Pages

Search This Blog

Tuesday, December 31, 2013

சங்கமம் - சௌக்கியமா கண்ணே

தனதோம் ததீம் ததோம் ததீம்
தனதனதோம் தனதோம் - திருகிரு திருகிரு
தனதனதோம் தனதோம் - தகு திகு
தனதனதோம் தனதோம்

சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா

சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா

தனதோம் ததீம் ததோம் ததீம்
தனதனதோம் தனதோம் - திருகிரு திருகிரு
தனதனதோம் தனதோம் - தகு திகு
தனதனதோம் தனதோம்

தனதோம்தோம் ததீம்தீம் ததோம்தோம் ததீம் என
விழிகளில் நடனமிட்டாய் பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்
மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்
மனதைத் தழுவும் ஒரு அம்பானாய் (2)
பருவம் கொத்திவிட்டு பறவை ஆனாய் (2)
ஜணுததீம் ஜணுததீம் ஜணுததீம்
சலங்கையும் ஏங்குதே அது கிடக்கட்டும் நீ...


சௌக்கியமா


சூரியன் வந்து வாவெனும்போது (3)
என்ன செய்யும் பனியின் துளி (2)
கோடி கையில் என்னைக் கொள்ளையிடு தோடி கையில் என்னை அள்ளியெடு (2)
அன்பு நாதனே அணிந்த மோதிரம் வளையலாகவே துரும்பென இளைத்தேன்
அந்த மோதிரம் ஒட்டியாணமாய் ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன்
என் காற்றில் சுவாசமில்லை (4)
அது கிடக்கட்டும் விடு உனக்கென்ன ஆச்சு?
(சௌக்கியமா)
(தனதோம்)
(தனதோம்தோம்)
(சௌக்கியமா)

Sangamam - Sowkiyama Kannae

சங்கமம் - முதல்முறை கிள்ளிப் பார்த்தேன்

முதல்முறை கிள்ளிப் பார்த்தேன் முதல் முறை கண்ணில் வேர்த்தேன்
எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி மறுமுறை உயிர் கொண்டேன்
உன்னால் இருமுறை உயிர் கொண்டேன்

முதல் முறை கிள்ளிப் பார்த்தேன் முதல் முறை கண்ணில் வேர்த்தேன்
எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி மறுமுறை உயிர் கொண்டேன்
உன்னால் இருமுறை உயிர் கொண்டேன்
முதல் முறை எனக்கு அழுதிடத் தோன்றும் ...ஏன்
கண்ணீருண்டு சோகமில்லை ஆமாம் மழை யுண்டு மேகமில்லை

கால்களில் கிடந்த சலங்கையைத் திருடி
அன்பே என் மனசுக்குள் கட்டியதென்ன
சலங்கைகள் அணிந்தும் சத்தங்களை மறைத்தாய்
பெண்ணே உன் உள்ளம் தன்னை ஒளித்ததென்ன
விதையொன்று உயிர் கொள்ள வெப்பக்காற்று ஈரம் வேண்டும்
காதல் வந்து உயிர் கொள்ள காலம் கூட வேண்டும்
ஒரு விதை உயிர் கொண்டது ஆனால் இரு நெஞ்சி ல் வேர் கொண்டது

சலங்கையே கொஞ்சம் பேசு மௌனமே பாடல் பாடு
மொழியெல்லாம் ஊமையானால் கண்ணீர் உரையாடும் அதில்
கவிதை அரங்கேறும்

பாதையும் தூரம் நான் ஒரு பாரம்
என்னை உன் எல்லை வரை கொண்டு செல்வாயா
உடலுக்குள் இருக்கும் உயிர் ஒரு சுமையா
பெண்ணே உன்னை நானும் விட்டுச் செல்வேனா
தந்தை தந்த உயிர் தந்தேன் தாய் தந்த உடல் தந்தேன்
உறவுகள் எல்லாம் சேர்த்து உன்னிடம் கண்டேன்
மொத்தத்தையும் நீ கொடுத்தாய் ஆனால்
முத்தத்துக்கோ நாள் குறித்தே

(முதல் முறை )

Sangamam - Mudhal Murai

சங்கமம் - மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும்

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏராந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்...

மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா - இது
கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா

மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா - இது
கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா (2)வருவாய் தலைவா வாழ்வே வெறும் கனவா

(மார்கழி)

இதயம் இதயம் எரிகின்றதே இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே
உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல் என்னுயிரும் கரைவதென்ன
இருவரும் ஒரு முறை காண்போமா இல்லை
நீ மட்டும் என்னுடல் காண்பாயா
கலையென்ற ஜோதியில் காதலை எரிப்பது
சரியா பிழையா விடை நீ சொல்லய்யா

(மார்கழி)

சூடித் தந்த சுடர்க்கொடியே சோகத்தை நிறுத்திவிடு
நாளை வரும் மாலையென்று நம்பிக்கை வளர்த்துவிடு
நம்பிக்கை வளர்த்துவிடு
நம் காதல் ஜோதி கலையும் ஜோதி கலைமகள் மகளே வா வா
ஆஆஆ காதல் ஜோதி கலையும் ஜோதி...ஆஆஆ... ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும் (2)
வா...

(மார்கழி)

Sangamam - Margazhi Thingal Allava

பணக்காரன் - இரண்டும் ஒன்றொடு ஒன்று

ஆண் : டிங் டாங் டாங் டிங் டாங்
டிங் டாங் டாங் டிங் டாங்

இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது
ஒன்றும் அசையாமல் நின்று போனது

இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது
ஒன்றும் அசையாமல் நின்று போனது

பெண் : காதல் காதல் டிங் டாங்

ஆண் : கண்ணில் மின்னல் டிங் டாங்

பெண் : ஆடல் பாடல் டிங் டாங்

ஆண் : அள்ளும் துள்ளும் டிங் டாங்

பெண் : இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது
ஒன்றும் அசையாமல் நின்று போனது

***

பெண் : காதல் இல்லா ஜீவனை
நானும் பார்த்ததில்லை

ஆண் : வானம் இல்லா பூமி தன்னை
யாரும் பார்த்ததில்லை

பெண் : தேகம் எங்கும் இன்பம் என்னும்
வேதனை வேதனை

ஆண் : நானும் கொஞ்சம் போட வேண்டும்
சோதனை சோதனை

பெண் : உங்கள் கை வந்து தொட்ட பக்கம்

ஆண் : டிங் டாங் டாங் டிங் டாங்
அங்கு முத்தங்கள் இட்ட சத்தம்

பெண் : டிங் டாங் டாங் டிங் டாங்
அங்கும் இங்கும் டிங் டாங்

ஆண் : ஆசை பொங்கும் டிங் டாங்
நெஞ்சில் நெஞ்சம் மஞ்சம் கொள்ளும்

பெண் : இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது

ஆண் : ஒன்றும் அசையாமல் நின்று போனது

பெண் : காதல் காதல் டிங் டாங்

ஆண் : கண்ணில் மின்னல் டிங் டாங்

பெண் : ஆடல் பாடல் டிங் டாங்

ஆண் : அள்ளும் துள்ளும் டிங் டாங்

பெண் : இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது

ஆண் : ஒன்றும் அசையாமல் நின்று போனது

***

பெண் : காதல் கண்ணன் தோளிலே
நானும் மாலை ஆனேன்

ஆண் : தோளில் நீயும் சாயும் போது
வானை மண்ணில் பார்த்தேன்

பெண் : நீயும் நானும் சேரும் போது
கோடையில் மார்கழி

ஆண் : வார்த்தை பேச நேரம் ஏது
கூந்தலில் பாய் விரி

பெண் : எங்கு தொட்டாலும் இன்ப ராகம்

ஆண் : டிங் டாங் டாங் டிங் டாங்
என்றும் தீராது நெஞ்சின் வேகம்

பெண் : டிங் டாங் டாங் டிங் டாங்
அங்கும் இங்கும் டிங் டாங்

ஆண் : சொர்க்கம் தங்கும் டிங் டாங்

பெண் : உந்தன் சேவை எந்தன் தேவை

ஆண் : இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது

பெண் : ஒன்றும் அசையாமல் நின்று போனது

ஆண் : இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது

பெண் : ஒன்றும் அசையாமல் நின்று போனது

ஆண் : காதல் காதல் டிங் டாங்

பெண் : கண்ணில் மின்னல் டிங் டாங்

ஆண் : ஆடல் பாடல் டிங் டாங்

பெண் : அள்ளும் துள்ளும் டிங் டாங்

ஆண் : டிங் டாங் டாங் டிங் டாங்

பெண் : டிங் டாங் டாங் டிங் டாங்

Panakkaran - Irandum Onrodu

பணக்காரன் - நூறு வருஷம் இந்த மாபிள்ளையும்

நூறு வருஷம்
இந்த மாபில்லையும் பொண்ணும்தான்
பேறு விளங்க இங்கு வாழனும்
சோல வனத்தில்
ஒரு சோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க
சிந்து பாடனும்
ஒண்ணுக்கொண்ணு பக்கத்திலே
பொண்ணு புள்ள நிக்கையிலே
கண்ணுபடும்
மொத்தத்திலே
கட்டழக
அம்மாடி என்ன சொல்ல

நூறு வருஷம்
இந்த மாபிள்ளையும் பொண்ணும்தான்
பேறு விளங்க இங்கு வாழனும்
சோல வனத்தில்
ஒரு சோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க
சிந்து பாடணும்

உசில மணியாட்டம் ஒடம்பத்தான் பாரு
தெருவில் அசைஞ்சாடும் திருவாரூர் தேரு
ஓம குச்சி போல் புடிச்சாரு தாரம்
தாவி அனச்சக்க தாங்காது பாரம்
இவரு ஏழு அடி
நடக்கும் ஏணி அடி
நிலவ நின்னுக்கிட்டே தொட்டுடுவார் பாரு
மனைவி குள்ளமணி
உயரம் மூணு அடி
இரண்டும் இனங்ஜிருந்த கேலிபன்னும் ஊரு
ரெட்ட மாட்டு வண்டி வரும்போது
நெட்ட குட்ட என்றும் இணையாது
இந்த ஒட்டகந்தான்
கட்டிக்கிட குட்ட வாத்த புடிச்சான்

நூறு வருஷம்
ஹே ஹே ஹே ஹே

நூறு வருஷம்
இந்த மாபிள்ளையும் பொண்ணும்தான்
பேறு வெளங்க இங்கு வாழனும்

ஒண்ணுக்கொண்ணு பக்கத்திலே
பொண்ணு புள்ள நிக்கையிலே
கண்ணுபடும்
மொத்தத்திலே
கட்டழக
அம்மாடி என்ன சொல்ல

நூறு வருஷம்
இந்த மாபிள்ளையும் பொண்ணும்தான்
பேறு வெளங்க இங்கு வாழனும்

புருஷன் பொஞ்சாதி
பொருத்தம் தான் வேணும்
பொருத்தம் இல்லாட்டி வருத்தம் தான் தோணும்
அமைஞ்சா அது போல கல்யாணம் பண்ணு
இல்ல நீ வாழு தனி ஆளா நின்னு

மொதலில் யோசிகிகனும்
பிறகு நேசிக்கணும்
மனுசு ஏத்துகிட்டா சேந்துகிட்டு வாழு
ஒனக்கு தகுந்தபடி
கோணத்தில் சிறந்தபடி
இருந்தா ஊர் அறிய மாலை கட்டி போடு
சொத்து வீடு வாசல் இருந்தாலும்
ஹே சொந்தம் பந்தம் எல்லாம் அமைஞ்சாலும்
அட உள்ளம் ரெண்டும் ஒட்டாவிட்டா
கல்யாணம் தான் கசக்கும்

நூறு வருஷம்
ஹே ஹே ஹே ஹே

நூறு வருஷம்
இந்த மாபிள்ளையும் பொண்ணும்தான்
பேறு வெளங்க இங்கு வாழனும்
சோல வனத்தில்
ஒரு சோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க
சிந்து பாடனும்
ஒண்ணுக்கொண்ணு பக்கத்திலே
பொண்ணு புள்ள நிக்கையிலே
கண்ணுபடும்
மொத்தத்திலே
கட்டழக
அம்மாடி என்ன சொல்ல

நூறு வருஷம்
இந்த மாபிள்ளையும் பொண்ணும்தான்
பேறு வெளங்க இங்கு வாழனும்
சோல வனத்தில்

Panakkaran- Nooru Varusham

Monday, December 30, 2013

டார்லிங் டார்லிங் டார்லிங் - அழகிய விழிகளில் அறுபது

அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே
அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே
ஹே ராதா
ஆஹா
ஐ லவ் யூ
ஒஹோ
ஹே ராதா
ஆஹா ஹா
ஐ லவ் யூ
ஒஹோ ஹோ
இதய தாகம் அது தணியும் நேரம் இது
கவிதை பாடி வருவாய் (2)

அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே

மங்கை நீ ரதிதேவி தங்கை நீ
மன்னன் நீ இளநெஞ்சின் கள்வன் நீ
சிறு இடை சிறை சிறை இடு என்னை
கண்ணுக்குள் காவல் துறை வா கைதாகும் ஆயுள் வரை (2)

என் ஆசை ராஜ்ஜாத்தி உன் ஆசை போலே
இணைந்தும்
கலந்ததும்
சுகத்தில்
நனைந்தும்
அம்மாடி சொன்னாலே வெட்கம் வரும்

அழகிய விழிகளில் ....

பட்டுப்போல் மெதுவாக தொட்டுக்கொள்
கட்டிக்கொள் உயிரோடு ஒட்டிக்கொள்
தலைவனின் கரம் தழுவிட வரும்
பன்னீரை அள்ளித்தெளி நீ என்னாசை செல்லக்கிளி (2)

என் தேகம் எங்கெங்கும் மின்சாரம் பாயும்
விடியும்
வரைக்கும்
அமுதம்
சுரக்கும்
ஆத்தாடி சொன்னாலே சொர்க்கம் வரும்

அழகிய விழிகளில் ....

Darling Darling Darling - Azhagiya Vezhigilil

Friday, December 27, 2013

பார்த்தாலே பரவசம் - அழகே சுகமா

அழகே  சுகமா ?
உன்  கோபங்கள்  சுகமா?
அழகே சுகமா? 

உன்  கோபங்கள் சுகமா?
அன்பே  சுகமா?
உன்  தாபங்கள்  சுகமா?
அன்பே சுகமா?
உன்  தாபங்கள் சுகமா?
தலைவா  சுகமா?  சுகமா?
உன்  தனிமை  சுகமா?  சுகமா?
வீடு வாசல்  சுகமா?  உன்  வீட்டு  தோட்டம் சுகமா?
பூக்கள்  எல்லாம்  சுகமா?  உன்  பொய்கள்  எல்லாம் சுகமா-ஆ ?

அன்பே  சுகமா ?  உன்  தாபங்கள் சுகமா-ஆ ?

சிறுமை  பட்டு  தவித்தேன்
என்  சிறகில்  ஒன்றை முறித்தேன்
ஒற்றை  சிறகில் ஊன  பறவை
எத்தனை தூரம்  பறப்பேன் ?
அன்பே உன்னை அழைத்தேன்  
உன்  அஹிம்சை  இம்சை  பொறுப்பேன் 
சீத  குளித்த  நெருப்பில்  என்னை  
குளிக்க  சொன்னால்  குளிப்பேன்
அழுத  நீரில்   கரைகள்  போய்விடும்   தெரியாதா ?
குறைகள்  உள்ளது   மனித  உறவுகள்   புரியாதா ?
இது  கண்ணீர் நடத்தும்  பேச்சு  வார்த்தை 
உடைந்த  மனங்கள்   ஒட்டாதா ?
இது கண்ணீர் நடத்தும்  பேச்சு வார்த்தை 
உடைந்த மனங்கள்  ஒட்டாதா?

அழகே சுகமா?  அன்பே சுகமா?
உன்  கோபங்கள் சுகமா?
உன்  தாபங்கள் சுகமா?
தலைவா சுகமா?  சுகமா?
உன்  தனிமை சுகமா?  சுகமா?
கன்னம்  ரெண்டு சுகமா?
அதில்  கடைசி முத்தம் சுகமா? 
உந்தன்  கட்டில்  சுகமா ?
என்  ஒற்றை  தலையணை  சுகமா -ஆ ?

Paarthale Paravasam - Azhagae Sugama

Followers