Pages

Search This Blog

Saturday, December 31, 2016

செந்தமிழ் பாட்டு - சின்னச் சின்ன தூறல் என்ன

சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன

சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்னச் சின்ன ..

***

உனது தூறலும் இனிய சாரலும்
தீண்டும் மேகம் சிலிர்க்குதம்மா

பெண் : ஹஹா..அது தீண்டும் மேகமில்ல
தேகம் சிலிர்க்குதம்மா..

உனது தூறலும் இனிய சாரலும்
தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா
நனைந்த பொழுதிலும் குளிர்ந்த மனதினில்
ஏதோ ஆசை துடிக்குதம்மா
மனித ஜாதியின் பசியும் தாகமும்
உன்னால் என்றும் தீருமம்மா
வாரித் தந்த வள்ளல் என்று
பாரில் உன்னைச் சொல்வதுண்டு
இனமும் குலமும் இருக்கும் உலகில்
அனைவரும் இங்கு சரிசமம் என
உணர்த்திடும் மழையே..

சின்னச் சின்ன
சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்னச் சின்ன தூறல் என்ன

***

பிழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில்
நீயோ இங்கே வருவதில்லை

பெண் : படிச்சவன் பாட்டை கெடுத்த கதையால்ல இருக்கு
பிழைக்கும்ன்னு எழுதலையே
மழைக்குன்னுதானே எழுதியிருக்கேன்

ஓஹோ..மழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில்
நீயோ இங்கே வருவதில்லை
வெடித்த பூமியும் மானம் பார்க்கையில்
நீயோ கண்ணில் தெரிவதில்லை
உனது சேதியை பொழியும் தேதியை
முன்னால் இங்கே யாரறிவார்
நஞ்சை மண்ணும் புஞ்சை மண்ணும்
நீயும் வந்தால் பொன்னாய் மின்னும்
உனது பெருமை உலகம் அறியும் இடியென்னும்
இசை முழங்கிட வரும் மழையெனும் மகளே

சின்னச் சின்ன
சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன

சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்னச் சின்ன

Senthamil Pattu - Chinna Chinna

செந்தமிழ் பாட்டு - காலையில் கேட்டது கோயில் மணி

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

பெண் : பாதையில் ஏதொரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல் கனி

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

***

ஆண் : மோகம் என்னென்ன மந்திரம் போட்டதோ
தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ (இசை)

ஆண் : மோகம் என்னென்ன மந்திரம் போட்டதோ
தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ

பெண் : தேவனின் கைவிரல் பாவை மேல் பட்டது

ஆண் : தேவியின் கண்விழி பானம் தான் விட்டது

பெண் : புதுவித அனுபவம்

ஆண் : ஆ..ஆஹ ஹா

பெண் : முதல் முதல் அறிமுகம்

ஆண் : ஓ..ஓஹொ ஹோ..

பெண் : புது வித அனுபவம் முதல் முதல் அறிமுகம்
தேனும் பாலும் தொட தொட ஊறுது

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

பெண் : பாதையில் ஏதொரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல் கனி

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

பெண்குழு : ம்..ம்..ம்...ம்...ம்...ம்...
ம்..ம்..ம்...ம்...ம்...ம்...

***

பெண் : தூக்கம் கண்விட்டு சென்றதே ராத்திரி
நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூச்செடி (இசை)

பெண் : தூக்கம் கண்விட்டு சென்றதே ராத்திரி
நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூச்செடி

ஆண் : ஏக்கமா கண்மணி காய்ந்ததோ செவ்விழி

பெண் : காதலா என் மனம் சேர்ந்ததே உன் வழி

ஆண் : ரகசியம் புரிந்தது

பெண் : ஆ..ஆஹ ஹா

ஆண் : அதிசயம் தெரிந்தது

பெண் : ஓ..ஓஹொ ஹோ..

ஆண் : ரகசியம் புரிந்தது அதிசயம் தெரிந்தது
காற்றும் பூவும் கலந்துறவாடுது
காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

பெண் : பாதையில் ஏதொரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல் கனி

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

Senthamil Pattu - Kalaiyil Kettathu

செந்தமிழ் பாட்டு - சொல்லி சொல்லி வந்ததில்லை இந்த

ஆண் : ஓ....ஓ.. ஓ..ஓ..
சொல்லி சொல்லி வந்ததில்லை இந்த
பிள்ளையின் செந்தமிழ் பாட்டு
அன்னை மனம் ஆணை இட இங்கு
வந்தது செந்தமிழ் பாட்டு

சொல்லி சொல்லி வந்ததில்லை இந்த
பிள்ளையின் செந்தமிழ் பாட்டு
அன்னை மனம் ஆணை இட இங்கு
வந்தது செந்தமிழ் பாட்டு

நான் வணங்கும் தெய்வத்தின் விழியில்
நிழல் போல் சோகம் ஆடும்
நடந்த சேதி நான் ஒன்றும் அறியேன்
எதைத்தான் இதயம் பாடும்

சொல்லி சொல்லி வந்ததில்லை இந்த
பிள்ளையின் செந்தமிழ் பாட்டு
அன்னை மனம் ஆணை இட இங்கு
வந்தது செந்தமிழ் பாட்டு

***

ஆண் : அம்மா உன் வார்த்தை வேதம் என்றெண்ணும்
மகனும் நான் தானம்மா
உலவும் என் கோயில் பேசும் என் தெய்வம்
உலகில் நீ தானம்மா
தாயே உன் கண்ணில் துளி நீர் கண்டாலும்
இதயம் தாங்காதம்மா
ஏதோ உன் நெஞ்சில் துயரம் என்றாலும்
விழிகள் தூங்காதம்மா
வண்ண முகம் வாடி நிற்க
பார்த்ததில்லை நானும் எந்நாளும்
வாடை கொஞ்சும் கூந்தலை
ஆடைகொண்டு மூடிட
வருத்தமென்ன இந்நேரம் ம்..ம்..ம்..

சொல்லி சொல்லி வந்ததில்லை இந்த
பிள்ளையின் செந்தமிழ் பா..பா..பா..

***

பெண் : காதல் என்னென்று நீயும் காணாமல்
வளர்த்தேன் நான் தானடா
விதியும் கை நீட்ட காதல் தீ மூட்ட
விழுந்தாய் நீ தானடா
ஏழை உன் மோகம் கானல் என் ராகம்
முடிவை கண்டேனடா
மகனே உன் ஆசை முடிக்க நான் இன்று
முடியை தந்தேனடா
காதல் கொண்டு லாபம் என்ன
பார்த்ததுண்டு நானும் அந்நாளில்
அன்னை கண்ட நாடகம் அன்பு மகன் வாழ்விலும்
நடந்திடுமோ இந்நாளில் ல்..ல்..ல்

சொல்ல சொல்ல நீ அறிவாய் இந்த
அன்னையின் செந்தமிழ் பாட்டு (இசை)
பிள்ளைக்கென பாடுகிறாள் உன்னை
பெற்றவள் செந்தமிழ் பாட்டு (இசை)

நீ வணங்கும் தெய்வத்தின் விழியில்
நிழல் போல் சோகம் ஆடும்
நடந்த சேதி நான் இன்னும் சொன்னால்
மகனே மனம் தான் வாடும்

சொல்ல சொல்ல நீ அறிவாய் இந்த
அன்னையின் செந்தமிழ் பாட்டு
பிள்ளைக்கென பாடுகிறாள் உன்னை
பெற்றவள் செந்தமிழ் பாட்டு

Senthamil Pattu - Sholli Sholli

செந்தமிழ் பாட்டு - கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா

கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா
கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா
பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா
இணையா இருக்க இசைதான் படிக்க
கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா
கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா
பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா

***

சின்ன சின்ன பறவை கூட்டம்
என் பாட்டுக்கு தலையை ஆட்டும்
சின்ன சின்ன பறவை கூட்டம்
என் பாட்டுக்கு தலையை ஆட்டும்
கட்டுகளும் காவல்களும் ஆத்தாடி இங்கே இல்லை
கொத்து கொத்தா நோட்டு விழும்
ஆனந்தம் நெஞ்சுக்குள்ளே
கூண்டு கிளி போலிருந்தா
கொஞ்சும் கிளி வாடுமம்மா
கூண்டை விட்டு வாடி அம்மா

கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா
கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா
பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா

***

சங்கீதத்தை விலையை போட்டா
சந்தையிலே வாங்ககூடும்
சங்கீதத்தை விலையை போட்டா
சந்தையிலே வாங்ககூடும்
சாமி தந்த செல்வம் இது
வேறென்ன வேணும் சொல்லு
சிந்துகளை அள்ளிதர்றேன்
நாள் தோறும் வாங்கிசெல்லு
நான் அறிஞ்ச பாட்டு எல்லாம்
நீ அறிஞ்சு பாட வேணும்
பொங்கி பொங்கி ஓட வேணும்

கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா
கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா
பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா
இணையா இருக்க இசைதான் படிக்க
கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா
கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா
பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா
பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா

Senthamil Pattu - Koottooru Pattuirukku

செந்தமிழ் பாட்டு - வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு

வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு

வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு
ஊரு சனம் எல்லாரும் இருந்தும்
இசை தான் என்றும் வாழும்
மனித ஜாதி பாட்டொன்றினால் தான்
கவலை மறக்கும் நாளும்

வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு

***

மொழிகள் வெவ்வேறு பாடல் கொண்டாலும்
இனிமை ஒன்றானது
தமிழர் பண்பாட்டைக் கூறும் பாட்டுக்கு
தமிழே கண் போன்றது

மொழிகள் வெவ்வேறு பாடல் கொண்டாலும்
இனிமை ஒன்றானது
தமிழர் பண்பாட்டைக் கூறும் பாட்டுக்கு
தமிழே கண் போன்றது
மூங்கிலிலை மோதி வரும்
காற்றும் இசை தான் தராதோ...
மூன்று தமிழ் வாசமும்
நாடுப் புறப் பாடலில்
புதுப் புனல் போலே வராதோ...

வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு

***

ஆ...ஆ...ஆ...ஆ...
பிள்ளை என்கின்ற இசையின் தாய் தந்தை
யாரோ யார் சொல்லுவார்
யாரால் எப்போது இசை தான் உண்டாச்சு
பதில் தான் யார் சொல்லுவார்

பிள்ளை என்கின்ற இசையின் தாய் தந்தை
யாரோ யார் சொல்லுவார்
யாரால் எப்போது இசை தான் உண்டாச்சு
பதில் தான் யார் சொல்லுவார்
பாயும் நதி மூலம் என்ன
பார்பதில்லை யாரும் என்னாளும்
நானும் இந்த பூமியில்
நீல நதி போலவே
நடந்திடுவேன் எங்கேயும்...ம்...ம்...ம்

வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு
ஊரு சனம் எல்லாரும் இருந்தும்
இசை தான் என்றும் வாழும்
மனித ஜாதி பாட்டொன்றினால் தான்
கவலை மறக்கும் நாளும்

வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு

Senthamil Pattu - Vanna Vanna

பாண்டவர் பூமி - அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம்

அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்,
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்,

அது ஒரு அழகிய நிலா காலம்,
கனவினில் தினம் தினம் உல்லா போகும்,
அது ஒரு அழகிய நிலா காலம்,
கனவினில் தினம் தினம் உல்லா போகும்,
நிலவுகள் சேர்ந்து,
பூமியில் வாழ்ந்ததே,
அது ஒரு பொற்காலம்,

அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்,
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்,

காற்றும் கூட எங்களுடன்,
இரவினில் தூங்க இடம் கேட்கும்,
மழை துளி கூட என் தாயின்,
மடியினில் தவழ தினம் ஏங்கும்,

நத்தை கூட்டின் நீர் போதும்,
எங்களின் தாகம் தீர்த்துகொள்வோம்,
கத்தும் கடலும் கை கட்ட,
கவிதைகள் போலே வாழ்ந்து வந்தோம்,

தாயின் மடியில் தினம் இருந்து,
காலையில் மீண்டும் உயிர் பெறுவோம்,
கனவினில் காலையில் ஒளி பெயர்த்து,
சொல்லி சொல்லி சுகமாய்,
தினம் சிரிப்போம்,

ஐந்தெழுத்து புது மொழியை,
அரிய வைத்தாள் என் அன்னை,
அண்ணன் தங்கை ஐவருமே,
நேசம் கொண்டு தமிழ் மண்ணை,
நிலவுகள் சேர்ந்து,
பூமியில் வாழ்ந்ததே,
அது ஒரு பொற்காலம்,

அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்,
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்,

அன்னை ஊட்டிய பிடி சோற்றில்,
ஆயுள் முழுக்க பசி மறந்தோம்,
ஓற்றை கண்ணில் அடி பட்டால்,
பத்து கண்ணிலும் வலி கண்டோம்,

பள்ளிகூடம் தந்ததில்லை,
பாசம் என்னும் நூல் ஒன்றை,
வேதங்கள் நான்கும் சொன்னதில்லை,
எங்கள் கதை போலே வேரொன்றை,

கண்களும் நீர் துளி கண்டதில்லை,
அழுதிட அவைகளும் பழகவில்லை,
கருப்பா சிவப்பா தெரியவில்லை,
கவலைகள் இதுவரை முளைத்ததில்லை,

சேகரித்து வைப்பதற்கு,
தேவை என்று எதுவும் இல்லை,
இறைவனுக்கும் எங்களுக்கும்,
இடைவெளிகள் இருந்ததில்லை,
நிலவுகள் சேர்ந்து,
பூமியில் வாழ்ந்ததே,
அது ஒரு பொற்காலம்,

அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்,
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்,

அது ஒரு அழகிய நிலா காலம்,
கனவினில் தினம் தினம் உல்லா போகும்,
அது ஒரு அழகிய நிலா காலம்,
கனவினில் தினம் தினம் உல்லா போகும்,
நிலவுகள் சேர்ந்து,
பூமியில் வாழ்ந்ததே,
அது ஒரு பொற்காலம்,

Pandavar Bhoomi - Avaravar Vazhkaiyil

பாண்டவர் பூமி - அழகான தடுமாற்றம்

அழகான தடுமாற்றம்,
நிலைகின்றதா?
ஆசைகள் ஒரு மாற்றம்,
அடைகின்றதா?
என்னாச்சு நீ சொல்லடி,

அழகே, நீ அழகாக,
அழகாகிறாய்,
இதயத்தை இடம் மாற்ற,
நாள் பார்கிறாய்,
நீயாக நீ இல்லைடி…

Pandavar Bhoomi - Azhagana Thadu Maatram

Followers