Pages

Search This Blog

Thursday, December 13, 2018

வண்ண கிளி - சித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு

சித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம்
சித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம்
அத்தானை பாத்து அசந்து போய் நின்னாளாம்
அத்தானை பாத்து அசந்து போய் நின்னாளாம்
சித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம்

முத்தாத அரும்பெடுத்து முழ நீள சரம் தொடுத்து
வித்தார கள்ளி கழுத்தில் முத்தாரம் போட்டானாம்
முத்தாத அரும்பெடுத்து முழ நீள சரம் தொடுத்து
வித்தார கள்ளி கழுத்தில் முத்தாரம் போட்டானாம்
வெத்தாக பேசி இளம் மனச தொட்டானாம்
வெத்தாக பேசி இளம் மனச தொட்டானாம்
ஆ..முத்தாத அரும்பெடுத்து முழ நீள சரம் தொடுத்து
வித்தார கள்ளி கழுத்தில் முத்தாரம் போட்டானாம்

குண்டூசி போல ரெண்டு கண்ணும் உள்ளவளாம்
முகம் கோணாமல் ஆசை அன்பா பேசும் நல்லவளாம்
ஆ ஹா ஹா ஆ ஆ ஆ ஆ……
ஓ ஹோ ஹோ ஓ ஓ ஓ ஓ………
குண்டூசி போல ரெண்டு கண்ணும் உள்ளவளாம்
முகம் கோணாமல் ஆசை அன்பா பேசும் நல்லவளாம்
அந்த கண்டாங்கி சேலை காரி கைகாரியாம்
அந்த கண்டாங்கி சேலை காரி கைகாரியாம்
அந்த கள்ளி அத்தானை கல்யாணம் பண்ணி கொண்டாளாம்
ஆ…சித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம்

அஞ்சாத சிங்கம் போலே வீரம் உள்ளவனாம்
யானை வந்தாலும் பந்தாடி ஜெய்க்க வல்லவனாம்
ஆ…ஆ.ஆ…..ஆ….
அஞ்சாத சிங்கம் போலே வீரம் உள்ளவனாம்
யானை வந்தாலும் பந்தாடி ஜெய்க்க வல்லவனாம்
அந்த முண்டாசு காரன் கொஞ்சம் முன்கோபியாம்
அந்த முண்டாசு காரன் கொஞ்சம் முன்கோபியாம்
ஆனாலும் பெண் என்றால் அவன் அஞ்சி கெஞ்சி நிப்பானாம்
ஆனாலும் பெண் என்றால் அவன் அஞ்சி கெஞ்சி நிப்பானாம்
ஆ..முத்தாத அரும்பெடுத்து முழ நீள சரம் தொடுத்து
வித்தார கள்ளி கழுத்தில் முத்தாரம் போட்டானாம்

முன்னூறு நாளை மட்டும் எண்ணிக்கொள்ளுங்க
அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
முன்னூறு நாளை மட்டும் எண்ணிக்கொள்ளுங்க
அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க
அந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து மூணாகும்ங்க
இந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து மூணாகும்ங்க
அதை கண்டு சந்தோசம் கொண்டாடி பாட போறாங்க
அதை கண்டு சந்தோசம் கொண்டாடி பாட போறாங்க

சித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம்
முத்தாத அரும்பெடுத்து முழ நீள சரம் தொடுத்து
வித்தார கள்ளி கழுத்தில் முத்தாரம் போட்டானாம்
மயிலாக வந்தாளாம்……… முத்தாரம் போட்டானாம்
மயிலாக வந்தாளாம் …….. முத்தாரம் போட்டானாம்


Vanna Kili - Chiththaadai kattikittu Singgaaram Pannikittu

Wednesday, December 12, 2018

நீர்ப்பறவை - தேவன் மகளே தேவன் மகளே சிலுவை காடு

தேவன் மகளே தேவன் மகளே
சிலுவை காடு பூத்தது போலே
சிரியன் வாழ்வில் பூக்க வைத்தாயே
தேவன் மகளே நன்றி நன்றி...
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

தேவன் மகளே தேவன் மகளே
சிலுவை காடு பூத்தது போலே
சிரியன் வாழ்வில் பூக்க வைத்தாயே
தேவன் மகளே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி


என்றோ அடி என்றோ
உன் உயிரில் உரிமை தந்தாய் இன்றே
அடி இன்றே உடல் உரிமை தந்தாய்
நுனியில் விரல் நுனியில் ஒரு நுதன தீண்டல் செய்தாய்
அடியில் உயிர் அடியில் ஓர் அற்புதம் செய்தாய்
உன் ஆசை பாசை எல்லாம் பூட்டி கொண்டே
நான் முத்த சாவி போட்டு திறப்பேன்

தேவன் மகனே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

கண்ணீர் என் கண்ணீர்
என் கன்னம் காயும் முன்னே
பன்னீர் உன் பன்னீர் உயிர் பரவ கண்டேன்
கோடியில் ஒரு கோடியில்
இரு இளநீர் காய்க்கும் பெண்ணே
மடியில் உன் மடியில்
சிறு மரணம் கொண்டேன்
என் கர்தரங்கள் படைத்த
வேற்ற பாண்டம் நான்
அதில் உன்னை ஊற்றி
என்னை நிறத்தாய்
தேவன் மகளே நன்றி நன்றி

என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி
தேவன் மகளே தேவன் மகளே
சிலுவை காடு பூத்தது போலே
சிரியன் வாழ்வில் பூக்க வைத்தாயே
தேவன் மகளே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி
தேவன் மகளே தேவன் மகளே
சிலுவை காடு பூத்தது போலே
சிரியன் வாழ்வில் பூக்க வைத்தாயே
தேவன் மகளே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி



Neerparavai - Devan Magalea

நீர்ப்பறவை - மீனுக்கு சிறு மீனுக்கு நான் மீன் வலை

மீனுக்கு சிறு மீனுக்கு
நான் மீன் வலை விரித்தேன்
தேவதை கடல் தேவதை
வந்து விழுந்ததால் விழித்தேன்
கிச்சு கிச்சு பண்ணும் கிறிஸ்தவ பெண்ணே
பச்சை முத்தம் தர மனம் இல்லையா
ஒரு கன்னம் தர மறு கன்னம் காட்டு
திருமறை வரி நினைவில்லையா

அடடா முத்தம் பறிக்கிறவழி
இதுதான் குறுக்குவழி
அதுதான் என்னை கெடுக்குற வழி
சிக்குமா படித்த கிளி

மீனுக்கு சிறு மீனுக்கு
நான் மீன் வலை விரித்தேன்
தேவதை கடல் தேவதை
வந்து விழுந்ததால் விழித்தேன்

பெண் கடல்களில் அலைகள் இல்லை
அது போல் மெளனம் காக்கிறாய்
ஆண் கடல்களில் அலைகள் உண்டு
அது போல் உன்னை தீண்டினேன்

அலை என்னும் கரம் நீட்டி நீட்டி
அடி வருடியே போகிறாய்
வெட்கம் வந்து விழி மூடும் நேரம்
முத்தம் கொள்ளையிட பார்க்கிறாய்

அன்பை தந்து அன்பை தந்து
ஆளாக்கினாய் அப்போது
அள்ளிதந்து அள்ளிதந்து
ஆணாக்குதல் எப்போது

அடடா முத்தம் பறிக்கிறவழி
இதுதான் குறுக்குவழி
அதுதான் என்னை கெடுக்குற வழி
சிக்குமா படித்த கிளி

மீனுக்கு சிறு மீனுக்கு
நான் மீன் வலை விரித்தேன்
தேவதை கடல் தேவதை
வந்து விழுந்ததால் விழித்தேன்

விழி நீயும் சொல்லி வாழும் பெண்ணால்
வெட்கம் என்னை விட்டு போகுமா
அக்கம் பக்கம் இங்கு ஆட்கள் உண்டு
அஞ்சுகின்ற மனம் கொஞ்சுமா

கடற்கரைகளில் சோலை இல்லை
பறவைக்கு என்ன பஞ்சமா
தனிமைக்கு இங்கு வாய்ப்பு இல்லை
தவிக்கின்ற மனம் அஞ்சுமா

ஒ... பெண்கள் மட்டும் ஆணையிட்டால்
பேசும் கடல் பேசாது
ஆண்கள் கொண்ட ஆசை மட்டும்
ஆணையிட்டால் நிற்காது

அடடா என்னை தவிர்க்கிற வழி
இதுதான் குறுக்குவழி
எதுதான் உன்னை பிடிக்கிற வழி
சிக்குமா படித்த கிளி

மீனுக்கு சிறு மீனுக்கு
நான் மீன் வலை விரித்தாய்
தேவதை கடல் தேவதை
வந்து விழுந்ததால் விழித்தாய்

கிச்சு கிச்சு பண்ணும் கிறிஸ்தவ பெண்ணே
பச்சை முத்தம் தர மனம் வரவில்லையா
ஒரு கன்னம் தர மறு கன்னம் காட்டு
திருமறை வரி நினைவில்லையா

அடடா முத்தம் பறிக்கிறவழி
இதுதான் குறுக்குவழி
அதுதான் என்னை கெடுக்குற வழி
சிக்குமா படித்த கிளி

மீனுக்கு சிறு மீனுக்கு
நான் மீன் வலை விரித்தேன்
தேவதை கடல் தேவதை
வந்து விழுந்ததால் விழித்தேன்



Neerparavai - Meenuku Siru Meenuku

நீர்ப்பறவை - யார் வீட்டு மகனோ மகனோ

யார் வீட்டு மகனோ மகனோ
தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை

யார் வீட்டு மகனோ மகனோ
தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை

நீ வந்து நிறையும்போது
வாழ்வோடு வெறுமையில்லை
நாம் ஒன்று சேரும்போது
நீ இங்கு ஒருமை இல்லை

மகனே நீயும்
அன்பால் வளர்வாய்
கடலும் அன்னை
கரைதான் தந்தை

யார் வீட்டு மகனோ மகனோ
தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை

நிலங்கள் நீளும் வரையில்
உயிர்கள் வாழும் வரையில்
யாருமே அனாதை இல்லையே
யாதும் இங்கே ஊரே ஆகுமே

புலங்கள் மாறிய போதும்
புலன்கள் மாறுவதில்லை
ஊர்கள் தோறும் வானம் ஒன்றுதான்
உயிர்கள் வாழ மானம் ஒன்றுதான்

மழைச் சொட்டு மண்ணில் வீழ்ந்தால்
மறுக்கின்ற பூமியும் இல்லை
மனிதர் இருவர் உள்ள வரைக்கும்
அகதி என்று யாரும் இல்லை

கால தேசம் எல்லாம் மாறலாம்
காதல் பாசம் எல்லாம் ஒன்றுதான்

யார் வீட்டு மகனோ மகனோ
தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை

நீ வந்து இணையும்போது
வாழ்வோடு வெறுமையில்லை
நாம் ஒன்று சேரும்போது
நீ இங்கு ஒருமை இல்லை

மகனே நீயும்
அன்பால் வளர்வாய்
கடலும் அன்னை
கரைதான் தந்தை

யார் வீட்டு மகனோ மகனோ
தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை...



Neerparavai - Yaar Veetu Magano

நீர்ப்பறவை - ரத்த கண்ணீர் முடியவில்லை என் ராத்திரி

ரத்த கண்ணீர் முடியவில்லை
என் ராத்திரி மட்டும் விடியவில்லை
ரத்த கண்ணீர் முடியவில்லை
என் ராத்திரி மட்டும் விடியவில்லை

காயம் செய்த ஊருக்கு
என் நியாயம் மட்டும் தெரியவில்லை
அறிந்த நான் செய்த பிழை
ஆண்டவர் தான் பொறுப்பாரே
அறியாமல் செய்த பிழை
அன்பே நீ பொறுப்பாயா
மன்னித்தே என்னை கொள்ள மாட்டய

ரத்த கண்ணீர் முடியவில்லை
என் ராத்திரி மட்டும் விடியவில்லை

ஏன் இந்த கதி ஏன் இந்த விதி
நொந்தேன் உயிர் நொந்தேன்
நான் கண்ட பழி நீ கொண்டு விட ஆவி வேந்தன்
என் பாவங்களில் நான் வெட்கமுற வில்லை அடி இல்லை
என் பாவங்களில் நீ பங்கு பெற நியாயம் இல்லை
பாதை தான் காணாமல் பட்டம் தான் விடுகின்றேன்
போதை தான் இல்லாமல் இன்றே நான் அழுகின்றேன்
பாவத்தின் பள்ளம் விட்டு எழுகின்றேன்

ரத்த கண்ணீர் முடியவில்லை
என் ராத்திரி மட்டும் விடியவில்லை

ஊர் பேசியதே யார் ஏசியதையும் நெஞ்சை சுட வில்லை
நீ துன்பமுற நான் கண்டுவர ஜீவன் இல்லை
என் தண்டனையில் நீ வாடுவது குற்றம் என் குற்றம்
என் பாவநிலை ஏழு ஜென்மம் வரை சுற்றும் சுற்றும்
போதைக்குள் பிறந்தாலும் என் காதல் பொய் இல்லை
சேற்றோடு பிறந்தாலும் தாமரையில் அழுக்கில்லை
வா பெண்ணே உன்னை விட்டால் வாழ்வில்லை

ரத்த கண்ணீர் முடியவில்லை
என் ராத்திரி மட்டும் விடியவில்லை

காயம் செய்த ஊருக்கு என் நியாயம் மட்டும் தெரியவில்லை
அறிந்த நான் செய்த பிழை ஆண்டவர் தான் பொறுப்பாரே
அறியாமல் செய்த பிழை அன்பே நீ பொறுப்பாயா
மன்னித்தே என்னை கொள்ள மாட்டயா



Neerparavai - Raththa Kanneer

மதயானைக் கூட்டம் - கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால

கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

தினம் தினம் சிரிக்ககுள்ள
கேப்பையாட்டம் என்னை திரிக்குரா
அய்யய்யோ கடுகுதுண்டு இடையவச்சி
கிறங்க அடிக்குறா
குமரி புள்ள நேசம்
அட கோழி குழம்பு வாசம்
உள்ளுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு
உசுர அறுக்குரா

கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

உலக பாக்குறேன்
இதயம்போல் தெரியுதே
அடுப்பு தீயபோல்
உசுரும் எரியுதே
காலுல நடக்குறேன்
மனசுல பறக்குறேன்
அவமுகம் பாத்துட்டா
அரையடி வளருரேன்
சேதாரம் இல்லாம
செஞ்சதாறு அவள
அவ பஞ்சாரம்
போட்டுதான்
கவுக்குராளே ஆள
நான் ஆத்தில்
குளிக்கும் போல
சுடும் வெயிலுக்குள்ள கிடக்கேன்
அவகூட்டி பெருக்கும்போது
நான் கூடைக்குள்ள போவேன்

கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

உதட்டு சிரிப்புல
உசிறு கரையுதே
அவள நினைச்சுதான்
வயிறு நிறையுதே
சோளதட்ட தான்
சுமைய தாங்குமா
நாள சாய்க்குதே
அள்ளிபூ இரண்டுதான்
போராள சாவில்ல
மாரால தான் சாவு
நூராள தாக்குதே
உசிலம்பட்டி சேவு
இங்க அறுவா தூக்க தானே
நம்ம ஆளு குறைஞ்சு கிடக்கு
அவ பத்துபுள்ள என்னைபோல
பெத்து கொடுக்கணும்

கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

தினம் தினம் சிரிக்ககுள்ள
கேப்பையாட்டம் என்னை திரிக்குரா
அய்யய்யோ கடுகுதுண்டு இடையவச்சி
கிறங்க அடிக்குறா
குமரி புள்ள நேசம்
அட கோழி குழம்பு வாசம்
உள்ளுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு
உசுர அறுக்குரா

கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

கோண கொண்டைக்காரி
குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல
நோயில் கிடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க


Matha Yaanai Koottam - Kona Kondakari Kuthura Kannala

களவாணி 2 - ஒட்டாரம் பண்ணாத உன்கூட வாறேன்

ஒட்டாரம் பண்ணாத
உன்கூட வாறேன்
எப்போதும் என்ன நான்
உனக்காக தாறேன்

ஒட்டாரம் பண்ணாத
உன்கூட வாறேன்
எப்போதும் என்ன நான்
உனக்காக தாறேன்

நீ இருந்தா போதும்
எனக்கு நானே தேவையில்லை
நீ நடந்து போகும்
வழியில் நானும் வாறேன் மெல்ல

என்னதான் கண்டுபுட்ட
எட்ட எட்ட போற
எப்ப என் கூட வந்து
குப்பை கொட்ட போற

ஒட்டாரம் பண்ணாத
உன்கூட வாறேன்
எப்போதும் என்ன நான்
உனக்காக தாறேன்

வானவில்ல போல நீ
வந்து என்ன வளச்ச
வானமெல்லாம் நட்சத்திரம்
போல கொட்டி எறச்ச

இன்னொரு இதயமா
எனக்குள்ள துடிச்ச
விதைக்கவே இல்லையே
எங்கிருந்து மொளச்ச

தூரம் நின்னு சிருச்ச
துணைக்கின்னு அழச்ச
அடியே ஆனா
புலிய கண்ட மானா

என்னதான் கண்டுபுட்ட
எட்ட எட்ட போற
எப்ப என் கூட வந்து
குப்பை கொட்ட போற

ஒட்டாரம் பண்ணாத
உன்கூட வாறேன்
எப்போதும் என்ன நான்
உனக்காக தாறேன்

தாய சுத்தும் பிள்ளையா
கக்கத்துல கெடந்த
தண்ணியில்லா நேரம் கூட
கள்ளி போல வெளஞ்ச

சித்தெறும்பு தலையில்
சக்கரையா சுமந்த
சுட்டாலும் தீய சுத்தி
விட்டிலாக பறந்த

வந்து வந்து கொலஞ்ச
வத்தாமா நெறஞ்ச
அழகே ஆனா
புலிய கண்ட மானா

என்னதான் கண்டுபுட்ட
எட்ட எட்ட போற
எப்ப என் கூட வந்து
குப்பை கொட்ட போற

ஒட்டாரம் பண்ணாத
உன்கூட வாறேன்
எப்போதும் என்ன நான்
உனக்காக தாறேன்

ஒட்டாரம் பண்ணாத
உன்கூட வாறேன்
எப்போதும் என்ன நான்
உனக்காக தாறேன்



Kalavani 2 - Ottaram Pannatha Unkooda Vaaren 

Followers