Pages

Search This Blog

Monday, January 2, 2017

அசல் - குதிரைக்குத் தெரியும்

குதிரைக்குத் தெரியும் குதிரைக்குத் தெரியும்
தனக்கொரு ஜாகிங் யார் என்று
குமரிக்கும் தெரியும் குமரிக்கும் தெரியும்
எனக்கொரு ஜாகிங் நீ என்று
குதிக்கும் குதிரையை குறிவைத்து அடக்கும்
புஜவலி உனக்கு நிஜவலி எனக்கு
அழகாய் கொழுத்து அந்தரத்தில் பழுத்து
கொடிவைத்த கனிகள் வழிவிட்டு கெடக்கு
காணா அழகே கண்ணடிச்சு அழைக்குது
தொட்டுவிடு ஒருதரம்.. தொல்லைகொடு இருதரம்..
முத்தமிடு மூணுதரம்.. முகத்தினில் நாலுதரம்..
அள்ளி அணை ஐந்துதரம்.. கொள்ளையிடு ஆறுதரம்..
இந்த துணை ஏழு தரம்.. இந்த சுகம் நிரந்தரம்..
குதிக்கும் குதிரையை குறிவைத்து அடக்கும்
புஜவலி உனக்கு நிஜவலி எனக்கு
அழகாய் கொழுத்து அந்தரத்தில் பழுத்து
கொடிவைத்த கனிகள் வழிவிட்டு கெடக்கு


குதிரைக்குத் தெரியும்.. குதிரைக்குத் தெரியும்.. குதிரைக்குத் தெரியும்..
குதிரைக்குத் தெரியும்.. குதிரைக்குத் தெரியும்.. குதிரைக்குத் தெரியும்..
எங்கெங்கு என்னென்ன தேவை
எங்கெங்கு என்னென்ன சேவை
அங்கங்கு அன்போடு செய்வாய் அன்பாய்
நெஞ்சோடு பாய்கின்ற வேளை
நீகொஞ்சம் ஓய்கின்ற வேளை
நான் கொஞ்சம் மானாக வேண்டும் நண்பா

விதவிதமா புதியகலை.. விடியும்வரை சரசமழை..
ஆடைகளும் நாணங்களும் அவசரத்தில் தேவையில்லை
காணா அழகே கண்ணடிச்சு அழைக்குது
தொட்டுவிடு ஒருதரம்.. தொல்லைகொடு இருதரம்..
முத்தமிடு மூணுதரம்.. முகத்தினில் நாலுதரம்..
அள்ளி அணை ஐந்துதரம்.. கொள்ளையிடு ஆறுதரம்..
இந்த துணை ஏழு தரம்.. இந்த சுகம் நிரந்தரம்..
குதிக்கும் குதிரையை குறிவைத்து அடக்கும்
புஜவலி உனக்கு நிஜவலி எனக்கு
அழகாய் கொழுத்து அந்தரத்தில் பழுத்து
கொடிவைத்த கனிகள் வழிவிட்டு கெடக்கு

அழகிய பெண்கள் எமனின் கண்கள்
மூடிய விழிகள் விசங்களின் குளங்கள்
மார்பின் பழங்கள் மரணப்பழங்கள்
பறக்கும் கூந்தல் பாசக்கயிறு
அறிவேன் பெண்ணே... அகப்பட மாட்டேன்...
அகழியில் விழுந்தால்... சுகப்பட மாட்டேன்...


மேல்நாடு பாராத கண்ணும்
கீழ் நாடு பாராத ஆணும்
வாழ்ந்தென்ன வாழ்ந்தென்ன யோகம் இல்லை
ஓஹோ ஓஹோ ஓ...
மோகங்கள் தீர்க்காத ஆணும்
தாகங்கள் தீர்க்காத நீரும்
லோகத்தில் வாழ்ந்தென்ன லாபம் இல்லை
இவருக்குள்ளே இறந்துவிடு
இதயத்திலே புதையல் எடு
ஒவ்வொரு தினமும் குளித்துவிடு
உயிருக்குள்ளே உறங்கிவிடு

காணா அழகே கண்ணடிச்சு அழைக்குது
தொட்டுவிடு ஒருதரம்.. தொல்லைகொடு இருதரம்..
முத்தமிடு மூணுதரம்.. முகத்தினில் நாலுதரம்..
அள்ளி அணை ஐந்துதரம்.. கொள்ளையிடு ஆறுதரம்..
இந்த துணை ஏழு தரம்.. இந்த சுகம் நிரந்தரம்..
குதிக்கும் குதிரையை...
குறிவைத்து அடக்கும்...
புஜவலி உனக்கு...
நிஜவலி எனக்கு...
அழகாய் கொழுத்து...
அந்தரத்தில் பழுத்து...
கொடிவைத்த கனிகள்...
வழிவிட்டு கெடக்கு... 

Asal - Kuthiraikku Theriyum

அசல் - ஏ துஷ்யந்தா நீ மறந்ததை

ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா
உன் சகுந்தலா தேடி வந்தா

ஏ துஷ்யந்தா நீ மறந்ததை
உன் சகுந்தலா மீண்டும் தந்தா

கள்ள பெண்ணே
என் கண்ணை கேட்கும் கண்ணே
என் கற்பை திருடும் முன்னே
நான் தப்பை விட்டு தப்பி வந்தேன்
மீண்டும் நீ நேரில் வந்து நின்றாய்
என் நெஞ்சை கொத்தி தின்றாய்
எனக்கு உன்னை நினைவில்லையே

பூங்காவில் மழை வந்ததும்
புதர் ஒன்று குடை ஆனதும்
மழை வந்து நனைக்காமலே
மடி மட்டும் நனைந்தாய்
மறந்தது என்ன கதை
(ஏ துஷ்யந்தா..)

அழகான பூக்கள் பூக்கும் தேன் ஆற்றங்கரையில்
அடையாளம் தெரியாத ஆல மரத்திருட்டில்
இருள் கூட அறியாத இன்பங்களின் முகத்தில்
இரு பேரும் கைதானோம் முத்தங்களின் திருட்டில்
வருடித் தந்தாய் மனதை திருடி கொண்டாய் வயதை
அது கிளையோடு வேர்களும் பூத்த கதை ஆளாலன் காட்டுக்குள்
ஒரு ஓட்டு வீட்டுக்குள்ளே உன்னை போர்த்திக் கொண்டு படுத்தேன்
பால் ஆற்றில் நீட் ஆடும் போது துவட்ட துண்டு இல்லை
கூந்தல் கொண்டு உன்னை துடைத்தேன்

அந்த நீல நதிக்கரை ஓரம்
நீ நின்றுருந்தாய் அந்தி நேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோ சில நேரம்
(ஏ துஷ்யந்தா..)

மான் ஆடும் மலை பக்கம் ஏரிக்கரை அருகில்
மயில் ஆடும் ஜன்னல் கொண்ட மாளிகையில் அறையில்
கண்ணாடி பார்த்துக்கொண்டே கலை யாவும் பயின்றோம்
கரு நீல போர்வைக்குள்ளே இரு நாட்கள் இருந்தோம்
பகலில் எத்தனை கனவு இரவில் எத்தனை நனவு
தூங்காத கண்ணுக்குள்ளே சுக நினைவு
சம்மதம் கேளாமல் என்னை சாய்த்து சாய்த்து கொண்டு
சட்டென்று சட்டென்றூ முத்தம் தந்தாய்
மாந்தோப்பில் மாந்தோப்பில் என்னை
மடியில் போட்டுக்கொண்டு
புல் இல்லா தேகத்தில் கொஞ்சம் மேய்ந்தாய்

அந்த நீல நதிக்கரை ஓரம்
நீ நின்றுருந்தாய் அந்தி நேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோ சில நேரம்

பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ

ஏ துஷ்யந்தா..
ஏ துஷ்யந்தா..
ஏ துஷ்யந்தா..
ஏ துஷ்யந்தா..

Asal - Yea Dushyantha

அசல் - அதிரி புதிரி பண்ணிக்கடா

அதிரி புதிரி பண்ணிக்கடா?
எதிரி உனக்கு இல்லையடா
தொட்டதெல்லாம் வெற்றியடா
தொடாததும் தொட்டுக்கெடா
கண்களால் தொட்டதும்
கற்பு பதறுதே
உன் கையால்
நீ தொட்டாலே
கன்னி மொட்டுக்குள்ள

டொட்டொடய்ங்
டொட்டொடய்ங்

அதிரி புதிரி பண்ணட்டுமா?
எகிறி எகிறி துள்ளட்டுமா?
பின்னழகை பின்னட்டுமா?
பிச்சுப் பிச்சு தின்னட்டுமா?
காதலின் உலையிலே
ரத்தம் கொதிக்குதே
முழு முத்தம்
நீ இட்டால்
என் முதுகுத் தண்டுக்குள்ள

ரெண்டு பெரும் குடிக்கணுமே
ரெட்டை இதழ்தத் தீம்பால்
எத்தனை நாள் தின்னுவது
இட்லி வடை சாம்பார்?
முக்கனியில் ரெண்டு கனி
முட்டித் திங்க ஆசை
அப்பப்பா சலிச்சிருச்சே
அப்பள வடை தோச
பணயக் கைதிபோல என்னைய
ஆட்டிப் படைக்கிற
பங்குச் சந்தயப்போல என்னைய
ஏத்தி இறக்கிற
நெத்தியில எப்பவும்
கத்தி அடிக்கிற
கத்திக் கண்ணு
வத்தி வச்சா
என் உச்சிமண்டயில
டொட்டொடய்ங்
டொட்டொடய்ங்

பச்சப்புள்ள போல் இருப்பா
லச்ச கெட்ட பாப்பா
நெஞ்சுக்குள்ள வச்சதென்ன
முந்திரிக்காத் தோப்பா
கத்திரிக்கா மூட்ட போல
கட்டழகு சீப்பா
ஓரம் போட்டு வளத்ததப்பா
போத்திக்கிட்டு போப்பா
ஏப்பரல் மாத எரி போல
ஹார்ட்டு எறங்குதே
தங்கம் வெலையப் போல சும்மா
ஸ்கர்ட்டு ஏறுதே
புத்தியில் எப்பவும்
நண்டு ஊருதே
பச்சுப் பச்சு இச்சு வச்சா
என் நரம்பு மண்டலத்தில்
டொட்டொடய்ங்
டொட்டொடய்ங்

Asal - Athiri Puthiri Pannikkada

அசல் - தல போல வருமா

பெண்: காற்றை நிறுத்திக் கேளு
கனலை அழைத்துக் கேளு
அவன்தான்.... அசல் என்று சொல்லும்....
பழமை செய்வதில் கொம்பன்
கடவுள் இவனுக்கு நண்பன்
நம்பிய பேருக்கு மன்னன்
நன்றியில் இவன் ஒரு கர்ணன்
அடடா அடடா தலபோல வருமா

குழு: தல போல வருமா... தல போல வருமா...
தல போல வருமா... தல போல வருமா...

(இசை...)

பெண்: காற்றில் ஏறியும் நடப்பான்
கட்டாந் தரையிலும் படுப்பான்
எந்த எதிர்ப்பையும் ஜெயிப்பான்
எமனுக்கு டீ கொடுப்பான்
முகத்தில் குத்துவான் பகைவன்
முதுகில் குத்துவான் நண்பன்
பகையை வென்றுதான் சிரிப்பான்
நண்பரை மன்னித்தருள்வான்
போனான் என்று ஊர்பேசும்போது
புயல் என வீசுவான்
பூமிப்பந்தின் ஒருபக்கம் மோதி
மறுபுறம் தோன்றுவான்
தோட்டங்களில் பூக்களிலும் தோட்டா தேடுவான்
தோழர்களில் பகைவர்களையும் சுட்டே வீழ்த்துவான்
மாயமா... மந்திரமா....
குழு: தல போல வருமா... தல போல வருமா...
தல போல வருமா... தல போல வருமா.

(இசை...)

பெண்: நித்தம் நித்தமும் யுத்தம்
இவன் எச்சில் குளத்திலும் ரத்தம்
நெற்றி நடுவிலும் சத்தம்
நிம்மதி இவனுக்கில்லை
படுக்கும் இடமெல்லாம் சொர்க்கம்
படுக்கை முதுவதும் வெட்கம்
காட்டுச்சிங்கம் போல் வாழ்ந்தும்
கண்களில் உறக்கமில்லை
ஊரை நம்பி நீ வாழும் வாழ்க்கை
இழிவென்று ஏசுவான்
உன்னை நம்பி நீ வாழும் வாழ்க்கை
உயர்வென்று பேசுவான்
சட்டங்களின்... வேலிகளை... சட்டென்று தாண்டுவான்...
தர்மங்களின்... கோடுகளை... தாண்டிட கூசுவான்...
மாயமா.... மந்திரமா....

குழு: தல போல வருமா... தல போல வருமா...
தல போல வருமா... தல போல வருமா...
தல போல வருமா... தல போல வருமா...
தல போல வருமா... தல போல வருமா...

Asal - Thalai Pola Varumaa

அசல் - எங்கே எங்கே மனிதன் எங்கே

எங்கே எங்கே மனிதன் எங்கே
மனிதன் உடலில் மிருகம் இங்கே
ஓநாய் கூட்டம் நரியின் கள்ளம் ஒன்றாய் சேர்ந்த உலகம் எங்கே
வலிகளா அந்த வரங்களா
வாழ்க்கை ஞானம் கொண்டேன்

ஓ ஹோ ஹோ

காதல் என்றால் கண்ணில் யுத்தம்
கண்ணீர் எல்லாம் வெள்ளை ரத்தம்
உறவு நட்பும்

ஓ ஹோ ஹோ

பிம்பம் பிம்பம்

ஓ ஹோ ஹோ

உள்ளம் எங்கே நம்பும் நம்பும்
பொய்களின் கரைக்கு நடுவிலே போகுதே வாழ்க்கை நதி

ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ 
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ



ஜனனம் உண்மை மரணம் உண்மை
தந்தானே கடவுள் தந்தானே
அந்த ரெண்டை தவிர 

யோ யோ

எல்லாம் பொய்யா

யோ யோ

செய்தானே மனிதன் செய்தானே
கடுகை பிளந்து காணும் போது
வாணம் இருந்திட கண்டேன்
நாம் உறவை திறந்து காணும் போது
உலகம் தெரிந்திட கண்டேன்
என் உடலைத் தொட்டால் நான் மனிதன் ஆனேன்
என் உயிரைத் தொட்டால் நான் கடவுள் ஆனேன்

ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ 
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ


இங்கே இங்கே மனிதன் இங்கே
இமயம் தாண்டும் இதயம் இங்கே
காடும் மரமும் என் காலில் பூக்கள்
குன்றும் மலையும் கூழாங்கற்கள்
சாம்பலில் உயிர்க்கும் பறவை போல்
சாதிக்கவே பறக்கின்றேன்
சாதிக்கவே பறக்கின்றேன்

Asal - Yengay Yengay

அசல் - சிங்கம் என்றால் என் தந்தைதான்

சிங்கம் என்றால் என் தந்தைதான்
செல்லம் என்றால் என் தந்தைதான்
கண் தூங்கினால்துயில் நீங்கினால்
எம் தந்தைதான்என் தந்தைதான்
எல்லோருக்கும்அவர் விந்தைதான்

விண் மீன்கள் கடன் கேட்கும்அவர் கண்ணிலே
வேல் வந்து விளையாதும் அவர் சொல்லிலே
அவர் கொண்ட புகழ் எங்கள் குலம் தாங்குமே
அவர் பேரை சொன்னாலே பகை நீங்குமே
அழியாத உயிர் கொண்ட எம் தந்தையே
அழியாத உயிர் கொண்ட என் தந்தையே
ஆண் வடிவில் நீ என்றும் எம் அன்னையே

வீரத்தின் மகன் என்று விழி சொல்லுமே
வேழத்தின் இனம் என்று நடை சொல்லுமே
நிலையான மனிதன் என பேர் சொல்லுமே
நீதானே அசல் என்று ஊர் சொல்லுமே
உன் போல சிலர் இன்று உருவாகலாம்
உன் உடல் கொண்ட அசைவுக்கு நிகராகுமா

எப்போதும் தோற்கது உன் சேனை தான்
இருந்தாலும் இறந்தாலும் நீ யானைத்தான்
கண்டங்கள் அரசாலும் கலைமூர்த்தி தான்
கடல் தாண்டி பொருள் ஈட்டும் உன் கீர்த்திதான்
தலைமுறைகள் கழிந்தாலும் உன் பேச்சு தான்
தந்தை எனும் மந்திரமே என் மூச்சுதான்சிங்கம் என்றால் என் தந்தைதான்
செல்லம் என்றால் என் தந்தை தான்
கண் தூங்கினால் துயில் நீங்கினால்
என் தந்தை தான் என் தந்தை தான்
எல்லோருக்கும் அவர் விந்தை தான்


விண்மீன்கள் கடன் கேட்கும் அவர் கண்ணிலே
வேல் வந்து விளையாடும் அவர் சொல்லிலே
அவர் கொண்ட புகழ் எங்கள் குலம் தாங்குமே
அவர் பேரை சொன்னாலே பகை நீங்குமே
அழியாத உயிர் கொண்ட என் தந்தையே
அழியாத உயிர் கொண்ட என் தந்தையே
ஆண் வடிவில் நீ என்றும் எம் அன்னையே

வீர்த்தின் மகன் என்று விழி சொல்லுமே
வேகத்தின் இனம் என்று நடை சொல்லுமே
நிலயான மனிதன் என வேர் சொல்லுமே
நீதானே அசல் ஊர் சொல்லுமே
உன் போல சிலர் இங்கு உருவாகலாம்
உன் உடல் கொண்ட அசைவுக்கு நிகர் ஆகுமா


எப்போதும் தோற்காது உன் சேவைதான்
இருந்தாலும் இறந்தாலும் நீ யானைதான்
கண்டங்கள் அரசாலும் கலைமூர்த்தி தான்
கடல் தாண்டி பொருள் ஈட்டும் உன் கீர்த்தி தான்
தலை முறைகள் கடந்தாலும் உன் பேச்சுதான்
தந்தயெனும் மந்திரமே என் மூச்சுதான்
சிங்கம் என்றால் என் தந்தைதான்
செல்லம் என்றால் என் தந்தை தான்
கண் தூங்கினால் துயில் நீங்கினால்
என் தந்தை தான் என் தந்தை தான்
எல்லோருக்கும் அவர் விந்தை தான்

Asal - Em Thandhai

அட்டகாசம் - உனக்கென்ன உனக்கென்ன

இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன
ஏழு கடலும் என் பேர் சொன்னால் உனக்கென்ன
எரிந்து போன சாம்பலில் இருந்து
எழுந்து பறக்கும் பினீக்ஸ் போல
மீண்டும் மீண்டும் பறப்பேன் உனக்கென்ன
நான் வாழ்ந்தால் உனக்கென்ன

இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன
ஏழு கடலும் என் பேர் சொன்னால் உனக்கென்ன
எரிந்து போன சாம்பலில் இருந்து
எழுந்து பறக்கும் பினீக்ஸ் போல
மீண்டும் மீண்டும் பறப்பேன் உனக்கென்ன
நான் வாழ்ந்தால் உனக்கென்ன

உனக்கென்ன உனக்கென்ன உனக்கென்ன

உனக்கென்ன உனக்கென்ன உனக்கென்ன

உனக்கென்ன உனக்கென்ன
உனக்கென்ன உனக்கென்ன
உனக்கென்ன உனக்கென்ன தம்பி உனக்கென்ன

உனக்கென்ன உனக்கென்ன
உனக்கென்ன உனக்கென்ன
உனக்கென்ன உனக்கென்ன தம்பி உனக்கென்ன

இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன

ஏற்றி விடவோ தந்தையும் இல்லை
ஏந்தி கொள்ள தாய் மடி இல்லை
என்னை நானே சிகரத்தில் வைத்தேன்
அதனால் உனக்கென்ன ?

தாயின் கருவில் வளரும் குழந்தை
ஏழாம் மாதம் இதயம் துடிக்கும்
ஐந்தே மாதத்தில் இதயம் துடித்தேன்
அதனால் உனக்கென்ன ?

இவன் கொண்ட நெருப்போ குறையவில்லை
நெருப்பென்றும் தலை கீழாய் எரிவதில்லை
மலைகளின் தலையோ குனிவதில்லை
மனம் உள்ள மனிதன் அழிவதில்லை

நீ என்ன உருகும் பனிமலை
நான் தானே எரிமலை எரிமலை

உனக்கென்ன உனக்கென்ன
உனக்கென்ன உனக்கென்ன
உனக்கென்ன உனக்கென்ன தம்பி உனக்கென்ன

உனக்கென்ன உனக்கென்ன
உனக்கென்ன உனக்கென்ன
உனக்கென்ன உனக்கென்ன தம்பி உனக்கென்ன

இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன

ஹிட்லர் ஆக வாழ்வது கொடிது
புத்தனாக வாழ்வது கடிது
ஹிட்லர் புத்தர் இருவருமாய் நான்
இருந்தால் உனக்கென்ன ?

வெற்றி என்பது பட்டாம்பூச்சி
மாற்றி மாற்றி மலர்களில் அமரும்
உனக்கு மட்டும் நிரந்தரம் என்று
நினைத்தால் சரி அல்ல

எனக்கொரு நண்பனென்று அமைவதற்கு
தனிபட்ட தகுதிகள் எதுவுமில்லை
எனக்கொரு எதிரியாய் இருப்பதற்கு
உனக்கொரு உனக்கொரு தகுதி இல்லை
நீ என்ன உருகும் பனிமலை
நான் தானே எரிமலை எரிமலை

உனக்கென்ன உனக்கென்ன
உனக்கென்ன உனக்கென்ன
உனக்கென்ன உனக்கென்ன தம்பி உனக்கென்ன

உனக்கென்ன உனக்கென்ன
உனக்கென்ன உனக்கென்ன
உனக்கென்ன உனக்கென்ன தம்பி உனக்கென்ன

Attagasam - Unakkenna Unakkenna

Followers