Pages

Search This Blog

Tuesday, December 24, 2013

உயிரோடு உயிராக - பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது

பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்
முப்பது நாளும் முதூர்தமானது எந்தன் மாதத்தில்
முள்ளில் கூட தேன் துளி கசிந்தது எந்தன் ராகத்தில்
இது எப்படி எப்படி ஞாயம்
எல்லாம் காதல் செய்த மாயம் (2)

(பூவுக்கெல்லாம் சிறகு ....)

நிலவை பிடித்து எறியவும் முடியும்
நீல கடலை குடிக்கவும் முடியும்
காற்றின் திசையை மாற்றவும் முடியும்
கம்பனை முழுக்க சொல்லவும் முடியும்
I love you love you சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை
சுற்றும் உலகின் விட்டம் தெரியும்
சூரியன் பூமி தூரமும் தெரியும்
கங்கை நதியின் நீளமும் தெரியும்
வங்க கடலின் ஆழமும் தெரியும்
காதல் என்பது சரியா தவற ?
இது தான் எனக்கு தெரியவில்லை

ஒற்றை பார்வை உயிரை குடித்து
கற்றை குழல் கயிறு செய்தது
மோதும் ஆடை முத்தமிட்டது
ரத்தம் எல்லாம் சுட்டுவிட்டது
I love you love you சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை
மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது
மீண்டும் சோலை குளிர்ந்து விட்டது
இதயம் இதயம் மலர்ந்து விட்டது
இசையின் கதவு திறந்து விட்டது
காதல் என்பது சரியா தவற ?
இது தான் எனக்கு தெரியவில்லை

(பூவுக்கெல்லாம் சிறகு ...)

Uyirodu Uyiraga - Poovukkellam Siragu

உயிரோடு உயிராக - உயிரோடு உயிராக

அன்பே அன்பே நீ என் பிள்ளை
தேகம் மட்டும் காதல் இல்லை
பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்
பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்

(அன்பே அன்பே)

கண்ணா என் கூந்தலில் சூடும் பொன் பூக்களும் உன்னை உன்னை அழைக்க
கண்ணே உன் கைவளை மீட்டும் சங்கீதங்கள் என்னை என்னை உரைக்க
கண்களைத் திறந்து கொண்டு நான் கனவுகள் காணுகிறேன்
கண்களை மூடிக்கொண்டு நான் காட்சிகள் தேடுகிறேன்
உன் பொன் விரல் தொடுகையிலே நான் பூவாய் மாறுகிறேன்
பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும்

(அன்பே அன்பே)

யாரும் சொல்லாமலும் ஓசை இல்லாமலும் தீயும் பஞ்சும் நெருங்க
யாரைப் பெண் என்பது யாரை ஆண் என்பது ஒன்றில் ஒன்று அடங்க
உச்சியில் தேன் விழுந்து என் உயிருக்குள் இனிக்குதடி
மண்ணகம் மறந்து விட்டேன் எனை மாற்றுங்கள் பழையபடி
உன் வாசத்தை சுவாசிக்கிறேன் என் ஆயுள் நீளும்படி
பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்

(அன்பே அன்பே)

Uyirodu Uyiraga - Anbae Anbae

நெஞ்சினிலே - மனசே மனசே

மனசே மனசே
மனசே மனசே குழப்பம் என்ன
இது தான் வயசே காதலிக்க (2)
பூக்கள் மீது பனி துடைத்து கவிதைகள் எழுதிவிடு
காதல் கடிதம் நீ கொடுத்து நிலவினை தூது விடு
மனசே ... மனசே ...

(மனசே மனசே ...)

நீ தினம் தினம் சுவாசிக்க தானே
காற்றில் தென்றலாய் நானும் ஆகவா ?
நீ என்னை தான் வாசிக்க தானே
உந்தன் கையில் நான் வீணை ஆகவா ?
மழை இல்லை நனைகிறேன் நம் காதலின் சாரலா ?
உன்னை கண்டு உறைகிறேன் உன் பார்வை மின்சாரமா ?
என்னை தந்தேன் உன்னை கொடு
மனசே ... மனசே ...

(மனசே மனசே ...)

உன் கனவிலே நான் வர தானே
தினமும் இரவிலே விழிதிருப்பேனே
உன் மனதிலே குடிவர தானே
உனது விழியிலே நீந்திடு வேனே
ஒரே முறை நிழல் தொடு என் பிம்பம் நீயாகுமே
ஒரே ஒரு வரம் கொடு உன்னோடு நான் வாழவே
சுகம் தரும் கடல் இதோ
மனசே ... மனசே ...

(மனசே மனசே ....)

Nenjinile - Manase Manase

Friday, December 20, 2013

பாட்ஷா - பாட்ஷா பாரு பாட்ஷா

பாட்ஷா பாரு பாட்ஷா பாரு
பாட்ஷா பாட்ஷா பாட்ஷா பாட்ஷா
ஹேய் பாட்ஷா பாரு பாட்ஷா பாரு
பட்டாளத்து நடையப்பாரு பகை நடுங்கும் படையப்பாரு
கோட்டு ஷூட்டும் ரெண்டும் எடுத்து
போட்டு நடக்கும் புலியப் பாரு
காற்றில் எறியும் நெருப்பைப்போல சுட்டெறிக்கும் விசியைப் பாரு
நாற்றம் வேர்வை ரெண்டும் கொண்ட
ராஜாங்கத்தின் மன்னன் தானடா
இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா
இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா

பாட்ஷா பாட்ஷா பாட்ஷா பாட்ஷா
ஹேய் பாட்ஷா பாரு பாட்ஷா பாரு
பாச்சா என்னைக்கும் பலிக்கும் பாரு
பாட்ஷா திட்டம் ஜெயிக்கும் பாரு
பம்பாயில் இவன் பேர சொன்னா
அரபிக் கடலும் அலறும் பாரு
கள்ளிப் பயல்கள் சதியை எல்லாம்
சொல்லி அடிக்கும் சூரன் பாரு
நூறு முகங்கள் மாறி வந்தும்
ஏறு முகத்தில் இருக்கும் வீரந்தான்
இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா
இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா

Baashha - Baatcha Paaru

பாட்ஷா - நான் ஆட்டோக் காரன்

ஆண் : நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
நியாயமுள்ள ரேட்டுக் காரன்
நல்லவங்க கூட்டுக் காரன்
நல்லாப் பாடும் பாட்டுக்காரன்
காந்தி பொறந்த நாட்டுக் காரன்
கம்பெடுத்தா வேட்டைக் காரன்
பெரியவங்க உறவுக்காரன்
எரக்கமுள்ள மனசுக்காரண்டா - நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா - நான்
எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா
அஜக்கு இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்

ஆ - குழு : அஜக்கு இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்

ஆண் : நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
நியாயமுள்ள ரேட்டுக் காரன்

===

ஆண் : ஊரு பெருசாச்சு சனத்தொகை பெருசாச்சு

ஆ - குழு : ஜும்த லக்கடி ஜும்தா
ஹே ஜும்த லக்கடி ஜும்தா

ஆண் : ஆஹா...ஊரு பெருசாச்சு சனத்தொகை பெருசாச்சு
பஸ்ஸே எதிர்பார்த்து பாதி வயசாச்சு
வாழ்க்கை பரபார்க்கும் நேரத்திலே
இருப்போம் சாலைகளின் ஓரத்திலே

அட கண்ணடிச்சா காதல் வரும் சொல்றாங்க - நீங்க
கை தட்டுனா ஆட்டோ வரும் சொல்றேங்க - ஹாங் அட
கண்ணடிச்சா காதல் வரும் சொல்றாங்க - நீங்க
கை தட்டுனா ஆட்டோ வரும் சொல்றேங்க
முந்தி வரும் பாரு இது மூணு சக்கரத் தேரு
நன்மை வந்து சேரும் நீ நம்பி வந்து ஏறு

எரக்கமுள்ள மனசுக்காரண்டா - நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா - நான்
எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா
அஜக்கு இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்

ஆ - குழு : அஜக்கு இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்

ஆண் : நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
நியாமுள்ள ரேட்டுக் காரன்

===

ஆ... அம்மா தாய்மாரே ஆபத்தில் விட மாட்டேன்

ஆ - குழு : ஜும்த லக்கடி ஜும்தா
ஹே ஜும்த லக்கடி ஜும்தா

ஆண் : ஏ... அம்மா தாய்மாரே ஆபத்தில் விட மாட்டேன்
வெயிலோ புயல் மழையோ மாட்டேன்னு சொல்ல மாட்டேன்
அங்கங்கே பசியெடுத்தாப் பலகாரம்
அளவு சாப்பாடு ஒரு நேரம்
நான் பிரசவத்துக்கு இலவசமா வாரேம்மா - உன்
பிள்ளைக் கொரு பேரு வச்சும் தாரேம்மா
நான் பிரசவத்துக்கு இலவசமா வாரேம்மா - உன்
பிள்ளைக் கொரு பேரு வச்சும் தாரேம்மா
எழுத்தில்லாத ஆளும் அட எங்கள நம்பி வருவான்
அட்ரஸ் இல்லாத் தெருவும் - இந்த
ஆட்டோக்காரன் அறிவான்

எரக்கமுள்ள மனசுக்காரண்டா - நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா - நான்
எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா
அஜக்கு இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்

ஆ - குழு : அஜக்கு இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்

ஆண் : நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
நியாயமுள்ள ரேட்டுக் காரன்
நல்லவங்க கூட்டுக் காரன்
நல்லாப் பாடும் பாட்டுக்காரன்
காந்தி பொறந்த நாட்டுக் காரன்
கம்பெடுத்தா வேட்டைக் காரன்
பெரியவங்க உறவுக்காரன்
எரக்கமுள்ள மனசுக்காரண்டா - நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா - நான்
எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா
அஜக்கு இன்னா அஜக்கு தான் குமுக்கு இன்னா குமுக்கு தான்
அஜக்கு இன்னா அஜக்கு தான் குமுக்கு இன்னா குமுக்கு தான்

ஆ - குழு : அஜக்கு இன்னா அஜக்கு தான்

ஆண் : அஜக்கு
குமுக்கு இன்னா குமுக்கு தான்
ஆண் : குமுக்கு

ஆ - குழு : அஜக்கு இன்னா அஜக்கு தான்

ஆண் : அஜக்கு
குமுக்கு இன்னா குமுக்கு தான்

ஆண் : குமுக்கு
குமுக்கு இன்னா குமுக்கு தான்

Baashha - Naan Autokaaran

பாட்ஷா - நீ நடந்தால் நடை அழகு

பெண்குழு : அழகு... அழகு...

பெண் : நீ நடந்தால் நடை அழகு

பெண்குழு : அழகு

பெண் : நீ சிரித்தால் சிரிப்பழகு

பெண்குழு : அழகு

பெண் : நீ பேசும் தமிழ் அழகு

பெண்குழு : அழகு

பெண் : நீ ஒருவன் தான் அழகு

பெண்குழு : அழகு ...அழகு

பெண் : ஓ..ஓ நெற்றியிலே சரிந்து விழும் நீள முடி அழகு
அந்த முடி கோதுகின்ற அஞ்சு விரல் அழகு

பெண்குழு : அழகு... அழகு

பெண்குழு : பாப பாப பாப பா பப்பா தபநி தா நி ஸ ஸ ஸா
பாப பாப பாப பா பப்பா தபநி தா நி ஸ ஸ ஸா
த நீ த நீ ஸப கக ஸரி தபத நிஸா
ஸகம கரி ஸா தப கம கரி ஸா

===

பெண்குழு : சிக்கு சிக்குச்சாம் சிக்குச்சாம் சிக்குச்சாம்
சிலிர்த்துக்குச்சாம் சிக்குச்சாம்
சிக்கு சிக்குச்சாம் சிக்குச்சாம் சிக்குச்சாம்
சிலிர்த்துக்குச்சாம் சிக்குச்சாம்
சிக்குச்சாம் சிக்குச்சாம் சிக்குச்சாம்
சிக்குச்சாம் சிக்கிக்கிச்சாம்

ஆண் : நான் ஆசையை வென்ற ஒரு புத்தனும் அல்ல
என் காதலை சொல்ல நான் கம்பனும் அல்ல
உன் காது கடித்தேன் நான் கனவினில் மெல்ல
இன்று கட்டி அணைத்தேன் இது கற்பனை அல்ல

பெண் : அடி மனம் தவிக்கும் அடிக்கடி துடிக்கும்
ஆசையை திருகிவிடு
இரு விழி மயங்கி இதழ்களில் இறங்கி
உயிர் வரை பருகி விடு

ஆண் : ஓஹோ முத்தம் வழங்காது ரத்தம் அடங்காது

பெண்குழு : அழகு... அழகு

பெண் : ஆ..நீ நடந்தால் நடை அழகு

பெண்குழு : அழகு

பெண் : நீ சிரித்தால் சிரிப்பழகு

பெண்குழு : அழகு

பெண் : நீ பேசும் தமிழ் அழகு

பெண்குழு : அழகு

பெண் : நீ ஒருவன் தான் அழகு

பெண்குழு : அழகு... அழகு... (இசை)

பெண்குழு : ஓ...ஓ...ஓஹோஹோ..ஹோ..ஹோ..ஓ..
ஓ...ஓ...ஓஹோஹோ..ஹோ..ஹோ..ஓ..
ஓஹோ..ஹோ..ஹோ..ஓ
ஓஹோ..ஹோ..ஹோ..ஓ

===

பெண் : நான் பார்ப்பது எல்லாம் அட உன் முகம் தானே
நான் கேட்பது எல்லாம் அட உன் குரல் தானே
அந்த வான் மழை எல்லாம் இந்த பூமிக்கு தானே
என் வாலிபம் எல்லாம் இந்த சாமிக்கு தானே

ஆண் : மடல் கொண்ட மலர்கள் மலர்ந்தது எனக்கு
மது ரசம் அருந்தட்டுமா
விடிகின்ற வரையில் முடிகின்ற வரையில்
கவிதைகள் எழுதட்டுமா
முத்தம் என்ற கடலில் முத்து குளிப்போமா

பெண்குழு : அழகு... அழகு

ஆண் : ஓ..நீ நடந்தால் நடை அழகு

பெண்குழு : அழகு

ஆண் : நெருங்கி வரும் இடை அழகு

பெண்குழு : அழகு

ஆண் : வேல் எரியும் விழி அழகு

பெண்குழு : அழகு

ஆண் : பால் வடியும் முகம் அழகு

பெண்குழு : அழகு.. அழகு

ஆண் : ஓ..ஓ தங்க முலாம் பூசி வைத்த அங்கம் ஒரு அழகு
தள்ளி நின்று எனை அழைக்கும்
தாமரையும் அழகு

பெண்குழு : அழகு.. அழகு.. அழகு.. அழகு

Baassha -  Azhagu Azhagu

பாட்ஷா - ரா ரா ரா ராமையா

ஆண் : ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா
அட ரா ரா ரா ராமையா நான் புட்டு புட்டு வைக்க போறேன் பாரையா

===

ஆண் : முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல
நீ ரெண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல (இசை)

ஆண் : முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல
நீ ரெண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல
மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல
நீ நாலாம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல
எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ
எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ
நீ எந்த எட்டில் இப்ப இருக்க நெனச்சுக்கோ

ஆண் : ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா
அஹ ஹா... ரா ரா ரா ராமையா நான் புட்டு புட்டு வைக்க போறேன்
பாரையா ஓ ஹொ ஹொய்

===

ஆண் : ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல
நீ ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல (இசை)
ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல
நீ ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல

ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமில்லை
நீ எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதியில்லை
எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ
எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ
நீ எந்த எட்டில் இப்ப இருக்க நெனச்சுக்கோ ஓ ஹோ

ஆண் : ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா
அட ரா ரா ரா ராமையா நான் புட்டு புட்டு வைக்க போறேன் பாரையா
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா
திக்கு எட்டும்படி சொல்ல போறேன் கேளைய்யா இக்கட

பெண்குழு : ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா
அட ரா ரா ரா ராமையா நான் புட்டு புட்டு வைக்க போறேன் பாரையா

Baashha - Ra Ra Ramiyah

Followers