Pages

Search This Blog

Thursday, December 29, 2016

இதயத்தை திருடாதே - காவியம் பாடவா தென்றலே

காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ
பாடும் நீலப் பூங்குயில்
மௌனமான வேளையில்
காவியம் பாடவா தென்றலே
காவியம் பாடவா தென்றலே

விளைந்ததோர் வசந்தமே
புதுப்புனல் பொழிந்திட
மனத்திலோர் நிராசையே
இருட்டிலே மயங்கிட
வாழ்கின்ற நாட்களே
சோகங்கள் எனபதை
கண்ணீரில் தீட்டினேன்
கேளுங்கள் என்கதை
கலைந்து போகும் கானல் நீரிது

காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ

புலர்ந்ததோ பொழுதிதுவோ
புள்ளினத்தின் மகோத்ஸவம்
இவை மொழி இசைத்ததும்
சுரங்களின் மனோகரம்
புதுப் பிரபஞ்சமே
மலர்ந்த நேரமே
அம்மாடி சொர்கம்தான்
முன்னாடி வந்ததோ
கசந்து போன காட்சி இல்லையே

காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ
காவியம் பாடவா தென்றலே

Idhayathai Thirudathe - Kaviyam Padava

இதயத்தை திருடாதே - ஆத்தாடி யம்மாடி தேன் மொட்டுத்தான்

ஆத்தாடி யம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்விட்டுத்தான்
ஆத்தாடி யம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்விட்டுத்தான்
உருகுதோ... மருகுதோ...
குழந்தை மனமும் குறும்புத்தனமும் இனிமையோ
கொடியிலே... அரும்புதான்...
குளிரும் மழையில் நனையும் பொழுது
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே
ஏதோதோ வந்தாச்சோ எண்ணத்திலே
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே ஹே
ஏதோதோ வந்தாச்சோ எண்ணத்திலே

வானமும்... வையமும்...
கரங்களை இணைப்பதே மழையில்தான்
செடிகளும்... மலர்களும்...
ஈரமாய் இருப்பதே அழகுதான்
மழையின் சாரலும் கிள்ளாமல் கிள்ளவும்
அழகும் ஆசையும் ஆடாமல் ஆடவும்
துள்ளுகின்ற உள்ளமென்ன
தத்தளிக்கும் மேனியென்ன
வஞ்சி எந்தன் கண்கள் கண்ட
தேவலோகம் பூமிதான்

ஆத்தாடி யம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்விட்டுத்தான்
ஆத்தாடி யம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்விட்டுத்தான்
உருகுதோ... மருகுதோ...
குழந்தை மனமும் குறும்புத்தனமும் இனிமையோ
கொடியிலே... அரும்புதான்...
குளிரும் மழையில் நனையும் பொழுது
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே
ஏதோதோ வந்தாச்சோ எண்ணத்திலே
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே
ஏதோதோ வந்தாச்சோ எண்ணத்திலே

என்னவோ... எண்ணியே...
இளையவள் இதயமே ததும்புதா
சிறுசிறு... மழைத்துளி...
சிதறிட சபலம்தான் அரும்புதா
வானதேவனே சல்லாபம் செய்திட
வாயுதேவனே முத்தாட வந்திட
நீறு பூத்த கூந்தலோடு ஊதக்காற்று தழுவும்போது
துள்ளும் பெண்ணின் உள்ளம் நூறு
கவிதை சொல்லும் ஓஹொஹோ

ஆத்தாடி யம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்விட்டுத்தான்
ஆத்தாடி யம்மாடி தேன் மொட்டுத்தான்
கூத்தாட தூறல்கள் நீர்விட்டுத்தான்
உருகுதோ... மருகுதோ...
குழந்தை மனமும் குறும்புத்தனமும் இனிமையோ
கொடியிலே... அரும்புதான்...
குளிரும் மழையில் நனையும் பொழுது
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே
ஏதோதோ வந்தாச்சோ எண்ணத்திலே
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே ஹே
ஏதோதோ வந்தாச்சோ எண்ணத்திலே

Idhayathai Thirudathe - Aathaadi Ammaadi

இதயத்தை திருடாதே - ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா

ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஏழை காதல் வாழுமோ
இருளும் ஒளியும் சேருமோ
நீயோர் ஓரம் நான் ஓர் ஓரம்
கானல் நீரால் தாகம் தீராது


ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா
இணைந்திடாது போவதோ
வானம் பூமி ஆவதோ
காலம் சிறிது காதல் மனது
தேவன் நீதான் போனால் விடாது


தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே
வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி


அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும்
ஆணையிட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ
ராஜ மங்கை கண்களே என்றும் என்னை மொய்ப்பதோ
வாடும் ஏழை இங்கு ஓர் பாவி அல்லவோ
எதனாலும் ஒரு நாளும் மறையாது பிரேமையும்
எரித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ
கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ
காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ
அம்மாடி நான் ஏங்கவோ நீ வா வா


ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா


காளிதாசன் ஏடுகள் கண்ணன் ராசலீலைகள்
பருவமோகம் தந்தது பாவம் அல்லவே
ஷாஜகானின் காதலி தாஜ்மஹால் பூங்கிளி
பாசம் வைத்த பாவம்தான் சாவும் வந்தது
இறந்தாலே இறவாது விளைகின்ற பிரேமையே
அடி நீயே பலியாக வருகின்ற பெண்மையே
விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய்
பேசும் இந்த பாசமே இன்று வெற்றி கொள்ளுமே
இளங்கன்னி உன்னுடன் கூட வா வா


ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

ஏக்கம் என்ன பைங்கிளி 
என்னை வந்து சேரடி
நெஞ்சிரண்டு நாளும் பாட 
காவல் தாண்டி பூவை இங்காட
காதல் கீர்த்தனம் காணும் மங்களம்
பிரேமை நாடகம் பெண்மை ஆடிடும்

Idhayathai Thirudathe - Oh Priyaa Priyaa

இளமை காலங்கள் - பாட வந்ததோ கானம்

பாட வந்ததோ கானம் 
பாவை கண்ணிலோ நாணம்
கள்ளூறும் பொன் வேளை 
தள்ளாடும் பெண் மாலை
இளமை வயலில் அமுத மழை விழ

ராஜமாலை தோள் சேரும் 
நாணமென்னும் தேன் ஊறும்
கண்ணில் குளிர்காலம் 
நெஞ்சில் வெயில்காலம்
அன்பே எந்நாளும் நான் உந்தன் தோழி
பண்பாடி கண்மூடி
உனது மடியில் உறங்கும் ஒரு கிளி

மூடிவைத்த பூந்தோப்பு 
காலம் யாவும் நீ காப்பு
இதயம் உறங்காது 
இமைகள் இறங்காது
தேனே கங்கைக்கு ஏனிந்த தாகம்
உல்லாசம் உள்ளூறும் 
நதிகள் விரைந்தால் கடலும் வழிவிடும்

Ilamai Kaalangal - Paada Vanthatho

இளமை காலங்கள் - இசை மேடையில் இந்த வேளையில்

ஆ...ஆ...ஆ...ஆ...ஹா..

ஆ...ஆ...ஆ...ஆ..ஆ..ஆ.. ஹா.. 

இசை மேடையில் இந்த வேளையில்
சுகராகம் பொழியும்

இசை மேடையில் இந்த வேளையில்
சுகராகம் பொழியும்

இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம்

இசை மேடையில் இன்ப வேளையில்
சுகராகம் பொழியும்

ஆ...ஹா...ஆ...ஹா...

ம்...ஹா...ம்..ஹா..

இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம்


ஆ...ஆ...ஹா..

ஆ...ஆ...ஆ..ஹா...

முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும்
முல்லை இளம் பூவெடுத்து
முகம் துடைக்கும்
முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும்
முல்லை இளம் பூவெடுத்து
முகம் துடைக்கும்

நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும்
மேனியெங்கும் பூ வசந்தம்
நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும்
மேனியெங்கும் பூ வசந்தம்
கன்னிக்கரும்பு உன்னை எண்ணி சாறாகும்

இசை மேடையில் இன்ப வேளையில்
சுகராகம் பொழியும்

ஆ...ஹா...ஆ...ஹா...

இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம்

பப்ப பப பப்ப பா...பப்ப பப பப்ப பா... 

பப்ப பப பா... பப்ப பப பா... 


கன்னி மகள் கூந்தள் கலைந்திருக்க
வந்து தொடும் உன் கைகள் வகிடெடுக்க
கன்னி மகள் கூந்தள் கலைந்திருக்க
வந்து தொடும் உன் கைகள் வகிடெடுக்க

போதை கொண்டு பூ அழைக்க
தேடி வந்து தேன் எடுக்க
போதை கொண்டு பூ அழைக்க
தேடி வந்து தேன் எடுக்க
தங்க கொழுந்து தொட்டவுடன் பூவாக

இசை மேடையில் இன்ப வேளையில்
சுகராகம் பொழியும்

ஆ...ஹா...ஆ...ஹா...

இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம்

ம் ஆஹா ஹா லலா லலா
ம் ஆஹா ஹா லலா லலா

ஆ...ஹா...ஆ...ஹா...

Ilamai Kaalangal - Isaimedaiyil Intha Velayil

இளமை காலங்கள் - ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து

ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே

ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

என்னைப் பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்திவிட்டுப் போகும்
என்னைப் பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்திவிட்டுப் போகும்
உன் வாசலில் எனைக் கோலம் இடு
இல்லை என்றால் ஒரு சாபம் இடு
பொன்னாரமே…
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
என்னோடு நீ பாடிவா சிந்து

ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

நேரம் கூடிவந்த வேலை
நீ நெஞ்சை மூடிவைத்த கோழை
நேரம் கூடிவந்த வேலை
நீ நெஞ்சை மூடிவைத்த கோழை
என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை
கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை
என் காதலி…
உன் போல என்னாசை தூங்காது ராணி
தண்ணீரில் தள்ளாடுதே தோனி

ஈரமான ரோஜாவே ஏக்கம் என்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

Ilamai Kaalangal - Eeramana Rojave

காதல் ஓவியம் - குயிலே குயிலே உந்தன் கீதங்கள்

குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ

குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ
குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ

உயிரே உறவே அந்த காலங்கள் வாராதோ

குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ

ஆ ஆ ஆ வானத்து நிலவை தண்ணீரிலே
சிறைவைத்த கதை தான் உன் கடையே
வானத்து நிலவை தண்ணீரிலே
சிறைவைத்த கதை தான் உன் கடையே

விழிகள் இருந்தும் உன்னை காணாமல் சுகம் ஏது
அழகே மலரே வருவாய்யா

ஆ ஆ ஆ

குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ

சீர்கொண்ட கவிதை கலைந்ததம்மா
நான் கண்ட கனவும் மறைந்ததம்மா

சீர்கொண்ட கவிதை கலைந்ததம்மா
நான் கண்ட கனவும் மறைந்ததம்மா
சலங்கை இசையை நான் கேட்கின்ற காலம் ஏது

நினைவில் உனை நான் மறப்பேனா

ஆ ஆ ஆ

குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ

உயிரே உறவே அந்த காலங்கள் வாராதோ

குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ

Kaadhal Oviyam - Kuyilae Kuyilae

Followers