Pages

Search This Blog

Wednesday, October 9, 2013

மூவேந்தர் - நான் வானவில்லையே

நான் வானவில்லையே பார்த்தேன்
அது காணவில்லையே வேர்த்தேன்
நான் வானவில்லையே பார்த்தேன்
அது காணவில்லையே வேர்த்தேன்

ஒரு கோடி மின்னல் பார்வை ஜன்னலில்
வீச சொல்லியா கேட்டேன்
இனி நிலவை பார்க்கவே மாட்டேன்

கூந்தல் கண்டவுடன் மேகம் வந்ததென்ன மயிலும் நடனமிடுமோ
பூவில் ஆடிவரும் வண்டு இமையில் இரு கண்கள் ஆகிவிடுமோ
தேடி தின்று விட ஆசை கிள்ளுதடி தேனில் செய்த இதழோ
மூடி வைத்த முயல் மூச்சு முட்டுதடி மீட்க என்ன வழியோ

பகல் நேரம் நிலவை பார்த்தது நானடி கண்ணம்மா
முந்தானை வாசம் வந்தது ஆறுதல் சொல்லம்மா
விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது நெஞ்சுது
கொஞ்சம் நில்லம்மா
(நான் வானவில்லையே..)

சேலை சூடி ஒரு சோலை போல வழி பூக்கள் சிந்தி விழுமோ
பாவையான மனம் ஈரமானதடி பார்வை தந்த வரமோ
பாதம் பட்ட இடம் சூடு கண்டு உனை நானும் கண்டு விடுவேன்
காதலான மழை சாரல் தூவி விட மார்பில் ஒதுங்கி விடுவேன்

பொய் மானை தேடி சென்றது நாமனின் கண்ணம்மா
மெய் மானை தேட சொன்னது மாரனின் நெஞ்சம்மா
விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது நெஞ்சுது
கொஞ்சம் நில்லம்மா
(நான் வானவில்லையே..)

Moovendhar - Naan Vanavilleye

டூயட் - தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் நன்மை தூய
உருப் பளிங்கு போல் வாள் என் உள்ளத்தினுள்ளே
இருப்பள் இங்கு வாராது இடர் (இசை)

பெண் : படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ்பூந் தாமரை போற் கையுந்
துடியிடையும் அல்லும் பகலும்
அனவரதம் துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி.

ஆண் : தானனா தானானானா தன்னன்னானா
தர தானனானா தானனானா
தன்னன்னானா

ஆண் : தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு
ஒரு சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப் போடு (இசை)

ஆண் : எத்தனை சபைகள் கண்டோம்
எத்தனை எத்தனை பகையும் கண்டோம்
அத்தனையும் சூடங்காட்டிச் சுட்டுப் போடு

மெட்டுப் போடு மெட்டுப் போடு
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப் போடு மெட்டுப் போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு
ஒரு சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப் போடு

எத்தனை சபைகள் கண்டோம்
எத்தனை எத்தனை பகையும் கண்டோம்
அத்தனையும் சூடங்காட்டிச் சுட்டுப் போடு

மெட்டுப் போடு மெட்டுப் போடு
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப் போடு மெட்டுப் போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

***

ஆண் : இது மக்கள் பாட்டு தன்மானப் பாட்டு
இது போராடும் உங்கள் வாழ்க்கைப் பாட்டு
கல்லூரிப் பெண்கள் பாடும் கன்னிப்பாட்டு
சபைகளை வென்று வரும் சபதம் போட்டு
நாம் கட்டும் பாட்டு ஈரம் தட்டும் பாட்டு
கட்டிச் செந்தேனாய் நெஞ்சில் சொட்டும் பாட்டு
தாய்ப் பாலைப் போல் ரத்தத்தில் ஒட்டும் பாட்டு
தமிழ் மக்கள் வீட்டைச் சென்று தட்டும் பாட்டு
மெட்டுப் போடு மெட்டுப் போடு
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப் போடு மெட்டுப் போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

***

ஆண் : இனி கண்ணீர் வேண்டாம் ஒரு கவிதை செய்க
எங்கள் கானங்கள் கேட்டுக் காதல் செய்க

நம் மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் செய்க
நலம் பெற வேண்டும் என்றால் நன்மை செய்க
நம் பூமி மேலே புது பார்வை கொள்க
நம் இயற்கை மேல் இன்னும் இச்சை கொள்க
கொஞ்சம் நிலவுக்கு நேரம் வைத்து தூக்கம் கொள்க
பாறைக்குள் வேரைப் போலே வெற்றி கொள்க

மெட்டுப் போடு மெட்டுப் போடு
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப் போடு மெட்டுப் போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு
ஒரு சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப் போடு
எத்தனை சபைகள் கண்டோம்
எத்தனை எத்தனை பகையும் கண்டோம்
அத்தனையும் சூடங்காட்டிச் சுட்டுப் போடு

மெட்டுப் போடு மெட்டுப் போடு
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப் போடு மெட்டுப் போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

ஆண் : ச சநிதப ப பமகரி கரிநி சம சப சநி பம கரிச
சக ரிக மநி பம கமப
பச நித மப
சம கரி நிச
கம பம ப
நி ச க ரி ச
ச ரி த ப
க ரி நி ச
ம ப நி
க ரி ச
ப நி க ம
ப ம க ரி ச நி த ப
ச ரி க ம ப த ப ச நி ச க ரி ம க ரி ச
க ரி ச நி ச நி த ப
ப ச நி த ப க க ரி
க ரி க ப ம த ப ச
க ரி ச நி த ரி ச நி த ப
க ரி க ம
ப த ம ச ச
ப த ம க க க
ச ம க ரி ரி
ச நி த ப ப ப
ச க ரி ச
க ரி நி ச ச ச
ம க ரி
ப நி ச நி ப
க ரி க ம ப

Duet - Mettu Podu

டூயட் - வெண்ணிலாவின் தேரில் ஏறி

வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே
மானம் உள்ள ஊமைப்போல
தானம் கேட்க கூசி நின்றேனே
நிறங்கண்டு முகம் கண்டால்
நேசம் கொண்டேன்
அவள் நிழல் கண்டு நிழல் கண்டேன்
நான் பாசம் கொண்டேன்

வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே

***

அட கை நீட்டும் தம்பியே
எனை கட்டி வைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும்
இந்தப் பாறையே (இசை)

அட கை நீட்டும் தம்பியே
எனை கட்டி வைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும்
இந்தப் பாறையே

நிறங்கண்டு முகங்கண்டால்
நேசம் கொண்டேன்
அவள் நிழல் கண்டு நிழல் கண்டேன்
நான் பாசம் கொண்டேன் (இசை)

ஆண் : வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே

(இசை) சரணம் - 2

கால் அழகு மேல் அழகு
கண் கொண்டு கண்டேன்
அவள் நூல் அவிழும் இடையழகை
நோகாமல் தின்றேன்
கத்தி மூக்கில் காதல் நெஞ்சை
காயம் செய்து மாயம் செய்தாளே (இசை)

அட கை நீட்டும் தம்பியே
எனை கட்டி வைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும்
இந்தப் பாறையே
அவள் சிக்கெடுக்கும் கூந்தலுக்கு
சீப்பாக இருப்பேன்
இல்லை செந்தாமரை பாதத்தில்
செருப்பாக பிறப்பேன்
அண்டமெல்லாம் விண்டு போகும்
கொண்ட காதல் கொள்கை மாறாது (இசை)

அட கை நீட்டும் தம்பியே
எனை கட்டி வைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும்
இந்தப் பாறையே

Duet - Vennilavin Theril Yeri

டூயட் - குளிச்சா குத்தாலம்

ஆண் : குளிச்சா குத்தாலம்
கும்பிட்டா பரமசிவம்
குடிச்சா நீர் மோரு
புடிச்சா நீதாண்டி
சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி
சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி

குளிச்சா குத்தாலம்
கும்பிட்டா பரமசிவம்
குடிச்சா நீர் மோரு
புடிச்சா நீ தாண்டி
சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி
சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி

***

பெண் : கொளத்துக்கு தாமரப்பூ
கும்மிக்கு குமரிப் பொண்ணு
வீட்டுக்கு முருங்க மரம்
வெய்யிலுக்கு வேப்ப மரம்
கொளத்துக்கு தாமரப்பூ
கும்மிக்கு குமரிப்பொண்ணு
வீட்டுக்கு முருங்க மரம்
வெய்யிலுக்கு வேப்ப மரம்

ஆண் : கூழுக்கு மோர் மொளகா
கூதலுக்கு சுடு சோறு
நடிச்சா எங்கப்பன்
அணைச்சா நீதாண்டி

சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி
சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி

பெண் : குளிச்சா குத்தாலம்
கும்பிட்டா பரமசிவம்
குடிச்சா நீர் மோரு
புடிச்சா நீதான்யா

ஆண் : சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி
சொக்குப் பொடி மீனாட்சி
ஹே.. சொக்கநாதன் நான் தாண்டி

***

ஆண் : தமிழுக்கு தென்மதுரை
தாவாணிக்கு பாவாடை
மாட்டுக்கு பருத்தி விதை
மனைவிக்கு மல்லிகைப்பூ
தமிழுக்கு தென்மதுரை
தாவாணிக்கு பாவாட
மாட்டுக்கு பருத்தி விதை
மனைவிக்கு மல்லிகைப்பூ

பெண் : சிரிப்புக்கு என். எஸ். கே
சிந்தனைக்கு வள்ளுவரு
இன்னதுக்கு இன்னதுன்னு
எழுதி வச்ச பொருத்தமிது

ஆண் : சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி
சொக்குப் பொடி மீனாட்..ச்சி
சொக்கநாதன் நான் தாண்டி

ஆண் : குளிச்சா...

பெண் : குத்தாலம்...

ஆண் : கும்பிட்டா...

பெண் : பரமசிவம்

ஆண் : குடிச்சா.....

பெண் : நீர் மோரு...

ஆண் : புடிச்சா...

பெண் : நீதான்யா

ஆண் : சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி
சொக்குப் பொடி மீனா..ட்சி
சொக்கநாதன் நான் தாண்டி
சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி
சொக்குப் பொடி மீனா..ட்சி
சொக்கநாதன் நான் தாண்டி

Duet - Kulicha Kuthaalam

டூயட் - என் காதலே என் காதலே

என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரண்டை கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தர போகிறாய்
கிள்ளுவதை கிள்ளிவிட்டு ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்

என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்
காதலே நீ பூவெறிந்தால் எந்த மலையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல்லெறிந்தால் எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்
இனி மீள்வதா இல்லை வீழ்வதா
உயிர் வாழ்வதா இல்லை போவதா
அமுதென்பதா விஷமென்பதா உனை அமுதவிஷமென்பதா

என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்
காதலே உன் காலடியில் நான் விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ மூடிகொண்டாய் நான் குலுங்கி குலுங்கி அழுதேன்
இது மாற்றமா தடுமாற்றமா என் நெஞ்சிலே பனிமூட்டமா
நீ தோழியா இல்லை எதிரியா என்று தினமும் போராட்டமா 

என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தர போகிறாய்
கிள்ளுவதை கிள்ளிவிட்டு....................

Duet - En Kadhalae  En Kadhalae

டூயட் - அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி

அஞ்சலி  அஞ்சலி  புஷ்பாஞ்சலி
பூவே  உன்  பாதத்தில்  புஷ்பாஞ்சலி
பொன்னே  உன்  பெயருக்கு  பொன்னாஞ்சலி
கண்ணே  உன்  குரலுக்கு  கீதாஞ்சலி
கண்  கானா  அழக்திற்கு  கவிதாஞ்சலி
(அஞ்சலி ...)

காதல்  வந்து  தீண்டும்  வரை  இருவரும்  தனித்தனி
காதலின்  பொன்  சங்கிலி  இணைத்தது  கண்மணி
கடலிலே  மழைவீழ்ந்தபின்  எந்தத்துளி
மழைத்துளி
காதலில்  அதுபோல  நான்  கலந்திட்டேன்  காதலி
திருமகள்  திருப்பாதம்  பிடித்துவிட்டேன்
தினமொரு  புதுப்பாடல்  படித்துவிட்டேன்
அஞ்சலி  அஞ்சலி  என்னுயிர்க்  காதலி

(பூவே ...)

சீதையின்  காதல்  அன்று  விழி  வழி  நுழைந்தது
கோதையின்  காதலின்று  செவி  வழி  புகுந்தது
என்னவோ  என்  நெஞ்சிலே  இசை  வந்து  துளைத்தது
இசை  வந்த  பாதை  வழி  தமிழ்  மெல்ல  நுழைந்தது
இசை  வந்த  திசை  பார்த்து  மனம்  குழைந்தேன்
தமிழ்  வந்த  திசை  பார்த்து  உயிர்  கசிந்தேன்
அஞ்சலி  அஞ்சலி  இவள்  தலைக்காதலி ...

பூவே  உன்  பாதத்தில்  புஷ்பாஞ்சலி
பொன்னே  உன்  பெயருக்கு  பொன்னாஞ்சலி
கண்ணே  உன்  குரல்  வாழ  கீதாஞ்சலி
கவியே  உன்  தமிழ்வாழ  கவிதாஞ்சலி

அழகியே  உனைப்போலவே  அதிசயம்  இல்லையே
அஞ்சலி  பேரைச்சொன்னேன்  அவிழ்ந்தது  முல்லையே
கார்த்திகை  மாதம்  போஅனால்  கடும்மழை  இல்லையே
கண்மணி  நீயில்லையேல்  கவிதைகள்  இல்லையே
நீயென்ன  நிலவோடு  பிறந்தவளா ?
பூவுக்குள்  கருவாகி  மலர்ந்தவளா ?
அஞ்சலி  அஞ்சலி  என்னுயிர்க்காதலி ...

(பூவே ...)
 
Duet - Anjali Anjali Pushpaanjali
 

Tuesday, October 8, 2013

JK Enum Nanbanin Vaazhkai - Uyire Uyire Nee

Uyire Uyire Nee Vanthathen Yendru Theriyaathey
Uyire Uyire Nee Povathengendru Puriyaathey
Ethuvum Ethuvum Nam Kaiyil Nichayam Kidaiyaathey
Ithanai Manithan Than Arivil Vellavum Iyalaathey
Naalai Enna Aagum Endru Yaarum Solla Mudiyaathey
Naagareega Vaazhvil Ulla Mogam Mattum Kuraiyaathey
Kaanugindra Kaatchi Ellaam Unmai Endru Aagathey
Kaana Pogum Kaatchi Enna Yugam Seiya Koodaathey
Kaatchi Maari Ponaalum Nam Kannai Vittu Vilagaathey
Paarvai Indri Ponaalum Varum Kanavai Kolla Mudiyaathey

Kaalai Velayil Thondrum Sooriyan
Maalai Aanathum Saayinthu Thoonguthey
Maalai Velayil Thondrum Chanthiran
Kaalai Vanthathum Theyinthu Veenguthey
Kaanum Yaavume Appave Maarugindrathey Man Melae
Maaridaamale Ponaale Naam Yethu
Kaathal Kolvathu Theengaanaal
Naamum Vanthathu Yevaaru
Thevai Aanaithai Thedaamal Vaazhvaethu

Kaatchi Maari Ponaalum Nam Kannai Vittu Vilagaathey
Paarvai Indri Ponaalum Varum Kanavai Kolla Mudiyaathey

Yellai Kodugal Nooru Ullana
Yentha Kottile Naamum Nirpatho
Pallam Medugal Paathai Aayina
Entha Paathayil Naamum Selvatho
Yaarum Atra Oor Theevai Pol
Naamum Vazhvuthaan Nandraagum
Ondru Koodiya Oor Thaane Boologam
Naamum Yaaraiyum Saaraamal
Vaazhvai Velluthal Aagathey
Thanithu Vaazhvathil Un Jenmam Theeraathey

Kaatchi Maari Ponaalum Nam Kannai Vittu Vilagaathey
Paarvai Indri Ponaalum Varum Kanavai Kolla Mudiyaathey

Uyire Uyire Nee Vanthathen Yendru Theriyaathey
Uyire Uyire Nee Povathengendru Puriyaathey
Ethuvum Ethuvum Nam Kaiyil Nichayam Kidaiyaathey
Ithanai Manithan Than Arivil Vellavum Iyalaathey
Naalai Enna Aagum Endru Yaarum Solla Mudiyaathey
Naagareega Vaazhvil Ulla Mogam Mattum Kuraiyaathey
Kaanugindra Kaatchi Ellaam Unmai Endru Aagathey
Kaana Pogum Kaatchi Enna Yugam Seiya Koodaathey

Followers