Pages

Search This Blog

Tuesday, November 27, 2018

நான் சிகப்பு மனிதன்(1985) - பெண்மானே சங்கீதம் பாடிவா

பெண்மானே சங்கீதம் பாடிவா
அம்மானை பொன்னூஞ்சல் ஆடிவா
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்
உன் நாணம் செவ்வானம்
பெண்மானே சங்கீதம் பாடிவா
அம்மானை பொன்னூஞ்சல் ஆடிவா

தேன்மழை நீ ஹோய் மார்பிலே தூவவோ
தேவதை நீ ஹோய் நான் தினம் தேடவோ
கையருகில் பூமாலை காதலின் கோபுரம்
மைவிழியில் நீதானே வாழ்கிறாய் ஓர் புறம்
என் காதல் வானிலே பெண்மேக ஊர்வலம்
காணுவேன் தேவியை கண்களின் விழாவில்

உன் மானே சங்கீதம் பாடவா
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்
உன் தேனே வந்தேனே
உன் மானே சங்கீதம் பாடவா

யாத்திரை ஏன் ஹோய் ராத்திரி நேரமே
போர்க்களம் தான் ஹோய் பூக்களின் தேகமே
தேகமழை நானாகும் தேதியைத் தேடுவேன்
ஈரவயல் நீயாக மேனியை மூடுவேன்
கண்ணோரம் காவியம் கை சேரும் போதிலே
வானமும் தேடியே வாசலில் வராதோ

பெண்மானே சங்கீதம் பாடிவா
அம்மானை பொன்னூஞ்சல் ஆடவா
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்
உன் நாணம் செவ்வானம்
பெண்மானே சங்கீதம் பாடிவா
அம்மானை பொன்னூஞ்சல் ஆடிவா



Naan Sigappu Manithan(1985 film) - Penn Maaney Sangeetham Paadiva

கழுகு - பொன்னோவியம் கண்டேனம்மா

லாலா லலா
பொன்னோவியம்
கண்டேனம்மா எங்கெங்கும்
கொண்டேனம்மா பேரிம்பம்
அன்பில் ஒன்று சேருங்களே
இன்பம் என்றும் காணுங்களே
பார்வையில் ஆயிரம் பாடுங்களே
பொன்னோவியம்

காதல் காதல் காதல் தினம் தேனாகும்
வாழ்வில் கீதம் பாடும் மனம் பாலாகும்
பாயும் நதி நீரோடு நீந்தும் சுகம்
நூறாகும்…நூறாகும்
பூவில் இளந்தென்றல் வந்து ஆடிச்செல்லும்
போதை கொண்ட நெஞ்சம் இன்று பாடச்சொல்லும்
கைகள் இணையும் கண்கள் மயங்கும்
சொர்க்கம் திறக்கும்

லாலா லலா
லாலா லலா லாலா லா
லாலா லலா லாலா லா

மேகம் வந்து சேரும் மயில்தான் ஆடும்
மோகம் கொண்ட நெஞ்சம் துணை சீராட்டும்
கோவை இதழ் தேனுண்டு கொஞ்சும் கிளி
நானுண்டு…நானுண்டு
பாச்சைமலை எங்கும் துள்ளி ஓடும் மான்கள்
இச்சையுடன் கொஞ்சிக் கொஞ்சி ஆடும் நேரம்
காயும் கனியும் மொட்டும் மலரும்
சொர்க்கம் தெரியும்

பொன்னோவியம்
கண்டேனம்மா எங்கெங்கும்
கொண்டேனம்மா பேரிம்பம்
அன்பில் ஒன்று சேருங்களே
இன்பம் என்றும் காணுங்களே
பார்வையில் ஆயிரம் பாடுங்களே
லாலா லலா



Kazhugu - Ponnoviyam Kandenamma

Tuesday, November 20, 2018

கோழி கூவுது - பூவே இளைய பூவே

பூவே இளைய பூவே
வரம் தரும் வசந்தமே
மடி மீது தேங்கும் தேனே
எனக்குத்தானே எனக்குத்தானே

பூவே இளைய பூவே
வரம் தரும் வசந்தமே
மடி மீது தேங்கும் தேனே
எனக்குத்தானே எனக்குத்தானே

குழல் வளர்ந்து அலையானதே
இரவுகளின் இழையானதே
குழல் வளர்ந்து அலையானதே
இரவுகளின் இழையானதே
விழி இரண்டு கடலானதே
எனது மனம் படகானதே
இளம் பளிங்கு நகம் சேர்த்ததே
நிலவு அதில் முகம் பார்தததே

இனிக்கும் தேனே எனக்குத்தானே
பூவே இளைய பூவே

இளஞ்சிரிப்பு ருசியானது
அது கனிந்து இசையானது
இளஞ்சிரிப்பு ருசியானது
அது கனிந்து இசையானது
குயில் மகளின் குரலானது
இருதயத்தில் மழை தூவுது
இரு புருவம் இரவானது
இருந்தும் என்ன வெயில் காயுது

இனிக்கும் தேனே எனக்குத்தானே
பூவே இளைய பூவே
வரம் தரும் வசந்தமே
மடி மீது தேங்கும் தேனே
எனக்குத்தானே எனக்குத்தானே
எனக்குத்தானே



Kozhi Koovuthu - poove ilaya poove

Tuesday, October 30, 2018

பாசப் பறவைகள் - தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே

ஆண்: தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம் உனை பாட வேண்டும் ஆயிரம்

(தென்பாண்டி)
(தென்பாண்டி)

பெண்: வாழ்த்தி உன்னை பாடவே வார்த்தை தோன்றவில்லையே
ஆண்: பார்த்து பார்த்து கண்ணிலே பாசம் மாறவில்லையே
பெண்: அன்பு என்னும் கூண்டிலே ஆடிப் பாடும் பூங்குயில்
ஆசை தீபம் ஏற்றுதே அண்ணன் உன்னை போற்றுதே
ஆண்: தாவி வந்த பிள்ளையே தாயைப் பார்த்ததில்லையே
தாவி வந்த பிள்ளையே தாயைப் பார்த்ததில்லையே
பெண்: தாயைப் போல பார்க்கிறேன் வேறு பார்வை இல்லையே
ஆண்: மஞ்சளோடு குங்குமம் கொண்டு வாழ வேண்டுமே நீ என்றும் வாழ வேண்டுமே

(தென்பாண்டி)
(தென்பாண்டி)

ஆண்: தேகம் வேறு ஆகலாம் ஜீவன் ஒன்றுதானம்மா
அன்பு கொண்டு பாடிடும் அண்ணன் என்னை பாரம்மா
பெண் : கோவில் தேவை இல்லையே நேரில் வந்த கோவிலே
பாடும் எந்தன் பாவிலே நாளும் வாழும் தெய்வமே

ஆண்: கூடு வாழும் குருவிகள் பாடும் பாசப் பறவைகள்
பெண்: கூடு வாழும் குருவிகள் பாடும் பாசப் பறவைகள்
ஆண்: வாழ்த்துவேன் உனை போற்றுவேன் வாழ்வெல்லாம் உனை ஏற்றுவேன்
பெண்: காலம் காலம் யாவிலும் சேர்ந்து வாழ வேண்டுமே நாம் சேர்ந்து வாழ வேண்டுமே

(தென்பாண்டி)
(தென்பாண்டி)



Paasa Paravaigal - Thenpandi Thamizhe En Singara Kuyile

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு - உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே

உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே
நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல்
இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள்
உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே

வெள்ளி நிலா வானவெளி போவது போல்
பிள்ளை நிலா துள்ளி இங்கு வந்ததம்மா .. ஹோ …ஹோ
அள்ளி அள்ளி கட்டிக்கொள்ள ஆனந்தமாய்
பிள்ளைகளின் செல்லமொழி கேட்டதம்மா

ஒருமர சிறு கூட்டில் கிளி ஒன்று இல்லை
பிரிந்திட பொறுக்காது தாய் அன்பின் எல்லை
பால்முகம் மறக்காமல் தடுமாறும்
சேய்முகம் கண்டால்தான் நிலை மாறும்

(ஓ ஓ ஓ ஓ…)

உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே
நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல்
இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள்
உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே

தென்றல் ஒன்று தேகம் கொண்டு வந்தது போல்
சொந்தமொன்று மன்றமதில் வந்ததென்ன ..ஹோ ..ஹோ
சொர்க்கமொன்று பூமிதன்னில் கண்டதுபோல்
இன்பங்களை தந்துவிட்டு சென்றதென்ன

துணையாய் வழிவந்து எனைசேர்ந்த அன்பே
இனியும் உனைப்போல இணை ஏது அன்பே
எனக்கென நீதானே நம் வாழ்வில்
உனக்கென நான்தானே எந்நாளும்

(ஓ ஓ ஓ ஓ…)

உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே
நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல்
இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள்
உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே



En Bommukutty Ammavukku - Uyire Uyirin

கேளடி கண்மணி - தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்

தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்
உன்னில் தான் என்னில் தான்  காதல் சந்தம்
ஆடும் காற்று  நெஞ்சில் தாளம் போட ஆசை ஊற்று காதில் கானம் பாட
நெஞ்சோடு தான் வா வா வா கூட

காவேரி ஆற்றின் மீனிங்கே காதோடு மோதும் ஆனந்தம்
தீராத காதல் தேனிங்கே பாட்டோடு பாட்டாய் ஆரம்பம்
பாராமலே போராடினேன் தாளாத மோகம் ஏற
தூங்காமலே நான் வாடினேன் சேராத தோள் தான் சேர
தாவிடும் என் நெஞ்சத்தின் சந்தங்கள் பாடிடும் உன்னை
தேடிடும் உன் நெஞ்சத்தின் மஞ்சத்தில்  பாய்ந்திடும் என் எண்ணங்கள்
நித்தம் நீ தித்தித்தாய் பக்கம் தான் வா வா வா கூட  (தென்றல் தான் திங்கள்...)

பூ மீது மோதும் தென்றல் தான் பூமேனி சேர்ந்தால் தாங்காது
பூவாடை மூடும் ஜாலத்தால் பூபாளம் தானாய் தோன்றாது
நூலாடையின் மேலாடவும் தேகம் தான் தீயாய் மாறும்
தேனோடையில் நீராடவும் மோகந்தான் மேலும் ஏறும்
தேடிடும் என் ராஜாவின் ரோஜாப்பூ சேர்ந்திடும் உன்னை
கேளடி என் ராஜாங்கம் நீதானே சேரடி என் மன்றத்தில்
நித்தம் நீ தித்தித்தாய் பக்கம் தான் வா வா வா கூட  (தென்றல் தான் திங்கள்...)



Keladi Kanmani - Thenral Thaan 

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு - பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ

பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ...
தங்கக்கட்டி பாப்பாவுக்கு தாலேலோ...
வாராமல் வந்த செல்வம்
வீடேறி வந்த தெய்வம்
தேடாமல் தேடி வந்த தாழம்பூச்சரம்

ரெண்டு தாய்க்கொரு பிள்ளை
என்று வாழ்ந்திடும் முல்லை
உன்னை யார் சுமந்தாரோ
உண்மை நீ அறிவாயோ (2)

உன்னை நினைத்து உருகிடும் மாது
உன்னை பிரிய மனம் துணியாது
பூவே பனிப்பூவே நீதான் இல்லாது
பார்வை எங்கள் பார்வை தூக்கம் கொள்ளாது
ஆராரோ ஆராரோ ஆரோ ஆரோ ஆராரோ...

(பொம்முக்குட்டி)

பெற்ற தாய்படும் பாடு
பிள்ளை தானறி யாது
இது காக்கையின் கூடு
இங்கே பூங்குயில் பேடு  (2)

வந்த உறவை இவள் விடுவாளோ
சொந்த உறவை அவள் தருவாளோ
பாசம் உயிர்நேசம் வாழும் நெஞ்சோடு
பாடும் உறவாடும் ஜீவன் உன்னோடு
ஆராரோ ஆராரோ ஆரோ ஆரோ ஆராரோ...

(பொம்முக்குட்டி)



En Bommukutty Ammavukku - En Bommu Kutti Ammavukku Aararo

Followers