Pages

Search This Blog

Tuesday, December 17, 2013

குருவி - தேன் தேன்

பெண்: தேன் தேன் தேன்...
உன்னைத் தேடி அலைந்தேன்...
உயிர்த் தீயாய் அலைந்தேன்...
சிவந்தேன்...

ஆண்: தேன் தேன் தேன்...
என்னை நானும் மறந்தேன்...
உன்னைக் காண தயந்தேன்...
கரைந்தேன்...

பெண்: என்னவோ சொல்லத் துணிந்தேன்...
ஏதேதோ செய்யத் துணிந்தேன்...
உன்னோட சேரத்தானே நானும் அலைந்தேன்.... (தேன் தேன்...)

(இசை...)

பெண்: அள்ளவரும் கையை ரசித்தேன்
ஆளவரும் கண்ணை ரசித்தேன்
அடங்காமல் தாவும் உந்தன் அன்பை ரசித்தேன்

ஆண்: முட்ட வரும் பொய்யை ரசித்தேன்
மோத வரும் மெய்யை ரசித்தேன்
உறங்காமல் எங்கும் உந்தன் உள்ளம் ரசித்தேன்

பெண்: நீ சொல்லும் சொல்லை ரசித்தேன்
இதழ் துள்ளாததையும் ரசித்தேன்

ஆண்: நீ செய்யும் யாவும் ரசித்தேன்
எதும் செய்யாததையும் ரசித்தேன்

பெண்: உன்னாலே தானே நானும் என்னை ரசித்தேன்... (தேன் தேன்...)

(இசை)

ஆண்: சேலையில் நிலவை அறிந்தேன்
காலிலே சிறகை அறிந்தேன்
கனவிலே காதல் என்று நேரில் அறிந்தேன்

பெண்: திருடனே உன்னை அறிந்தேன்
திருடினாய் என்னை அறிந்தேன்
இன்னும் நீ திருடத்தானே ஆசை அறிந்தேன்

ஆண்: என் பக்கம் உன்னை அறிந்தேன்
பல சிக்கல் உன்னால் அறிந்தேன்

பெண்: ஆண் தென்றல் உன்னை அறிந்தேன்
அதில் கூசும் பெண்மை அறிந்தேன்

ஆண்: நீ நடமாடும் திராட்சைத் தோட்டம் எதிரில் அறிந்தேன்... (தேன் தேன்...)

Kuruvi - Thaen Thaen Thaen

குருவி - பாழானது பாழானது

ஆண்: பாழானது பாழானது பாழானது
யார் கையிலும் சிக்காமலே வாலாட்டுது
ஏய் நான் தேடுறேன் ஒன்னத்தான்
நீ தேடுறே என்னத்தான்
ஓ நான் தீட்டுற திட்டம் தான் என்னாளுமே வெற்றி தான்
அல்லா அல்லா அல்லா அல்லா ஓஓ... (பாழானது பாழானது...)

(இசை...)

ஆண்: சில்லுன்னு சூடாகுறியே
நில்லுன்னு நீ ஓடுறியே
தள்ளுன்னு தள்ளாடுறியே ஓ....

பெண்: குச்சுபிடி குச்சுப்புடியே உன் கண்ணுல குச்சுப்புடியே
நீயில்லையே நம்பும்படியே ஓ.. ஓ.. ஓ....

ஆண்: ஒரு வீச்சு தான் ஒரு பேச்சு தான் எதிர் பேச்சு எது
அதிர் வேட்டு தான் அதிர் வேட்டு தான் எனை பார்க்கும் போது

பெண்: பலேபாண்டியா பலேபாண்டியா சமத்தானவன் தான்
உனை தாக்கவும் உனை சாய்க்கவும் வருவான் அவன் தான்
ஆண்: ஹேய் ஒன்னோடுதான் நான் நம்பியார்
என்னுள்ளே நான் எம்.ஜி.ஆர்
அல்லா அல்லா அல்லா அல்லா... (பாழானது பாழானது...)

(இசை...)

ஆண்: ஓ.. தித்திரி தித்திரி தீ நிக்காதடி தேடி துருவி
சிக்காதடி அந்தக் குருவி....

பெண்: பம்பர பம்பரதான் வச்சகுறி வச்சகுறி தான்
வருவான் என் சூரப்புலி தான்... யோவ் யோவ் யோவ்
ஆண்: அலட்டாதடி அலட்டாதடி மட சாம்புராணி
இருக்கும் இடம் தெரியாமலே அலைபாயுறே நீ

பெண்: மெகா சைஸ் ல மெகா சைஸ் ல பிலிம் காட்டுற நீ
மலைக் கள்ளனா மலைக் கள்ளனா எத தேடுற நீ

ஆண்: ஹேய் முன்ன நீ டார் டார் டார்
என் வாத்தியார் சூப்பர் ஸ்டார்
அல்லா அல்லா அல்லா அல்லா ஓ... (பாழானது பாழானது...)

Kuruvi - Palaanadhu Palaanadhu

குருவி - டண் டண் டர்ணா

குழு: டண் டண் டர்ணா டணக்கு நக்குன டர்ணா
டண் டண் டர்ணா க்கு சிக்கா.. க்கு சிக்கா...
டணக்கு நக்குன டர்ணா டர்ணக்கா டணகுணக்கா
க்கு சிக்கா.. க்கு சிக்கா...க்கு சிக்கா.. க்கு சிக்கா...
க்கு சிக்கா.. க்கு சிக்கா...க்கு சிக்கா.. க்கு சிக்கா...
க்கு சிக்கா.. க்கு சிக்கா...க்கு சிக்கா.. க்கு சிக்கா...

(இசை...)

ஆண்: டண் டண் டர்ணா டணக்கு நக்குன டர்ணா
குருவியோட பாட்டு கொழுத்துங்கடா வேட்டு
டண் டண் டர்ணா
குழு: க்கு சிக்கா.. க்கு சிக்கா...

ஆண்: டண்டணக்கா டர்ணா
குழு: டர்ணக்கா டணக்குணக்கா

ஆண்: உலக நீ ஜெயிச்சா உன்ன நா ஜெயிப்பேன்
அலையா கூச்சலிட்டா புயலாவேன்
பிறந்தேன் தாய் கருவில் வளர்ந்தேன் தமிழ் தெருவில்
அத்தனைக்கும் மேல நாம அண்ணன் தம்பிடா
டண் டண் டர்ணா
குழு: க்கு சிக்கா.. க்கு சிக்கா...

ஆண்: டண்டணக்கா டர்ணா
குழு: டர்ணக்கா டணக்குணக்கா

ஆண்: குருவியோட பாட்டு கொழுத்துங்கடா வேட்டு
டண் டண் டர்ணா

(இசை...)

ஆண்: ஏய்... சொந்த காலில் நின்னாக்க சோறு போடும் பூமி
அன்புள்ள மனிசனெல்லாம் ஆறறிவு சாமி
சாக்கடைய தூர் எடுத்து சந்தனமா மாத்து
உன் வேர்வைக்கு சம்பளம் தான் வேப்பமர காத்து
யாரோ சொன்னானு சொல்லாதே
நேரா பாக்காம நம்பாதே
போனா போச்சுன்னு போகாதே
ஏய் வரிப்புலியின் கோடெல்லாம் வறுமை கோடு ஆகாதே
டண் டண் டர்ணா
குழு: க்கு சிக்கா.. க்கு சிக்கா...

ஆண்: டண்டணக்கா டர்ணா
குழு: டர்ணக்கா டணக்குணக்கா

ஆண்: குருவியோட பாட்டு கொழுத்துங்கடா வேட்டு
டண் டண் டர்ணா

குழு: ஏய் டனக்கு ணக்கா டனக்குதான்
ஏய் ஒதுங்கு
ஏய் சிலுக்கு சிப்பான் சிலுக்குதான்
ஏய் சுறுங்குடா
ஏ ஆ சிக்கா
ஏ அமுக்கு சிக்கா ஏ
ஏ உட்டா லட்டா ஏ
ஏ டபக்கு டப்பா ஏ
ஒத்துடா
டர்ணக்கா டணக்குநக்கா
டர்ணக்கா டணக்குநக்கா
டுர்ர்ர்ர்ர்ர்ர்.... அலே அலே....

(இசை...)

ஆண்: ஏ ஒத்த அடி நீ அடிச்சா நெத்தியடி அடிப்பேன்
மத்தபடி தொப்புள்கொடி சொன்னபடி நடப்பேன்
நெஞ்சுக்குள்ளே பட்டாம்பூச்சி கைய தட்டி பறக்கும்
என் அஞ்சு விரல் எப்போதுமே ஆயுதமா இருக்கும்
என் சாப்பாட்டில் உப்புக் கல்லு நீயடா
என் வீட்டுக்கு செங்கல்லும் நீயடா
என் வேகத்துக்கு வேகத் தடை இல்லடா
என்ன சிண்டிப் பாரு சிறுகிற சிங்கத்தோட புள்ளடா
டண் டண் டர்ணா
குழு: க்கு சிக்கா.. க்கு சிக்கா...

ஆண்: டண்டணக்கா டர்ணா
குழு: டர்ணக்கா டணக்குணக்கா

ஆண்: குருவியோட பாட்டு கொழுத்துங்கடா வேட்டு
டண் டண் டர்ணா (உலக நீ ஜெயிச்சா...)

Kuruvi - Dandaana Darna

கருத்தம்மா - பச்சைக்கிளி பாடும் ஊரு

பச்சைக்கிளி பாடும் ஊரு
பஞ்சு மெத்தை புள்ள பாரு
மஞ்சல் ஆறு பாயும் அந்த ஊரு
குட்டி போட்ட ஆட்டு கூட்டம்
கொண்டையாட்டும் கோழி கூட்டம்
சொந்தம் உள்ள சாதி சனம் பாரு
பசு மாட்டுக்கு ஒரு பாட்டு
வெளிநாட்டுக்கு அது விளையாட்டு
(பசு மாட்டுக்கு..)
(பச்சைக்கிளி..)

தண்ணி குடம் கொண்ட பொம்பளைய போலே
ஊரு கதை பேசிக்கொண்டு நதி நடக்கும்
பச்சைக்கிளி மெல்ல பல்லவியே சொல்ல
குயில் வந்து சரணத்தில் குரல் கொடுக்கும்

கொண்டாட்டம் இங்கு தென்றலுக்கும் தினம் தினம்
தேரோட்டம் அட பட்டணத்தில் இல்லை இந்த
காற்றோட்டம் அந்த நந்தவன பூவே
நாக்காலி அதில் அமர்வேன் வண்டாட்டம்
(பச்சைக்கிளி..)

குட்டை காம தேவர் கட்டி வச்சதம்மா
கூதல் வரும் முன்னாலே குளிக்கட்டுமா
ஒத்தையடி பாதை போகும் இடம் எங்கே
ஒத்தையிலே நானாக நடக்கட்டுமா

சங்கீதம் எங்கே கோழி
ஆடு கத்தும் சத்தம் சங்கீதம்
கொஞ்சம் தள்ளி நின்னு ரசிப்பது சந்தோஷம்
எங்கள் ஜன்னல் பக்கம் எப்பொழுதும் பூ வாசம்
அந்த சுகமோ பரவசம்
(பச்சைக்கிளி..)

Karuththamma - Pacha Kili Paadum

கரகாட்டக்காரன் - குடகு மலை காற்றில் வரும்

குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி
ஏதோ நினைவு தான் உன்ன சுத்தி பறக்குது
என்னோட மனசு தான் கண்டபடி தவிகிது
ஒத்த வழி என் வழி தானே மானே
குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி

மானே மயிலே மரகத குயிலே
தேனே நான் பாடும் தேமாங்கே
பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே
காதில் கேட்டயோ என் வாக்கே
உன்ன எண்ணி நான் தான் ஒரு ஊர்கோலம் போனேன்
தன்னந்தனியாக நிக்கும் தேர் போல ஆனேன்
பூ பூத சோலையிலே பொன்னான மாலையிலே
நீ வந்த வேளையிலே மயிலே
நீர் பூத்த கண்ணு ரெண்டு
நீங்காத தாகம் கொண்டு
பாடும் பாட்டு
குடகு மலை காற்றில் ஒரு பாட்டு பாடுது இந்த பைங்கிளி
குடகு மலை காற்றில் ஒரு பாட்டு பாடுது இந்த பைங்கிளி

மறந்தால் தானே நெனைகனும் மாமா
நினைவே நீதானே நீ தன்னே
மனசும் மனசும் இணைந்ஜது மாமா
நெனச்சு தவிசேனே நான் தானே
சொல்லி விட்ட பாட்டு தேக்கு காதோட கேட்டேன்
தூது விட்ட ராசா மனம் தடுமாற மாட்டேன்
ஊரென்ன சொன்ன என்ன ஒன்னாக நின்ன enna
உன் பேரை பாடி நிப்பேன் மாமா
தூங்காம உன்ன எண்ணி துடிசாளே இந்த கன்னி
வா மாமா

Karagattakaran - Kudagu Malaik Kaatru

கரகாட்டக்காரன் - இந்த மான் உந்தன்

பெ: இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்துதான் சிந்து பாடும்
இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்துதான் சிந்து பாடும்
ஆ: சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே
பெ: இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்த மான்
...

ஆ: வேல்விழி போடும் தூண்டிலே.. நான் விழலானேன் தோளிலே
பெ: நூலிடை தேயும் நோயிலே.. நான் வரம் கேட்கும் கோயிலே
ஆ: அன்னமே.. ஆஆஆஆஆ.. ஆஆஆஆஆ...
ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ..
அன்னமே எந்தன் சொர்ணமே
உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே
கன்னமே மதுக்கிண்ணமே
அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே
பெ: எண்ணமே தொல்லை பண்ணுமே
பெண்ணென்னும் கங்கைக்குள் பேரின்பமே

பெ: இந்த மான் உந்தன் சொந்த மான்
ஆ: பக்கம் வந்துதான் சிந்து பாடும்
பெ: சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
ஆ: கண்மணியே
பெ: சந்திக்க வேண்டும் தேவனே
ஆ: என்னுயிரே
...

பெ: பொன்மணி மேகலை ஆடுதே.. உன் விழிதான் இடம் தேடுதே
ஆ: பெண்ணுடல் பார்த்ததும் நாணுதே.. இன்பத்தில் வேதனை ஆனதே
பெ: எண்ணத்தான்.. ஆஆஆஆஆ.. ஆஆஆஆஆ...
ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ..
எண்ணத்தான் உன்னை எண்ணித்தான்
உடல் மின்னத்தான் வேதனை தின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சைக் கிள்ளித்தான்
என்னை சொர்க்கத்தில் தேவனும் சோதித்தான்
ஆ: மோகம்தான் சிந்தும் தேகம்தான்
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான்

ஆ: இந்த மான்
பெ: உந்தன் சொந்த மான்
ஆ: பக்கம் வந்துதான்
பெ: சிந்து பாடும்.. இந்த மான்
ஆ: எந்தன் சொந்த மான்
பெ: பக்கம் வந்துதான்
ஆ: சிந்து பாடும்
பெ: சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
ஆ: கண்மணியே.. சந்திக்க வேண்டும் தேவியே
பெ: என்னவனே

Karagattakaran - Indha Maan

கண்ணுக்குள் நிலவு - ஒரு நாள் ஒரு கனவு

ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது

வானவில்லில் நடந்து சென்று சிரித்திருக்கும் நட்சத்திர பூ பறிப்போம்
வெள்ளி திரை படகேடுத்து ஆகாய கங்கை அலைகளில் துள்ளி குதித்தோம் நீச்சலடித்திட

ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது

நதியோரம் நதியோரம் என்னை சுற்றி பறந்தது கிழி கூட்டம் ம்ம்ம் ...
கிளிகூட்டம் கிளிகூட்டம் வந்ததேனில் நீயொரு பழத்தோட்டம் ம்ம்ம் ...
பறக்கும் கிளிகளிலே ஒரு கிளி உன்னை போல் உருவெடுக்க
கிளியே உனக்காக நானும் கிளி போல் அவதரிக்க
ரக்கைகள் கொண்டு வா விண்ணிலே பறப்போம்..
உள்ளங்கள் கலப்போம் வண்ணம் சூடும் வண்ணகிளி

 

ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது

 

எதனாலே வெண்ணிலவே அவள் போல் நீயும் இளைத்தாயோ
உன் மனதை உன்மனத்தை எனை போல் எவருக்கும் கொடுத்தாயோ ஹோ
ஒளி விடும் முகத்தினிலே கரை ஏன் முத்த அடையாளங்களோ
இரவில் விழித்திருந்து நீ தான் கற்றதென்ன பாடங்களோ
மின்னிடும் கண்ணிலே என்னவோ உள்ளதே
சொல்லம்மா சொல்லம்மா ..நெஞ்சில் ஆடும் மின்னல் கோடி

 

ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது
வானவில்லில் நடந்து சென்று சிரித்திருக்கும் நட்சத்திர பூ பறிப்போம்
வெள்ளி திரை படகேடுத்து ஆகாய கங்கை அலைகளில் துள்ளி குதித்தோம் நீச்சலடித்திட


ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது

Kannukkul Nilavu - Oru Naal Oru Kanavu

Followers