Pages

Search This Blog

Thursday, January 5, 2017

படிக்காதவன் (1985) - ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம்

ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன்
கண்மணி என் கண்மணி!
ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிருச்சு
கண்மணி என் கண்மணி! (2)

பச்சை குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்
பாலக் குடிச்சுபுட்டு பாம்பாகக் கொத்துதடி!

(ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்)

ஏது பந்தபாசம்? எல்லாம் வெளி வேஷம்!
காசு பணம் வந்தா நேசம் சில மாசம்!
சிந்தினேன்.. ரத்தம் சிந்தினேன்
அது எல்லாம் வீண் தானோ?
வேப்பிலை கருவேப்பிலை அது யாரோ நான் தானோ?
என் வீட்டு கன்னுக்குட்ட, என்னோட மல்லுக்கட்டி,
என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி!
தீப்பட்ட காயத்துல தேள் வந்து கொட்டுதடி கண்மணி..... கண்மணி!


(ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்)


நேத்து இவன் ஏணி இன்று இவன் ஞானி!
ஆளைக் கரை சேர்த்து ஆடும் இந்தத் தோணி!
சொந்தமே ஒரு வானவில் அந்த வண்ணம் கொஞ்ச நேரம்!
பந்தமே முள்ளானதால் இந்த நெஞ்சில் ஒரு பாரம்!
பணங்காசக் கண்டுபுட்டா புலிகூடப் புல்லைத் தின்னும்
கலி காலாமாச்சுதடி கண்மணி என் கண்மணி!
அடங்காத காளை ஒண்ணு அடிமாடா போச்சுதடி கண்மணி..... கண்மணி!

(ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்)

Padikkadavan (1985) - Oorai Therinchikitten

கேப்டன் மகள் - எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விட மாட்டென்
அது வரை உன்னை தொட மாட்டேன்

(எந்த பெண்ணிலும்)

கூந்தல் முடிகள் நெற்றிப் பரப்பில்
கோலம் போடுதே அதுவா கோலம் போடுதே அதுவா
சிரிக்கும்போது கண்ணில் மின்னல்
தெறித்து ஓடுதே அதுவா தெறித்து ஓடுதே அதுவா
மூக்கின் மேலே மூக்குத்தி போலே மச்சம் உள்ளதே
அதுவா அதுவா அதுவா
கழுத்தின் கீழே கவிதைகள் இரண்டு மிச்சம் உள்ளதே
அதுவா அதுவா அதுவா
அதை அறியாமல் விட மாட்டென்
அது வரை உன்னை தொட மாட்டேன்

(எந்த பெண்ணிலும்)

முல்லை நிறத்துப் பற்களில் ஒன்று
தள்ளி உள்ளதே அதுவா தள்ளி உள்ளதே அதுவா
சங்கு கழுத்தை பாசிமணிகள்
தடவுகின்றதே அதுவா தடவுகின்றதே அதுவா
ஒவ்வொரு வாக்கியம் முடியும் முன்னே புன்னகை செய்வாய்
அதுவா அதுவா அதுவா
ஓரிரு வார்த்தை தப்பாய் போனால் உதடு கடிப்பாய்
அதுவா அதுவா அதுவா
அதை அறியாமல் விட மாட்டென்
அது வரை உன்னை தொட மாட்டேன்

(எந்த பெண்ணிலும்)

Captain Magal - Endha Pennilum

ராஜா சின்ன ரோஜா - சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்னக் குழந்தையும் சொல்லும் - கண்ணா
உங்க பேரை ஒரு தரம் சொன்னா
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்
மேக்கப்பை ஏத்துங்க
கெட்டப்பை மாத்துங்க
செட்டப்பை மாத்தாதீங்க

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்னக் குழந்தையும் சொல்லும் - கண்ணே
எந்தன் பேரை ஒரு தரம் சொன்னா
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்
மேக்கப்பை ஏத்தலாம்
கெட்டப்பை மாத்தலாம்
செட்டப்பு மாறாதம்மா

(சூப்பர் ஸ்டாரு)

உள்ளங்கை சும்மா அரிக்குது அம்மா
அதுக்கு வைத்தியம் உண்டா
போட்டல் அவிழ்க்க துடிக்குது அய்யா
இதுக்கு வைத்தியம் உண்டா
கைவசம் வைத்தியம் மெத்த யிருக்கு
காரியம் மீறினால் மெத்தை இருக்கு
கண்ணனே உன்னிடம் வம்பு எதுக்கு
கட்டலும் ரெண்டுக்கு சொல்லியிருக்கு
எங்கெங்கு சுகமென்று இலக்கணமிருக்கு

(சூப்பர் ஸ்டாரு)


நெத்தியில் புரளும் ஒத்தை முடி விலக்கி
முத்தங்கள் தர ஒரு ஆசை
கண்மணி உனது கால் கொலுசெடுத்து
கைகளில் கட்டிக்கொள்ள ஆசை

என்னமோ மாறுது புத்தி உனக்கு
என் குங்குமம் எங்கயோ ஒட்டியிருக்கு
ஆணுக்கும் பெண்ணுக்கும் பந்தமிருக்கு
நான் அள்ளவும் கிள்ளவும் சொந்தமிருக்கு
என்றாலும் அதுக்கொரு இடம்பொருள் இருக்கு

(சூப்பர் ஸ்டாரு)

Raja Chinna Roja - Super Staru

Wednesday, January 4, 2017

நாயகன் (1987) - நீ ஒரு காதல் சங்கீதம்

நீ ஒரு காதல் சங்கீதம்
நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்

நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
நீ ஒரு காதல் சங்கீதம்

வானம்பாடி பறவைகள் ரெண்டு
ஊர்வலம் எங்கோ போகிறது

காதல் காதல் எனுமொரு கீதம்
பாடிடும் ஓசை கேட்கிறது

இசை மழை எங்கும்…
இசை மழை எங்கும் பொழிகிறது
எங்களின் ஜீவன் நனைகிறது

கடலலை யாவும் இசை மகள் மீட்டும்
அழகிய வீணை சுரஸ்தானம்
இரவும் பகலும் ரசித்திருப்போம்

நீ ஒரு காதல் சங்கீதம்

நீ ஒரு காதல் சங்கீதம்

வாய் மொழி சொன்னால் தெய்வீகம்

நீ ஒரு காதல் சங்கீதம்

பூவைச்சூட்டும் கூந்தலில் எந்தன்
ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்

தேனை ஊற்றும் நிலவினில் கூட
தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்

கடற்கரைக் காற்றே
கடற்கரைக் காற்றே வழியை விடு
தேவதை வந்தாள் என்னோடு

மணல்வெளி யாவும் இருவரின் பாதம்
நடந்ததைக் காற்றே மறைக்காதே
தினமும் பயணம் தொடரட்டுமே

நீ ஒரு காதல் சங்கீதம்

நீ ஒரு காதல் சங்கீதம்

வாய் மொழி சொன்னால் தெய்வீகம்

நீ ஒரு காதல் சங்கீதம்

Nayakan (1987) - Nee Oru Kaadhal

நாயகன் (1987) - நிலா அது வானத்து மேலே பல்லானது

நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய் அது என்னா ஓய்
பொழுதானா போதும் துணை ஒன்னு வேணும்
இளங்காள ஆட்டம் விடிஞ்சாதான் போகும்
நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய் அது என்னா ஓய்

ஓடுர நரியில ஒரு நரி கிழ நரிதான்
அஜும் அஜும் அஜும்
இங்கு ஆடுற நரியில பல நரி குள்ள நரிதான்
அஜும் அஜும் அஜும்
ஆஹா ஓடுர நரியில ஒரு நரி கிழ நரிதான்
அஜும் அஜும் அஜும்
இங்கு ஆடுற நரியில பல நரி குள்ள நரிதான்
அஜும் அஜும் அஜும்
பொண்ணுக்கும் பொண்ணுக்கும் அடிதடிதான்
மண்ணுக்குப் போகிற உலகத்திலே
பசிக்குது பசிக்குது தினம்தினம்தான்
தின்னா பசியது தீர்ந்திடுதா
அடி ஆத்தாடி நான் பாட்டாளி உன் கூட்டாளி ஹோய்
நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய் அது என்னா ஓய்
ஒய்யா ஓய் ஓய் அது என்னா ஓய்

துடிக்கிற ஆட்டத்த திரையில பார்த்திருக்கேன்
அஜும் அஜும் அஜும்
விசில் அடிக்கிற கூட்டத்தில் தரையில ஆடிருக்கேன்
அஜும் அஜும் அஜும்
ஆஹா துடிக்கிற ஆட்டத்த திரையில பார்த்திருக்கேன்
அஜும் அஜும் அஜும்
விசில் அடிக்கிற கூட்டத்தில் தரையில ஆடிருக்கேன்
அஜும் அஜும் அஜும்
காட்டுல மேட்டுல உழைச்சவன் நான்
ஆடிட பாடிட வேண்டாமா
வறுமையின் கொடுமைய பார்த்தவன் தான்
உன் உடையில வமையும் வேண்டாமா
அடி ஆத்தாடி நான் பாட்டாளி உன் கூட்டாளி ஹோய்
நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய் அது என்னா ஓய்
பொழுதானா போதும் துணை ஒன்னு வேணும்
இளங்காள ஆட்டம் விடிஞ்சாதான் போகும்
நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய் அது என்னா ஓய்
ஒய்யா ஓய் அது என்னா ஓய்
ஒய்யா ஓய் அது என்னா ஓய்

Nayakan (1987) - Nila Adhu Vaanathumele

நாயகன் (1987) - அந்தி மழை மேகம் தங்க மழை

அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திருனாளாம்
எங்களுக்கும் காலம் அந்த தினம் பாடும் பெருநாளாம்
ஹோய் அடி கொட்டு மேளம் அது கொட்டும் நேரம்
எங்கள் தெரு எங்கும் தேரோடும்
(தேரோடும் திரு நாளாகும்
நாள் தோரும் இங்கு ஊர்கோலம்)
அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திருனாளாம்
எங்களுக்கும் காலம் அந்த தினம் பாடும் பெருநாளாம்

நீ நடக்கும் பாதை எங்கும் நஞ்சையானது
நாம் நடக்கும் பாதை எங்கும் பஞ்சம் போனது
மாடங்கள் கலைகூடங்கள் யார் செய்தார் அதை நாம் செய்தோம்
நாடாளும் ஒரு ராஜாங்கம் யார் தந்தார் அதை நாம் தந்தோம்
தேசம் என்னும் சோலையில் வேர்கள் நாங்களே
தியாகம் என்னும் ஜோதியில் தீபம் நாங்களே
தாம்தனத்தோம் தீம்தனத்தோம் ராகம் பாடுவோம்
(அந்தி மழை மேகம்)

பால் குடங்கள் தேன்குடங்கள் நூறு வந்தது
கை வணங்கும் தெய்வம் ஒன்று நேரில் வந்தது
பூவாரம் இனி சூட்டுங்கள் கற்பூரம் இனி ஏற்றுங்கள்
ஊரெல்லாம் களி ஆட்டங்கள் என்னென்ன இனி காட்டுங்கள்
வீடுதோரம் மங்களம் இன்று வந்தது
காணும் போது நெஞ்சினில் இன்பம் வந்தது
தாம்தனத்தோம் தீம்தனத்தோம் ராகம் பாடுவோம்
(அந்தி மழை மேகம்)

Nayakan (1987) - Andhi Mazhai Megam

நாயகன் (1987) - தென்பாண்டி சீமையில தேரோடும்

தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
வளரும் பிறையே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே (2)
தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ

தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
வளரும் பிறையே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே (2)
தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ

Nayakan (1987) - Thenpaandi Cheemayile

Followers