Pages

Search This Blog

Thursday, November 7, 2013

காதலுடன் - பூக்களின் காதினில் வண்டுகள்

பூக்களின் காதினில் வண்டுகள் ரகசிய
பாடல்கள் பாடுது காதலுடன்
மூங்கில் துளையினில் மெல்லிய காற்று
மோகனம் இசைக்குது காதலுடன்
(பூக்களின்..)

இதயங்கள் துடிக்குது ஆவலுடன்
கடிதங்கள் பறக்குது காதலுடன்
அவரவர் மனதினில் அவரவர் அளவுக்கு
சிறகுகள் காதலுடன்

காதலுடன் உன் காதலுடன்
காதலுடன் உயிர் காதலுடன்
காதலுடன் உன் காதலுடன்
காதலுடன் உயிர் காதலுடன்
(பூக்களின்..)

நேற்று வரை ஒரு யாசகனாய்
உன் பார்வைக்கு காத்திருந்தேன்
பல ஆசைகளை நான் சுமந்தபடி
உன் வருகைக்கு தவமிருந்தேன்
தேவதையே உன் தேவை என்ன
உடன் மரங்களை கேட்டுவிடு
சிறு கண்ணசைவில் உன் காதலனை
ஒரு வள்ளல் ஆக்கிவிடு
வானத்து வானத்து நிலவெடுத்து
நீ வாசலில் வாசலில் வெளிச்சமிடு
பூசணி பூசணி பூப்பரித்து
புது புள்ளிகள் வைத்து கோலமிடு
என் கனவுகள் யாவையும்
உன் வசம் தந்தேன்
நிஜமாய் நிஜமாய் மாற்றிவிடு

காதலுடன் உன் காதலுடன்
காதலுடன் உயிர் காதலுடன்
காதலுடன் உன் காதலுடன்
காதலுடன் உயிர் காதலுடன்
(பூக்களின்..)

நிலவினிலே உன் பெயரெழுதி
நான் இரவினில் ரசித்திருப்பேன்
என் உயிரினிலே உன் பெயரெழுதி
நான் தினம் தினம் உச்சரிப்பேன்
சூரியனை நான் சிறைப்பிடித்து
உன் மூக்குத்தி ஆக்கிடவா
அடி சிம்ஃபனியில் உன் சிரிப்பொலியை
ஒரு சுரமாய் சேர்த்திடவா
காதலில் காதலை காதலனே
பல காலமும் ஆயிரம் பொய்கள் உண்டு
ஆயினும் ஆயினும் உன் போல
பொய் அழகாய் யாரும் சொன்னதில்லை
உன் கவிதையின் காதலை பொய் என்றாலும்
நிஜமாய் நிஜமாய் நேசிக்கிறேன்

காதலுடன் உன் காதலுடன்
காதலுடன் உயிர் காதலுடன்
காதலுடன் உன் காதலுடன்
காதலுடன் உயிர் காதலுடன்
(பூக்களின்..)

Kadhaludan - Pookalin Kathinile 

சூர்யவம்சம் - சலக்கு சலக்கு சரிக

சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு
வௌளக்கு வௌளக்கு வெக்கம் வந்தா வௌளக்கு வௌளக்கு
ஒனக்குக் குளிரினா என்ன எடுத்துப் போத்திக்கோ
மாமன் தோளில மச்சம் போல ஒட்டிக்கோ
அடடா அல்வாத்துண்டு இடுப்பு ஒன் இடுப்பு
அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கௌளப்பு

சலக்கு ...

அடியே மெட்டிச் சத்தம் கேட்காமத்தான்
தலையே வெடிச்சிருச்சு வெகுனேரந்தான்
வரப்பில் ஒன்னப் பாத்தா மறு வேளதான்
இடுப்பில் நிக்காதைய்யா என் சேலதான்
காலையிலும் காட்சி உண்டு சாத்திக்கடி கதவத்தான்
கட்டிலுக்குக் கால்வலிச்ச கட்டாந்தர படுக்கதான்
ஒடும்பு முழுக்க இப்ப ஒரு ரயிலு ஓடுது மச்சான்
களச்சு நொறுக்கச் சொல்லி என் வளையல் கெஞ்சுது மச்சான்
அடடா அல்வாத்துண்டு இடுப்பு ஒன் இடுப்பு
அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கௌளப்பு

சலக்கு ..

கெழக்கே வெளுக்காம இருந்தாலென்ன?
இரவே முடியாமத் தொடர்ந்தாலென்ன?
குடையே பிடிக்காம நனஞ்சாலென்ன?
படுக்க சுருட்டாம கெடந்தாலென்ன?
மார்கழியில் பாய்விரிச்சா மாசிவந்தா மசக்கதான்
ஆத்தங்கர அரசமரம் சுத்தவேணாம் ஜாலிதான்
ஒனக்குல் விழுந்தபின்னே நான் எனக்குள் எழுந்ததென்ன?
வௌளக்கு அணச்ச பின்னே ஒரு வெளிச்சம் தெரிஞ்சதென்ன?
அடடா அல்வாத்துண்டு இடுப்பு ஒன் இடுப்பு
அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கௌளப்பு

சலக்கு ...

Surya vamsham - Chalakku Chalakku

சூர்யவம்சம் - ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
என் பேரைச் சொல்லும் ரோசாப்பூ
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
என் பேரைச் சொல்லும் ரோசாப்பூ
காற்றில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக
காற்றில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக
(ரோசாப்பூ..)

மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக்கொடியாக ஒன்னா விட்டேன்
உசுருக்குள் கோயில் கட்டி ஒன்னக் கொலு வச்சுக் கொண்டாடினேன்
மழை பேய்ஞ்சாதானே மண் வாசம் ஒன்ன நெனச்சாலே பூவாசம்தான்
பாத மேல பூத்திருந்தேன் கையில் ரேகை போல சேர்ந்திருதேன்
(ரோசாப்பூ..)

கண்ணாடி பார்க்கையில அங்க முன்னாடி உம் முகம்தான்
கண்ணே நீ போகையில கொஞ்சும் கொலுசாக என் மனம்தான்
நிழலுக்கும் நெத்தி சுருங்காம ஒரு குடையாக மாறட்டுமா
மலை மேல் விளக்க ஏத்தி வைப்பேன்
உன்னப் படம்போல் மனசில் மாட்டிவைப்பேன்
(ரோசாப்பூ..)

Surya Vamsham - Rosappu Chinna Rosappu

சூர்யவம்சம் - நட்சத்திர ஜன்னலில்

நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது
சிறகை விரித்துப் பறப்போம் நம் உறவில் உலகை அளப்போம்
விளையாடலாம் நிலாவிலே நிழல் மூழ்குமோ தண்ணீரிலே
வானைப் புரட்டிப்போடு புது வாழ்வின் கீதம் பாடு
(நட்சத்திர..)

சித்திரங்களைப் பாடச்சொல்லலாம்
தென்றலை அஞ்சல் ஒன்று போடச்சொல்லலாம்
புத்தகங்களில் முத்தெடுக்கலாம்
பொன்னாடை இமயத்துக்குப் போட்டுவிடலாம்
பூமிக்குப் பொட்டு வைத்து பார்க்கலாம் பார்க்கலாம்
பூவுக்கும் ஆடை தைத்துப் போடலாமா
சூரியத் தேரை மண்ணில் ஓட்டலாம் ஓட்டலாம்
சொர்கத்தின் புகைப்படத்தைக் காட்டலாமா
வானம்பாடி வாழ்விலே
வருந்தி அழுவதில்லை வணங்கி விழுவதில்லை
(நட்சத்திர..)

சங்கீதப்புறா நெஞ்சில் பறக்கும்
சந்தோஷ முல்லை இங்கே வீட்டில் முளைக்கும்
சந்தமழை நம்மை நனைக்கும்
பூந்தென்றல் பாதை சொல்ல வந்து அழைக்கும்
சிட்டுக்குச் சிறகடிக்கச் சொல்லித்ததாரடி யாரடி
மீனுக்கு நீச்சல் கற்றுத் தந்ததாரோ
மேகத்தில் மீடு கட்டி வாழலாம் வாழலாம்
மின்னலில் கூரை பின்னிப் போடலாமா
ஓங்கும் உந்தன் கைகளால்
வானைப் புரட்டிப்போடு புது வாழ்வின் கீதம் பாடு
(நட்சத்திர..)

Surya vamsam - Natchathira Jannalil

சூர்யவம்சம் - காதலா காதலா

காதலா காதலா காதலின் சாரலா (2)
தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் காதலா
கண்களா தூண்டிலா கண்களா தூண்டிலா
மாறினேன் மீன்களாய்

காதலா காதலா காதலுன் சாரலா

இதயத் துடிப்பினில் ஓசையில்லை
எடுத்துச் சொல்லவும் பாஷையில்லை
இதற்குமுன் இந்த ஆசையில்லை
இமைகள் விசிறிகள் வீசவில்லை
தனிமையில் இன்று நான் நகம் கடித்தேன்
அடிக்கடி என்னை நான் தினம் ரசித்தேன்
கனவினில் உன்னை நான் படம்பிடித்தேன்
தலையணையோடு நான் அடம்பிடித்தேன்
ஏனிந்த மாற்றமோ?
(காதலா)

பெருகிப் பெருகி ஒரு அலையானேன்
உருகி உருகி பனித் துளியானேன்
பறந்து பறந்து ஒரு சிறகானேன்
நனைந்து நனைந்து இப்புல்வெளியானேன்
பூமியும் இங்கு பின் சுழல்வதென்ன
வானவில் ஒன்று என்னை வளைப்பதென்ன?
மலர்களெல்லாம் பொன் முடைப்பதென்ன
ரகசியம் சொல்லு என்னை ரசிப்பதென்ன?
ஏனிந்த மாற்றமோ?
(காதலா)

Surya Vamsam - Kadhala Kadhala

காதலுடன் - இதுவரை யாரும் பாடியதில்லை

இதுவரை யாரும் பாடியதில்லை
இதுபோல ஒரு பாட்டு
சுகமான சுதி சேர்த்து

இதுவரை யாரும் பாடியதில்லை
இதுபோல ஒரு பாட்டு
சுகமான சுதி சேர்த்து

காதலிக்காக காதலன் தேடி
தூது சென்றானே காதலன் ஆ...
தினக்கு தினக்கு திம்
தினக்கு தினக்கு திம்... திந்தின்னாரா
தினக்கு தினக்கு திம்
தினக்கு தினக்கு திம்... திந்தின்னாரா

இதுவரை யாரும் பாடியதில்லை
இதுபோல ஒரு பாட்டு
சுகமான சுதி சேர்த்து

வங்கக்கடல் ஆழம் அல்ல
வாணக்கரை நீளம் அல்ல 
காதல் கடல் காதல் கடல்
ஆழத்தினை யார் சொல்ல

ஒ ... பெண்ணின் மனம் ஆழம் என்று
சொன்னவர்கள் கோடியுண்டு
ஆணின் மன ஆழத்தினை
சொன்னவர்கள் யாருண்டு

என்னுயிரே... மனதுக்குள் இருப்பதை வெளியிடவா 
உயிருக்குள் காதலை மறைத்திடவா
மறுமுறை உனக்கென பிறந்திடவா
அதுவரை தனிமையில் அழுதிடவா

ஒரு முறை வாழ்க்கை ஒரு முறை காதல்
உனக்கென வாழ்ந்தால் அர்த்தமாகுமே

தினக்கு தினக்கு திம்
தினக்கு தினக்கு திம்... திந்தின்னாரா

இதுவரை யாரும் பாடியதில்லை
இதுபோல ஒரு பாட்டு
சுகமான சுதி சேர்த்து

மேகமதை தூதுவிட்டால்
பாதி வழி போகும் முன்பே
தூறல்களாய்   மாறிவிடும்
என்று எண்ணி பயந்தாயா 

அன்னமதை தூதுவிட்டால்
 மெல்ல மெல்ல ஆடிச்செல்லும்
தாமதமாய் ஆகிவிடும்
என்று அதை தவிர்த்தாயா

என்னுயிரே... நிலவினை தூதென அனுப்பிவைத்தால் 
பகலினில் பதிங்கிடும் என நினைத்தா
என்னை இன்று தூதாய் அனுப்பிவிட்டு 
இதயத்தில் இடிகளை இறக்கி வைத்தாய்


ஒரு முறை வாழ்க்கை ஒரு முறை காதல்
உனக்கென வாழ்ந்தால் அர்த்தமாகுமே

தினக்கு தினக்கு திம்
தினக்கு தினக்கு திம்... திந்தின்னாரா

இதுவரை யாரும் பாடியதில்லை
இதுபோல ஒரு பாட்டு
சுகமான சுதி சேர்த்து
காதலிக்காக காதலன் தேடி
தூது சென்றானே காதலன்

இதுவரை யாரும் பாடியதில்லை
இதுபோல ஒரு பாட்டு
சுகமான சுதி சேர்த்து

தினக்கு தினக்கு திம்
தினக்கு தினக்கு திம்... திந்தின்னாரா
தினக்கு தினக்கு திம்
தினக்கு தினக்கு திம்... திந்தின்னாரா

Kadhaludan - Ithuvarai Yarum

காதலுடன் - உச்சிக் கிளையிலே

உச்சிக் கிளையிலே ஓ மைனா
உட்கார்ந்து பேசுது சின்ன மைனா
தெற்கு கரையிலே ஒ மைனா
தென்மாங்கு பாடுது செல்ல மைனா

உச்சிக் கிளையிலே ஓ மைனா
உட்கார்ந்து பேசுது சின்ன மைனா
தெற்கு கரையிலே ஒ மைனா
தென்மாங்கு பாடுது செல்ல மைனா

அது பாடும் பாட்டின் ராகம்
நெஞ்சில் தேனாக பாயுது
அதை கேட்கும் போது  மனதில்
முல்லைப் பூவாசம் வீசுது
 உச்சிக் கிளையிலே...

உச்சிக் கிளையிலே ஓ மைனா
உட்கார்ந்து பேசுது சின்ன மைனா
தெற்கு கரையிலே ஒ மைனா
தென்மாங்கு பாடுது செல்ல மைனா

அது பாடும் பாட்டின் ராகம்
நெஞ்சில் தேனாக பாயுது
அதை கேட்கும் போது  மனதில்
முல்லைப் பூவாசம் வீசுது

நூராண்டு   வாழும் ஆசைகள் இல்லை
அன்போடு வாழும் ஒரு நாளும் போதுமே
கோவில்கள் செல்லும் தேவைகள் இல்லை
தெய்வங்கள் எல்லாம் நம் சொந்த பந்தமே

பரதனையும் ராமனையும் பாசத்தில் மிஞ்சிடுவோம்
அனுமனைப் போல் அணில்களைப் போல்
சேவையில் நின்றுடுவோம்  ......

இதை கேட்கும் போதே கண்கள்
ஊருதே நீர்க்கோலம்  போடுதே
அட சொந்தம் என்ற சொல்லில்
கோடி வேதங்கள் உள்ளதே

உச்சிக் கிளையிலே ஓ மைனா
உட்கார்ந்து பேசுது சின்ன மைனா
தெற்கு கரையிலே ஒ மைனா
தென்மாங்கு பாடுது செல்ல மைனா

தீபங்கள் ஏற்றும் கார்த்திகை மாதம்
வாசல்கள் எல்லாம் பொண் வண்ணமாயிடும்

கல்யாண மேளம் கேட்டிடும் நேரம்
ரோயாப்பூ  முகமோ நிலவாக மாறிடும்

தேரோடும் வீதியெல்லாம் தேவதை ஊர்கோலம்
பூவோடு பூவாக பூமகள் வைபோகம்

அந்த நாளை எண்ணி எண்ணி
கைகள் பூமாலை கோர்த்ததே
அது  நாளை நாளை என்று
தேதித்தாழ்  மட்டும் தீர்ந்ததே
உச்சிக் கிளையிலே

உச்சிக் கிளையிலே ஓ மைனா
உட்கார்ந்து பேசுது சின்ன மைனா
தெற்கு கரையிலே ஒ மைனா
தென்மாங்கு பாடுது செல்ல மைனா

அது பாடும் பாட்டின் ராகம்
நெஞ்சில் தேனாக பாயுது
அதை கேட்கும் போது  மனதில்
முல்லைப் பூவாசம் வீசுது

உச்சிக் கிளையிலே ஓ மைனா
உட்கார்ந்து பேசுது சின்ன மைனா
தெற்கு கரையிலே ஒ மைனா
தென்மாங்கு பாடுது செல்ல மைனா

Kadhaludan - Uchi Kilaiyilae

Followers