Pages

Search This Blog

Wednesday, January 11, 2017

மகா நதி - எங்கேயோ திக்கு திசை

எங்கேயோ திக்கு திசை 

எங்கேயோ திக்கு திசை காணாத தூரம்தான்
அம்மாடி வந்ததென்ன என் வாழ்கை ஓடம்தான்

காவேரி தீரம் விட்டு கால்கள் வந்ததடி
காணாத சோகம் எல்லாம் கண்கள் கண்டதடி

கைமாறி நான் வளர்த்த பச்சைக்கிளி போனது
கண்ணார நானும்காண இத்தனை நாள் ஆனது

இரு கண்ணே செந்தமிழ்த்தேனே தந்தையின் பாசம் வென்றதடி
பசும் பொன்னே செவ்வந்திப்பூவே இத்துடன் சோகம் சென்றதடி
நான் கங்கா நதியை காணும் பொழுது உண்மை விளங்குது
அட இங்கே குளிக்கும் மனிதன் அழுக்கில் கங்கை கலங்குது
சில பொல்லா மனங்கள் பாவக்கறையை நீரில் கழுவுது
இந்த முட்டாள்தனத்தை எங்கே சொல்லி நானும் அழுவது

Mahanadhi - Engeyo Thikkudesai

மகா நதி - சொல்லாத ராகங்கள் என்னென்ன

பெண் : துவக்கம் எங்கே இது வரை சரிவரப் புரியவில்லை

ஆண் : தொடங்கியதை தொடர்ந்திடப் புதுவழி தெரியவில்லை

பெண் : புதிர்களும் புதுக்கவி புனைந்திட

ஆண் : நெருங்கிட என் மனம் மருகிட

பெண் : மயங்குதே கலங்குதே

ஆண் : சொல்லின்றியே தயங்குதே

பெண் : அலைகள் எழுந்து கரைகள் கடந்து
சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன (இசை)

பெண் : சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன

ஆண் : நில்லாத எண்ணங்கள் முன் செல்ல
தள்ளாடும் என் நெஞ்சம் பின் செல்ல
தொடர்ந்து வந்தாலென்ன

பெண் : எழுந்த சந்தம் ஒன்று
கலந்த சொந்தம் இன்று
இணைந்த சந்தர்ப்பம்
இழந்த பொன் சொர்க்கம்
திரும்புமோ புது யுகம் அரும்புமோ

ஆண் : சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன

பெண் குழு : அஹ ஹஹா..அஹ ஹஹா..ஹா..(இசை)
ஆஹ ஹஹஹா..ஹாஹ ஹஹா..

ஆண் : காவல் வைத்தாலும் உன்மீது
ஆவல் கொண்டாடும் உள்ளம் உள்ளம்

பெண் : காலம் கைகூடும் என்றெண்ணி
காதல் கொண்டாடும் எண்ணம் எண்ணம்

ஆண் : கூண்டில் என் வாசம் என்றாலும்
மீண்டும் நான் வந்தால் அந்நேரம்
வேண்டும் நான் வாழ உந்தன் நெஞ்சம்

பெண் : வானம் நின்றாலும் சாய்ந்தாலும்
வையம் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்
பாவை பெண் பாவை உந்தன் தஞ்சம்

ஆண் : ஜீவன் வெவ்வேறு ஆகாமல்
ஜென்மம் வீணாகிப் போகாமல்
இணைந்த சந்தர்ப்பம்
இழந்த பொன் சொர்க்கம்
திரும்புமோ புது யுகம் அரும்புமோ

பெண் : சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன

ஆண் : நில்லாத எண்ணங்கள் முன் செல்ல
தள்ளாடும் என் நெஞ்சம் பின் செல்ல
தொடர்ந்து வந்தாலென்ன (இசை)

பெண்குழு : ஆஹ ஹஹஹா..ஹாஹ ஹஹா..

பெண் : நாட்கள் ஒவ்வொன்றும் துன்பம்
தூக்கம் இல்லாமல் செல்லும் செல்லும்

ஆண் : வீசும் பூந்தென்றல் உன்பாட்டை
நாளும் என் காதில் சொல்லும் சொல்லும்

பெண் : பாரம் நெஞ்சோரம் என்றாலும்
ஈரம் கண்ணோரம் என்றாலும்
உள்ளம் உன் பேரைப் பாடும் பாடும்

ஆண் : நேசம் எந்நாளும் பொய்க்காமல்
நெஞ்சைத் துன்பங்கள் தைக்காமல்
நாளை பொற்காலம் கூடும் கூடும்

பெண் : நெஞ்சில் எப்போதும் உன் எண்ணம்
கண்ணில் எந்நாளும் உன் வண்ணம்
இணைந்த சந்தர்ப்பம்
இழந்த பொன் சொர்க்கம்
திரும்பலாம் புது யுகம் அரும்பலாம்

ஆண் : சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன

பெண் : நில்லாத எண்ணங்கள் முன் செல்ல
தள்ளாடும் என் நெஞ்சம் பின் செல்ல
தொடர்ந்து வந்தாலென்ன

ஆண் : எழுந்த சந்தம் ஒன்று
கலந்த சொந்தம் இன்று
இணைந்த சந்தர்ப்பம்
இழந்த பொன் சொர்க்கம்
திரும்பலாம் புதுயுகம் அரும்பலாம்

பெண் : சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன

ஆண் : நில்லாத எண்ணங்கள் முன் செல்ல
தள்ளாடும் என் நெஞ்சம் பின் செல்ல
தொடர்ந்து வந்தாலென்ன

Mahanadhi - Solladha Raagangal

மகா நதி - ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம்

பெண்குழு : கங்கா சங்காச காவேரி ஸ்ரீரங்கேச மனோஹரி
கல்யாணகாரி கலுசானி நமஸ்தேஸ்து சுகாசரி

பெண் : ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..

பெண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீ தேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி 
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி 
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி 
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி 
தெய்வப் பாசுரம் பாடடி

பெண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி

பெண் : கொள்ளிடம் நீர் மீது நர்த்தனம் ஆடும்
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்
செங்கனி மேலாடும் மாமரம் யாவும்
ரங்கனின் பேர் சொல்லி சாமரம் வீசும்
அந்நாளில் சோழ மன்னர்கள் ஆக்கி வைத்தனர் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன் கோவில் கோபுரம் ஆயிரம்
தேனாக நெஞ்சை அள்ளுமே தெய்வ பூந்தமிழ்ப் பாயிரம்

பெண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி 
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி தெய்வப் பாசுரம் பாடடி

பெண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி

ஆண் : கன்னடம் தாய் வீடு என்றிருந்தாலும்
கன்னி உன் மறு வீடு தென்னகமாகும்
கங்கையின் மேலான காவிரித் தீர்த்தம்
மங்கள நீராட முன் வினை தீர்க்கும்
நீர் வண்ணம் எங்கும் மேவிட நஞ்சை புஞ்சைகள் பாரடி
ஊர் வண்ணம் என்ன கூறுவேன் தேவ லோகமே தானடி
வேறெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி

ஆண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி 
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி 
தெய்வப் பாசுரம் பாடடி

ஆண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி

இருவர் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி



Mahanadhi - Sri Ranga Nathanin

மகா நதி - தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது

பொங்கலோ பொங்கல்…. பொங்கலோ பொங்கல்….
பொங்கலோ பொங்கல்…. பொங்கலோ பொங்கல்….

தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ

வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றிசொல்லடியோ
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி

ஹே தைய தியான் தக்கு தியா தக்கு
ஹே தைய தியான் தக்கு தியா தக்கு

ஹே தைய தியான் தக்கு தியா தக்கு
ஹே தைய தியான் தக்கு தியா தக்கு

தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ

முப்பாட்டன் காலம் தொட்டு முப்போகம் யாரால
கல் மேடு தாண்டி வரும் காவேரி நீரால
சேத்தொட சேர்ந்த விதை நாத்து விடாதா
நாத்தோடு செய்தி சொல்ல காத்து வராதா

செவ்வாழ செங்கரும்பு ஜாதி மல்லி தோட்டம் தான்
எல்லாமே இங்கிருக்க ஏதும் இல்லை வாட்டம் தான்
நம்ம சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது வானில் இல்லையடி
நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது கனவில் இல்லையடி

தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ

இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி



Mahanadhi - Pongalo Pongal

Friday, January 6, 2017

மே மாதம் - ஆடிப்பாரு மங்காத்தா

ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை
ராணி எடுத்து வை ஏஸ் எடுத்து வை

வை ராஜா வை வை ராஜா வை வை ராஜா வை
வை ராஜா வை வை ராஜா வை வை ராஜா வை

ஆடிப்பாரு மங்காத்தா
எனை வந்து ஆட சொன்னது கல் கட்டா

ஹார்டின் ஆறு ஜெயிச்சாச்சா
ஜெயிக்கிற ஸ்பேட் ஏழு எங்காத்தா

எட்டு மாடி வீடு கட்ட
கொட்ட போகுதடி நோட்டு

நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்
வந்துபோடு வோட்டு

ஆடிப்பாரு மங்காத்தா
எனை வந்து ஆட சொன்னது கல் கட்டா

ஹார்டின் ஆறு ஜெயிச்சாச்சா
ஜெயிக்கிற ஸ்பேட் ஏழு எங்காத்தா

ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை
ஏஸ் எடுத்து வை

ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை
ஏஸ் எடுத்து வை

என்னென்ன நம்பர் வேணும் என்னக் கேளடி சும்மா
எதுவும் தருவேன் அம்மா

ஒன்பதாம் நம்பர் மட்டும் இங்கே ஒட்டாதம்மா
விவரங் கேளடி சும்மா

என்னாட்டம் விளையாடு தப்பாட்டம் கூடாது
நம்பர்கள் சதி செஞ்சா நண்பர் மேல் தப்பேது

இது போல ஆட்டம் ஆடி இந்தியா கறை சேர்ப்பேன்
சொந்தத்தில் ராக்கெட் வாங்கி சொர்கம் சென்று விலை கேட்பேன்

பொன் கூண்டை விட்டு நான் வானம்
வந்த பட்சி

வானத்தை தாண்டி புது வாழ்க்கை
வாழும் கட்சி

எட்டு மாடி வீடு கட்ட
கொட்ட போகுதடி நோட்டு

நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்
வந்து போடு வோட்டு

ஆடிப்பாரு மங்காத்தா
எனை வந்து ஆட சொன்னது கல்கட்டா

ஹார்டின் ஆறு ஜெயிச்சாச்சா
ஜெயிக்கிற ஸ்பேட் ஏழு எங்காத்தா

எட்டு மாடி வீடு கட்ட
கொட்ட போகுதடி நோட்டு

நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்
வந்து போடு வோட்டு

ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை
ஏஸ் எடுத்து வை

ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை
ஏஸ் எடுத்து வை

பிரிக்காத சீட்டுக்கட்ட மின்னும் போதை வன்னம்
அச்சு வெல்ல கன்னம்

உன்னோடு எந்த ஆணும் தோக்க தானே வேணும்
ஆஹா என்ன ஞானம்

இது வரை என்னாச்சு என் வாழ்க்கை வீனாச்சு
சொந்தத்தில் சுவாசிச்சு அட ரொம்ப நாளாச்சு

என் கால்கள் எங்கும் போகும்
தட்டி கேட்க கூடாது

என் பேர்கள் எங்கும் போகும்
கட்டி போட கூடாது

வார்த்தைகள் கற்க
நான் பள்ளிக்கூடம் சென்றேன்

வாழ்க்கையை கற்க
நான் வாசல் தாண்டி வந்தேன்

எட்டு மாடி வீடு கட்ட
கொட்ட போகுதடி நோட்டு

நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்
வந்துபோடு வோட்டு

ஆடிப்பாரு மங்காத்தா
எனை வந்து ஆட சொன்னது கல்கட்டா

ஹார்டின் ஆறு ஜெயிச்சாச்சா
ஜெயிக்கிற ஸ்பேட் ஏழு எங்காத்தா

எட்டு மாடி வீடு கட்ட
கொட்ட போகுதடி நோட்டு

நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்
வந்துபோடு வோட்டு

May Madham - Adi Paru Mangatha

மே மாதம் - பாலக் காட்டு மச்சானுக்கு

பாலக் காட்டு மச்சானுக்கு பாட்டுன்ன உசுரு
பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு

பாலக் காட்டு மச்சானுக்கு பாட்டுன்ன உசுரு
பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு

பாலக்காட்டு மச்சானுக்கு பாட்டுன்ன உசுரு
பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு

செலவுக்கு நோட்டே இருக்கு சிந்தனைக்கு பாட்டிருக்கு
ஜல் ஜல் ஜல்சாதான்

பாட்டு சத்தம் கேட்டு புட்டா
மத்ததெல்லாம் கொசுரு

செலவுக்கு நோட்டே இருக்கு சிந்தனைக்கு பாட்டிருக்கு
ஜல் ஜல் ஜல்சாதான்

சிட்டு குருவி சிட்டு குருவி
சிரிக்கட்டுமே பெட்டை குருவி

ஆனது ஆகட்டும் ஆனந்தம் கூடுது
ஆஹா வாழ்வே சொர்கம்

பாலக்காட்டு மச்சானுக்கு பாட்டுன்ன உசுரு
பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு

செலவுக்கு நோட்டே இருக்கு சிந்தனைக்கு பாட்டிருக்கு
ஜல் ஜல் ஜல்சாதான்

சிட்டு குருவி சிட்டு குருவி
சிரிக்கட்டுமே பெட்டை குருவி

ஆனது ஆகட்டும் ஆனந்தம் கூடுது
ஆஹா வாழ்வே சொர்கம்

கவலைகள் வேண்டாம் கனவுகள் வாங்கு
வா சந்தோஷம் நமக்கு

திருமணம் வேண்டாம் காதலை வாங்கு
கதவுகள் வேண்டாம் சாவிகள் வாங்கு
வா பொற்க்காலம் நமக்கு

செல்வங்கள் வேண்டாம் சிறகுகள் வாங்கு
வா வானம் நமக்கு

வானமும் பூமியும் வாழ்ந்தால் இனிமையே

பாடகன் வாழ்விலே நித்தம் நித்தம்
பரவசம் நவரசம்

பாலக்காட்டு மச்சானுக்கு பாட்டுன்ன உசுரு
பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு

செலவுக்கு நோட்டே இருக்கு சிந்தனைக்கு பாட்டிருக்கு
ஜல் ஜல் ஜல்சாதான்

வானத்தை எவனும் அழைக்கவும் இல்லை
வா இப்போதே அளப்போம்

வாழ்க்கையை எவனும் ரசிக்கவும் இல்லை

பூக்களை எவனும் திறக்கவும் இல்லை
வா இப்போதே திறப்போம்

பூமியில் புதையலை எடுக்கவும் இல்லை
வா இப்போதே எடுப்போம்

வாலிபம் ஒன்று தான் வாழ்வின் இன்பமே

புன்னகை ஒன்று தான் என்றும் என்றும்
இளமையின் ரகசியம்

பாலக்காட்டு மச்சானுக்கு பாட்டுன்ன உசுரு
பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு

செலவுக்கு நோட்டே இருக்கு சிந்தனைக்கு பாட்டிருக்கு
ஜல் ஜல் ஜல்சாதான்

பாலக்காட்டு மச்சானுக்கு பாட்டுன்ன உசுரு
பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு

செலவுக்கு நோட்டே இருக்கு சிந்தனைக்கு பாட்டிருக்கு
ஜல் ஜல் ஜல்சாதான்

சிட்டு குருவி சிட்டு குருவி
சிரிக்கட்டுமே பெட்டை குருவி
ஆனது ஆகட்டும் ஆனந்தம் கூடுது
ஆஹா வாழ்வே சொர்கம்

May Madham - Pala Kaattu Machanukku

முரட்டுக் காளை (1980) - பொதுவாக எம் மனசு தங்கம்

ஜே ... ஜேய்... அண்ணணுக்கு... ஜேய்.. அண்ணணுக்கு...
ஜேய்.. காளையனுக்கு ஜேய் காளையனுக்கு ஜேய்... ஜேய்ய்ய்ய்ய்...

பொதுவாக எம் மனசு தங்கம்
ஒரு போட்டினு வந்துவிட்டா சிங்கம்
பொதுவாக எம் மனசு தங்கம்
ஒரு போட்டினு வந்துவிட்டா சிங்கம்
உன்மையே சொல்வேன்... நல்லதே செய்வேன்
தன்னானா தானா
தன தன்னானா... தானா
வெற்றி மேல் வெற்றி வரும்
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
ஹா... ஆனந்தம் காணுவோம் என்னாலுமே
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
ஆனந்தம் காணுவோம் என்னாலுமே
பொதுவாக எம் மனசு தங்கம்
ஒரு போட்டினு வந்துவிட்டா சிங்கம்

முன்னால சீறுது மயில காள
பின்னால பாயுது மச்சக்காள
முன்னால சீறுது மயில காள
ஹா... பின்னால பாயுது மச்சக்காள
அடக்கி ஆளுது முரட்டு காள
முரட்டுக்காள... முரட்டுக்காள
நெஞ்சுக்குள் அச்சமில்ல
யாருக்கும் பயமும்மில்ல
வாராதோ வெற்றி என்னிடம்
விளையாடுங்க... உடல் பலமாகுங்க
ஆடலாம் பாடலாம் கொண்டாலாம்
ஹெய்... ஆனந்தம் காணுவோம் என்னாலுமே
பொதுவாக எம் மனசு தங்கம்
ஒரு போட்டினு வந்துவிட்டா சிங்கம்
உண்மையே சொல்வேன்... ஹா
நல்லதே செய்வேன்
வெற்றி மேல் வெற்றி வரும்
ஆடவோம் பாடுவோம் கொண்டாவோம்
ஹா... ஹா.. ஆனந்தம் காணுவோம் என்னாலுமே


வாங்கடி வாங்கடி பொண்டுகளா
வாசம் உள்ள செண்டுகளா
வாங்கடி வாங்கடி பொண்டுகளா
வாசம் உள்ள செண்டுகளா
கும்மி அடிச்சி... புடவைய போத்தி
அண்ணன வாழ்த்தி பாடுங்களா

காளையன பாத்துப்புட்டா
ஜல்லி கட்டு காளையெல்லாம்... துள்ளிக்கிட்டு ஒடுமடி
புல்லுக்கட்ட தேடிக்கிட்டு... புல்லுக்கட்ட தேடிக்கிட்டு
புல்லுக்கட்ட தேடிக்கிட்டு
கொம்பிருக்கும் காளைகெல்லாம் தெம்பிருக்காது
இந்த கொம்பு இல்லா காளையிடம் வம்பிருக்காது
குலவ போட்டு பாருங்கடி... கும்மிஅடிச்சி ஆடுங்கடி
மாரியம்மன் கோவிலுக்கு பொங்கலு வைப்போம் வாருங்கடி
பொங்கலு வைப்போம் வாருங்கடி
பொங்கலு வைப்போம் வாருங்கடி

பொறந்த ஊருக்கு புகழ சேரு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடு
பொறந்த ஊருக்கு புகழ சேரு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடு
நாலு பேருக்கு நன்மை செய்தா
கொண்டாடுவார்... பண்பாடுவார்
என்னாலும் உழைச்சதுக்கு
பொன்னாக பலமிருக்கு
ஊரோடு சேர்ந்து வாழுங்க
அம்மனருல் சேரும்... தினம் நம்ம துணையாகும்
ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம்
ஹெய்... ஆனந்தம் காணுவோம் என்னாலுமே

பொதுவாக எம் மனசு தங்கம்
ஒரு போட்டின்னு வந்துவிட்டா சிங்கம்
உண்மையே சொல்வேன்... நல்லதே செய்வேன்
ஹா... தன்னானா தானா.. 
தன தன்னான தானா
வெற்றி மேல் வெற்றி வரும்
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்... ஹேய்
ஆனந்தம் காணுவோம் என்னாலுமே...
ஹா... ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்... ஹே.. ஹாக...
ஆனந்தம் காணுவோம் என்னாலுமே... 
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்... ஹே

Murattu Kaalai (1980) - Pothuvaka En Manasu Thangam

Followers