Pages

Search This Blog

Monday, November 21, 2016

காதல் கொண்டேன் - மனசு ரெண்டும் பார்க்க

மனசு ரெண்டும் பார்க்க
கண்கள் ரெண்டும் தீண்ட
உதடு ரெண்டும் உரச
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே

மனசு ரெண்டும் பார்க்க
கண்கள் ரெண்டும் தீண்ட
உதடு ரெண்டும் உரச
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே
நரம்பில் ஒரு நதி பாயுதே
இது என்ன வேட்கை
காதல் வலி உடல் காயுதே
இது என்ன வாழ்க்கை
ஒரு பார்வையில் ஒரு வார்த்தையில்
ஒரு தீண்டலில் நான் மீண்டும் பிறப்பேனே

மனசு ரெண்டும் பார்க்க
கண்கள் ரெண்டும் தீண்ட
உதடு ரெண்டும் உரச
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே

காதல் சருகான பின்பு
மோகம் வந்தாலே சாபம்
கண்ணில் முள் வைத்து மூடி
தூங்க சொன்னாலே பாவம்
உன் மார்பில் வழிகின்ற நீர் அள்ளி
மருந்து போல குடிப்பேன்
என் பித்தம் கொஞ்சம் தணிப்பேன்
உன் பாத சுவடுக்குள்
சுருண்டு விழுந்து மரிப்பேன்
உடல் சீறுதே நிறம் மாறுதே
வலி ஏறுதே இது என்ன கலவரமோ

மனசு ரெண்டும் பார்க்க
கண்கள் ரெண்டும் தீண்ட
உதடு ரெண்டும் உரச
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே

மனசு ரெண்டும் பார்க்க
கண்கள் ரெண்டும் தீண்ட
உதடு ரெண்டும் உரச
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே

நிலவின் ஒளியில் அலைகள் எரியுமா
அலையின் வேதனை நிலவு அறியுமா
வேதனைகள் நெஞ்சில் சுகமா எங்கும் பரவுதடி
உடலே உடலே உறைந்து போய்விடு
மனமே மனமே இறந்து போய்விடு
பாதையிலே சிறு கல்லாய் என்னை கிடக்க விடு
உன் பார்வையில் என்னை கொன்றுவிடு பெண்ணே
உன் கூந்தலில் என்னை புதைத்து விடு பெண்ணே
உன் பார்வையில் என்னை கொன்றுவிடு பெண்ணே
உன் கூந்தலில் என்னை புதைத்து விடு பெண்ணே
கொல்வதற்கு முன்னே ஒரு முத்தமிடு பெண்ணே
அதை மறைக்காதே…
ஒரு பார்வையில் ஒரு வார்த்தையில்
ஒரு தீண்டலில் நான் மீண்டும் பிறப்பேனே

Kaadhal Kondein - Manasu Rendum

காதல் கொண்டேன் - தொட்டு தொட்டு போகும் தென்றல்

தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசுதோ?
விட்டு விட்டு தூரும் தூரல் வெள்ளமாக மாறதோ?
ஒரு வெட்கம் என்னை இங்கு தீண்டியதே
அவள் பார்க்கும் பார்வை தான் குளிர்கிறதே
போகும் பாதை தான் தெரிகிறதே
மனம் எங்கும் மயங்கிடும் பொழுது
வார்த்தையா இது மௌனமா?
வானவில் வெறும் சாயமா
வண்ணமா மனம் மின்னுமா தேடி தேடி துலைந்திடும் பொழுது

தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசுதோ?
விட்டு விட்டு தூரும் தூரல் வெள்ளமாக மாறதோ?

தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசுதோ?
விட்டு விட்டு தூரும் தூரல் வெள்ளமாக மாறதோ?
இந்த கனவு நிலைக்குமா?
தினம் காண கிடைக்குமா?
உன் உறவு வந்ததால் புது உலகம் பிறக்குமா?
தோழி உந்தன் கரங்கள் தீண்ட தேவனாகி போனேனே
வேலி போட இதயம் மேல வெள்ளை கொடியை பார்த்தேனே
தத்தி தடவி இங்கு பார்கையிலே பார்த்த சுவடு ஒன்று தெரிகிறதே
வானம் ஒன்றுதான் பூமி ஒன்றுதான் வாழ்ந்து பார்த்து வியந்திடலாமே
தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசுதோ?
விட்டு விட்டு தூரும் தூரல் வெள்ளமாக மாறதோ?

தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசுதோ?
விட்டு விட்டு தூரும் தூரல் வெள்ளமாக மாறதோ?
விண்ணும் ஓடுதே மண்ணும் ஓடுதே கண்கள் சிவந்து தலை சுத்தியதே
இதயம் வலிக்குதே இரவு கொதிக்குதே இது ஒரு சுகம் என்று புரிகிறதே
நேற்று பார்த்த நிலவா என்று நெஞ்சம்
எண்ணை கேட்கிறதே புட்டி வைத்த
உறவுகள் மேல புதிய சிறகு முளைகிறதே
இது என்ன உலகம் என்று தெரியவில்லை
விதிகள் வரை முறைகள் புரியவில்லை
இதய தேசத்தில் இறங்கி போகயில் இன்பம் துன்பம் எதுவும் இல்லை
தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசுதோ?
விட்டு விட்டு தூரும் தூரல் வெள்ளமாக மாறதோ?
ஒரு வெட்கம் எண்ணை இங்கு தீண்டியதே
அவள் பார்க்கும் பார்வை தான் குளிர்கிறதே
போகும் பாதை தான் தெரிகிறதே
மனம் எங்கும் மயங்கிடும் பொழுது
வார்த்தையா இது மௌனமா?
வானவில் வெறும் சாயமா
வண்ணமா மனம் மின்னுமா தேடி தேடி துலைந்திடும் பொழுது

Kaadhal Kondein - Thottu Thottu

காதல் கொண்டேன் - நெஞ்சோடு கலந்திடு உறவாலே

நெஞ்சோடு கலந்திடு உறவாலே
காலங்கள் மறந்திடு அன்பே
நிலவோடு தென்றலும் வரும் வேளை
காயங்கள் மறந்திடு அன்பே

ஒரு பார்வை பார்த்து நான் நின்றால்
சிறு பூவாக நீ மர்வாயா?
ஒரு வார்த்தை இங்கு நான் சொன்னால்
வழி போகும் என் அன்பே அன்பே
(நெஞ்சோடு..)

கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட
பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன்
புயல் போன பின்னும் புது பூக்கள் பூக்கும்
இளவேனில் வரை நான் இருக்கின்றேன்
முக மூடி அணிகின்ற உலகிது
உன் முகம் என்று ஒன்றிங்கு என்னது
நதி நீரில் அட விழுந்தாலுமே
அந்த நிலவென்றும் நனையாது வா நண்பா
(நெஞ்சோடு..)

காலங்கள் ஓடும் இது கதையாகி போகும்
கண்ணீர் துளியின் ஈரம் வாழும்
தாயாக நீதான் தலை கோத வந்தாலும்
உன் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்
என் வாழ்க்கை நீ இங்கு தந்தது
அடி உன் நாட்கள் தானே இங்கு வாழ்வது
காதல் இல்லை இது காமம் இல்லை
இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை
(ஒரு பார்வை..)
(நெஞ்சோடு..)

Kaadhal Kondein - Nenjodu

தெனாலி - அத்தினி சித்தினி பத்மினி தரங்கிணி

தக்கிட தக்க அத்தினி சித்தினி
தக்கிட தக்க பத்மினி தரங்கிணி
அடி அத்தினி சித்தினி பத்மினி தரங்கிணி
பெண்கள் தேடும் வகை தெரியுமடி

கிழியே கிழியே நீ
கிழியே கிழியே வா
கிழியே வருவாயா

ஆடை மழை தாழாது போடா
என் கண்ணா என் மன்னா
மதன காமராசன் கொஞ்ச
அழைக்கிறேன் உன்னை
வளையலால் கொஞ்சி
மிஞ்சி கேட்டேன் ஒ
உன் கால் கொலுசில்
கெஞ்சல் கண்டேன் பெண்ணே

கிழியே கிழியே நீ
கிழியே கிழியே வா
கிழியே வருவாயா

கொன்றினில் குறிஞ்சி கண்டேன் உன்
கோல இடையினில் மருதம் கண்டேன்
கண்களில் நெய்தல் கண்டேன் உன்
கை வைரல் அழகினில் முல்லை கண்டேன்
குரு மொழி இல்லாத
கலை கற்று பார்போம் வா

தக்கிட தக்க பழி நாம் கலங்கினோம்
தக்கிட தக்க இடையினம் மகிழ்ந்தனம்
ஒ அடி
வல்லினம் இடையினம் மெல்லினம்
நாணம் கூச்சல் இட சிவன்தனம்

Thenali - Athini Sithini

தெனாலி - இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ

இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
சேதி கேட்ட சந்தோஷங்கோ
பத்து கிலோ ஏறுதுங்கோ

ஓஜாயே ஓஜாயே ஓஜாயே
ஒஜா ஒஜா ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே
ஒஜா ஒஜா ஓஜாயே

இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
சேதி கேட்ட சந்தோஷங்கோ
பத்து கிலோ ஏறுதுங்கோ

கால்கள் ரெண்டும் தரையிடம்
கோபம் கொண்ட கலவரம்
மிதந்து மிதந்து போகும் பெண்ணாய் ஆனேனுங்கோ
பூமியே துரும்புங்கோ
வானமே தூசுங்கோ
உங்க மூச்சு பட்டதுமே தோணுதுங்கோ

ம்ம்.. தண்டணைகள் இனிக்குது
தவறு செய்ய துடிக்குது
செஞ்சதெல்லாம் நினைக்க நினைக்க சிரிக்க தோணுது

ஓஜாயே ஓஜாயே ஓஜாயே
ஒஜா ஒஜா ஓஜாயே

என்னை என்ன செய்தாய்
என்னவெல்லாம் செய்தாய்
புத்தம் புது மனுஷனாய் மாறி போனேனே
டாக்டருக்கு மருமகனா ஆனேனே

உயிரிலே வெள்ளி ஜரிகையும் கலந்து தான் ஓடுதே
உருவமே தங்க சிலையாய் மாறிதான் போனதே

கால் இருந்த இடத்தில் இப்போ
காற்று வந்து குடி இருக்கு
நடக்கவே தோணலைங்க
மிதக்கத்தான் தோணுதுங்க

ஓஜாயே ஓஜாயே ஓஜாயே
ஒஜா ஒஜா ஓஜாயே

அடிக்கடி காணும் ரகசிய கனவை
அம்பலமாக்கும் நாள் வர வேண்டும்
சிரிக்கவும் ரசிக்கவும் ருசிக்கவும் ஓஹோ
அந்த நாள் வந்ததே வந்ததே

வானவில்லை காணவில்லை
விடுமுறையில் இங்கே வந்துட்டதே

இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
சேதி கேட்ட சந்தோஷங்கோ
பத்து கிலோ ஏறுதுங்கோ
இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
சேதி கேட்ட சந்தோஷங்கோ
பத்து கிலோ ஏறுதுங்கோ
செல்ல கொஞ்சி நீங்க அழைக்கும்
நாய்க்குட்டி ஆனேனுங்க

இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
சேதி கேட்ட சந்தோஷங்கோ
பத்து கிலோ ஏறுதுங்கோ

Thenali - Injerungo Injerungo

தெனாலி - என்ன சொல்லி என்னைச் சொல்ல

என்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னைக் கையால் தள்ள
என்ன சொல்லி என்னைச் சொல்ல ஹ்ஹ
காதல் என்னைக் கையால் தள்ள

இதயம்தான் சரிந்ததே உன்னிடம் மெல்ல
ஸ்வாசமே ஸ்வாசமே

ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா

ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா

ஸ்வாசமே ஸ்வாசமே
ஸ்வாசமே ஸ்வாசமே

என்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னைக் கையால் தள்ள
என்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னைக் கையால் தள்ள

இதயம்தான் சரிந்ததே உன்னிடம் மெல்ல

வாசமே வாசமே
வாசமே வாசமே

என்ன் சொல்லி என்னைச் சொல்லு
கண்கள் ரெண்டில் கண்கள் செல்லு
சிறகுகள் முளைக்குது மனசுக்குள் மெல்ல

ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா

இடது கண்ணாலே அகிம்சைகள் செய்தாய்
வலது கண்ணாலே வன்முறை செய்தாய்
இடது கண்ணாலே அகிம்சைகள் செய்தாய்
வலது கண்ணாலே வன்முறை செய்தாய்

ஆறறிவோடு உயிரது கொண்டேன்
ஏழாம் அறிவாக காதல் வரக் கண்டேன்
இயற்கைக் கோளாறில் இயங்கிய என்னை
செயற்கைக் கோளாக உன்னைச் சுற்றச் செய்தாய்
அணுசக்திப் பார்வையில் உயிர்சக்தி தந்தாய்
அணுசக்திப் பார்வையில் உயிர்சக்தி தந்தாய்

ஸ்வாசமே ஸ்வாசமே

இசைத்தட்டு போலே இருந்த என் நெஞ்சை
பறக்கும் தட்டாக பறந்திடச் செய்தாய்
நதிகளில்லாத அர(பு)தேசம் நான்
நைல் நதியாக எனக்குள்ளே வந்தாய்
நிலவு இல்லாத புதன் கிரகம் நானே
முழு நிலவாக என்னுடன் சேர்ந்தாய்
எனக்காக நீ கிடைத்தாய் விடிந்துவிட்டேனே

வாசமே வாசமே

என்ன சொல்லி ஹ்ஹ்ஹ
என்ன சொல்லி என்னைச் சொல்லு
காதல் என்னைக் கையால் தள்ள ஹ்ஹ்ஹ

ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா

ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா

ஜன்னல் காற்றாகி வா
ஸ்வாசமே ஸ்வாசமே
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா... வாசமே..

Thenali - Swasame Swasame

தெனாலி - ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா

ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா? ஹச்..
டூ விட்ட மனசு பழம் விட்டு சேர்ந்தாச்சா? ஹச்..

ஆலங்கட்டி  மழை  தாலாட்ட  வந்தாச்சா? 
து  விட்ட  மனசு  பழம்  விட்டு  சேர்ந்தாச்சா? ஹாச்!
சமரசம் செய்ய சந்திரன் வந்தாச்சா?
சின்ன சின்ன சண்டை சமாதனமாச்சா? ஹச்

இப்ப பழச மறந்து கதைக்க வந்தாச்சா?
என்ற விசனம் மறந்து காத்தோடு போயாச்சா?

ஐயோடா இது நிரந்தரம் என நிலைச்சு இருக்கணும்
ஐயோடா இது நிலைச்சிட ஒரு வரம் கிடைக்கணும்
ஐயோடா

தண்ணின்னா  தகதிகு  தண்ணின்னா  
தகதிகு தண்ணின்னா  தானாதன்னா
தண்ணின்னா  தகதிகு  தண்ணின்னா 
 தகதிகு தண்ணின்னா  தானாதன்னா
ஹோ..ஒ .....ஹோ..ஒ

குளம் காட்டும் வெண்ணிலவாய் அழகான நம் குடும்பம்
கல் ஒன்று விழுவதால் கலையலாமா?
கல் ஒன்று விழுவதினால் தண்ணீரில் நெளி நெளியாய்
அலைபோடும் ஓவியத்தை ரசிக்கலாமே
சித்தன வாசல் சிற்பங்கள் பக்கம் வெறும் பாறை ஏனோ
அன்பென்னும் உளி பட்டால் பாறை சிலை ஆறுமே

பித்து குழலுக்கு தேங்காய் பூவ போல
ஒன்னா கலந்திட நெஞ்சு துடிக்குது
சொந்தத்தை தினம் சந்திக்க
அவர் நிழல் கூட ஏங்குது

ஐயோடா இது நிரந்தரம் என நிலைச்சு இருக்கணும்
ஐயோடா இது நிலைச்சிட ஒரு வரம் கிடைக்கணும்
ஐயோடா
(ஆலங்கட்டி....)

ஆற்றோர நாணல் அது காற்றோடு கை குலுக்க
நட்போடு நாமும் அதை கொஞ்சலாம் நில்
பனையில பழம் பறிச்சு விதையில் தென்ன வளர்க்க
ஆறேனும் ஆசை பட்டால் ஆகுமோ சொல்
ஒருவர் புன்னகை மற்றவர் முகம் அதில் பூக்குமே
உள்ளங்கையின்ற ரேகைகள் பலன் ஒன்றாகுமே
அனைவரும் இங்கு நடந்திடும் போது
ஒரு நிழல் மட்டும் தெரிவதென்ன
கவிதை போல் உள்ள குடும்பத்தில்
நானுமொரு வார்த்தை ஆகலாமோ

ஆலங்கட்டி  மழை  தாலாட்ட  வந்தாச்சா? 
து  விட்ட  மனசு  பழம்  விட்டு  சேர்ந்தாச்சா

(ஐயோடா..)

Thenali - Alangatti Mazhai

Followers