Pages

Search This Blog

Thursday, October 24, 2013

அருணாச்சலம் - தலைமகனே கலங்காதே

தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே

தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே
உன் தந்தை தெய்வம் தானடா ஆ
உன் தந்தை தெய்வம் தானடா

தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே

ஏ மேகங்கள் அது போல சோகங்கள் கலந்தோடும்
நீ போகும் பாதையெல்லாம் ஞாயங்கள் சபையேறும்
எந்நாளும் உன்னோடு உன் அன்னை மனம் வாழும்
தெய்வங்கள் அருளோடு திசையாவும் மலர் தூவும்

தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே
தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே

Arunachalam - Thalai Maganae

ஆசை - புல்வெளி புல்வெளி

புல்வெளி புல்வெளி தன்னில்
பனித்துளி பனித்துளி ஒன்று
தூங்குது தூங்குது பாரம்மா
அதை சூரியன் சூரியன் வந்து
செல்லமாய் செல்லமாய் தட்டி
எழுப்புது எழுப்புது ஏனம்மா
இதயம் பறவை போலாகுமா
பறந்தால் வானமே போதுமா
நான் புல்லில் இறங்கவா
இல்லை பூவில் உறங்கவா

சிட்சிட்சிட் சிட்சிட்சிட்சிட் சிட்டுக்குருவி
சிட்டாகச் செல்லும் சிறகைத் தந்தது யாரு
பட்பட்பட் பட்பட்பட்பட் பட்டாம்பூச்சி
பலநூறு வண்ணம் உன்மேல் தந்தது யாரு
இலைகளில் ஒளிகின்ற கிளிக்கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும்
கிளைகளில் ஒளிகின்ற குயில் கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு இசை மீட்டும்
பூவண்ணமே எந்தன் மனம்
புன்னகையே எந்தன் மதம்
வானம் திறந்திருக்கு பாருங்கள்
எனை வானில் ஏற்றி விட வாருங்கள்

புல்வெளி புல்வெளி தன்னில்
பனித்துளி பனித்துளி ஒன்று
தூங்குது தூங்குது பாரம்மா

துள்துள்துள் துள்துள்துள்துள்ளென துள்ளும் மயிலே
மின்னல் போல் ஓடும் வேகம் தந்தது யாரு
ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்ஜலென ஓடு நதியே
சங்கீத ஞானம் பெற்றுத் தந்தது யாரு
மழையன்னை தருகின்ற தாய்ப்பால் போல்
வழியுது வழியுது வெள்ளை அருவி
அருவியை முழுவதும் பருகிவிட
ஆசையில் பறக்குது சின்னக்குருவி
பூவண்ணமே எந்தன் மனம்
புன்னகையே எந்தன் மதம்
வானம் திறந்திருக்கு பாருங்கள்
எனை வானில் ஏற்றி விட வாருங்கள்

புல்வெளி புல்வெளி தன்னில்
பனித்துளி பனித்துளி ஒன்று
தூங்குது தூங்குது பாரம்மா
அதை சூரியன் சூரியன் வந்து
செல்லமாய் செல்லமாய் தட்டி
எழுப்புது எழுப்புது ஏனம்மா
இதயம் பறவை போலாகுமா
பறந்தால் வானமே போதுமா
நான் புல்லில் இறங்கவா
இல்லை பூவில் உறங்கவா

Aasai - Pulveli Pulveli

ஆசை - மீனம்மா அதிகாலையிலும்

மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே
அம்மம்மா முதல் பார்வையிலே சொன்ன வார்த்தையெல்லாம் ஒரு காவியமே

சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும்
மின்னல் போல வந்து வந்து போகும்
மோதல் வந்து ஊடல் வந்து முட்டிக்கொண்ட போதும்
இங்கு காதல் மட்டும் காயம் இன்றி வாழும்
இது மாதங்கள் நாட்கள் செல்ல
நிறம் மாறிடும் பூக்கள் அல்ல

மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே

ஒரு சின்னப் பூத்திரியில் ஒளி சிந்தும் ராத்திரியில்
இந்த மெத்தை மேல் இளம் தத்திக்கோர் புது வித்தை காட்டிடவா
ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பார்ப்பதற்கு
அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டு தீண்டுவதா
மாமன் காரன் தானே மால போட நானே
மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம்

மீனம்மா மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிர் காய்ச்சல் வரும்
அம்மம்மா வெயில் உன்னை அணைத்தால் இங்கு எனக்கல்லவா உடல் வேர்த்து விடும்

அன்று காதல் பண்ணியது உந்தன் கண்ணம் கிள்ளியது
அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது
அன்று பட்டுச் சேலைகளும் நகை நட்டும் பாத்திரமும்
உனை கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது
ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே
ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு

மீனம்மா உன்னை நேசிக்கவும் அன்பை வாசிக்கவும் தென்றல் காத்திருக்கு
அம்மம்மா உன்னைக் காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு

உன்னைத் தொட்ட தென்றல் வந்து என்னைத் தொட்டு
என்னென்னவோ சங்கதிகள் சொல்லிவிட்டு போக
உன் மனமும் என் மனமும் ஒன்றையொன்று ஏற்றுக்கொண்டு
ஒப்பந்தத்தில் கையெழுத்து போட
பின்பு மோகனப் பாட்டெடுத்தோம் முழு மூச்சுடன் காதலித்தோம்

மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே

Aasai - Meenamma Adikalayilum

ஆசை - கொஞ்சநாள் பொறு

கொஞ்சநாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா
கண்ணிரண்டில் போர் தொடுப்பா அந்த மின்மினியத் தோற்கடிப்பா

அட காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ என்னாடோ எந்த ஊரோ நானறியேன்

கொஞ்சநாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா
கண்ணிரண்டில் போர் தொடுப்பா அந்த மின்மினியத் தோற்கடிப்பா

நேத்துக்கூட தூக்கத்தில பார்த்தேனந்தப் பூங்கொடிய
தூத்துக்குடி முத்தெடுத்து கோர்த்துவெச்ச மால போல
வேர்த்துக்கொட்டி கண்முழிச்சுப் பார்த்தா அவ
ஓடிப்போனா உச்சிமலக் காத்தா
சொப்பனத்தில் இப்படிதான் எப்பவுமே வந்து நிற்பா
சொல்லப்போனா பேரழகில் சொக்கத்தங்கம் போலிருப்பா
வத்திகுச்சி இல்லாமலே காதல் தீயப் பத்தவெப்பா

அட காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ என்னாடோ எந்த ஊரோ நானறியேன்

கொஞ்சனாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா
கண்ணிரண்டில் போர் தொடுப்பா அந்த மின்மினியத் தோற்கடிப்பா

பச்சைதாவணி பறக்க அங்கு தன்னையே இவன் மறக்க
வச்ச கண்ணு வாங்கலையே மாமன் கண்ணு மூடல்லையே

என்னோடுதான் கண்ணாமூச்சி என்றும் ஆடும் பட்டாம்பூச்சி
காட்டாயம் என் காதல் ஆட்சி கைகொடுப்பா தென்றல் சாட்சி
சிந்தனையில் வந்துவந்து போனா அவ
சந்தனத்தில் செஞ்சுவெச்ச தேனா
என்னுடைய காதலியே ரொம்ப ரொம்ப பத்திரமா
எண்ணம் எங்கும் ஒட்டிவச்ச வண்ண வண்ணச் சித்திரமா
வேரொருத்தி வந்து தங்க எம்மனசு சத்திரமா

அட காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ என்னாடோ எந்த ஊரோ நானறியேன்

கொஞ்சநாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா
கண்ணிரண்டில் போர் தொடுப்பா அந்த மின்மினியத் தோற்கடிப்பா

Aasai - Konja Naal Poru

மங்காத்தா - இது எங்க பல்லேலக்கா

இது எங்க பல்லேலக்கா நீ கேளு கொக்கா மக்கா
நியூ டைப்பு நாக்கு மூக்கா ஆடிக்கோ கிக்கா
அபி சப்ஹோ அச்சா அச்சா ஆண்டவன் கண் வச்சான் வச்சான்
அடிடா த்ஊள் மச்சான் மச்சான் வாங்கிக்கோ எக்ஸ்ட்ரா
சூதில்லா சூது அது சுத்தமாக ஏதப்பா
உலகெல்லாம் பூந்து அத உருட்டி போடப்பா
தப்பு கூட தப்பாகாது சத்தம் போட்டு சொல்லப்பா
அண்ணன் சொன்ன பாட்டை கேளு கைய கோர்த்து அள்ளப்பா

ஹேய் தானா கிடைக்குமா சந்தோஷம்தான்
நீயா எடுத்துக்கோ உனக்காகத்தான்
வீணா புலம்புனா விடியாதப்பா
விளக்க ஏத்துனா இருட்டாதப்பா
முடியாதது படியாதது ஏதும் கிடையாதடா
இதுதான் கணக்கு
விடியாதது ஒன்னும் புரியாதது
அட அதுதானடா இருட்டோ இருட்டு
திட்டம் போட்டு தட்டிப் பாரு கிட்ட சேரும் தன்னால
வட்டம் போட்டு கட்டிப்போடு வரும் லாபம் முன்னால

வீணா தூங்குது பல கோடிதான்
அத முழிக்க வைப்பவன் கில்லாடிதான்
உழைச்சு வாழவே வேண்டாமடா
பிறர் உழைப்பில் வாழ்வதே வரம்தானடா
ஆசைப்படு அளவே இல்லை ஆம்பளைக்கு அதுதான் அழகு
கோபப்படு குறையே இல்லை பொம்பளைக்கு அதுதான் பொறுப்பு
திட்டம் போட்டு தட்டிப் பாரு கிட்ட சேரும் தன்னால
வட்டம் போட்டு கட்டிப்போடு வரும் லாபம் முன்னால

இது எங்க பல்லேலக்கா நீ கேளு கொக்கா மக்கா
நியூ டைப்பு நாக்கு மூக்கா ஆடிக்கோ கிக்கா
அபி சப்ஹோ அச்சா அச்சா ஆண்டவன் கண் வச்சான் வச்சான்
அடிடா த்ஊள் மச்சான் மச்சான் வாங்கிக்கோ எக்ஸ்ட்ரா
சூதில்லா சூது அது சுத்தமாக ஏதப்பா
உலகெல்லாம் பூந்து அத உருட்டி போடப்பா
தப்பு கூட தப்பாகாது சத்தம் போட்டு சொல்லப்பா
அண்ணன் சொன்ன பாட்டை கேளு கைய கோர்த்து அள்ளப்பா

Mankatha - Ithu Enga Balle Lakka

மங்காத்தா - மச்சி Open the Bottle

மச்சி Open the Bottle

இது அம்பானி பரம்பரை அஞ்சாறு தலமுறை
ஆனந்தம் வளர்பிறைதான்
நம்ம கொட்டுன்னு ஒரு முறை சொன்னாக்க பலமுறை
கொட்டாதோ பண மழைதான்
நாம முன்னேறும் படிக்கட்டு என்றாச்சு நம் வாழ்வில் கிரிக்கெட்டு
இப்போ ஒம்பது கிரகமும் ஒன்னாக இருக்கு
ஓஹோன்னு நம் ஜாதகம்

ஆடாம ஜெயிச்சோமடா நம் மேனி வாடாமல் ஜெயிச்சோமடா
ஓடாம ரன் எடுத்தோம் சும்மாவே ஒக்காந்து வின் எடுத்தோம்

இது அம்பானி பரம்பரை அஞ்சாறு தலமுறை
ஆனந்தம் வளர்பிறைதான்
நம்ம கொட்டுன்னு ஒரு முறை சொன்னாக்க பலமுறை
கொட்டாதோ பண மழைதான்

ஹே ஒண்ணா ரெண்டா ஆசை உன்ன கண்டா
ஜில்லுனு நிக்கற ஜிகருதண்டா
தப்பு தண்டா செய்ய ஒப்புக்கொண்டா
பூ மேலே குந்துவேன் சோள வண்டா

ஏழுமலை இருக்கும் கடவுளுக்கும்
காசு தேவையின்னா கடன் கொடுப்போம்
அந்த குபேரன் ஆவான் குசேலன்
நம்ம ப்ரோப்பெர்ட்டி முன்னால சிங்கள் டீ
என்றாகும் சொர்க்கத்தில் சொத்துக்கள்தான்
ஹே உள்ளாற வேற்காடு உன்னால உண்டாச்சு நோக்காடு
போடேண்டி சாப்பாடு தொட்டாக்கா போடாத கூப்பாடு

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலை இல்ல
ஹே நாந்தாண்டா என் மனசுக்குள் ராஜா
வாங்குங்கடா ஹே தங்கத்தில் கூஜா
நான் கேட்டால் கேட்டதை கொடுப்பேன்
கேக்குற வரங்களை கேட்டுக்கோடா

தோழா மீன் வாழ நீர் வேணும்
நான் வாழ பீர் வேணும்
நீ கொஞ்சம் ஊத்து ஊத்து
தோழா இப்போதும் எப்போதும் முப்போதும்
வீசிடும் நம் பக்கம் காத்து காத்து
காத்து காலத்தில் தூத்திக்குவேன்
கால நேரத்தில் மாத்திக்குவேன்
போத ஆனாலும் மீறி போனாலும்
பாத ஓர் நாளும் என் கால்கள் மாறாது
என் பாடு வேற தான் எந்நாளும் என் ரூட்டு வேறதான்
என்னோட வேலைதான் என்னான்னு ஊர் பேசும் நாளைதான்

இது அம்பானி பரம்பரை அஞ்சாறு தலமுறை
ஆனந்தம் வளர்பிறைதான்
நம்ம கொட்டுன்னு ஒரு முறை சொன்னாக்க பலமுறை
கொட்டாதோ பண மழைதான்
நாம முன்னேறும் படிக்கட்டு என்றாச்சு நம் வாழ்வில் கிரிக்கெட்டு
இப்போ ஒம்பது கிரகமும் ஒன்னாக இருக்கு
ஓஹோன்னு நம் ஜாதகம்

ஆடாம ஜெயிச்சோமடா நம் மேனி வாடாமல் ஜெயிச்சோமடா
ஓடாம ரன் எடுத்தோம் சும்மாவே ஒக்காந்து வின் எடுத்தோம்

Mankatha - Machi Open The Bottle

மங்காத்தா - வாடா பின் லேடா

வாடா பின் லேடா ஒளியாதே அச்சோடா
என்னை ட்வின் டவர் என்று இடிடா
ஜப்பானின் ஹைக்கூவா ரஷ்யாவின் வொட்காவா
நீ என்னுள் என்னை கண்டுப்பிடிடா
நூடாலை நிக்காத இடுப்பு ஓ
நீதான் என் தோதான உடுப்பு ஓ
என்னை தொடாமலே செம்ம சூடேத்துற
நானா நானா வந்து மோதுறேன்

வாடா பின் லேடா ஒளியாதே அச்சோடா
என்னை ட்வின் டவர் என்று இடிடா
ஜப்பானின் ஹைக்கூவா ரஷ்யாவின் வொட்காவா
நீ என்னுள் என்னை கண்டுப்பிடிடா

மத்துக் கடைவது தயிரைத்தான்
மையல் கடைவது உயிரைத்தான்
இன்று அது ஏதோ அது ஏதோ என்னை வாட்டுதே
பன்றிக்காய்ச்சல் மாதிரி பருவக்காய்ச்சல் தானடி
உதட்டு ஒத்தடம் உடம்பு மொத்தமும் கேட்கும்
படுக்கை சுத்துது ராத்திரி புரண்டு கத்துது பூங்கிளி
நிலவு சுட்டது நரம்பில் பட்டது தீப்பொறி
ஒதுங்கி நின்னது காளை தான்
உரசி வந்தது கரவை தான்
மனசும் கெட்டது மயங்கி விட்டது எம்மா எம்மா
என்னை சும்மா சும்மா நின்னா தாக்குவே

க்ரிக்கெட் என்பது ஃபிக்ஸிங்தான்
காதல் என்பது மிக்ஸிங்தான்
இங்க்ய் பெட் மேலே பெட் கட்டி தினம் ஆடலாம்
பந்தக் கண்டதும் கேட்சுதான்
புடிச்சு ஜெயிப்ப மேச்சுதான்
விடியும் மட்டுலும் வெளுத்து கட்டுவ பேட்டில்
எனக்கு வாச்சது பிச்சுதான்
உனக்கு வைக்கணும் இச்சுதான்
இளமை பிகரு ட்வெண்டி ஓவரு போதுமா
அடிச்சு ஆடுற தோணிதான்
அதுக்கு ஏங்குற மேனிதான்
விரகம் என்பதும் நரகம் என்பதும் ஒன்னு ஒன்னு
சின்ன பொண்ணு பொண்ணு உன்னை தேடுதே

ஒண்ணா ஒன்னொன்னா நான் சொன்னா சும்மா சொன்னா
அத செய்வது உன் டூட்டியடி
ஏய் எம்மா எம்மம்மா சும்மா நீ சும்மா
உன் இஷ்டம் போல லூட்டியடி
நூடாலை நிக்காத இடுப்பு ஓ
நீதான் என் தோதான உடுப்பு ஓ
என்னை தொடாமலே செம்ம சூடேத்துற
நானா நானா வந்து மோதுறேன்

Mankatha - Vaada Bin Lada

Followers