Pages

Search This Blog

Thursday, November 24, 2016

இனைந்த கைகள் - அந்தி நேரத் தென்றல் காற்று

அந்தி நேரத் தென்றல் காற்று
அள்ளித் தந்தத் தா...லாட்டு
அந்தி நேரத் தென்றல் காற்று
அள்ளித் தந்தத் தாலாட்டு

தங்க மகன் வரவைக் கேட்டுத்
தந்தை உள்ளம் பாடும் பாட்டு
தங்க மகன் வரவைக் கேட்டுத்
தந்தை உள்ளம் பாடும் பாட்டு

- அந்தி நேரத் தென்றல் காற்று...

உயிர் கொடுத்தத் தந்தை இங்கே
உரு கொடுத்த அன்னை அங்கே
இன்ப துன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ளும் சொந்தம் எங்கே?

தாலாட்ட அன்னை உண்டு!
சீராட்டத் தந்தை உண்டு!
இன்ப துன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ள நண்பன் உண்டு!

ஒரு தாயின் பிள்ளை போல
உருவான சொந்தம் உண்டு!
வரும் காலம் யாவும் வெல்ல
இணைந்த கைகள் என்றும் உண்டு!

- அந்தி நேரத் தென்றல் காற்று...

உன் மகனைத் தோளில் கொண்டு
உரிமையோடு பாடுவதென்று
அந்நாளில் துணையாய் நின்று
அன்பு கொள்ள நானும் உண்டு!

தத்துப் பிள்ளை இவனைக் கண்டேன்
தாய்மை நெஞ்சம் நானும் கொண்டேன்!
பத்துத் திங்கள் முடிந்த பின்னே
முத்துப் பிள்ளை அவனைக் காண்பேன்!

உறங்காத விழியில் இன்று
ஒளி வந்து சேரக் கண்டேன்!
பரிவான நண்பன் தந்த
கனிவான தோள்கள் கண்டேன்!

- அந்தி நேரத் தென்றல் காற்று...

Inaindha Kaigal - Andhinera Thendral

கன்னத்தில் முத்தமிட்டால் - வெள்ளை பூக்கள் உலகம் எங்கும்

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்மேல் மஞ்சள் வெளுச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே
தாயின் கத கதப்பில்
உலகம் விடியட்டுமே
பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே விடிகவே
மண்மேல் மஞ்சள் வெளுச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே
தாயின் கத கதப்பில்
உலகம் விடியட்டுமே
பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே

காற்றின் பேரிசையும்
மழை பாடும் பாடல்களும் ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ
கோடி கீர்த்தனையும் கவி கோர்த்த வார்தைகளும் துளி கண்ணீர் போல்
அர்த்தம் தருமோ

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே விடிகவே
மண்மேல் மஞ்சள் வெளுச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே

எங்கு சிறு குழந்தை தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே
எங்கு மனித ஈனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ
அங்கு கூவதோ வெள்ளை குயிலே

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்மேல் மஞ்சள் வெளுச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே விடிகவே

Kannathil Muthamittal - Vellai Pookal

கன்னத்தில் முத்தமிட்டால் - சட்டென நனைந்தது நெஞ்சம்

சட்டென நனைந்தது நெஞ்சம்
சர்க்கரையானது கண்ணீர்
இன்பம் இன்பம் ஒரு துன்பம்
துன்பம் எத்தனை பேரின்பம்

சட்டென நனைந்தது நெஞ்சம்
சர்க்கரையானது கண்ணீர்
இன்பம் இன்பம் ஒரு துன்பம்
துன்பம் எத்தனை பேரின்பம்

உடலுக்குள் மல்லிகை தூரல்
என் உயிருக்குள் மெல்லிய கீறல் சுகமாய்
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு

எந்த வாசல் வழி காதல் நடந்து வரும்
என்று காத்து கிடந்தேன்
அது வானில் பறந்து வந்து கூரை திறந்து வரும்
என்று இன்று தெளிந்தேன்
தாவி வந்து எனை அணைத்த போது
எந்தன் சல்லி வேர்கள் அறுந்தேன்
சாவின் எல்லை வரை சென்று மீண்டு
இன்று இரண்டு ஜென்மம் அடைந்தேன்

துடிக்கும் உதடு கொண்டு
துடைத்திடு வெட்கத்தை
அணைப்பினாதிக்கத்தால்
வெளியேற்று அச்சத்தை
துடிக்கும் உதடு கொண்டு
துடைத்திடு வெட்கத்தை
அணைப்பினாதிக்கத்தால்
வெளியேற்று அச்சத்தை

சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு

சட்டென நனைந்தது நெஞ்சம்

Kannathil Muthamittal - Sattena Nenaindhadhu

கன்னத்தில் முத்தமிட்டால் - விடை கொடு எங்கள் நாடே

விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே, பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்போமா?
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்

விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே, பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்போமா?
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்

கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
ஒரு சுகம் வருமா? வருமா?

கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
ஒரு சுகம் வருமா? வருமா?
சொர்க்கம் சென்றாலும் சொந்த ஊர் போல்
ஒரு சுதந்திரம் வருமா? வருமா?
கண் திறந்த தேசம் அங்கே
கண் மூடும் தேசம் எங்கே?

கண் திறந்த தேசம் அங்கே
கண் மூடும் தேசம் எங்கே?

பிரிவோம் நதிகளே பிழைத்தால் வருகிறோம்
மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம்
கண்ணீர் திரையில் பிறந்த மண்ணை
கடைசியாக பார்க்கின்றோம்

விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே, பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்போமா?
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்

Kannathil Muthamittal - Vidai Kodu Engal

கன்னத்தில் முத்தமிட்டால் - கன்னத்தில் முத்தமிட்டால்

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வானம் முடியுமிடம் நீதானே!
காற்றைப் போல நீ வந்தாயே!
சுவாசமாக நீ நின்றாயே!
மார்பில் ஊறும் உயிரே!

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

எனது சொந்தம் நீ! எனது பகையும் நீ!
காதல் மலரும் நீ! கருவில் முள்ளும் நீ!
செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ!
செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ!
பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ!
பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ!
மரணம் மீண்ட ஜனனம் நீ!

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

எனது செல்வம் நீ! எனது வறுமை நீ!
இழைத்த கவிதை நீ! எழுத்துப் பிழையும் நீ!
இரவல் வெளிச்சம் நீ! இரவின் கண்ணீர் நீ!
இரவல் வெளிச்சம் நீ! இரவின் கண்ணீர் நீ!
எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!
எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ!

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வானம் முடியுமிடம் நீதானே!
காற்றைப் போல் நீ வந்தாயே!
சுவாசமாய் நீ நின்றாயே!
மார்பில் ஊறும் உயிரே!

Kannathil Muthamittal - Kannathil Muthamittal

தாய் மூகாம்பிகை - ஜனனீ ஜனனீ ஜகம் நீ

சிவசக்த்யாயுத்தோயதிபவதி....
சத்தப்ரபவிதும்
ம்ம்ம்................!

நசே தேவம் தேவோ நகலு
குஷல ஹஸ்பந்திதுமபீ!
.....ஆ.!

அதஸ்தாம்...ஆராத்யாம்....
ஹரிஹர விரிஞ்சாதிவிரவீ!

ப்ரணம்தும் ஸ்தோத்தும்வ
கதம் அகிர்த புண்யக ப்ரபவதீ!
ஆ.....!

ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ!
ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ!

ஜகத் காரணி நீ! பரிபூரணி நீ!
ஜகத் காரணி நீ! பரிபூரணி நீ!
ஜகத் காரணி நீ! பரிபூரணி நீ!

குழு: ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ!

ஜனனீ ஜனனீ! ஜனனீ ஜனனீ!

ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்
சடைவார் குழலும் இடை வாகனமும்!

குழு : சடைவார் குழலும் இடை வாகனமும்!

கொண்ட நாயயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே!

குழு : நின்ற நாயகியே இட பாகத்திலே!

ஜகன் மோகினி நீ! சிம்ம வாஹினி நீ!

குழு : ஜகன் மோகினி நீ! சிம்ம வாஹினி நீ!

ஜகன் மோகினி நீ! சிம்ம வாஹினி நீ!

குழு : ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ!
ஜகத் காரணி நீ! பரிபூரணி நீ!

சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
சன்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்

குழூ : சன்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்

அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங்கழலே! மலை மா மகளே!

குழு : தொழும் பூங்கழலே! மலை மா மகளே!

அலை மா மகள் நீ! கலை மா மகள் நீ!

குழு : அலை மா மகள் நீ! கலை மா மகள் நீ!

அலை மா மகள் நீ! கலை மா மகள் நீ!

குழு : ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ!
ஜகத் காரணி நீ! பரிபூரணி நீ!

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பீகையே!

குழு : லிங்க ரூபிணியே மூகாம்பீகையே!

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே!

குழு : லிங்க ரூபிணியே மூகாம்பிகையே!

பல தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள்
பணிந்தேத்துவதும் மணி நேத்திரங்கள்!

குழு : பணிந்தேத்துவதும் மணி நேத்திரங்கள்!

சக்தி பீடமும் நீ........!
ஆஆஆ.......................ஆ!

சக்தி பீடமும் நீ! சர்வ மோட்சமும் நீ!
குழு : சக்தி பீடமும் நீ! சர்வ மோட்சமும் நீ!
சக்தி பீடமும் நீ! சர்வ மோட்சமும் நீ!
குழு : சக்தி பீடமும் நீ! சர்வ மோட்சமும் நீ!


குழு : ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ! 
ஜகத் காரணி நீ! பரிபூரணி நீ!

ஜகத் காரணி நீ! பரிபூரணி நீ!

குழு : ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ! 
ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ! 

ஜனனீ ஜனனீ! ஜனனீ ஜனனீ!

குழு : ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ! 
ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ! 
ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ! 
ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ!

Thaai Mookaambikai - Janani Janani

Wednesday, November 23, 2016

சுப்ரமணியபுரம் - கண்கள் இரண்டால் உன் கண்கள்

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

(கண்கள் இரண்டால்)


பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைத்தே நகர்வேன் ஏமாற்றி


கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா

மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இது வரை யாரிடமும் சொல்லாத கதை

( கண்கள் இரண்டால் )

கறைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளைப் போல வந்து கலந்திட்டாய்

உனையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த ஊன் உயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர

(கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்)

Subramaniapuram - Kangal Irandal

Followers