Pages

Search This Blog

Thursday, November 24, 2016

இளமை ஊஞ்சாலடுகிறது - ஒரே நாள் உன்னை நான் நிலாவில்

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
சங்கமங்களில் இடம் பெரும் சம்பவங்களில் இதம் இதம்
மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்

கர்ப்பனைகளில் சுகம் சுகம் கண்டதென்னவோ நிதம் நிதம்
மழை நீ நிலம் நான் தயக்கமென்ன

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

ஆ ஆ ஆ ர ர ர ர ர ல ல ல ல ல ல ர ர ர ர
ர ர ர ர ர ல ல ல ல ல ர ர ர ர

பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க
பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க
கண்ணிறேண்டிலும் ஒரே ஸ்வரம்
கையிறேண்டிலும் ஒரே லயம்
இரவும் பகலும் இசை முழங்க

ஒரே நாள் …….. 
உன்னை நான் ………. 
நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
ஊஞ்சலாடுது …
அஹ அஹ அஹ ஆஹா

Ilamai Oonjal Aadukirathu - Ore Naal Unnai Naan

இளமை ஊஞ்சாலடுகிறது - கிண்ணத்தில் தேன் வடித்து

கிண்ணத்தில் தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்
கிண்ணத்தில் தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்
எண்ணத்தில் போதை வர
எங்கெங்கோ நீந்துகிறேன்
கிண்ணத்தில் தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்


ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
நானும் ஓர் திராட்சை ரசம்
நாயகன் உந்தன் வசம்
நானும் ஓர் திராட்சை ரசம்
நாயகன் உந்தன் வசம்
தென்றல் போல் மன்றம் வரும்
தேவி நான் பூவின் இனம்
கொஞ்சமோ கொஞ்சும் சுகம்
கொண்டு போ அந்தப்புரம்
கன்னத்தில் தேன் குடித்தால்
கற்பனை கோடி வரும்
உள்ளத்தில் பூங்கவிதை
வெள்ளம் போல் ஓடி வரும்
கன்னத்தில் தேன் குடித்தால்
கற்பனை கோடி வரும்


ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆனிப்பொன் கட்டில் உண்டு
கட்டில் மேல் மெத்தை உண்டு
ஆனிப்பொன் கட்டில் உண்டு
கட்டில் மேல் மெத்தை உண்டு
மெத்தை மேல் வித்தை உண்டு
வித்தைக்கோர் தத்தை உண்டு
தத்தைக்கோர் முத்தம் உண்டு
முத்தங்கள் நித்தம் உண்டு
கிண்ணத்தில் தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்


ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ

யாழிசை தன்னில் வரும்
ஏழிசை எந்தன் மொழி
யாழிசை தன்னில் வரும்
ஏழிசை எந்தன் மொழி

விண்ணிலே வட்டமிடும்
வெண்ணிலா உந்தன் விழி

பள்ளியில் காலை வரை
பேசிடும் காதல் கதை

கிண்ணத்தில் தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்

கன்னத்தில் தேன் குடித்தால்
கற்பனை கோடி வரும்

கிண்ணத்தில் தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்

ஆ ஆ

கைகளில் ஏந்துகிறேன்

ஆ ஆ

கைகளில் ஏந்துகிறேன்

Ilamai Oonjal Aadukirathu - Kinnaththil Then

இளமை ஊஞ்சாலடுகிறது - வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா

வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
பார்த்த இடதில்லெல்லாம் உன்னைபோல்
பாவை தெரியுதடி

என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சி
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சி
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடு போயாச்சி
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சி
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடு போயாச்சி

உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்
அந்த மனத்தில் மறைந்திருக்கும் துளி விஷம்
உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்
அந்த மனத்தில் மறைந்திருக்கும் துளி விஷம்
நெஞம் துடித்திடும் நாழி
நீயோ அடுத்தவன் தோழி
என்னை மறந்துபோவதும் ஞாயமோ
இந்த காதல் ஓவியத்தின் பாதை மாறியது
காலம் செய்து விட்ட மாயமோ
ஒருமனம் உருகுது ஒரு மனம் விலகுது ..ஏய்..

……..என்னடி மீனாட்சி……….

அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை
அந்த உறவு உனக்கொரு சிறுகதை
அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை
அந்த உறவு உனக்கொரு சிறுகதை
கண்ணன் தனிமயிலே பாட
ராதை தன் வழியே ஓட
இந்த பிரிவை தாங்குமோ என் மனம்
ஒரு நூலில் ஆடுகின்ற ஊஞ்சல்போன்ற்றதடி
நாளும் மாறுகின்ற உன்மனம்
எனக்கின்று புரிந்தது எவனென்று தெரிந்தது… ஏய்…

………என்னடி மீனாட்சி……….

வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி

Ilamai Oonjal Aadukirathu - Ennadi Meenakshi

இனைந்த கைகள் - அந்தி நேரத் தென்றல் காற்று

அந்தி நேரத் தென்றல் காற்று
அள்ளித் தந்தத் தா...லாட்டு
அந்தி நேரத் தென்றல் காற்று
அள்ளித் தந்தத் தாலாட்டு

தங்க மகன் வரவைக் கேட்டுத்
தந்தை உள்ளம் பாடும் பாட்டு
தங்க மகன் வரவைக் கேட்டுத்
தந்தை உள்ளம் பாடும் பாட்டு

- அந்தி நேரத் தென்றல் காற்று...

உயிர் கொடுத்தத் தந்தை இங்கே
உரு கொடுத்த அன்னை அங்கே
இன்ப துன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ளும் சொந்தம் எங்கே?

தாலாட்ட அன்னை உண்டு!
சீராட்டத் தந்தை உண்டு!
இன்ப துன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ள நண்பன் உண்டு!

ஒரு தாயின் பிள்ளை போல
உருவான சொந்தம் உண்டு!
வரும் காலம் யாவும் வெல்ல
இணைந்த கைகள் என்றும் உண்டு!

- அந்தி நேரத் தென்றல் காற்று...

உன் மகனைத் தோளில் கொண்டு
உரிமையோடு பாடுவதென்று
அந்நாளில் துணையாய் நின்று
அன்பு கொள்ள நானும் உண்டு!

தத்துப் பிள்ளை இவனைக் கண்டேன்
தாய்மை நெஞ்சம் நானும் கொண்டேன்!
பத்துத் திங்கள் முடிந்த பின்னே
முத்துப் பிள்ளை அவனைக் காண்பேன்!

உறங்காத விழியில் இன்று
ஒளி வந்து சேரக் கண்டேன்!
பரிவான நண்பன் தந்த
கனிவான தோள்கள் கண்டேன்!

- அந்தி நேரத் தென்றல் காற்று...

Inaindha Kaigal - Andhinera Thendral

கன்னத்தில் முத்தமிட்டால் - வெள்ளை பூக்கள் உலகம் எங்கும்

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்மேல் மஞ்சள் வெளுச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே
தாயின் கத கதப்பில்
உலகம் விடியட்டுமே
பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே விடிகவே
மண்மேல் மஞ்சள் வெளுச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே
தாயின் கத கதப்பில்
உலகம் விடியட்டுமே
பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே

காற்றின் பேரிசையும்
மழை பாடும் பாடல்களும் ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ
கோடி கீர்த்தனையும் கவி கோர்த்த வார்தைகளும் துளி கண்ணீர் போல்
அர்த்தம் தருமோ

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே விடிகவே
மண்மேல் மஞ்சள் வெளுச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே

எங்கு சிறு குழந்தை தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே
எங்கு மனித ஈனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ
அங்கு கூவதோ வெள்ளை குயிலே

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்மேல் மஞ்சள் வெளுச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே விடிகவே

Kannathil Muthamittal - Vellai Pookal

கன்னத்தில் முத்தமிட்டால் - சட்டென நனைந்தது நெஞ்சம்

சட்டென நனைந்தது நெஞ்சம்
சர்க்கரையானது கண்ணீர்
இன்பம் இன்பம் ஒரு துன்பம்
துன்பம் எத்தனை பேரின்பம்

சட்டென நனைந்தது நெஞ்சம்
சர்க்கரையானது கண்ணீர்
இன்பம் இன்பம் ஒரு துன்பம்
துன்பம் எத்தனை பேரின்பம்

உடலுக்குள் மல்லிகை தூரல்
என் உயிருக்குள் மெல்லிய கீறல் சுகமாய்
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு

எந்த வாசல் வழி காதல் நடந்து வரும்
என்று காத்து கிடந்தேன்
அது வானில் பறந்து வந்து கூரை திறந்து வரும்
என்று இன்று தெளிந்தேன்
தாவி வந்து எனை அணைத்த போது
எந்தன் சல்லி வேர்கள் அறுந்தேன்
சாவின் எல்லை வரை சென்று மீண்டு
இன்று இரண்டு ஜென்மம் அடைந்தேன்

துடிக்கும் உதடு கொண்டு
துடைத்திடு வெட்கத்தை
அணைப்பினாதிக்கத்தால்
வெளியேற்று அச்சத்தை
துடிக்கும் உதடு கொண்டு
துடைத்திடு வெட்கத்தை
அணைப்பினாதிக்கத்தால்
வெளியேற்று அச்சத்தை

சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு

சட்டென நனைந்தது நெஞ்சம்

Kannathil Muthamittal - Sattena Nenaindhadhu

கன்னத்தில் முத்தமிட்டால் - விடை கொடு எங்கள் நாடே

விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே, பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்போமா?
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்

விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே, பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்போமா?
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்

கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
ஒரு சுகம் வருமா? வருமா?

கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
ஒரு சுகம் வருமா? வருமா?
சொர்க்கம் சென்றாலும் சொந்த ஊர் போல்
ஒரு சுதந்திரம் வருமா? வருமா?
கண் திறந்த தேசம் அங்கே
கண் மூடும் தேசம் எங்கே?

கண் திறந்த தேசம் அங்கே
கண் மூடும் தேசம் எங்கே?

பிரிவோம் நதிகளே பிழைத்தால் வருகிறோம்
மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம்
கண்ணீர் திரையில் பிறந்த மண்ணை
கடைசியாக பார்க்கின்றோம்

விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே, பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்போமா?
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்

Kannathil Muthamittal - Vidai Kodu Engal

Followers