Pages

Search This Blog

Wednesday, December 18, 2013

காதலில் விழுந்தேன் - தோழியா என் காதலியா

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே(2)
மடி மீது தூங்கச் சொல்கிறாய்
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்
ஓ ஓ ஓ பெண்ணே

ஏனடி என்னைக் கொல்கிறாய்
உயிர் வரை சென்று தின்கிறாய்
மெழுகு போல் நான் உருகினேன்
என் கவிதையே என்னைக் காதல் செய்வாய்

கனவிலும் நீ வருகிறாய்
என் இமைகளைத் தொட்டுப் பிரிக்கிறாய்
இரவெல்லாம் செத்துப் பிழைக்கிறேன்
உன் பதில் என்ன அதை நீயே சொல்லடி

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே (2)

Lets get it down
Just wanna Give my heart to you
My love is just true
Wanna take you on spark
Come oh you Just be on my side
No I am gonna give it upto cool
Read that Because you
You let me let me get a hold of this
again a true true
First let me tell you who you are
Girl you are made for me forever
You get there but it ought to stop
Oh change your speed now

ஒரு துளி நீர் வேண்டி நின்றேன்
அடை மழை தந்து என்னை மிதக்க விட்டாய்
சிலுவைகள் நான் சுமந்து நின்றேன்
சுகங்களைத் தந்து என்னை நிமிர வைத்தாய்
விழிகள் ஓரம் நீர்த் துளியை
மகிழ்ச்சி தந்து உலர வைத்தாய்
பாலைவனத்தில் பூக்கள் தந்து
சொர்க்கங்களைக் கண்ணருகில் காட்டினாய்
கருப்பு நிறத்தில் கனவு கண்டேன்
காலை நேரத்தில் இரவு கண்டேன்
வெள்ளை நிறத்து தேவதையே
வண்ணங்களைத் தந்து விட்டு என்னருகில் வந்து நில்லு

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே(2)

நம்சனனம்....

இருட்டுக்குள்ளே தனித்து நின்றேன்
மின்மினிப் பூச்சிகள் மிதக்க விட்டாய்
தனி அறையில் அடைந்து விட்டேன்
சிறகுகள் கொடுத்தென்னைப் பறக்க விட்டாய்
அலைகள் அடித்து தொலைந்து விடும்
தீவைப் போல மாட்டிக் கொண்டேன்
இறுதிச் சடங்கில் மிதிகள் படும்
பூவைப் போல கசங்கி விட்டேன்
தெய்வம் பூமிக்கு வருவதில்லை
தாயைப் பதிலுக்கு அனுப்பி வைத்தான்
தாயும் இங்கு எனக்கு இல்லை
எனக்கொரு தாய் அவன் உன் உருவில் தந்து விட்டான்

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே(2)
மடி மீது தூங்கச் சொல்கிறாய்
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்
ஓ ஓ ஓ பெண்ணே

ஏனடி என்னைக் கொல்கிறாய்
உயிர் வரை சென்று தின்கிறாய்
மெழுகு போல் நான் உருகினேன்
என் கவிதையே என்னைக் காதல் செய்வாய்

கனவிலும் நீ வருகிறாய்
என் இமைகளைத் தொட்டுப் பிரிக்கிறாய்
இரவெல்லாம் செத்துப் பிழைக்கிறேன்
உன் பதில் என்ன அதை நீயே சொல்லடி

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே(2)

Kadhalil Vizhunthen - Thozhiya

அக்னி நட்சத்திரம் - ஒரு பூங்காவனம் புதுமணம்

ஒரு பூங்காவனம் புதுமணம்
அதில் ரோமாஞ்சனம் தினம் தினம்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

(ஒரு பூங்காவனம் )

நான் காலைநேரத் தாமரை
என் கானம் யாவும் தேன்மழை
நான் கால்னடக்கும் தேவதை
என் கோவிலிந்த மாளிகை
எந்நாளும் தென்றல் வந்து வீசிடும்
என்னோடு தோழி போலப் பேசிடும்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

(ஒரு பூங்காவனம் )

நான் வானவில்லை வேண்டினால்
ஓர் விலைகொடுத்து வாங்குவேன்
வெண் மேகக் கூட்டம் யாவையும்
என் மேத்தையாக்கித் தூங்குவேன்
சந்தோஷப் பூக்கள் எந்தன் சோலையில்
சங்கீதம் பாடும் அந்தி மாலையில்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

Agni Natchathiram - Oru Poonga Vanam

அக்னி நட்சத்திரம் - நின்னுக்கோரி வரணும்

 நின்னுக்கோரி வரணும் வரணும் - இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கேனத் தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே - அனுதினமும்

(நின்னுக்கோரி )

உன்னைத்தான் சின்னப்பெண் ஏதோ கேட்க
உள்ளுக்குள் அங்கங்கே ஏக்கம் தாக்க
மொட்டுத்தான் மெல்லத்தான் பூப்போல் பூக்க
தொட்டுப்பார் கட்டிப்பார் தேகம் வேர்க்க
பூஜைக்காக வாடுது தேகம் உன்னைத் தேடுது
ஆசை நெஞ்சம் ஏங்குது ஆட்டம் போட்டுத் தூங்குது
உன் ந்யபகம் நீங்காமல் என் நெஞ்சிலே தீயாகக் கொதித்திட

(நின்னுக்கோரி )

பெண்ணல்ல வீணைதான் நீதான் மீட்டு
என்னென்ன ராகங்கள் நீதான் காட்டு
இன்றல்ல நேற்றல்ல காலம்தோறும்
உன்னோடு பின்னோடு காதல் நெஞ்சம்
வன்னப்பாவை மோகனம் வாடிப்போன காரணம்
கன்னித்தொகை மேனியில் மின்னல் பாய்ச்சும் வாலிபம்
உன்னோடுனான் ஓயாமல் தேனாற்றிலே நீராடத் நினைக்கையில்

Agni Natchathiram - Ninnukori Varanam

அக்னி நட்சத்திரம் - வா வா அன்பே அன்பே

வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்

(வா வா அன்பே அன்பே...)

நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும்
காலம் தோறும் என்னைச் சேரும் கண்மணி
பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரைக்கூறும் பொன்மணி

காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்
காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்

நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே
நீயின்றி ஏது பூவைத்த மானே
இதயம் முழுதும் எனது வசம்

(வா வா அன்பே அன்பே...)

கண்ணன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம்
கானல் அல்ல காதல் என்னும் காவியம்
அன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம்
பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்

காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது

உன் தோளில் தானே பூமாலை நானே
சூடாமல் போனால் வாடாதோமானே
இதயம் முழுதும் எனது வசம்

(வா வா அன்பே அன்பே...)

Agni Natchathiram - Vaa Vaa Anbe Anbe

அக்னி நட்சத்திரம் - தூங்காத விழிகள்

தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

மாமர இலை மேலே ..ஆ...ஆ...ஆ
மாமர இலை மேலே மார்கழி பனிபோலே
பூமகள் மடி மீது நான் தூஙவோ
மாமர இலை மேலே மார்கழி பனிபோலே
பூமகள் மடி மீது நான் தூஙவோ
ராத்திரி பகலாக ஒருபோதும் விலகாமல்
ராஜனை கையேந்தி தாலாட்டவோ
நாளும் நாளும் ராகம் தாளம்
சேரும் நேரம் தீரும் பாரம்
ஆஆ...ஆஆ...ஆ...

தூங்காத விழிகள்..........

ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேறும் நிலை என்னவோ
ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேரும் கதை அல்லவோ
மாதுளம் கனியாட, மலராட, கொடியாட
மாருதம் உறவாடும் கலை என்னவோ
வாலிபம் தடுமாற ஒருபோதை தலைக்கேற
வார்த்தையில் விளஙாத சுவையல்லவோ
மேலும் மேலும் மோகம் கூடும்
தேகம் யாவும் கீதம் பாடும்
ஆஆ...ஆஆ...ஆ..

தூங்காத விழிகள்............

Agni Natchathiram - Thoongatha Vizhigal

Tuesday, December 17, 2013

குருவி - மொழ மொழன்னு

மொழ மொழன்னு எம்மா எம்மா
மொழ மொழன்னு எம்மா எம்மா
மொழ மொழன்னு எம்மா எம்மா
மொழ மொழன்னு எம்மா எம்மா

நீயும் நானும் ஜோடி தான்
சேர்ந்து நானும் ஆதி தான்
ஆட்டம் பாட்டம் கூடி தான்
வந்தா கூட்டம் கோடி தான்

மொழ மொழன்னு எம்மா எம்மா
மொழ மொழன்னு எம்மா எம்மா

ஏய் தில்லையடி வள்ளியம்மா
தில்லு இருந்த நில்லடிமா
தில்லாலங்கடி ஆடுவோமா ,
திருட்டு தனம் பண்ணுவோமா

மொழ மொழன்னு எம்மா எம்மா
மொழ மொழன்னு எம்மா எம்மா

இன்ஜிமுட்டாய் இடுப்பு அழகி
மொழடுபு உடுபழகி
பெப்பேர் முட்டாய் பல் அழகி
கொட்ட பார்த்து கண் அழகி
ராங்கி மனச வாங்கி
ஏங்க வச்ச ?
ஏண்டி என்ன போங்க வச்சே ?
ஏய் தொட தொடனு நடகுறான்
பட படன்னு சிரிக்கிறான்
பட படன்னு இருக்கிறான்
கொட கொடனு கொடையுறான்

மொழ மொழன்னு எம்மா எம்மா
மொழ மொழன்னு எம்மா எம்மா

சிதலட்டு குளுட்டிக்கலாம்
கை காடியில் தூட்டிக்கலாம்
எனூரிளே ஒளிஞ்சிகலாம்
குலுதடியிலே தேடிகலாம்
வா வா , வா வா
கோப போலட்டிக்கலாம்
பாண்டி ஆட்டம் அடிக்கலாம்

மொழ மொழன்னு எம்மா எம்மா
மொழ மொழன்னு எம்மா எம்மா
மொழ மொழன்னு எம்மா எம்மா
மொழ மொழன்னு எம்மா எம்மா …

Kuruvi - Mozha Mozhannu

குருவி - Happy New Year

ஆண்: Are youll ready for the countdown?
Ladies and Gentlemen, Players and Hustlers
Five.. Four.. Three.. Two.. One.. Happy New Year!!......
Dengar dengarlah cerita si gadis, jejakanya di cari disini,
Mukanya comel, badannya tegap, suara dan matanya di hati..

ஆண்: அவன் தேடி தேடி அலையுறான் ஊருக்குள்ளே
தேபேராட கேர்ள் ஹண்டிங் ஹேர் மாப்பிள்ளை
ரெண்டு கண்களை மட்டும் நீ பார்த்துபுட்டே
கடைப்பான் வெடிக்க வடிவேலனை
இவ இவ இவ இவா....

பெண்: தானானே தந்தானானே தந்தானானே தந்தானா
தானானே தந்தானானே தந்தானானே தானேனா
தானானே தந்தானானே தந்தானானே தந்தானா
தானானே தந்தானானே தந்தானானே தானேனா

பெண்: கெட்ட பையன் கெட்ட பையன்
கண்ணை போல வந்த பையன் Oh.. Know!
என் மனசு சுட்டே புட்டான்
U know u know u know u know!
ரொம்ப ரொம்ப கெட்ட பையன்
ரவுண்டு அடிக்க விட்ட பையன்
கண்டுபிடி எங்க இருக்கான்
U know u know u... know...

ஆண்: போகுது தேயுது புத்தாண்டு
அவன் கண்களை பார்த்தேன் குரலை கேட்டேன்
ஆச வச்சேன் ஓ மனசு தெச்தேன்
சிங்க குட்டி சுத்த தங்க கட்டி சொல்ல போனா
இளையதளபதி...

பெண்: தானானே தந்தானானே தந்தானானே தந்தானா
தானானே தந்தானானே தந்தானானே தானேனா

ஆண்: Pretty girl searching for her boy
Gila gila crazy
Will she ever find, we will never know?
Love him so easy??

(இசை...)

பெண்: அண்டக்கா கசம் கசம்
அபுக்கா ஹூகும் ஹூகும்
மந்திரத்தை பூட்ட பாத்த
U know u know u know u know!
சிசேம் தொறக்கவில்ல
சிங்கம் கெடைக்கவில்லை
Yah... Yah...
யாரவன் எங்கே இருக்கான்
U know u know u... know

ஆண்: தமிழ் பெண்ணே நீ தேடும் பையன் சுத்தும்
குருவி கூட்டம் அருவி பட்டாம்
பூச்சி போல பறக்கும் அது நெனச்சு
ஜோதி கெடச்சா கண்ணாலே கட்டிக்கோ
வைகாசி வெடி வெடிச்சா
சிவகாசி திருப்பாச்சி
தீராத விளையாட்டு பிள்ளை அவன்
ஆடும் கண்ணாமூச்சி தங்கமே தங்கம்
தங்கமே தங்கம் கேளு... கேளு....

பெண்: தானானே தந்தானானே தந்தானானே தந்தானா
தானானே தந்தானானே தந்தானானே தானேனா

ஆண்: சரியான லூசு போல,
Tension, Ei macam mana le nie
இப்போ பூருவோம்... பூரே.. பூரே... பூரே...
Dance for me, tamilnadu dance for me, taarigithathom!
Dance for me, I m gonna,
Kuthu dance for me,
All day go, party time! All come dance for me!
One more time, ஆட்டம் போடு!!

பெண்: அத்திரி புத்திரி ஆச்சுலா
என் கவனம் செதரி போச்சுலா
அவன பார்த்த அடுத்த நிமிசம்
நின்னா போச்சு மூச்சுலா

ஆண்: ஊரே...
பெண்: கேக்கல...

ஆண்: சரியா...
பெண்: பாக்கல...

பெண்: சொலட்டிப் போட்ட சோழி போல
சொழன்டு நின்னே லா!...

ஆண்: ..................
Sing kuruvi gal
................
கைய வச்ச தீ பறக்கும்
........ fire lah
tornado puyalu lah
முகமுடி சூடி மறைந்த காதலன் எவனோ
........ here we go

பெண்: தானானே தந்தானானே தந்தானானே தந்தானா
தானானே தந்தானானே தந்தானானே தானேனா
தானானே தந்தானானே தந்தானானே தந்தானா
தானானே தந்தானானே தந்தானானே தானேனா
R U FEELING ALL RIGHT??!!

Kuruvi - Happy New Year

Followers