Pages

Search This Blog

Wednesday, November 30, 2016

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் - வானம்பாடியின் வாழ்விலே சூர்யோதயம்

வானம்பாடியின் வாழ்விலே சூர்யோதயம்
வண்ண பூங்குயில் பாடினால் சந்திரோதயம்
ஒரு சிலையின் காதில் நான் பாட அது உயிரும் வந்து நடமாட
ஒரு செடியின் காதில் நான் பாட அதில் ரோஜா பூக்கள் பூத்தாட
வானவில் வந்தது வசந்தமும் வந்தது பாட்டுக்கள் கேட்பதற்கு
வானவில் வந்தது வசந்தமும் வந்தது பாட்டுக்கள் கேட்பதற்கு
வானம்பாடியின் வாழ்விலே சூர்யோதயம்
வண்ண பூங்குயில் பாடினால் சந்திரோதயம்

திரும்பும் எந்த திசையிலும் என் பாடல்கள் கேட்குமே
விரும்பும் நேயர் வரிசையிலே குயில்களும் சேருமே
உதிர்ந்து விழும் இலைகள் எல்லாம் என் பாடல்கள் கேட்டபடி
இலைகளுக்கே தெரிந்ததடி அந்த இயற்கையும் வியக்குதடி
பாலைவனங்களில் என் பாடல்கள் சோலையடி
மனசுக்கு மனசு பாலங்கள் போட பாட்டுக்கள் போதுமடி
வானம்பாடியின் வாழ்விலே சூர்யோதயம்
வண்ண பூங்குயில் பாடினால் சந்திரோதயம்

வாசல் தேடி வந்ததடி சொர்கமே சொர்கமே
வானம் கூட தொட்டுவிடும் தூரமே தூரமே
கனவுகளின் பேரெழுதி ஒரு தேவதை வாங்கிக்கொண்டாள்
நிமிடத்துக்கு ஒன்று என அந்த கனவுகள் பலிக்க வைத்தாள்
கோயில் மணிகளே என்னை வாழ்த்திட ஒலி கொடுங்கள்
மெல்லிசை ராஜ்ஜியம் என் வசம் ஆனது பூமழை பொழிகிறது
வானம்பாடியின் வாழ்விலே சூர்யோதயம்
வண்ண பூங்குயில் பாடினால் சந்திரோதயம்
ஒரு சிலையின் காதில் நான் பாட அது உயிரும் வந்து நடமாட
ஒரு செடியின் காதில் நான் பாட அதில் ரோஜா பூக்கள் பூத்தாட
வானவில் வந்தது வசந்தமும் வந்தது பாட்டுக்கள் கேட்பதற்கு
வானவில் வந்தது வசந்தமும் வந்தது பாட்டுக்கள் கேட்பதற்கு

Unnidathil Ennai Koduthen - Vaanam paadiyien

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் - காற்றுக்கு தூதுவிட்டு கவிதைகள் பாட

காற்றுக்கு தூதுவிட்டு கவிதைகள் பாட சொல்லு
நிலவுக்கு தூதுவிட்டு தீபங்கள் ஏற்ற சொல்லு
யாரும் இல்லாத ஆள் என்று பூமியில் யாருமில்லை
கிழக்கு வெளுக்காத நாள் என்று இதுவரை வந்ததில்லை
காற்றுக்கு தூதுவிட்டு கவிதைகள் பாட சொல்லு
நிலவுக்கு தூதுவிட்டு தீபங்கள் ஏற்ற சொல்லு

துள்ளி துளி ஓடலாம் மான்களாக ஆகலாம் பூவனங்கள் போகலாமா
முள்ளில்லாத பூக்களில் சுற்றுலாக்கள் போகவே வண்டு போல மாறலாமா
கோடை காலம் தீர்ந்தாச்சு சொகம் ஓடி போயாச்சு சொந்தங்கள் புதுசாச்சு
காட்டு மூங்கில் குழளாச்சு காற்றும் கூட சேர்ந்தாச்சு கற்பனை நிஜமாச்சு
ஒளிந்திருந்த புன்னகை இன்று ஒவ்வொரு நிமிஷமும் வெளியாச்சு
முகம் மறைத்த மேகங்கள் விலகி முழுமதி வெளியே வந்தாச்சு
காற்றுக்கு தூதுவிட்டு கவிதைகள் பாட சொல்லு
நிலவுக்கு தூதுவிட்டு தீபங்கள் ஏற்ற சொல்லு

வெண்புறாக்கள் கூட்டமே எங்களோடு கூட்டணி சேர்ந்துக்கொள்ள வேண்டுகின்றதே
வெட்டுகின்ற மின்னலோ சற்று நேரம் நின்றதே கையெழுத்து வாங்கி சென்றதே
பூமியெங்கும் வலைவீசு நம்மை போலே ஆளேது நினைத்தால் இனிக்கிறது
சொந்தமாக ஒரு வீடு நிலவில் வாங்கு என்னோடு சிறகுகள் முளைக்கவிடு
இமை இருக்கிற துணையில் தானே விழிகள் இங்கே இருக்கிறது
நிலமிருக்கிற துணையில் தானே வேர்கள் இங்கே வளர்கிறது
காற்றுக்கு தூதுவிட்டு கவிதைகள் பாட சொல்லு
நிலவுக்கு தூதுவிட்டு தீபங்கள் ஏற்ற சொல்லு
யாரும் இல்லாத ஆள் என்று பூமியில் யாருமில்லை
கிழக்கு வெளுக்காத நாள் என்று இதுவரை வந்ததில்லை

Unnidathil Ennai Koduthen - Kaatrukku Thudivittu

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் - மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே

மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா

மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
ஆயிரம் கோடிகள் செல்வம்
அது யாருக்கு இங்கே வேண்டும்
அரை நொடி என்றால் கூட
இந்த ஆனந்தம் ஒன்றே போதும்
பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
வெண்பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
(மல்லிகைப் பூவே..)

சின்ன சின்ன கைகளிலே ட்
வண்ணம் சிந்தும் ரோஜாப்பூ
சிரித்து பேசி விளையாடும்
நெஞ்சம் இங்கு மத்தாப்பூ
இன்னும் அந்தி வானில்
பச்சைக்கிளி கூட்டம்
என்ன சொல்லி பறக்கிறது?
நம்மை கண்டு நானி
இன்னும் கொஞ்ச தூரம்
தள்ளி தள்ளி போகிறது
எங்களின் கதை கேட்டு
தலையாட்டுது தாமரைப்பூ
மயிலே நாம் ஆடிய கதையை நீ பேசு
(மல்லிகைப் பூவே..)

அலைகள் வந்து மோதாமல்
கடலில் கரைகள் கிடையாது
எந்த அலைகள் வந்தாலும்
எங்கள் சொந்தம் உடையாது
சுற்றி சுற்றி வருதே
பட்டு தென்றல் காற்று
இங்கே இங்கே பார்க்கிறது
மொட்டு விடும் மலரை
காஞ்சி பட்டு நூலில்
கட்டி தர கேட்கிறது
வேலிகள் கிடையாது
எந்த வெள்ளமும் நெருங்காது
நிலவே இது கொஞ்சும் கிளிகளின் இசைப்பாட்டு
(மல்லிகைப் பூவே..)

Unnidathil Ennai Koduthen - Malligai Poovea

சந்தித்த வேளை - பெண் கிளியே பெண் கிளியே

பெண் கிளியே பெண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
என் பாட்டு வரி பிடித்திருந்தால் 
உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு

பெண் கிளியே ...

வாய் மொழி எல்லாமே வாய்மை சொல்லாது
உள்மனம் பேசாமல் உண்மைத் தோன்றாது
வாய்மொழி எல்லாமே வாய்மை சொல்லாது
பெண் கிளி பொய் சொன்னால் ஆண் கிளி தூங்காது 

ஆண் கிளியே ஆண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு 
பாட்டு வரி புரிந்து கொண்டால் 
உன் பல்லவியை நீ மாற்று 

பெண் கண்களே நாடகம் ஆடுமா
பெண் நெஞ்சமே ஊடகம் ஆகுமா
யார் சொல்லியும் பெண் மனம் கேட்குமா
கைத் தட்டினால் மொட்டுக்கள் பூக்குமா
விடை கேட்டேன் கேள்வி தந்தாய்
இது புதிரான புதிர் அல்லவா
கேள்விக்குள்ளே பதில் தேடு 
அது சுவையான சுவை அல்லவா
உள்ளத்தின் வண்ணம் என்னத் தெரியவில்லை
உடைத்துச் சொல்லும் வரைப் புரிவதில்லை 
மூடாத பூவுக்குள் என்றும் தேன் இல்லை 

பெண் கிளியே பெண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு 
என் பாட்டு வரி பிடித்திருந்தால் 
உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு

என் நெஞ்சிலே ஆயிரம் ஓசைகள் 
உன் காதிலே கேட்கவே இல்லையா
நீ ஆழிப் போல் அலைகளை ஏவினால் 
நான் கரையைப் போல் மௌனமாய் மேவினேன்
நெஞ்சில் பாசம் கண்ணில் வேஷம்
இது பெண் பூசும் அறிதாரமா
உண்மைக் காண வன்மை இல்லை 
உங்கள் விழி என்மேல் பழி போடுமா
நிலவைப் பிரிவதற்கு வலிமை உண்டு 
உன் நெஞ்சைப் புரிவதற்கு வலிமை இல்லை 
கானல் நீர் தேடாதே அங்கே நீர் இல்லை 

ஆண் கிளியே ஆண்கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு 
பாட்டு வரி புரிந்து கொண்டால் 
உன் பல்லவியை நீ மாற்று 

பெண் கிளியே பெண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு 
என் பாட்டு வரி பிடித்திருந்தால் 
உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு

sandhitha velai - Pen kiliye pen kiliye

Monday, November 28, 2016

சிறைச்சாலை - செம்பூவே பூவே உன் மேகம்

ஆண்: செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
பெண்: சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
ஆண்: படை கொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ
பெண்: மன்னவன் விரலகள் பல்லவன் உளியோ
ஆண்: இமைகளும் உதடுகள் ஆகுமோ
பெண்: வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ

(செம்பூவே பூவே)

ஆண்: அந்திச் சூரியனும் குன்றில் சாய மேகம் வந்து கச்சையாக காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம்
பெண்: தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு வெண்ணிலாவின் கன்னம் தொட்டு நெஞ்சில் ஆடும் சுவாசச்சூட்டில் காதல் குற்றாலம்
ஆண்: தேன் தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்து நான் சேலை நதியோரமாய் நீந்தி விளையாடவா
பெண்: நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவைச் சொல்லி
ஆண்: ஆசைக் கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி
பெண்: கட்டிலும் கால்வலி கொள்ளாதோ கைவளை கைகளை கீறியதோ

(செம்பூவே பூவே)

பெண்: இந்த தாமரைப்பூ தீயில் இன்று காத்திருக்கு உள்ளம் நொந்து கண்கள் என்னும் பூந்தேன் தும்பி பாடிச் செல்லாதோ
ஆண்: அந்த காமன் அம்பு என்னைச் சுட்டு பாவை நெஞ்சின் நாணம் சுட்டு மேகலையின் நூலறுக்கும் சேலைப் பொன் பூவே
பெண்: விம்மியது தாமரை வண்டு தொடும் நாளிலோ பாவை மயில் சாயுதே மன்னவனின் மார்பிலோ
ஆண்: முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே
பெண்: நாணத்தாலோர் ஆடை சூடிக் கொள்வேன் நானே
ஆண்: பாயாகும் வழி சொல்லாதே பஞ்சணை புதையல் ரகசியமே

(செம்பூவே பூவே)

Siraichalai - Sempoove Poove

சிங்கம் - காதல் வந்தாலே காலு ரெண்டும்

Everybody listen to samba bumba rumba thumba
Everybody membo jambo bembo callin a party
Everybody move it move it move it move it move it now
Everybody runnin a coming its time to party
Everybody listen to samba bumba rumba thumbathumba
Everybody groovin shakin movin becoming naughty
Everybody goring goring goring goring goringo
Everybody time to move on in life and just say party

ஹே காதல் வந்தாலே காலு ரெண்டும் தன்னாலே
காத்தா சுத்துதே உந்தன் பின்னாலே
ஆசை வந்தாலே I Love You சொன்னாளே
கண்ணு ரெண்டும் சுத்துதே உந்தன் முன்னாலே
ஹே திட்டம் போட்டு பார்த்து திமிராய் பேசி
என்ன நீ வளைச்சியே ஓ yeah ஓ
வெட்டருவ மீசை முறுக்கி முறிச்சி
என் நெஞ்சை கலைச்ச ஓ yeah ஓ
ஹே வாடி ஹே வாடி நீ வாடாமல்லி பூ தாண்டி
இடுப்பு கொண்ட ஊசி சிரிப்பு window Ac now

ஹே முதுகு தேக்கு மரம்
முழுசா பார்த்த ஜுரம் தான் 



மீசை திருத்த சின்ன கத்திரிகோல வெச்சேன்
முத்தம் நெனப்பில் நானும் மூக்கை வெட்டிகிட்டேன்
பட்டு புடவை கட்டி பட்டுன்னு காலில் விழ
பத்து தடவ தினம் ஒத்திக பாத்துகிட்டேன்
சத்துள்ள சாப்பாடெல்ல தின்னு நின்னு என் உடம்ப
சட்டுன்னு சோள தோட்ட போல மாதுறியே
பட்டுன்னு வெட்டி பசி முட்டி நிக்கும் என் குணத்த
கட்டி தான் போட்டு ரொம்ப சாதம் ஆக்குறியே
ஹே பாரு நீ பாரு நீ பார்த்த மனம் jore jore
உனக்கு முனனால் தான் நிலாவே dulla இருக்கு
அட எனக்கு கிட்ட தட்ட இதயம் fulla இருக்கு

Singam -  Kadhal Vandhale

சிங்கம் - என் இதயம் இது வரை துடித்ததில்லை

என் இதயம் இது வரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இது வரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே

இது எதனால் எதனால் தெரியவில்லை
அதனால் பிடிக்கிறதே
இது சுகமா வழியா புரியவில்லை
கொஞ்சம் சுகமும் கொஞ்சம் வழியும்
சேர்ந்து துரத்துகிறதே

என் இதயம் இதுவரை துடிக்கவில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே

சரணம் 1

கூட்டத்தில் நின்றாலும் உன்னையே தேடுது கண்கள்
ஒற்றையாய் போனாலும் உன்னுடன் நடக்குது கால்கள்
அச்சமே இல்லாத பேச்சிலே மயங்குது நெஞ்சம்
மிச்சமே இல்லாமல் உன்னிடம் வந்தேன் தஞ்சம்

ஆண் :
தாவணி மோதியே சாயுதே தேரடி
ரெண்டடி நாலடி நூறு அடி இழுத்தாய்

என் இதயம் இது வரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இது வரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே

சரணம் 2

உன்னிடம் எப்போதும் உரிமையாய் பழகிட வேண்டும்
வைரமே ஆனாலும் தினம் தினம் தொலைத்திட தூண்டும்
இதுவரை என் நெஞ்சில் இல்லவே இல்லை பயங்கள்
இரண்டு நாள் பார்த்தேனே மிரட்டுதே உந்தன் குணங்கள்

ஆண் :
இதனை நாட்களாய் படுத்தும் உறங்கினேன்
இரண்டு நாள் கனவிலே உன்னை கண்டு விழித்தேன்

என் இதயம் இது வரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இது வரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே

இது எதனால் எதனால் தெரியவில்லை
அதனால் பிடிகிறதே
இது சுகமா வழியா புரியவில்லை
கொஞ்சம் சுகமும் கொஞ்சம் வழியும்
சேர்ந்து துரத்துகிறதே

என் இதயம் இது வரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இது வரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே

Singam - En idhayam ithuvarai thudikkavillai

Followers