Pages

Search This Blog

Tuesday, August 14, 2018

ஜெய்ஹிந்த் 2 - மழலை மலராக சிரிக்கிறதே

மழலை
மலராக சிரிக்கிறதே
மனதில்
விண்மீன்கள் ஜொலிக்கிறதே
அந்த
குட்டி கண்ணுக்குள்
பட்டாம் பூச்சிகள்
சிறகோடு பறக்கிறதே
சொர்க்க லோகம் திறக்கிறதே
இதயம்
பூந்தேனில் நனைகிறதே
சிரிப்பே மனசார
சிரிக்கிறதே
அந்த முத்துக்
கண்மணி
அழகுப் பொன்மணி
கண்ட கனவெல்லாம்
பலிக்கிறதே
அந்த சாமி
துணை இருக்கிறதே



Jaihind 2 - Mazhaye Malarage

ஜெய்ஹிந்த் - தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி

ஆண் : தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்

(இசை)

ஆண் : தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்

(இசை)

என் இந்திய தேசம் இது
ரத்தம் சிந்திய தேசமிது
என் இந்திய தேசம் இது
ரத்தம் சிந்திய தேசமிது
காந்தி மகான் வந்த கண்ணிய பூமி இது

தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்

***

ஆண் : வண்ணம் பல வண்ணம் நம் எண்ணம் ஒன்றல்லோ
ஆ&பெ குழு : பறவைகள் பலவன்றோ வானம் ஒன்றன்றோ
ஆண் : தேகம் பலவாகும் நம் ரத்தம் ஒன்றல்லோ
ஆ&பெ குழு : பாஷைகள் பலவன்றோ தேசம் ஒன்றன்றோ
ஆண் : பூக்கள் கொண்டு வந்தால் இது புண்ணிய தேசமடா
வாட்கள் கொண்டு வந்தால் தலை வாங்கிடும் தேசமடா
எங்கள் ரத்தம் எங்கள் கண்ணீர்
இவை இரண்டும் கலந்ததெங்கள் சரிதமே
இது தீயில் எழுந்து வந்த தேசமே

ஆண் : தலை கொடுத்தார் அந்த அனைவருக்கும்
தாயகமே எங்கள் முதல் வணக்கம்

ஆண் : தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்

(இசை)

{பெ1 குழு : யெயெயெயெயெயெயெ.. யெயெயெயெயெயெயெ
யெயெயெயெயெயெயெ.. யெயெயெயெயெயெயெ

பெ2 குழு : சொம சாயொ.. சொம சாயொ.. சொம சாயொ.. சொம சாயொ..} Overlap

****

பெண்குழு : ஜெய் ஆண்குழு : ஹிந்த்
பெண்குழு : ஜெய் ஆண்குழு : ஹிந்த்
பெண்குழு : ஜெய் ஆண்குழு : ஹிந்த்
பெண்குழு : ஜெய் ஆண்குழு : ஹிந்த்
பெண்குழு : ஜெய் ஆண்குழு : ஹிந்த்
பெண்குழு : ஜெய் ஆண்குழு : ஹிந்த்
பெண்குழு : ஜெய் ஆண்குழு : ஹிந்த்
பெண்குழு : ஜெய் ஆண்குழு : ஹிந்த்


ஆண் : சட்டம் நம் சட்டம் புது வேகம் கொள்ளாதோ
ஆ&பெ குழு : வேகமிருந்தால்தான் வெற்றிகள் உண்டாகும்
ஆண் : மண்ணில் நம் மண்ணில் புது சக்தி பிறக்காதோ
ஆ&பெ குழு : சக்தியிருந்தால்தான் சரித்திரம் உண்டாகும்
சட்டம் கையில் கொண்டு நீ தீமை திருத்திவிடு
சரியாய் இல்லை என்றால் அதன் வேரை அறுத்துவிடு
புலி போல் எழுக புயல் போல் விரைக
அட இளைய ரத்தம் என்ன போலியா
எழுகவேண்டும் புதிய இந்தியா



Jaihind - Thaiyin Manikodi

ஜெய்ஹிந்த் - கண்ணா என் சேலைக்குள்ள

பெண் : கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு

ஆண் : கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு அதுக்கு

பெண் : எறும்பு செய்யும் லீலைப் போல்
குறும்பு செய்ய வந்தாயோ
உள்ளே என்னமோ பண்ண
கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு

ஆண் : கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு ம்ஹ்ஹ் அதுக்கு (இசை)

ஆண்குழு : ஜும்ப ஜும்ப ஜும்பா
சே..ஜும்ப ஜும்ப ஜும்பா
சே..ஜும்ப ஜும்ப ஜும்பா
சே..ஜும்ப ஜும்ப ஜும்பா
சே..ஜும்ப ஜும்ப ஜும்பா
சே..ஜும்ப ஜும்ப ஜும்பா
சே..ஜும்ப ஜும்ப ஜும்பா
சே..ஜும்ப ஜும்ப ஜும்பா
சே..ஜும்ப ஜும்ப ஜும்பா ஓ..ஓ...ஓ..ஓ...

****

பெண் : அங்கே தொட்டு இங்கே தொட்டு
எங்கே தொட எண்ணம் ராசா

ஆண் : அஹா...

பெண் : அஹா அஹா

ஆண் : ஏ..ஹே...

ஆண் : கன்னம் தொட்டு வண்ணம் தொட்டு
ம்ம்ம்ம் தொட எண்ணம் ரோசா

பெண் : அஹா..

ஆண் : அஹா... அஹா

பெண் : அஹா..

பெண் : இது தேவையான குறும்பு
கொஞ்சம் சிலிர்த்து போன உடம்பு

ஆ & ஆ குழு : வா..வா..

ஆண் : ஆ..ஆ..ஆ..

ஆ & ஆ குழு : வா..வா..

பெண் : ஹோவ்..

பெ & பெ குழு : வா..வா..

பெண் : ஆ..ஆ..ஆ..

பெ & பெ குழு : வா..வா..

பெண் : கண்ணா என் சேலைக்குள்ளே
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு

ஆண் : கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு.. அது..க்கு

****

ஆண் : பூமிக்குள்ள பொன்ன வெச்சான்
பொண்ணுக்குள்ள என்ன வெச்சான்

பெண் : ம்..ஹும்..

ஆண் : அஹா ஹஹா

பெண் : ஓஹோ..

பெண் : ஆம்பிளைக்கு மீசை வெச்சான்
பொம்பளைக்கு என்ன வெச்சான்

ஆண் : ம்ஹும்..

பெண் : ம்ஹும்..ம்ஹும்..

ஆண் : லால..

பெண் : ஹஹ்ஹ..

ஆண் : அதை தெரிஞ்சு விளக்கம் தாரேன்
உன்னை திருடி குடிக்கப் போறேன்

பெ & பெ குழு : வா..வா..

பெண் : ஆ..ஆ..ஆ..

பெ & பெ குழு : வா..வா..

ஆ & ஆ குழு : வா..வா..

ஆண் : ஆ..ஆ..ஆ..

ஆ & ஆ குழு : வா..வா..

பெண் : கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு

ஆண் : கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு

பெண் : ஹா..

ஆண் : அதுக்கு

பெண் : எறும்பு செய்யும் லீலைப் போல்
குறும்பு செய்ய வந்தாய்யோ
உள்ளே என்னமோ பண்ண
கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு ஸ்..ஆ..எதுக்கு

ஆண் : கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு ம்.ம்..ஹும்...


Jaihind - Kanna En Selaikullae

தியாகம் - வசந்த காலக் கோலங்கள் வானில்

வசந்த காலக் கோலங்கள் வானில் விழுந்த கோடுகள் 
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள் 
வசந்த காலக் கோலங்கள் வானில் விழுந்த கோடுகள் 
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள் 

அலையிலாடும் காகிதம் 
ம் ம் ம்
அலையிலாடும் காகிதம் அதிலும் என்ன காவியம் 
நிலையில்லாத மனிதர்கள் அவர்க்குமென்ன உறவுகள் 
உள்ளம் என்றும் ஒன்று அதில் இரண்டும் உண்டல்லவோ 
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள் 

வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள் 
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள் 

தேரில் ஏறும் முன்னமே தேவன் உள்ளம் தெரிந்தது 
நல்ல வேளை திருவுளம் நடக்கவில்லை திருமணம் 
நன்றி நன்றி தேவா உன்னை மறக்க முடியுமா 
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள் 

(வசந்த )



Thiyagam - Vasantha Kaala Kolangal

துடிக்கும் கரங்கள் - சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்

சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்
வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம்
வெண்ணிலவு பாலூட்ட பெண்ணிலவு தாலாட்ட
நீலாம்பரி கேட்கலாம் நீலாம்பரி கேட்கலாம்
(சந்தனம்)


மாணிக்க மேகங்கள் வைரங்கள் விண்மீன்கள்
வான் தந்த காதல் சீதனம் (மாணிக்க)

இளவேனில் காலங்கள் ரீங்கார நாதங்கள்
இளவேனில் காலங்கள் ரீங்கார நாதங்கள்
இசைவந்து பாடும் மோகனம்
இசைவந்து பாடும் மோகனம்

(சந்தனம்)

நீ பார்க்கும் நேரங்கள் நிலம் பார்க்கும் நாணங்கள்
நெஞ்சுக்குள் ஏதோ செய்தன (நீ பார்க்கும்)

இதமாக மை போட்டு இமையென்னும் கைபோட்டு
இதமாக மை போட்டு இமையென்னும் கைபோட்டு
உன் கண்கள் என்னைக் கொய்தன
உன் கண்கள் என்னைக் கொய்தன

(சந்தனம்)



Thudikkum Karangal - Santhanam Poosum

Monday, August 13, 2018

புன்னகை தேசம் - மழையே ஓ மழையே

மழையே ஓ மழையே.. புன்னகை தூவுறியே
சிலையாய் ஒரு சிலையாய்.. நிக்கவச்சு பாக்குறியே
(மழையே ஓ மழையே.. )

முத்து முத்து மல்லிகையாய் முத்தம் இட்டு சிரிக்கிறியே
சின்ன உளி நீர் துளியாய் என்னை கொஞ்சம் செதுக்குறியே
உலகினை சலவை செய்ய உன்னை தந்தது வானம்
புன்னகையே.. அணிந்தாடுவோம்
புன்னகையால்.. உலகாளுவோம்
(மழையே ஓ மழையே.. )

மூங்கில்கள் புன்னகை செய்தால் குழலாக மாறும்
பாறைகளும் புன்னகை செய்தால் சிற்பங்கள் ஆகும்
மரச்சட்டம் புன்னகை செய்தே நடைவண்டி ஆகும்
கரை கூட புன்னகை செய்தே வைரமாக மின்னும்
நீரில் நிலவே ஒரு குளத்தின் அழகு புன்னகை
எரியும் சுடரே அது கரையும் மெழுகின் புன்னகை
சிரித்திடும் இயற்கை எல்லாம் பூமியின் புன்னகை
புன்னகையே.. அணிந்தாடுவோம்
புன்னகையால்.. உலகாளுவோம்
(மழையே ஓ மழையே.. )

இளமைக்கு புன்னகையாக முதல் காதல் தோன்றும்
இதயங்கள் புன்னகை செய்தால் இடம்மாறிப் போகும்
வீட்டுக்கு புன்னகையாக மழலைகள் பூக்கும்
மழலைகள் புன்னகை செய்தால் தெய்வம் வந்து வாழும்
பிரியா நட்பே நம் வாழ்க்கை செய்யும் புன்னகை
பிரிந்தே சேர்ந்தால் அங்கு அழுகைகூட புன்னகை
அனைத்தையும் வென்று காட்டும் அழகிய புன்னகை
புன்னகையே.. அணிந்தாடுவோம்
புன்னகையால்.. உலகாளுவோம்
(மழையே ஓ மழையே.. )



Punnagai Desam - Mazhaiye O Mazhaiye

வெப்பம் - வெப்பம்.. நெருப்பிலும் வரும் வெப்பம்

வெப்பம்..
நெருப்பிலும் வரும் வெப்பம்..
நீரிலும் வரும் வெப்பம்..
காற்றிலும் வரும் வெப்பம் ..
புதிதானதிது …

ரத்தம் கொதிக்கையில் வெப்பம் அழைக்கலாம்
வெப்பம் அழைக்கையில் குற்றம் நடக்கலாம்
குற்றம் நடக்கையில் தர்மம் மறக்கலாம்
தர்மம் மறக்கையில் வெப்பம் துரத்தலாம்
வெப்பம் துரத்தினால் வாழ்கை நடுங்காலம்
வாழ்கை நடுங்கினால் நெஞ்சம் கலங்கலாம்
நெஞ்சம் கலங்கினால் நியாயம் புரியலாம்
நியாயம் புரிகையில் வெப்பம் கொதிக்கலாம்

வெப்பம்..
நெருப்பிலும் வரும் வெப்பம்..
நீரிலும் வரும் வெப்பம் ..
காற்றிலும் வரும் வெப்பம் ..
புதிதானதிது…

ரத்தம் கொதிக்கையில் வெப்பம் அழைக்கலாம்
வெப்பம் அழைக்கையில் குற்றம் நடக்கலாம்
குற்றம் நடக்கையில் தர்மம் மறக்கலாம்
தர்மம் மறக்கையில் வெப்பம் துரத்தலாம்
வெப்பம் துரத்தினால் வாழ்கை நடுங்காலம்
வாழ்கை நடுங்கினால் நெஞ்சம் கலங்கலாம்
நெஞ்சம் கலங்கினால் நியாயம் புரியலாம்
நியாயம் புரிகையில் வெப்பம் கொதிக்கலாம்

வெப்பம்..
நெருப்பிலும் வரும் வெப்பம்..
நீரிலும் வரும் வெப்பம் ..
காற்றிலும் வரும் வெப்பம் ..
புதிதானதிது…

ரத்தம் கொதிக்கையில் வெப்பம் அழைக்கலாம்
வெப்பம் அழைக்கையில் குற்றம் நடக்கலாம்
குற்றம் நடக்கையில் தர்மம் மறக்கலாம்
தர்மம் மறக்கையில் வெப்பம் துரத்தலாம்

வெப்பம்..
நெருப்பிலும் வரும் வெப்பம்..
நீரிலும் வரும் வெப்பம் ..
காற்றிலும் வரும் வெப்பம் ..
புதிதானதிது…

Veppam - Veppam

Followers