Pages

Search This Blog

Tuesday, October 22, 2013

எங்கேயும் எப்போதும் - கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா.. சென்னையில புதுப் பொண்ணு..
சிரிக்கிறா.. மொறைக்கிறா.. ஆயிரத்தில் இவ ஒன்னு..
எதுக்கு வந்தாலோ இம்ச தந்தாலோ..
கோவிந்தா கோவிந்தா.. சென்னையில புதுப் பொண்ணு..
சிரிக்கிறா.. மொறக்கிறா.. ஆயிரத்தில் இவ ஒன்னு..
டாடி மம்மி என்ன பேறு இவளுக்கு வச்சாங்க..
அட என்ன கேட்டா கொடச்சலுன்னு பேர வப்பேங்க..

கொஞ்சம் கூட நம்பிக்க இல்ல.. கூட வந்து ஓட்டிகிட்ட தொல்ல..
கழட்டி விடவும் மனசே இல்ல.. என்ன கொடுமையடா..
காஞ்சு போன மொளகா உள்ள, கொட்டிக் கிடக்கும் விதையப்போல..
காரமாக வெடிச்சா உள்ள பாவ நெலமையடா..
ஆகாயம் மேலேதான் அழகான மேகங்கள்..
அண்ணாந்து பார்க்க நேரமின்றி போவது எங்கேயோ..
வெயிலோடு மழையும்தான் ஒன்று சேர்ந்து வந்ததுபோல்..
இந்த கொஞ்ச நேரப் பயணம் சென்று முடிவது எங்கேயோ..

அடடா டாடி மம்மி என்ன பேறு இவனுக்கு வெச்சாங்க..
என்ன என்ன என்ன கேட்டா சுமதாங்கினு பேறு வப்பேங்க..

கப்பல் வாங்க வந்திருப்பாளோ.. செப்பல் வாங்க வந்திருப்பாளோ..
உசுர வாங்க வந்திருப்பாளோ.. ஒன்னும் புரியலயே..
ட்ரைலர் போல முடிந்திடுவாலோ.. ட்ரைன போல நீண்டிடுவாலோ..
எப்ப இவன இவ விடுவாளோ.. ஒன்னும் தெரியலயே..
அப்பாவி போலத்தான் தப்பாக நெனச்சானே..
ஐநூறு கேள்வி கேட்டு கேடு ஆளக் கொல்றாலே..
இவ இவ வந்தபோது வந்த கோபம் இப்போ இல்லையடா..
இவள் சேர்த்து வைத்த சந்தேகங்கள்..

கோவிந்தா..
கோவிந்தா கோவிந்தா.. சென்னையில புதுப் பொண்ணு..
சிரிக்கிறா.. மொறைக்கிறா.. ஆயிரத்தில் இவ ஒன்னு..

Engaeyum Eppothum - Govindha

எங்கேயும் எப்போதும் - மாசமா

மாசமா.. ஆறு மாசமா.. ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு..
வாரமா சில பல வாரமா.. காதுக்கிடன்தேனே பூவிழிக்கு..
கண்ணுறங்கள.. செவி மடுக்கல..
பசி எடுக்கல.. வாய் சிரிக்கல..
கை கொடுக்கல.. கால் நடக்கல..
அந்த வெறுப்புல ஒன்னும் புரியல..
ஏ மாசமா.. மாசமா.. ஏங்கித்தவிச்சேன்..
மாசமா.. ஆறு மாசமா.. ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு..

ரோட்டுல பாக்கல.. பார்க்குல பாக்கல..
பஸ்சுல பாக்கல.. ஆட்டோல பாக்கல..
தியேட்டர்ல பாக்கல.. ஸ்ட்ரீட்டுல பாக்கல..
பாத்து எல்லாம் தொலவுல..
காட்டுல நிக்கல.. மேட்டுல நிக்கல..
அங்கயும் நிக்கல.. இங்கேயும் நிக்கல..
எங்கேயும் நிக்கல நிக்கல நிக்கல
நின்னது அவளோட மனசுல..
நின்நாளோ பாத்தாளோ தெருவுல..
நா பாக்காம போனேனே முதலுல..
நான் ஏங்கி தவிச்சேன் இந்த பூங்கொடிக்கு..

மாசமா.. ஆறு மாசமா.. காதுக்கிடன்தேனே பூவிழிக்கு..

நம்பரும் வாங்கல.. போனும் பன்னால..
அட்ரஸ் வாங்கல.. லெட்டரும் கொடுக்கல..
போலோ பண்ணல தூது அனுப்பல..
எப்படி வந்தா நேரில..
கிண்டலும் பண்ணல.. சண்டையும் போடல..
மொறச்சு பாக்கல.. சிரிச்சு பேசல..
வழி மறிக்கல.. கையப்பிடிகல..
எப்படி விழுந்தா காதல்ல..
அவ மூச்சாகி போனாளே உயிருல..
என்னக்கு மேட்ச் ஆகி விட்டாளே லைபுல..
நான் ஏங்கி தவிச்சேன் இந்த பூங்கொடிக்கு..

மாசமா.. ஆறு மாசமா.. மோசமா மோசமா காதலிச்சேன்..
நா காதலிச்சேன்..
கண்ணுறங்கள.. செவி மடுக்கல..
பசி எடுக்கல.. வாய் சிரிக்கல..
மோசமா மோசமா காதலிச்சேன்..

Engaeyum Eppothum - Masaamaa

எங்கேயும் எப்போதும் - உன் பேரே தெரியாதே

உன் பேரே தெரியாதே.. உன்னை கூப்பிட முடியாதே..
நான் உனக்கோர் பேர் வைத்தேன்.. உனக்கே தெரியாது..
அந்த பேரை அறியாது.. அட யாரும் இங்கேது..
அதை ஒருமுறை சொன்னாலே.. தூக்கம் வாராது..
அட தினம்தோறும் அதை சொல்லலி உன்னை கொஞ்சுவேன்..
நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்..

சூடான பேரும் அதுதான்.. சொன்னவுடன் உதடுகள் கொதிக்கும்..
சூரியனை நீயும் நினைத்தால் அது இல்லையே..
ஜில்லென்ற பேரும் அதுதான்.. கேட்டவுடன் நெஞ்சம் குளிரும்..
நதியென்று நீயும் நினைத்தால் அது இல்லையே..
சிலிர்க்கவைக்கும் தெய்வமில்லை,
மிளரவைக்கும் மிருகம்மில்லை..
ஒளிவட்டம் தெரிந்தாலும் அது பட்டப்பேரில்லை..
என் பேரின் பினால் வரும் பேர் நான் சொல்லவா..?

பெரிதான பேரும் அதுதான்.. சொல்ல சொல்ல மூச்சே வாங்கும்..
எத்தனை எழுத்துக்கள் என்றால் விடையில்லையே..
சிறிதான பேரும் அதுதான்..
சட்டென்று முடிந்ததே போகும், எப்படி சொல்வேன் நானும்,
மொழி இல்லையே..
சொல்லிவிட்டால் உடைத்து ஓட்டும்..
எழுதிவிட்டால் தேனும் சொட்டும், அது சுத்த தமிழ் பெயர்தான்..
அயல் வார்த்தை அதில் இல்லை..
என் பேரின் பினால் வரும் பேர் நான் சொல்லவா..?

உன் பேரே தெரியாதே.. உன்னை கூப்பிட முடியாதே..
நான் உனக்கோர் பேர் வைத்தேன்.. உனக்கே தெரியாது..
அட தினம்தோறும் அதை சொல்லலி உன்னை கொஞ்சுவேன்..
நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்..

Engaeyum Eppothum - Un Perae Theriyathu

நீ தானே என் பொன்வசந்தம் - காற்றைக் கொஞ்சம்

காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.

சுற்றும் பூமி நிற்க சொன்னேன்…
உன்னை தேடி பார்க்க சொன்னேன்…
உன்னை பார்த்து கேட்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்,
என் காதல் நலமா என்று..

நேரில் பார்த்து பேசும் காதல் ஊரில் உண்டு ஏராளம்.
நெஞ்சில் பார்த்து பேசும் காதல் நின்று வாழும் எந்நாளும்.
தள்ளி தள்ளி போனாலும் உன்னை எண்ணி வாழும் ஒரு ஏழை இதயம் நெஞ்சத்தை பாரடி..
தங்க மெத்தை போட்டாலும் உன் நினைவில் என்றும் தூக்கம் இல்லை ஏன் என்று சொல்லடி…
சாத்தி வைத்த வீட்டில் தீபம் ஏற்றி வைக்க நீ வா.
மீதி வைத்த கனவை எல்லாம் பேசி தீர்க்கலாம்.. ஹே ஹே ஹே…

காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,

கண்ணை மூடி உன்னை சிந்திக்க.
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்…
உன்னை தேடி பார்க்க சொன்னேன்…
உன்னை பார்த்து கேட்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்,
என் காதல் நலமா என்று..

நேற்று எந்தன் கன்வில் வந்தாய் நூறு முத்தம் தந்தாயே…
காலை எழுந்து பார்க்கும் போது கண்ணில் நின்று கொண்டாயே..
பார்த்து பார்த்து எந்நாளும் பாதுகாத்த என் நெஞ்சில் எந்ந மாயம் செய்தாயோ சொல்லடி
உன்னை பார்த்த நாள் தொட்டு எண்ணம் ஓடும் தறிகெட்டு..
இன்னும் என்ன செய்வாயோ சொல்லடி
என்னை இன்று மீட்கத்தான் உன்னை தேடி வந்தேனே..
மீட்டதோது மீண்டும் நான் உன்னில் தொலைகிறேன்…

காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.

சுற்றும் பூமி நிற்க சொன்னேன்…
உன்னை தேடி பார்க்க சொன்னேன்…
உன்னை பார்த்து கேட்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்,
என் காதல் நலமா என்று..

Neethaane En Ponvasantham - Kaatrai Konjam

நீ தானே என் பொன்வசந்தம் - என்னோட வா வா

என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

நீ என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

செல்ல சண்டை போடுகிறாய்
தள்ளி நின்று தேடுகிறாய்
ஆ ஆ ஆ அன்பே என்னை தண்டிக்கவும்
புன்னகையில் தண்டிக்கவும் உன்னக்கு உரிமை இல்லையா?

என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

என்னோடு… வா வா என்று
சொல்ல மாட்டேன்.. போக மாட்டேன்

கன்னம் தொடும் கூந்தல் ஒதுக்கி
நீ சாய்வதும் என்னை கொஞ்சம் பார்க்கதானடி
கண்ணை மூடி தூங்குவதை போல்
நீ நடிப்பது எந்தன் குரல் கேட்கதானடி
இன்னும் என்ன சந்தேகம் என்னை இனி எந்நாளும்
தீயாக பார்காதடி....
சின்ன பிள்ளை போல நீ அடம்பிடிப்பதென்ன சொல்ல
என்னை விட யாரும் இல்லை அன்பு செய்து உன்னை வெல்ல
சண்டை போட்ட நாட்களைத்தான் எண்ணி சொல்ல
கேட்டு கொண்டால் கழுகும் பயந்து நடுங்கும்

என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
என்னோடு… வா வா என்று
சொல்ல மாட்டேன்.. போக மாட்டேன்

காதலுக்கு இலக்கணமே தன்னால் வரும்
சின்ன சின்ன தலைகணமே
காதல் அதை பொறுக்கண்ணுமே இல்லையெனில்
கட்டி வைத்து உதைகணுமே
உன்னுடைய கையாலே தண்டனையை தந்தாலே
என் நெஞ்சம் கொண்டாடுமே
கன்னத்தில் அடிக்குமடி முத்தத்தாலே வேண்டும்மடி
மத்ததெல்லாம் உன்னுடைய இதழ்களின் இஷ்டப்படி
எந்த தேசம் போனபோதும் என்னுடைய சொந்த தேசம்
உனது இதயம் தானே

என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

செல்ல சண்டை போடுகிறாய்
தள்ளி நின்று தேடுகிறாய்
ஆ ஆ ஆ அன்பே என்னை தண்டிக்கவும்
புன்னகையில் தண்டிக்கவும் உன்னக்கு உரிமை இல்லையா?

என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

Neethaane En Ponvasantham - Yennodu Vaa Va

நீ தானே என் பொன்வசந்தம் - முதல் முறை

முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஒரு ஈரம்

சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறு நாளில் ஏங்க வைத்தாய்
வெயிலா மழையா வழிய சுகமா என நீ
நீதானே என் பொன்வசந்தம்
நீதானே என் பொன்வசந்தம்
பொன்வசந்தம் பொன்வசந்தம்

முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மையை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஒரு ஈரம்

நீந்தி வரும் நிலவினிலே
ஓர் ஆயிரம் ஞாபகங்கள்
நீங்கநெடும் கனாவிநிலே
நூறாயிரம் தீ  அலைகள்
நெஞ்சமெனும் வினாக்களுக்குள்
என் பதில் என்ன பல வரிகள்
சேரும் இடம் விலாசதிலே உன் பார்வையின் முகவரிகள்
ஊடலில் போனது காலங்கள்
இனி தேடிட நேரங்கள் இல்லையே
தேடலில் நீ வரும் ஓசைகள்
அங்கு போனது உன் தடம் இல்லையே
காதல் என்றல் வெறும் காயங்களா ?
அது காதலுக்கு அடையாளங்களா ??

வெயிலா மழையா வழிய சுகமா என நீ
நீதானே என் பொன்வசந்தம்
நீதானே என் பொன்வசந்தம்
பொன்வசந்தம் பொன்வசந்தம்

முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஒரு ஈரம்

சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறு நாளில் ஏங்க வைத்தாய்
வெயிலா மழையா வழிய சுகமா என நீ
நீதானே என் பொன்வசந்தம்
நீதானே என் பொன்வசந்தம்
பொன்வசந்தம் பொன்வசந்தம்

Neethaane En Ponvasantham - Mudhal Murai

நீ தானே என் பொன்வசந்தம் - சாய்ந்து சாய்ந்து

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே
விழியோடு, விழி பேச..
விரலோடு, விரல் பேச , அடடா வேறு என்ன பேச..
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே..
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே..
ஹே ஹே ஹே..

என் தாயை போல ஒரு பெண்ணை தேடி
உன்னை கண்டு கொண்டேன்..
ஒ.. என் தந்தை தோழன், ஒன்றான ஆணை
நான் கண்டு கொண்டேன்..
அழகான உன் கூந்தல் மாகோலம்..
அதை கேட்கும் எந்தன் வாசல்..
காலம் வந்து வந்து கோலமிடும்..
உன் கண்ணை பார்த்தாலே.. முன் ஜென்மம் போவேனே..
அங்கே நீயும் நானும் நாம்..

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே

கை வீசி காற்றில், நீ பேசும் அழகில், மெய்யாகும் பொய்யும்..
என் மார்பில் வீசும், உன் கூந்தல் வாசம், ஏதோ செய்யும்..
என் வீட்டில் வரும் உன் பாதம்.. எந்நாளும் இது போதும்..
இன்னும் இன்னும் என்ன தொலை தூரத்தில்..
ஆள் யாரும் பார்க்காமல் தடயங்கள் இல்லாமல்,
அன்பால் உன்னை நானும் கொள்வேன்..

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே
விழியோடு, விழி பேச..
விரலோடு, விரல் பேச , அடடா வேறு என்ன பேச..
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே..
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே..
ஹே ஹே ஹே..

Neethaane En Ponvasantham - Saayndhu Saayndhu

Followers