Pages

Search This Blog

Monday, November 28, 2016

பக்தி பாடல் - 108 ஐயப்ப சரணங்கள்

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா 
ஓம் ஹரிஹரசுதனே சரணம் ஐயப்பா 
ஓம் கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா 
ஓம் சக்தி வடிவேலன் சோதரனே சரணம் ஐயப்பா 
ஓம் மாளிகைபுறத்து மஞ்சம்மாதேவி லோகமாதாவே சரணம் ஐயப்பா 
ஓம் வாவர் ஸ்வாமியே சரணம் ஐயப்பா 
ஓம் கருப்பண்ண சரணம் ஐயப்பா 
ஓம் பெரிய கடுத்த ஸ்வாமியே சரணம் ஐயப்பா 
ஓம் சிறிய கடுத்த ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஓம் வனதேவத மாரே சரணம் ஐயப்பா 
ஓம் துர்கா பகவதி மாரே சரணம் ஐயப்பா 
ஓம் அச்சன் கோவில் அரசே சரணம் ஐயப்பா 
ஓம் அனாத ரட்சகனே சரணம் ஐயப்பா 
ஓம் அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா 
ஓம் அச்சம் தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா 
ஓம் அம்பலத்தரசனே சரணம் ஐயப்பா 
ஓம் அபயதாயகனே சரணம் ஐயப்பா 
ஓம் அகந்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா 
ஓம் அஷ்டசித்தி தாயகனே சரணம் ஐயப்பா 
ஓம் அண்டினோரை ஆதரிக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா 
ஓம் அழுதையில் வாஸனே சரணம் ஐயப்பா 
ஓம் ஆரியங்காவு அய்யாவே சரணம் ஐயப்பா 
ஓம் ஆபத்பாந்தவனே சரணம் ஐயப்பா 
ஓம் ஆனந்த ஜோதியே சரணம் ஐயப்பா 
ஓம் ஆத்ம ஸ்வரூபியே சரணம் ஐயப்பா 
ஓம் ஆனைமுகன் தம்பியே சரணம் ஐயப்பா 
ஓம் இருமுடி பிரியனே சரணம் ஐயப்பா 
ஓம் இன்னலைத் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா 
ஓம் இகபரசுக தாயகனே சரணம் ஐயப்பா 
ஓம் இதய கமல வாஸனே சரணம் ஐயப்பா 
ஓம் ஈடில்லா இன்பமளிப்பவனே சரணம் ஐயப்பா 
ஓம் உமையவள் பாலகனே சரணம் ஐயப்பா 
ஓம் ஊமைக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா 
ஓம் ஊழ்வினை அகற்றுவோனே சரணம் ஐயப்பா 
ஓம் ஊக்கம் அளிப்பவனே சரணம் ஐயப்பா 
ஓம் எங்கும் நிறைந்தோனே சரணம் ஐயப்பா 
ஓம் எண்ணில்லா ரூபனே சரணம் ஐயப்பா 
ஓம் என்குல தெய்வமே சரணம் ஐயப்பா 
ஓம் என் குருநாதனே சரணம் ஐயப்பா 
ஓம் எரிமேலி வாழும் கிராத சாஸ்தாவே சரணம் ஐயப்பா 
ஓம் எங்கும் நிறைந்த நாதப்ரம்மமே சரணம் ஐயப்பா 
ஓம் எல்லோருக்கும் அருள் புரிபவனே சரணம் ஐயப்பா 
ஓம் ஏற்றுமானுரப்பன் மகனே சரணம் ஐயப்பா 
ஓம் ஏகாந்த வாஸியே சரணம் ஐயப்பா 
ஓம் எழைக்கருள்  புரியும் ஈசனே சரணம் ஐயப்பா 
 ஓம் ஐந்துமலை வாஸனே சரணம் ஐயப்பா 
ஓம் ஐயங்கள் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா 
ஓம் ஒப்பில்லா மாணிக்கமே சரணம் ஐயப்பா 
ஓம் ஓங்கார பரப்ருஹமமே சரணம் ஐயப்பா
ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா
ஓம் கண்கண்ட தெய்வமே சரணம் ஐயப்பா
ஓம் கம்பங்குடிக்குடைய நாதனே சரணம் ஐயப்பா
ஓம் கருணா ஸமுத்ரமே சரணம் ஐயப்பா
ஓம் கற்பூர ஜோதியே சரணம் ஐயப்பா
ஓம் சபரிகிரி வாஸனே சரணம் ஐயப்பா 
ஓம் சத்ரு ஸம்ஹார மூர்த்தியே சரணம் ஐயப்பா 
ஓம் சரணாகத ரக்ஷகனே சரணம் ஐயப்பா 
ஓம் சரண கோஷ ப்ரியனே சரணம் ஐயப்பா 
ஓம் சபரிக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா 
ஓம் சம்பு குமாரனே சரணம் ஐயப்பா 
ஓம் சத்ய சொரூபனே சரணம் ஐயப்பா 
ஓம் சங்கடம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா 
ஓம் சஞ்சலம் அழிப்பவனே சரணம் ஐயப்பா 
ஓம் சண்முக சோதரனே சரணம் ஐயப்பா 
ஓம் தன்வந்திரி மூர்த்தியே சரணம் ஐயப்பா 
ஓம் நம்பினோரைக் காக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா 
ஓம் நர்த்தன ப்ரியனே சரணம் ஐயப்பா 
ஓம் பந்தள ராஜகுமாரனே சரணம் ஐயப்பா 
ஓம் பம்பை பாலகனே சரணம் ஐயப்பா 
ஓம் பரசுராம பூஜிதனே சரணம் ஐயப்பா 
ஓம் பக்தஜன ரக்ஷகனே சரணம் ஐயப்பா 
ஓம் பக்தவத்ஸவனே சரணம் ஐயப்பா 
ஓம் பரமசிவன் புத்திரனே சரணம் ஐயப்பா 
ஓம் பம்பா வாஸனே சரணம் ஐயப்பா 
ஓம் பரம தயாளனே சரணம் ஐயப்பா 
ஓம் மணிகண்ட பொருளே சரணம் ஐயப்பா 
ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா 
ஓம் வைக்கத்தப்பன் மகனே சரணம் ஐயப்பா 
ஓம் கானக வாஸனே சரணம் ஐயப்பா 
ஓம் குலத்துப்புழை பாலகனே சரணம் ஐயப்பா 
ஓம் குருவாயூரப்பன்  மகனே சரணம் ஐயப்பா 
ஓம் கைவல்யபத தாயகனே சரணம் ஐயப்பா 
ஓம் ஜாதிமத பேதமில்லாதவனே சரணம் ஐயப்பா 
ஓம் சிவசக்தி ஐக்ய சொரூபனே சரணம் ஐயப்பா 
ஓம் ஸேவிப்பவர்க்கு ஆனந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா 
ஓம் துஸ்டர் பயன் நீக்குவோனே சரணம் ஐயப்பா 
ஓம் தேவாதி தேவனே சரணம் ஐயப்பா 
ஓம் தேவர்கள் துயரம் தீர்த்தவனே சரணம் ஐயப்பா 
ஓம் தேவேந்திர பூஜிதனே சரணம் ஐயப்பா 
ஓம் நாராயணன் மைந்தனே சரணம் ஐயப்பா 
ஓம் நெய்யபிஷேக ப்ரியனே சரணம் ஐயப்பா 
ஓம் ப்ரணவ ஸ்வரூபனே சரணம் ஐயப்பா  
ஓம் பாப ஸம்ஹார மூர்த்தியே சரணம் ஐயப்பா 
ஓம் பாயசான்ன ப்ரியனே சரணம் ஐயப்பா 
ஓம் வன்புலி வாஹனனே சரணம் ஐயப்பா 
ஓம் வரப்ர தாயகனே சரணம் ஐயப்பா 
ஓம் பாகவதோத்தமனே சரணம் ஐயப்பா 
ஓம் பொன்னம்பல வாஸனே சரணம் ஐயப்பா 
ஓம் மோகினி ஸீதனே சரணம் ஐயப்பா 
ஓம் மோகன ரூபனே சரணம் ஐயப்பா 
ஓம் வில்லன் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா 
ஓம் வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா 
ஓம் ஸத்குரு நாதனே சரணம் ஐயப்பா 
ஓம் ஸர்வ ரோக நிவாரகனே சரணம் ஐயப்பா 
ஓம் ஸச்சிதானந்த சொரூபனே சரணம் ஐயப்பா 
ஓம் ஸர்வாபீஷ்ட தாயகனே சரணம் ஐயப்பா 
ஓம் சாச்வதபதம் அளிப்பவனே சரணம் ஐயப்பா 
ஓம் பதினெட்டாம்படிக்குடைய நாதனே சரணம் ஐயப்பா 


காத்து ரட்சிக்கனும் பகவானே சரணம் ஐயப்பா 
மலையேற்றித் தரவேணும் பகவானே சரணம் ஐயப்பா 
படியேற்றித் தரவேணும் பகவானே சரணம் ஐயப்பா 
திவ்ய தரிசனம் தரவேணும் பகவானே சரணம் ஐயப்பா 
என்றும் மறவா வரம் தரவேணும் பகவானே சரணம் ஐயப்பா 


அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் 
செய்த ஸகல குற்றங்களையும் பொறுத்துக் காத்து ரட்சிக்க வேண்டும்.
ஓம் சத்தியமான பொன்னு பதினெட்டாம் படிமேல் வாழும் வில்லன் 
வில்லாளி வீரன் , வீர மணிகண்டன் , காசி ராமேஸ்வரம் , 
பாண்டி மலையாளம் அடக்கி ஆளும் என் ஓம் ஹரிஹரசுதன் 
கலியுக வரதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப 
ஸ்வாமியே சரணம் ஐயப்பா .... 

Bakthi Paadal - 108 Ayyappan saranam

தெய்வம் - திருச்செந்தூரின் கடலோரத்தில்

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்

அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசித் திங்களிலும் 
அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம் 
அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசித் திங்களிலும் 
அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம்

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்

கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா?
கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா?

மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும் முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரைத் தாங்கு முகம் ஒன்று
ஜாதி மத பேதமின்றிப் பார்க்கும் முகம் ஒன்று
நோய் நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ண முகம் ஒன்று
நூறு முகம் காட்டுதம்மா ஆறுமுகம் இன்று ஆறுமுகம் இன்று

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்

பொன்னழகு மின்னி வரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
பொன்னழகு மின்னி வரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தார் நெஞ்சுருகி நின்றார் கந்தா முருகா
நம்பியவர் வந்தார் நெஞ்சுருகி நின்றார் கந்தா முருகா
வருவாய் அருள் தருவாய் முருகா

Dheivam - Thiruchendoorin Kadalorathil Senthilnaathan

பக்தி பாடல் - சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரைச்
(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)

பிள்ளைப் பிராயத்திலே பெரியபெயர் பெற்றவனே
உள்ளமெல்லாம் உன் பெயரைச்
(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)

பிறந்த போது எனது நெஞ்சு அமைதி கொண்டது
முருகா அமைதி கொண்டது - அறிவில்
சிறந்த உன்னைக் காணும் போது பெருமை கொண்டது
கந்தா பெருமை கொண்டது - முருகா
(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)

உலகில் ஆடும் தொட்டிலெல்லாம் உன் பெயர் பாடும்
உண்மை பேசும் மொழிகளெல்லாம் உன் புகழ் பேசும்
யுகங்கள் எல்லாம் மாறி மாறிச் சந்திக்கும் போது
உன் முகமலரின் அழகில் மட்டும் முதுமை வராது
கந்தா முதுமை வராது - குமரா
(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)

முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும்
அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும்
உயிர் இனங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது
அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருள் அன்றோ
கந்தா உன் அருளன்றோ - முருகா
(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)



Bakthi Paadal - Solla Solla Inikkuthada

பக்தி பாடல் - சஷ்ட்டியை நோக்க சரவணபவனார்

காப்பு:-
-------------
துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்,
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்,

நிஷ்டையுங் கைகூடும்,
நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை,

அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி.

நூல்:-
------------
சஷ்ட்டியை நோக்க சரவணபவனார்
சிஷ்ட்டருக் குதவும்செங்கதிர் வேலோன்
பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாட கிண்கிணி யாட
மையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார்        ... ... 5

கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து
வர வர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திர முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக        ... ... 10

வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக        ... ... 15

சரஹணபவனார் சடுதியில் வருக
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹண வீரா நமோ நம
நிபவ சரஹண நிறநிற நிறென        ... ... 20

வசர ஹணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டா யுதம் பாச அங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க        ... ... 25

விரைந்தெனைக் காக்க வேலோன்வருக
ஐயும் கிலியும் அடைவுடன்செளவும்
உய்யொளி செளவும் உயிர் ஐயும் கிலியும்
கிலியும் செளவும் கிளரொளி ஐயும்
நிலை பெற் றென்முன் நித்தம் ஒளிரும்        ... ... 30

சண்முகம் நீயும் தணியொளி யொவ்வும்
குண்டலி யாம் சிவ குகன்தினம் வருக
ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்        ... ... 35

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல் பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்        ... ... 40

முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீராவும்
இருதொடை அழகும் இணைமுழந்தாளும்        ... ... 45

திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண        ... ... 50

ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து        ... ... 55

முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோதனென்று        ... ... 60

உன்திரு வடியை உருதி யென்றெண்ணும்
என்தலை வைத்துன் இணையடி காக்க
என் உயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க        ... ... 65

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க        ... ... 70

முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்ன வடிவேல் காக்க        ... ... 75

சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க        ... ... 80

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க        ... ... 85

வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க
கைக ளிரண்டும் கருணைவேல் காக்க        ... ... 90

முன்கையிரண்டும் முரண்வேல் காக்க
பின்கையிரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை ஆக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனை வேல் காக்க        ... ... 95

எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனக வேல் காக்க
வரும் பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அறையிருள் தன்னில் அனையவேல் காக்க        ... ... 100

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க        ... ... 105

பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்        ... ... 110

கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும்
அடியனைக் கண்டால் அலறிக்கலங்கிட
இரிசிக் காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லினும் இருட்டினும் எதிர்படும் அண்ணரும்        ... ... 115

கனபூசை கொள்ளும் காளியோடனே வரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட
ஆனை அடியினில் அரும்பாவைகளும்        ... ... 120

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்        ... ... 125

காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாள் எனைக்கண்டாற் கலங்கிட        ... ... 130

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டலறி மதிகெட்டோட
படியினில் முட்ட பாசக்க யிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கால்கை முறிய        ... ... 135

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்        ... ... 140

பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெருண்டது வோட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோட        ... ... 145

தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம்        ... ... 150

சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி
பக்கப் பிளவை படர் தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை பருஅரை யாப்பும்        ... ... 155

எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால்
நில்லா தோட நீ எனக் கருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்        ... ... 160

உன்னைத் துதிக்க உன் திருநாமம்
சரஹண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவம்ஒளி பவனே
அரிதிரு மருகா அமரா பதியைக்        ... ... 165

காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனே
இடும்பனை ஏற்ற இனியவேல் முருகா
தணிகா சலனே சங்கரன் புதல்வா        ... ... 170

கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பால குமாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே        ... ... 175

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யான் உனைப் பாட
எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை        ... ... 180

நேச முடன்யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னருளாக
அன்புடன் இரக்ஷி அன்னமுஞ் சொன்னமும்
மெத்த மெத் தாக வேலா யுதனார்        ... ... 185

சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்        ... ... 190

வாழ்க வாழ்க வாரணத்துவசம்
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செய்தால்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்        ... ... 195

பெற்றவள்குறமகள் பெற்றவளாமே
பிள்ளையென் றன்பாய் பிரிய மளித்து
மைந்தனென் மீது உன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள் செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய        ... ... 200

பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
நேச முடன்ஒரு நினைவது வாகி
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்        ... ... 205

சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்து நீறணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் செயலது அருளுவர்        ... ... 210

மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீ ரெட்டா வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை        ... ... 215

வழியாற் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிப் பொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி        ... ... 220

அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத்மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்        ... ... 225

சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவ போற்றி
தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி        ... ... 230

திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனக சபைக்கு ஓரரசே        ... ... 235

மயில்நட மிடுவோய் மலர் அடி சரணம்
சரணம் சரணம் சரஹண பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்.

Bakthi paadal - Kandha Sasti Kavasam

Friday, November 25, 2016

சத்யம் - ஆறடி காற்றே

ஆறடி காற்றே
அத்துக்குச்சு பாத்தே
அதிரடி ஏத்து
அஞ்சமில்லை விளையாட்டே

ஆஹா யேய்…ய்…

இவன் உடையும் கண்டு
நடையும் கண்டு
செயலும் கண்டு
குணமும் கண்டு
அதிரும் நெஞ்சம் அதிகம் உண்டு மண் சாட்சி
இவன் கர்வம் கண்டு
கனிவும் கண்டு
துனிவும் கண்டு
துடிப்பும் கண்டு
அடங்கும் பேர்கள் எங்கும் உண்டு மண் சாட்சி
என்னாச்சு
ஏதாச்சு
தோட்டாக்கள் பூவாச்சு

ஆறடி காற்றே
அத்துக்குச்சு பாத்தே
அதிரடி ஏத்து
அஞ்சமில்லை விளையாட்டே யே….யே

பேச்சு மட்டும் தான்
வளர்ச்சி என்று தப்பாதே
வீச்சு வீசினால்
வீசிடுவான் நம்மாளே
உன் முகத்தை பார்த்து
கட்டடத்துக்குள் காத்து
ஊதி விட்ட தீயை
உத்து உத்து பாரு
கண்களுக்குள் ஓடும்
கந்தகத்தில் ஆறு
எட்டு வச்சு எட்டு வச்சு
வெற்றி பொட்டு தொட்டு வைப்பான்

ஆறடி காற்றே
அத்துக்குச்சு பாத்தே
அதிரடி ஏத்து
அஞ்சமில்லை விளையாட்டே

பூட்டி வைச்சு பார்
தூள் பறக்கும் உன்பாடு
தூண்டு விட்டுட்டா
தீப்பிடிக்கும் உன் காடு
முன்ன வந்து நின்னா
ஆஹா ஹா
மூச்சு முட்டும் கண்ணா
ஆஹா ஹா
ஹா யாரு இவன் யாரு இவன்
கொம்பன் என்று கூறு
சொல்லி சொல்லி சீறும்
தொட்டு மட்டும் பாரு
சொல்லி வச்சு சொல்லி வச்சு
சத்தியத்தை காத்து நிப்பான்

ஆறடி காற்றே
அத்துக்குச்சு பாத்தே
அதிரடி ஏத்து
அஞ்சமில்லை விளையாட்டே

இவன் உடையும் கண்டு
நடையும் கண்டு
செயலும் கண்டு
குணமும் கண்டு
அதிரும் நெஞ்சம் அதிகம் உண்டு மண் சாட்சி
இவன் கர்வம் கண்டு
கனிவும் கண்டு
துனிவும் கண்டு
துடிப்பும் கண்டு
அடங்கும் பேர்கள் எங்கும் உண்டு மண் சாட்சி
என்னாச்சு
ஏதாச்சு
தோட்டாக்கள் பூவாச்சு
என்னாச்சு
ஏதாச்சு
தோட்டாக்கள் பூவாச்சு…

Sathyam - Aaradi Kaathe

சத்யம் - பால் பப்பளி

பால் பப்பளி
வெள்ள தக்களி
உன் கூடளி
என்ன சமாளி

பால் பப்பளி
வெள்ள தக்களி
நான் கொமளி
இப்போ சோக்களி

உன் முந்தாணய முண்டசாக கட்டி கொள்ளவ
நான் மூனு வெல முட்ட சொரு அள்ளி தின்னவ
நீ புள்ளி வெச்ச மானு தானே கொலம் பொடவ
என் மீசயல கது குத்தி கூசம் கட்டவ

பால் பப்பளி
வெள்ள தக்களி
உன் கூடளி
என்ன சமாளி

பால் பப்பளி
வெள்ள தக்களி
நீ கொமளி
போட சோக்களி

என் முந்தாணய முண்டசாக கட்டி கொல்லதே
நீ மூனு வெள முட்ட சொர அள்ளி தின்னதே
என் புள்ளி வெச்ச மானு மெலே கொலம் பொடதே
உன் மீசயால கது குத்தி கூசம் கட்டதே

கன்ன குழி வழியே
தொண்ட குழி நொழன்சு
நெஞ்சு குழி நடுவே
மய்யம் கொல்லதே
ஹெய் அச்சு வெல்ல அழகே
உச்சி வெய்யில் நிலவே
பிசு பிசு என்ன
ஈரம் செய்யாதே
என்ன மேலும் கீழும்
ஏலம் போட்டு தளம் பொடதே
இந்த ஒராம் பெத்த பொன்ன
பர்த்து உசு கொட்டதே
எனை பூவுகுள்ளே தேனை போல
பூடி வைகாதே
நம்ம ஆத்த கொவில் யானையபோல்
ஆடி வைகதே
காதல காதல ஓடி வரவ
யாருமில்லா நேரம் பர்த்து தேடி வரவ
வான்னிலா தேன்னில கூடி வரவ
ஆடி மாச கத்து போல ஆடி வரவ

பால் பப்பளி
வெள்ள தக்களி
உன் கூடளி
என்ன சமாளி

பால் பப்பளி (பபோய்)
வெள்ள தக்கலி (அபோய்)
உன் கூடளி
என்ன சமாளி

உன் முந்தாணய முண்டசாக கட்டி கொள்ளவ
நான் மூனு வெல முட்ட சொரு அள்ளி தின்னவ
என் புள்ளி வெச்ச மானு மெலே கொலம் பொடதே
உன் மீசயால கது குத்தி கூசம் கட்டதே

ஒத்தயிலே குதிச்சென்
மெத்தயிலே தவிச்சென்
கத்திரிகோல் விழியலே
கண்ண வெட்டதே
ஒத்தயிலே இருந்தென்
சுத்தி சுத்தி பரந்தென்
சீடெடுக்கும் கிளியாய்
கூண்டில் வைகதே
ஒரு முட்டாய் கடய மொரசு பார்க்கும் பட்டிக்கட்டான் போல்
நீ எட்டி நின்னு என்ன பர்த்து ஏங்க வைகதே
உன் ஆடு புலி ஆடம் எல்லம் இங்கே வேணான்ய
நான் கூடு விட்டு கூடு பாயும் பொண்ணு தனய்ய
கொகில கொகில கோடை வெய்யில
காலகாலமாக வாழும் காமன் மகல
கொவல கொவல கதல் நகல
ஓரகண்ணால் பார்க்க வெணாம் பட்ட பகல

பால் பப்பளி
வெள்ள தக்களி
உன் கூடளி
என்ன சமாளி

பால் பப்பளி
வெள்ள தக்களி
நீ கொமளி
போட சோக்களி

உன் முந்தாணய முண்டசாக கட்டி கொள்ளவ
நான் மூனு வெல முட்ட சொரு அள்ளி தின்னவ
ஹெய் புள்ளி வெச்ச மானு மெலே கொலம் பொடதே
உன் மீசயால கது குத்தி ஹஹஹஹன்ன்ம்ம்ம்ம்

Sathyam - Paal Pappaali

சத்யம் - செல்லமே செல்லமே கொஞ்ச

பெண்: செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே
ஓர் ஆயிரம் மெல் சுகங்களில் கரைந்திடுவேனே
நூறு ஆயிரம் நள்ளிரவினில் உறைந்திடுவேனே
செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெல்லமே வெல்லமே கொஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே

(இசை...)

பெண்: குரலில் உன் குரலில் மெல்லிசை சுகம் அறிவது போலே
விரலில் உன் விரலில் முன்பனி சுகம் உணர்வது போலே
விழியில் உன் விழியில் வேல் அளி சுகம் தொடுவது போலே
இதழில் உன் இதழில் முக்கனி சுகம் புரிவது போலே
கூந்தலில் எனை மீது தினந்தோறும் பரிமாறு
நீ நீச்சல் குளம்போலே நெடு நேரம் இளைப்பாறு
ஓர் ஆயிரம் மெல் சுகங்களில் கரைந்திடுவேனே
நூறு ஆயிரம் நள்ளிரவினில் இறைந்திடுவேனே

ஆண்: செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே

(இசை...)

பெண்: வே.......... நீயோ
வே.......... நானோ
வெட்கம் வெட்கம்
வே........ நீயோ
வே........ நானோ
நித்தம் நித்தம்

ஆண்: நிலவில் வெண்ணிலவில் உன் தலை முடி கலைவது போதும்
பகலில் நண்பகலில் உன் செவி மடல் மலர்வதும் போதும்

பெண்: ஒளியில் மின்னொளியில் என் வளையலும் இடிவது போதும்
மனதில் என் மனதில் உன் பரவசம் நிறைவது போதும்

ஆண்: போதும் ஆனாலும் போதாது சந்தோஷம்
பெண்: கண் தூங்கப் போனாலும் தூங்காது ஆள்வாசம்

ஆண்: சகாயமே உன் அருகினில் இளைப்பாறுவேனே
தடாகமே புன்முறுவலில் நனைந்திடுவேனே

பெண்: செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே

ஆண்: மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே

பெண்: ஓர் ஆயிரம் மெல் சுகங்களை கரைந்திடுவேனே
நூறு ஆயிரம் ம்ம்ம்ம்ம்ம்ம்

Sathyam - Chellame Chellame

Followers