Pages

Search This Blog

Friday, October 11, 2013

வாலி - ஓ சோனா ஓ சோனா

ஓ சோனா ஓ சோனா
ஓ சோனா ஐ லவ் யூ லவ் யூ டா,
ஓ சோனா, ஓ சோனா,
ஓ சோனா ஐ லவ் யூ லவ் யூ டா,

வாசல்வந்த வென்னிலவு அல்லவா,
அவள் வயதுக்கு வந்த தங்கம் அல்லவா?
அடி தந்து ரெதம் பொட்டு அல்லவா?
அவளினை காதல் செய்த கதையினை சொல்லவா,

ஓ சோனா, ஓ சோனா,
ஓ சோனா ஐ லவ் யூ லவ் யூ டா,

ஓ சோனா, ஓ சோனா,
ஓ சோனா ஐ லவ் யூ லவ் யூ டா,

ஒரு மாலை நேரத்தில்,
மழை கொட்டும் மாதத்தில்,
அவள் நனைகையில் என் ஜீவன் கரைய கண்டேன்,
அவள் பெண்மை வளைத்து,
அதை நாலாய் மடித்து,
என் மடியென்னும் கூட்டுக்குள்ளே ஒளித்துகொண்டேன்,
மழை நின்று பெண் எழவேஇல்லை,
என்ன செய்தோம் அது நினைவே இல்லை,
என்ன வியப்பு?
மாலை போல் என்னை அள்ளி தழுவிகொண்டால்,
மார்போடு ஏதோ பட்டு நழுவிகொண்டால்…

ஐ லவ் யூ சோனா, சோனா,
சோனா

ஓ சோனா, ஓ சோனா,
ஓ சோனா ஐ லவ் யூ லவ் யூ டா,

Vaali - Oh Sona Oh Sona

வாலி - நிலவை கொண்டு வா

நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை
மேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை

நிலவை பிடித்தேன் கட்டிலில் கட்டினேன்
மேகம் பிடித்தேன் மெத்தை விரித்தேன்

காயும் சூரியனை கடலுக்குள் பூட்டி வை
இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை

காயும் சூரியனை கடலுக்குள் பூட்டினேன்
இரவு தொடர்ந்திட இந்திரனை நம்பினேன்

இன்று முதல் இரவு….
இன்று முதல் இரவு…… நீ என் இளமைக்கு உணவு.. (2)
மெல்லவா உனை கிள்ளவா இல்லை அள்ளவா நீ வா

வரவா வந்து தொடவா உன் ஆடைக்கு விடுதலை தரவா
அவசரம் கூடாது அனுமதி பெறும் வரையில்
பொதுவா நீ பெண்ணா நீ சொன்ன படி கேட்கும் மாது..
இது போன்ற விசயத்தில் உன் பேச்சி உதவாது
மெல்ல இடையினை தொடுவாயா
மெல்ல உடையினை களைவாயா
நான் வெடிக்கையில் துடிக்கையில் முத்தங்கள் தருவாயா
போதுமா …. அது போதுமா..
ஆசை தீருமா… அம்மா ஆ.

மாமா என் மாமா இந்த நிலவை ஊதி அணைப்போமா
காணாத உன் கோலம் கண்கொண்டு காண்கின்றதே
இதழால் உன் இதழால் என் வெட்கம் துடைத்துவிடுவாயா
அங்கத்தில் வெட்கங்கள் எங்கெங்கு சொல்வாயா
தேன் எங்கெங்கு உண்டு என்று பூ வண்டுக்கு சொல்லாவிட்டால்
அது தான் தேடி உண்ணாமல் பேரின்பம் வாராதய்யா…
இன்பமா……. பேரின்பமா…..
அது வேண்டுமா ….. அம்மா..ஆ

நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை
மேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை

நிலவை பிடித்தேன் கட்டிலில் கட்டினேன்
மேகம் பிடித்தேன் மெத்தை விரித்தேன்

காயும் சூரியனை கடலுக்குள் பூட்டி வை
இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை

காயும் சூரியனை கடலுக்குள் பூட்டினேன்
இரவு தொடர்ந்திட இந்திரனை நம்பினேன்

இன்று முதல் இரவு….
இன்று முதல் இரவு…… நீ என் இளமைக்கு உணவு..
மெல்லவா உனை கிள்ளவா இல்லை அள்ளவா நீ வா

Vaali - Nilavai Konduva

வாலி - வானில் காயுதே

உன் பேர் வாசித்தேன்
உன்னை நேசித்திருப்பதே
அதை வாசித்திருப்பதே
என் மேனி சிலிர்த்ததே
என்னிடம் பேசி போனது
சில நூரு பெண்ணடி
என்னிடம் பேச மறுத்தவள்
நீ ஒருத்தி தானடி

வானில் காயுதே வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
நீ பேசவே..ஓஹ்ஹ்ஹ்!..ஒரு மொழி இல்லையா
வாசம் போதுமே பூக்கள் வாய் பேசுமா
ஆ..ஆ..ஆ..ஆ..

வானில் காயுதே வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
வாய்ப்பை தந்தால் நான் வாய் பேசுவேன்
உனக்கும் சேர்த்து நான் ஒருவன் காதல் செய்வேன்

ஆ...ஆ...ஆ....ஆ..ஆ...
நதியின் போக்கிலே நாணல் தலை சாயவே

அள்ளிச் சென்ற நிலவு என் அழகு நீ குலவு..ஆ..ஹா..ஹா
கண்ணை கொத்தும் அழகு என் அழகு பெண் அழகு நீ வா வா..
மின்சார பெண்ணே ஆராக ஆனேன்
மின்சாரம் பாய்ந்து வீணாகி போனேன்
யாரென்று தெரியாமல் யோசிக்கிரேன்
யாரென்று என்னை நஸ் கேட்க வில்லை
மேகத்தின் ஊரை விண் கேட்பதில்லை
ஆசைக்கு அடையாளம் தேவை இல்லை
ஆஹ-ஆஹ-ஆஹ-ஆஅ
அன்று வண்ண மின்னலாய் உன் கண்ணில் தோன்றினேன்
நான் போகும் போக்கிலே ஒரு பூவை நீட்டினேன்
நீ பூவை நீட்டியே என்னை சாம்பலாக்கினாய்
நீ தீயை நீட்டினால் நான் என்ன ஆகுவேன்
ஓஊ. ஓஊ.. ஓஊ ..ஓஊ.

வானில் காயுதே வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
வாய்ப்பை தந்தால் நான் வாய் பேசுவேன்
உனக்கும் சேர்த்து நான் ஒருவன் காதல் செய்வேன்
வாசம் போதுமே பூக்கள் வாய் பேசுமா
ஆ..ஆ..ஆ..ஆ..

Vaali - Vaanil Kaayuthae

வாலி - ஏப்ரல் மாதத்தில்

ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்த ஜாமத்தில்
என் ஜன்னலோரத்தில் நிலா நிலா
கண்கள் கசக்கி நான் துள்ளியெழுந்தேன்
என் காதில் சொன்னது ஹலோ ஹலோ!
நிலா நிலா கை வருமா
இல்லை இல்லை கை சுடுமா?

இதயம் திருடுதல் முறையா - அந்த
களவுக்கு தண்டனைகள் இல்லையா இல்லையா?

முத்தத்தில் கசையடி நூறு - அந்த
முகத்தில் விழவேண்டும் இல்லையா இல்லையா?

நீ கொண்ட காதலை நிஜமென்று நான் வாழ
தற்கொலை செய்யச் சொன்னால் செய்வாயா?
தப்பித்து நாடு தாண்டிச் செல்வாயா?

இதய மலையேறி நெஞ்சென்ற பள்ளத்தில்
குதித்து நான் சாக மாட்டேனா?
குமரி நீ சொல்லி மறுப்பேனா?
ஏப்ரல் மாதத்தில்...

மேகத்தின் உள்ளே நானும் ஒளிந்தால் - ஹையோ
எப்படி என்னைக் கண்டு பிடிப்பாய்? பிடிப்பாய்?

மேகத்தின் மின்னல் டார்ச் அடித்து அந்த
வானத்தில் உன்னைக் கண்டு பிடிப்பேன் பிடிப்பேன்

ஹே கிள்ளாதே
என்னைக் கொல்லாதே..
உன் பார்வையில் பூத்தது நானா?

சுடுவேளை கேட்டாலும் மழை வார்த்தை சொல்கின்றாய்
என் நெஞ்சம் அடையாது புரியாதா?
கண்ணாடி மறையாது தெரியாதே?
கண்ணாடி முன் நின்று உன் நெஞ்சை நீ கேளு
உன் காதல் அது சொல்லும் தெரியாதா?
தாழம்பூ மறைத்தாலும் மணக்காதா?

ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்த ஜாமத்தில்
உன் ஜன்னலோரத்தில் நிலா நிலா
கண்கள் கசக்கி நான் துள்ளியெழுந்தேன்
அது காதில் சொன்னது ஹலோ ஹலோ!
நிலா நிலா கை வருமே
தினம் தினம் சுகம் தருமே!

Vaali - April Maathathil

ஆயுத எழுத்து - ஹே குட் பாய் நண்பா

ஹே குட் பாய் நண்பா ஹே குட் பாய் நண்பா
கண்ணிலே கல்மிஷம் போதுமே சில்மிஷம்
ஸ்பரிஷமோ துளி விஷம் ஸ்பரிஷமோ துளி விஷம்
நானில்லை என் வசம்

நீ யாரோ நான் யாரோ
கண்தோன்றி கண் காணா கண்ணீரோ
கண்தோன்றி கண் காணா கண்ணீரோ
நீ யாரோ நான் யாரோ

கள்ள விழிகளில் கண் கொத்தி சென்றாயே
கன்னக் குழிகளில் உயிர் மூடி வைத்தாயே
பின்பு யாரோ போல் தள்ளி நின்றாய்
நட்பு உறவில்லை என்றாய்
நீ யாரோ நான் யாரோ

ஹே குட் பாய் நண்பா
நீ யாரோ

அந்த சாலையில் நீ வந்து சேராமல்
ஆறு டிகிரியில் என் பார்வை சாயாமல்
விலகிப் போயிருந்தால் தொல்லையே இல்லை
இது வேண்டாத வேலை

நீ யாரோ)
ஹே குட் பாய் நண்பா

Aayutha Ezhuthu - Hey Goodbye Nanba

ஆயுத எழுத்து - நெஞ்சம் எல்லாம்

ஏய் ஏய் ஏய் ஓர் உண்மை சொன்னால்
ஏய் ஏய் ஏய் நேசிப்போம்

நெஞ்சம் எல்லாம் காதல்
தேகமெல்லாம் காமம்
உண்மை சொன்னால் என்னை
நேசிப்பாயா

காதல் கொஞ்சம் கம்மி
காமல் கொஞ்சம் தூக்கல்
மஞ்சத்தின் மேல் என்னை
மன்னிப்பாயா

உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா
உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா

நேசிப்பாயா நேசிப்பாயா
நேசிப்பாயா நேசிப்பாயா
பெண்கள் மேலே மையல் உண்டு
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
நீ முத்த பார்வை பார்க்கும் போது
என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்
வீசாதே மழை மேகம் எனக்கு
என் ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு
வா சோகம் இனி நமக்கெதுக்கு
யார் கேக்க நமக்கு நாமே வாழ்வதற்கு

உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா
(நெஞ்சமெல்லாம்..)

காதல் என்னை வருடும் போதும்
உன் காமம் என்னை திருடும் போதும்
என் மனசெல்லாம் மார்கழி தான்
என் கனவெல்லாம் கார்த்திகைதான்
என் வானம் என் வாசல் திறந்து
என் பூமி என் வசத்தில் இல்லை
உன் குறைகள் நான் அறியவில்லை
நான் அறிந்தால் சூரியனில் சுத்தமில்லை
(நெஞ்சமெல்லாம்..)

Aaytha Ezhuthu - Nenjam Ellam

Thursday, October 10, 2013

அமர்க்களம் - சத்தம் இல்லாத

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்
உயிரைக்கிள்ளாத உறவைக் கேட்டேன்
ஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன்
வலிகள் செய்யாத வார்த்தைக் கேட்டேன்
வயதுக்குச் சரியான வாழ்க்கைக் கேட்டேன்
இடிகள் இல்லாத மேகம் கேட்டேன்
இளமை கெடாத மோகம் கேட்டேன்
பறந்து பறந்து நேசம் கேட்டேன்
பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்
புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன்
பூவின் மடியில் படுக்கைக் கேட்டேன்
தானே உறங்கும் விழியைக் கேட்டேன்
தலையைக் கோதும் விரலைக் கேட்டேன்
நிலவில் நனையும் சோலைக் கேட்டேன்
நீலக் குயிலின் பாடல் கேட்டேன்
நடந்து போக நதிக்கரை கேட்டேன்
கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன்
தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன்
எட்டிப் பிடிக்க விண்மீன் கேட்டேன்
துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்
தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன்
பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்
பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்
மனிதர்க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்
பறவைக்கெல்லாம் தாய் மொழி கேட்டேன்
உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்
ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்
வானம் முழுக்க நிலவைக் கேட்டேன்
வாழும்போதே சுவர்க்கம் கேட்டேன்
எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன்
எரியும் தீயாய் கவிதை கேட்டேன்
கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்
காமம் கடந்த யோகம் கேட்டேன்
சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்
சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன்
உச்சந்தலைமேல் மழையைக் கேட்டேன்
உள்ளங்காலில் நதியைக் கேட்டேன்
பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன்
பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன்
நன்றி கெடாத நட்பைக் கேட்டேன்
நடுங்கவிடாத செல்வம் கேட்டேன்
மலரில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன்
மழையின் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன்
நிலவில் நதியில் குளிக்கக் கேட்டேன்
நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன்
விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன்
அழுதால் மழை போல் அழவே கேட்டேன்
ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன்
எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்
பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன்
சூரியன் போல் ஒரு பனித்துளி கேட்டேன்
ராஜராஜனின் வாளைக் கேட்டேன்
வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்
பாரதியாரின் சொல்லைக் கேட்டேன்
பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்
மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன்
மதுரை மீனாக்ஷி கிளியைக் கேட்டேன்
சொந்த உழைப்பில் சோறைக் கேட்டேன்
தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன்
மழையைப் போன்ற பொறுமையைக் கேட்டேன்
புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன்
புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன்
இடியைத் தாங்கும் துணிவைக் கேட்டேன்
இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்
துரோகம் தாங்கும் வலிமை கேட்டேன்
தொலைந்துவிடாத பொறுமையைக் கேட்டேன்
சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்
சொன்னால் சாகும் வேகம் கேட்டேன்
கயவரை அறியும் கண்கள் கேட்டேன்
காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்
சின்னச் சின்ன தோல்விகள் கேட்டேன்
சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்
மூடியில்லாத முகங்கள் கேட்டேன்
போலியில்லாத புன்னகை கேட்டேன்
தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன்
தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன்
ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன்
ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்
காசே வேண்டாம் கருணை கேட்டேன்
தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன்
கூட்டுக்கிளிபோல் வாழக் கேட்டேன்
குறைந்தபட்ச அன்பைக் கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
இதிலே எதுவும் நடக்கவில்லை
வாழ்வே வாழ்வே வேண்டாமென்று
மரணம் மரணம் மரணம் கேட்டேன்

Amarkalam - Satham Illatha

Followers