைக் கூடக் கற்பைப் போல எண்ணுவேன்
சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு ராகம் இட்டுத் தாளம் இட்டுப்
பாட்டுப் பாடும் வானம்பாடி நாந்தான் ஹோய்

(காட்டுக்குயிலு)

Thalapathi - Kattukuyilu

Followers