Pages

Search This Blog

Wednesday, November 23, 2016

திருமலை - அழகூரில் பூத்தவளே

அழகூரில் பூத்தவளேஅ...
என்னை அடியோடு சாய்த்தவளே...
மலையூரில் சாரலிலே.. என்னை மார்ப்போடு சேர்த்தவளே
உன்னை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்ப்பேன்
உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்

ம்ஹ்ம்ஹ்ம்ம்.. ம்ஹ்ம்ஹ்ம்ம்.
ம்ஹ்ம்ஹ்ம்ம்.. ம்ஹ்ம்ஹ்ம்ம்.

அழகூரில் பூத்தவளே
என்னை அடியோடு சா..ய்..த்..த..வளே

நீயுடுத்தி போட்ட உடை.. என் மனதை மேயுதடா

நீ சுருட்டி போட்ட முடி.. மோதிரமாய் ஆகுமடி

இமையாளே நீ கிழிக்க இதழாலே நான் அளிக்க
கூச்சம் இங்கே கூச்சப்பட்டு போகிறதே

சடையாலே நீ இழுக்க.. இடைமேலே நான் வழுக்க
காச்சலுக்கும் காய்ச்சல் வந்து வேகிறதே

என்னை திரியாக்கி.. உன்னில் விளக்கேற்றி..
என்னாலும் பார்த்திருப்போம்

ஹோய்.. ஹோய்..
அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே

நீ முறிக்கும் சோம்பலிலே.. நான் ஒடிஞ்சு சாய்ஞ்சிடுவேன்

நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே.. நான் இறங்கி தூங்கிடுவேன்

குறிலாக நான் இருக்க.. நெடிலாக நீ வளர்க்க
சென்னைத்தமிழ், சங்கத்தமிழ் ஆனதடி

அறியாம நான் இருக்க.. அழகாக நீ திறக்க
காதல் மழை ஆயுள் வரை தூருமடா

என்னை மறந்தாலும், உன்னை மறவாத
நெஞ்சோடு நான் இருப்பேன்

ஹொய் ஹொய் ஹொய்.. அன்பூரில் பூத்தவனே

ம்ம்ம்ம்..ம்ம்ம்ம் என்னை அடியோடு சாய்த்தவளே

ம்ம்ம்ம்..ம்ம்ம்ம் மலையூரின் சாரலிலே

ம்ம்ம்ம்..ம்ம்ம்ம் என்னை மார்ப்போடு சேர்த்தவளே

உன்னை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்த்தேன்

உயிர் நூலில் கோர்த்து.. உதிராமல் காப்பேன்..

Thirumalai - Azhagooril Poothvale

ஸ்டார் - ரசிகா ரசிகா என் ரசிகா

ரசிகா ரசிகா என் ரசிகா ரசிகா பெண் ரசிகா
திரு ரசிகா ரசிகா என்னை திருடி போன திரு ரசிகா
(ரசிகா..)
ஓ ரசிகா ரசிகா என்னை வசியம் செய்து போன ரசிகா
இவள் ரடக்கும் நடையிலே நிலம் சிவக்கும் அதன் மனம் இனிக்கும்
இவள் நின்று நிமிர்ந்ததும் வான்ம் விழா அது வானவில்லா?
இல்லை வசந்த விழா?
அந்த எகிப்தின் மம்மியும் இமை திறக்கும்
இவள் கொஞ்சம் சிரித்தால் அது உயிர் பிழைக்கும்
நிலமெங்கே நிலமெங்கே இவள் விழியில் ஊஞ்சல் ஆடுதே
இவள் காதோரம் மானாடு பூக்கள் கூட்டம் போடுதே
எட்டி பிடிக்க கட்டிப் பிடிக்க மின்னல் வட்டமும் பிடித்து வலை வீசுதே
(ரசிகா..)

அந்த மும்தாஜின் எழில் சொன்ன ஓர் வார்த்தைதான்
இன்னும் ஆக்ராவில் பலிங்கோடு ஒளிக்கின்றதே
அந்த ஆதாமின் உயிர் சுட்ட ஒரு வார்த்தை தான்
இன்னும் ஆராமல் சுகமாக கொதிக்கின்றதே
கடும் விஷம் கூட கரும்பாக சுவைக்கின்றதே
அது சோகத்தை சோப்பினி துவைக்கின்றதே
(இவள் காதோரம்..)
(ரசிகா..)

உலி தேடல்கள் இல்லாமல் சிலையே இல்லை
விழி தேடல்கள் இல்லாமல் காதல் இல்லை
மழை தூரல்கள் தேடல்கள் மண்ணை தொடும்
மன வேர் தேடும் தேடல்கள் பெண்ணை தொடும்
தனக்குள்ளே ஓர் தேடல்கள் ஞானம் தரும்
பேனா மை கொண்ட தேடல்கள் கவிதை தரும்
விரல் கொண்டாடும் தேடல்கள் இசையில் தரும்
விதை கொண்டாடும் தேடல்கள் விடியல் தரும்
தேடல் விடியல் தரும்
தேடல் விடியல் தரும்
தேடல் விடியல் தரும்

Star - Rasiga Rasiga

பாம்பே - அந்த அரபிக்கடலோரம் ஓர்

அந்த  அரபிக்கடலோரம்  ஓர்   அழகைக்  கண்டேனே 
அந்தக்  கன்னித்  தென்றல்  ஆடைகளாக்கக்  கண்கள்  கண்டேனே
ஹம்மா  ஹம்மா  ஹம்மா  ஹம்மா  ஹம்மா 
ஏ  பள்ளித்தாமரையே  உன்  பாதம்  கண்டேனே
உன்  பட்டுத்  தாவணி  சரியச்  சரிய  மீதம்  கண்டேனே 
ஹம்மா  ஹம்மா  ஹம்மா  ஹம்மா  ஹம்மா 
ஏ  ஹம்மா  ஹம்மா  ஹம்மா  ஹம்மா  ஹம்மா 


சேலை  ஓரம்  வந்து  ஆளை  மோதியது  ஆஹா  என்ன  சுகமோ 
பிஞ்சுப்  பொன்விரல்கள்  நெஞ்சைத்  தீண்டியது  ஆஹா  என்ன  இதமோ
சித்தம்  கிளுகிளுக்க  ரத்தம்  துடிதுடிக்க  முத்தம்  நூறு  விதமோ 
அச்சம்  நாணம்  அட  ஆளைக்  கலைந்தவுடன்  ஐயோ  தெய்வப்  பதமோ 
ஹம்மா  ஹம்மா  ஹம்மா  ஹம்மா  ஹம்மா 

(அந்த  அரபிக்கடலோரம் )



சொல்லிக்கொடுத்தபின்னும்  அள்ளிக்கொடுத்தபின்னும்  முத்தம்  மீதமிருக்கு 
தீபம்  மறைந்தபின்னும்  பூமி  இருண்டபின்னும்  கண்ணில்  வெளிச்சமிருக்கு 
வானம்  பொழிந்தபின்னும்  பூமி  நனைந்தபின்னும்  சாரல்  சரசமிருக்கு 
காமம்  கலைந்தபின்னும்  கண்கள்  கடந்தபின்னும்  காதல்  மலர்ந்துகிடக்கு 
ஹம்மா  ஹம்மா  ஹம்மா  ஹம்மா  ஹம்மா 

(அந்த  அரபிக்கடலோரம் )

Bombay - Hamma Hamma

பாம்பே - குச்சிக்குச்சி ராக்கம்மா

குச்சிக்குச்சி ராக்கம்மா பொண்ணுவேணும்
கூடசாலி ராக்கம்மா பொண்ணுவேணும்
சாதிசனம் தூங்கயில சாமக்கோழி கூவயில
குச்சிக்குச்சி ராக்கம்மா...கூடசாலி ராக்கம்மா...

ஹையா ஹையா ஹைய்யா ஹையா ஹையா ஹைஹைய்யா

குச்சிக்குச்சி ராக்கம்மா பொண்ணுவேணும்
கூடசாலி ராக்கம்மா பொண்ணுவேணும்
சாதிசனம் தூங்கயில சாமக்கோழி கூவயில
குச்சிக்குச்சி ராக்கம்மா...கூடசாலி ராக்கம்மா...

குச்சிக்குச்சி ராக்கம்மா வரமாட்டா - நீ
கொஞ்சிப்பேச பொண்ணு ஒண்ணு தரமாட்டா
சாதி சனம் தூங்கல்லையே சாமக்கோழி கூவல்லையே
குச்சிக்குச்சி ராக்கம்மா...கூடசாலி ராக்கம்மா...

காட்டு முயலுக்கு பனி பிடிக்கும் கானக்குயிலுக்கு வெயில் பிடிக்கும்
ஆணிவேருக்கு மண் பிடிக்கும் ஹே அப்பனுக்குப் பெண் பிடிக்கும்

அரசன் மகனுக்கு வால் பிடிக்கும் அழுத குழந்தைக்குப் பால் பிடிக்கும்
புருஷன் ஜாமத்தில் கனைக்கயிலே பொம்பளைக்கு கிலி பிடிக்கும்

அல்லு பகலுமே நனைந்தாலும் ஆத்து மீனுக்கா குளிரெடுக்கும்
அள்ளி அள்ளி நான் கொடுத்தாலும் ஆனந்தப் பூவுக்கா பொன்மேனி வலிக்கும்

அ பொட்டப்புள பெத்துக்கொடு...போதும் என்னை விட்டுவிடு
அ அ அ பொட்டப்புள பெத்துக்கொடு...போதும் என்னை விட்டுவிடு
வெளிச்சம் எரியவிட்டு வெக்கத்தை அணைத்துவிடு

(குச்சிக்குச்சி)

ஹையா ஹையா ஹைய்யா ஹையா ஹையா ஹைஹைய்யா
ஹையா ஹையா ஹைய்யா ஹையா ஹையா ஹைஹைய்யா

சிறகு நீங்கினால் பறவையில்லை திரியை நீங்கினால் தீபமில்லை
உன்னை நீங்கினால் நானில்லை உனக்கிது புரியவில்லை

உடலை நீங்கினால் உயிருமில்லை ஒலியை நீங்கினால் ஒளியுமில்லை
உன்னை நீங்கினால் நானில்லை உனக்கிது தெரியவில்லை

பூமி சுற்றுவது நின்றுவிட்டால் புவியில் என்றுமே மாற்றமில்லை
புருஷன் சுற்றுவது நின்றுவிட்டால் என்னாளும் பெண்வாழ்வில் ஏற்றங்கள் இல்லை

பொத்தி வைத்த ஆச வந்து நெத்தியில துடிக்குது
பொத்தி வைத்த ஆச வந்து நெத்தியில துடிக்குது
தொட்ட இடம் பத்திக்கொளும் தூரத்தில் ஒதுங்கி நில்லு

(குச்சிக்குச்சி)

Bombay - Kuchi Kuchi

பாம்பே - பூவுக்கென்ன பூட்டு காற்றுக்கென்ன

பூவுக்கென்ன பூட்டு காற்றுக்கென்ன ரூட்டு 
குல்லா குல்லா ஹல்லா குல்லா
வானும் மண்ணும் யாருக்கு நீயும் நானும் யாருக்கு
குல்லா குல்லா ஹல்லா குல்லா

நீ சிரிச்சா தீவானா கைக்கொடுத்தா மஸ்தானா
குல்லா குல்லா ஹல்லா குல்லா
நீயும் நானும் ஒன்னான்னா ரூப்பு தேரா மஸ்தானா
குல்லா குல்லா ஹல்லா குல்லா

சோலைக்கு என்ன ஒரு கவலை 
எப்போதும் பறவைகள் அழுவதில்லை
சூரியனில் என்றும் இரவு இல்லை
எப்போதும் சொர்க்கத்துக்கு தடையில்லை
குல்லா குல்லா ஹல்லா குல்லா
குல்லா குல்லா ஹல்லா குல்லா

காணத்தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை
மேகங்கள் மண்விழுந்து காயங்கள் ஆனதில்லை
காணத்தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை
மேகங்கள் மண்விழுந்து காயங்கள் ஆனதில்லை
வாழத்தானே வாழ்க்கை வீழ்வதற்கு இல்லை
பொல்லாத ஜாதி மதம் இறைவனும் சொல்லவில்லை
(நீ சிரிச்சா..)

பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன
ஆசைக்கு ரெக்கைக்கட்டி கட்டவிழ்த்து ஆடவிடு
பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன
ஆசைக்கு ரெக்கைக்கட்டி கட்டவிழ்த்து ஆடவிடு
வெல்லத்தானே வீரம் கொல்வதற்கு இல்லை
கையோடு கை சேர்த்து வானத்தையே தொட்டுவிடு
குல்லா குல்லா ஹல்லா குல்லா
குல்லா குல்லா ஹல்லா குல்லா
(காணத்தானே கண்கள்..)
(நீ சிரிச்சா..)

Bombay - Poovukkenna Poottu

Tuesday, November 22, 2016

உன்னை நினைத்து - பொம்பளைங்க காதலத்தான்

பொம்பளைங்க காதலத்தான்
நம்பிவிடாதே நம்பிவிடாதே
நம்பியதால் நொந்துமனம்
வெம்பிவிடாதே வெம்பிவிடாதே
அத்தான்னு சொல்லியிருப்பா ஆசையக்காட்டி
அண்ணான்னு சொல்லி நடப்பா ஆளையும் மாத்தி
ஆம்பளையெல்லாம் அஹிம்சாவாதி
பொம்பளையெல்லாம் தீவிரவாதி
(பொம்பளைங்க காதலத்தான்)

பெண்ணெல்லாம் பூமியின்னு எழுதிவச்சாங்க – அவ
பூமி போல பூகம்பத்தால் அழிப்பதனாலா
பெண்ணெல்லாம் சாமியின்னு சொல்லிவச்சாங்க – அவ
சாமி போல கல்லாவே இருப்பதனாலா
பெண்ணெல்லாம் நதிகளுன்னு புகழ்ந்துவச்சாங்க
ஆணெல்லாம் அதில் விழுந்து மூழ்குவதாலா
நம்பிவிடாதே பொண்ண நம்பிவிடாதே

பெண்ணாலே பைத்தியமா போனவனுண்டு – இங்க
ஆண்களாலே பைத்தியமா ஆனவளுண்டா
பெண்ணாலே காவிகட்டி நடந்தவனுண்டு இங்க
ஆண்களாலெ காவிகட்டி நடந்தவளுண்டா
பெண்ணுக்கு தாஜுமஹால் கட்டிவச்சான்டா
எவளாச்சும் ஒருசெங்கல் நட்டுவச்சாளா
நம்பிவிடாதே பொண்ண நம்பிவிடாதே

(பொம்பளைங்க காதலத்தான்)

பெண்ணெல்லாம் பரீட்சையிலே முதலிடந்தாங்க – நம்ம
பசங்களத்தான் எங்கே அவங்க படிக்கவிட்டாங்க
பெண்ணெல்லாம் தங்க மெடல் ஜெயிச்சு வந்தாங்க
நம்ம பையன் முகத்தில் தாடியைத்தான் முளைக்கவச்சாங்க
பெண்ணெல்லாம் உலக அழகி ஆகிவந்தாங்க
ஆண்ணெல்லாம் காதலிச்சே தலை நரைச்சாங்க

(பொம்பளைங்க காதலத்தான்)

Unnai Ninaithu - Pombalainga Kaathalathan

உன்னை நினைத்து - சில் சில் சில் சில்லல்லா

சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா
சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா

நீ காதல் ஏவாளா உன் கண்கள் கூர் வாளா
நீ சாரலா இசை தூறலா பூஞ்சோலையானவளா

சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நான் மின்னலா

நீயிருக்கும் நாளில் எல்லாம் இமயத்தின் மேலே இருப்பேன்
நீயுமிங்கு இல்லா நாளில் என் மீது இமயம் இருக்கும்

அகிம்சயாய் அருகில் வந்து வன்முறையில் இறங்குகிறாய்
சிற்பமே என்னடி மாயம் சிற்பியை செதுக்குகிறாய்

ஒரு சுவாசம் போதுமே நாமும் வாழலாம்

சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா
சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நான் மின்னலா

காதல் ஒரு ஞாபக மறதி என்னையே நானும் மறந்தேன்
உன்னையே நீயும் மறந்தாய் மறந்ததால் ஒன்றாய் இணைந்தோம்

உன்னைப் போல் கவிதை சொன்னால் உலகமே தலையாட்டும்
நம்மைப் போல் காதலர் பார்த்தால் தாஜ்மகால் கைதட்டும்

காதலெனும் புள்ளியில் பூமி உள்ளதே

சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா
சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நான் மின்னலா

நீ காதல் ஏவாளா உன் கண்கள் கூர் வாளா
நீ சாரலா இசை தூறலா பூஞ்சோலையானவளா

சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நான் மின்னலா
சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா

Unnai Ninaithu - Sil Sil Sillalalaa

Followers