Pages

Search This Blog

Thursday, January 3, 2019

பெங்களூர் நாட்கள் - நான் மாட்டிக்கொண்டேன்

நான் மாட்டிக்கொண்டேன்
உனில் மாட்டிக்கொண்டேன்
உடலுக்குள் உயிரைப் போல
உன்னில் மாட்டிக்கொண்டேன்

நானே மாட்டிக்கொண்டேன்
உனில் மாட்டிக்கொண்டேன் - உன்
குரலுக்குள் இனிமை போல
உன்னில் மாட்டிக் கொண்டேன்

உந்தன் சுருள்முடி இருளிலே...
கண்ணைக் கட்டிக்கொண்டு தொலைகிறேன்
என்னை நானே கண்டுபிடிக்கிறேன்!

பார்வையில்... உன் வார்த்தையில்

நான் மாட்டிக்கொண்டேன்
உனில் மாட்டிக்கொண்டேன்
தமிழுக்குள் போதை போல
உன்னில் மாட்டிக்கொண்டேன்

வேண்டி மாட்டிக்கொண்டேன்
உனில் மாட்டிக்கொண்டேன்
கவிதைக்குள் குழப்பம் போல
உன்னில் மாட்டிக்கொண்டேன்

♀♂ 
எல்லை மீறாமலே
சிறு நெருக்கம் நெருக்கம்
கைகள் தீண்டாமலே
உன் இதயம் திறக்கும்!
♂ 
இசையாய் விரிந்தாய்
நிறமாய் இறைந்தாய்
மணமாய் நிறைந்தாய்
சுவையாய் கரைந்தாய்

உன்னுள்ளே செல்லச் செல்ல
இன்னும் உன்னைப் பிடிக்கையிலே
இவ்வாறே நான் வாழ்ந்தால் போதாதா?

என் நெஞ்சின் மேடை இங்கே
உன்னை ஆட அழைக்கையிலே
கால்கள் வேண்டாம் காதல் போதாதா?

நான் மாட்டிக்கொண்டேன்
உனில் மாட்டிக்கொண்டேன்
கோவில் உள் கடவுள் போல
உன்னில் மாட்டிக்கொண்டேன்

தானாய் மாட்டிக்கொண்டேன்
உனில் மாட்டிக்கொண்டேன்
கர்ப்பத்தில் சிசுவைப் போல
உன்னில் மாட்டிக்கொண்டேன்

உந்தன் சுருள்முடி இருளிலே...
கண்ணைக் கட்டிக்கொண்டு தொலைகிறேன்
என்னை நானே கண்டுபிடிக்கிறேன்!

பார்வையில்... உன் வார்த்தையில்

ஹோ மாட்டிக்கொண்டேன்
உனில் மாட்டிக்கொண்டேன்
மண்டைக்குள் பாடல் போல
உன்னில் மாட்டிக்கொண்டேன்

மாட்டி மாட்டிக்கொண்டேன்
உனில் மாட்டிக்கொண்டேன்
ஆசைக்குள் ஏக்கம் போல
உன்னில் மாட்டிக்கொண்டேன்



Bangalore Naatkal - Naan Maati Konden

அழகிய தீயே - விழிகளின் அருகினில் வானம்

விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம்
என் முதல் முதல் அனுபவம் ஓ யே

ஒலியின்றி உதடுகள் பேசும்
பெறும் புயலென வெளிவரும் சுவாசம்
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்
இது அதிசய அனுபவம் ஓ யே

பெண்ணை சந்தித்தேன்
அவள் நட்பை யாசித்தேன்
அவள் பண்பை நேசித்தேன்
வேறென்ன நான் சொல்ல ஓ யே

பூ போன்ற கன்னி தேன்
அவள் பேர் சொல்லி தித்தித்தேன்
அது ஏன் என்று யோசித்தேன்
அட நான் எங்கு சுவாசித்தேன்
காதோடு மெளனங்கள்
இசை வார்க்கின்ற நேரங்கள்
பசி நீர் தூக்கம் இல்லாமல்
உயிர் வாழ்கின்ற மாயங்கள்
அலைகடலாய் இருந்த மனம்
துளி துளியாய் சிதறியதே
ஐம்புலனும், என் மனமும்
எனக்கெதிராய் செயல்படுதே
விழி காண முடியாத மாற்றம்
அதை மூடி மறைக்கின்ற தோற்றம்
ஒரு மெளன புயல் வீசுதே
அதில் மனம் தட்டு தடுமாறும்... ஓ.... யே

கேட்காத ஓசைகள்
இதழ் தாண்டாத வார்த்தைகள
இமை ஆடாத பார்வைகள்
இவை நான் கொண்ட மாற்றங்கள்
சொல் என்னும் ஓர் நெஞ்சம்
இனி நில் என ஓர் நெஞ்சம்
எதிர்பார்க்காமல் என் வாழ்வில்
ஒரு போர்க்காலம் ஆரம்பம்
இருதயமே துடிக்கிறதா
துடிப்பது போல் நடிக்கிறதா
உரைத்திடவா? மறைத்திடவா
ரகசியமாய் தவித்திடவா
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்
எனை கத்தி இல்லாமல் கொய்யும்
இதில் மீள வழி உள்ளதே
இருப்பினும், உள்ளம் விரும்பாது.. ஓ... யே....

விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம்
என் முதல் முதல் அனுபவம் ஓ யே

ஒலியின்றி உதடுகள் பேசும்
பெறும் புயலென வெளிவரும் சுவாசம்
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்
இது அதிசய அனுபவம் ஓ யே

பெண்ணை சந்தித்தேன்
அவள் நட்பை யாசித்தேன்
அவள் பண்பை நேசித்தேன்
வேறென்ன நான் சொல்ல ஓ யே



Azhagiya Theeye - Vizhigalin Aruginil Vaanam

அழகர்சாமியின் குதிரை - பூவக்கேளு காத்தக்கேளு

பூவக்கேளு
காத்தக்கேளு

பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்
மான கேளு
மயில கேளு
மால கட்ட சொல்லும்
தீராததே ஆச
வேறென்ன நான் பேச
என்னோடு நீ
பாதி இல்லையே
நீ இல்லையேல்
நானும் பொம்மையே
எந்தன் உயிரும்
நீயே நீயே

பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்
பூவக்கேளு
காத்தக்கேளு
பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்

மூணு முத்து வெள்ளி முத்து
நான் முடிஞ்சு வெச்சேன் முந்தநேத்து
தாலி கட்ட நெந்துகிட்டு
நா தவிச்சிருந்தேன் வழிய பாத்து

நீ போகும் வழியில்
நிழல் நானாகி விழவா
தூங்காத விழியில்
துணை சேர்ந்தாயே மெதுவா

ஒன்னும் புரியாம
தாளம் தட்டுரேனே
சொல்லதெரியாம
வாய கட்டுரேனே

ஆக மொத்தம் காதல் இது சரி தானே

பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்
மான கேளு
மயில கேளு
மால கட்ட சொல்லும்
பூவக்கேளு
காத்தக்கேளு
பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்

ஏறிடிச்சு காதல் பித்து
ஆ ஹா செவந்து போச்சு மல்லி மொட்டு
ஆச ரொம்ப முத்தி போச்சு
வா ஆடி பாப்போம் ஜல்லிக்கட்டு

வேண்டாத தனிம
இத யாரோடு உணர
தீண்டாத கொடும
சுடும் தீயாகி படர

சாதி என்ன சாதி
தேவ இல்ல மானே
காதலுக்கு தேவ
அன்பு மட்டும்தானே

ஆக மொத்தம் காதல் இது சரி தானே
பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்
மான கேளு
மயில கேளு
மால கட்ட சொல்லும்

தீராததே ஆச
வேரென்ன நான் பேச
என்னோடு நீ
பாதி இல்லையே
நீ இல்லையேல்
நானும் பொம்மையே

எந்தன் உயிரும்
நீயே நீயே
பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்

பூவக்கேளு
காத்தக்கேளு

பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்





Azhagarsamiyin Kuthirai - Poovakkelu

Saturday, December 29, 2018

ஆழ்வார் - மயிலே மயிலே இறகை போடு

மயிலே மயிலே இறகை போடு ஆச வந்தா கடலை போடு
வெடல பையன் கடலை போட்டா வயசு பொண்ணு தாங்க மாட்டா
ஆண் என்ன அழகா என்ன உருக வச்ச மெழுகா
நீ என்ன அசினா நெஞ்சில் ஓட்டிக்கிட்ட பிசினா
ஏழு எட்டு நாளா தூக்கம் கெட்டு வந்து நின்னேனே ஓரங்கட்டு

Come on Baby Lets go Party Tonight
No No Baby You Just Can’t get Me
Come on Baby Lets go Party Tonight
No No Baby You Just Can’t get Me

மயிலே மயிலே இறகை போடு ஆச வந்தா கடலை போடு
வெடல பையன் கடலை போட்டா வயசு பொண்ணு தாங்க மாட்டா

வயசு பொண்ணு உன் வாலிபத்த கன்டாக்கா
விழுவா தொப்புன்னு உன் மேல தான்
குலுக்கும் உண்டி ஏல்லாம் குமரி நீ சிரிச்சாக்கா
மனசில் தீ பற்றும் குப்புன்னு தான்
உள்ளங்கால் தொட்டு என் உச்சி வரைக்கும்
உன் கைகள் பட்டாக்கா மின்னல் அடிக்கும்
வா வா உன்னை நான் கொள்ளை அடிப்பேன்
விளக்கில்லா இருட்டுக்கு வெள்ளை அடிப்பேன்
போயா போ கிட்ட வாயா வா
உன்ன கவுக்க ஆகாது
கேக்க கேக்க நூறு முத்தம் தரணும்
அட நாலு உதடும் நாலு சத்தம் தரணும்

தயிற மத்தால கடையிரது போல தான்
உயிர கண்ணால கடைஞ்சிப்புட்ட
பழத்த பொன்வண்டு கொடையுரது போல தான்
மனதின் உள்ளார கொடஞ்சிப்புட்ட
குத்தால சாரல் தான் உன்னில் இருக்கு
தென்காசி தூறல் தான் என்னில் இருக்கு
ரெண்டும் தான் ஒன்னானா வெள்ளம் இருக்கு
நாளெல்லாம் நீரால மோதல் நமக்கு
புள்ளி மானே வா பசுந்தேனே வா
இன்னும் பொறுத்தா தாங்காதே
நம்ம காட்டில் இப்போ நல்ல மழை தான்
அடி இன்னும் இன்னும் பேஞ்சா என்ன பிழை தான்



Aalvar - Mayile Mayile

ஆழ்வார் - அன்புள்ள காதலி அன்றாடம் என்னை

அன்புள்ள காதலி அன்றாடம் என்னை காதலி
உன்னைப்போல் என்னைப்போல் உலகத்தில் யாரடி
அன்புள்ள காதலா என் மீது ரொம்ப ஆவலா
என்றென்றும் நீதானே இதயத்தின் காவலா
கண்ணாலே கண்ணாலே கவ்வி கவ்விக்கொள்ளவா
தூக்கத்தில் நான் உன்னை தொட்டு தொட்டு கிள்ளவா
உன் கண்ணும் என் கண்ணும் சிக்கி முக்கி கல்லு தான்
உன் தேகம் என் தேகம் ஒன்னுக்குள்ள ஒண்ணுதான்
அன்புள்ள காதலி அன்றாடம் என்னை காதலி
உன்னைப்போல் என்னைப்போல் உலகத்தில் யாரடி

ஐ லவ் யு சொல்கின்ற இருவிழி வானொலி
பொய்வேஷம் போடாத அழகிய காதலி
மின்சார கையாலே நாள்தோறும் நீ தீண்டுடா
உன் காந்த கண்ணாலே உயிரை நீ தூண்டுடா
நான் தேடிடும் தேடிடும் தேவதை நீயடி
உன் ஒவ்வொரு பாகமும் ஓவியம் தானடி
கண்ணாடி பூச்செடி கண்முன்னே நிக்குதே
உன்னை நான் கண்டதும் உள்நாக்கு திக்குதே
புதிர் போட்டதை புதிர் போட்டதை விடை கண்டுக்கொண்டேனே
அதை உன்னிடம் எதிர்பார்த்து தான் அட நேரில் வந்தேனே

ஆண் பாதி பெண் பாதி சிவ சிவ தாண்டவா
உன் போலே என் காதல் உயர்ந்தது ஆண்டவா
நீ எந்தன் நீ எந்தன் உடல் பொருள் ஆவியே
என் கைகள் உன் மேனி திறந்திடும் சாவியே
நான் சொல்வதை கேட்கிற செல்லமே ஓடிவா
என் வெண்ணிலா மேனியில் வேர்த்ததை மூடவா
பெண் என்ற வார்த்தைக்கு அர்த்தங்கள் ஆயிரம்
ஒவ்வொன்றாய் அறிந்திட ஓர் ஜென்மம் போதுமா
இது காதலின் விளையாட்டு தான் அதை கண்டுக்கொள்ளாதே
உன் வார்த்தைகள் வீண் வார்த்தைகள் வெறும் வாயை மெல்லாதே
அன்புள்ள காதலி அன்றாடம் என்னை காதலி
உன்னைப்போல் என்னைப்போல் உலகத்தில் யாரடி
அன்புள்ள காதலா என் மீது ரொம்ப ஆவலா
என்றென்றும் நீதானே இதயத்தின் காவலா



Aalvar - Anbulla Kadhali

ஆழ்வார் - பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல் கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வித் திருக்காப்பு
அடியோனோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வளமார்பினில் வாழ்கின்ற மங்கையின் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு
படைப்போர் புக்கும் முழங்கும் அப்பஞ்ச சன்னியமும் பல்லாண்டே

ஹரி ஓம் மாதவன் பாதம் என்றும் சரணம்
அவன் தான் நல்லருள் இன்றும் என்றும் தரணும்
அருள் மாமழையை வார்க்கும் நீலனயணம்
அழியா மேன்மை வாழ்வு வாசல் வரணும்
அவன்தான் ரங்கன் அரங்கன்
மறை நூல் ஞான சுரங்கன்
மதுசூதன் மணிவண்ணன்
திருநாமம் பாட பாட இன்பம்
ஹரி ஓம் மாதவன்
ஹரி ஓம் மாதவன் பாதம் என்றும் சரணம்
அவன் தான் நல்லருள் இன்றும் என்றும் தரணும்

கோவிலில் நாள்தொரும் பூவாரம் சூட்டியே பூஜைகள் செய்கின்றவன்
வீட்டினில் அதுபோல தாய் தன்னை போற்றியே சேவைகள் செய்கின்றவன்
அவன் தான் நல்ல மனிதன்
அவன் போல் இல்லை புனிதன்
பால் போல் வெண்மை இதயம்
பரி போல் மென்மை வடிவம்
அவன் தாயாரை தாலாட்டி தாயாகிப் போனானே
ஹரி ஓம் மாதவன்
ஹரி ஓம் மாதவன் பாதம் என்றும் சரணம்
அவன் தான் நல்லருள் இன்றும் என்றும் தரணும்

தங்கையை இன்னும் ஓர் தாயாக போற்றியே பாசங்கள் வார்க்கின்றவன்
தாயினும் மேலான அன்பை தான் காட்டியே நேசங்கள் வளர்க்கின்றவன்
இது தான் நல்ல குடும்பம்
இதில் தான் தெய்வம் விளங்கும்
வாழும் மூவர் உறவும் வண்ண தமிழின் வடிவம்
இது எந்நாளும் ஆனந்தம் கொண்டாடும் வீடாகும்
ஹரி ஓம் மாதவன்
ஹரி ஓம் மாதவன் பாதம் என்றும் சரணம்
அவன் தான் நல்லருள் இன்றும் என்றும் தரணும்



Aalvar - Pallaandu Pallaandu

ஆழ்வார் - பிடிக்கும் உன்னை பிடிக்கும்

பிடிக்கும் உன்னை பிடிக்கும் அழகா உன்னை பிடிக்கும்
ஆகாயா வெண்ணிலவே பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்
பிடிக்கும் உன்னை பிடிக்கும் அழகா உன்னை பிடிக்கும்
ஆகாயா வெண்ணிலவே பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்

அழகாய் இருப்பாய் எனக்கு பிடிக்கும்
அழகான சிரிப்பை உலகக்கு பிடிக்கும்
அழகாய் அணைப்பாய் எனக்கு பிடிக்கும்
அழகான தமிழை உலகக்கு பிடிக்கும்

பிடிக்கும் உன்னை பிடிக்கும் அழகா உன்னை பிடிக்கும்
ஆகாயா வெண்ணிலவே பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்
பிடிக்கும் உன்னை பிடிக்கும் அழகா உன்னை பிடிக்கும்
ஆகாயா வெண்ணிலவே பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்

காபுல் திராட்சை போன்ற கண்கள் பிடிக்கும்
காஷ்மீர் ஆப்பிள் போன்ற கண்ணம் பிடிக்கும்
ரோஜாப்பூ போன்ற உன் தேகத்தை பிடிக்கும்
ரேஸ் காரைப் போன்ற உன் வேகத்தை பிடிக்கும்
தங்கம் போல் இருக்கும் உன் தோளை பிடிக்கும்
தங்கம் போல் மின்னிடும் உன் மார்பை பிடிக்கும்
உன்னோட பார்வை ஒவ்வொன்றும் பிடிக்கும்
உன்னோட வார்தைகள் எல்லாமே பிடிக்கும்
சின்ன பிள்ளை போன்ற உள்ளம் பிடிக்கும்
நீ கொஞ்சும் போது சொல்லும் பொய்கள் பிடிக்கும்
அன்றாடம் நீ செய்யும் இம்சைகள் பிடிக்கும்
அங்கங்கே நீ வைக்கும் இச்சுக்கள் பிடிக்கும்
கண்ணத்தில் செய்யும் காயங்கள் பிடிக்கும்
காயங்கள் சொல்லிடும் வேதங்கள் பிடிக்கும்
அப்பப்போ நேரும் ஊடல்கள் பிடிக்கும்
ஊடல்கள் தீர்ந்ததும் கூடல்கள் பிடிக்கும்

பிடிக்கும் உன்னை பிடிக்கும் அழகா உன்னை பிடிக்கும்
ஆகாயா வெண்ணிலவே பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்
பிடிக்கும் உன்னை பிடிக்கும் அழகா உன்னை பிடிக்கும்
ஆகாயா வெண்ணிலவே பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்

பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும்..
ம்ம்ம்ம்…ம்ம்…ம்ம்ம்…



Aalvar - Pidikkum unnai pidikkum

Followers