Pages

Search This Blog

Thursday, December 29, 2016

இதயம் - ஏப்ரல் மேயிலே பசுமையே

ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா
இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே
போரு போருடா
இது தேவையா... அட போங்கையா...
ஜூன் ஜூலையா...

பட்டாம் பூச்சிகள் பறக்குது பறக்குது 
கண்ணா மூச்சிகள் நடத்துது நடத்துது 
பச்சைப் பசுமைகள் தெரியுது தெரியுது
அழகு கிளிகள் நமது விழியில் வலம் வருதே

ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா
இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே
போரு போருடா...


குர்தா மேக்சியும் சல்வார் கமீசும் சுமந்த பெண்களே
அ அ அ அ 
எங்கே என்று தான் இங்கே இன்று தான் வருந்தும் கண்களே
ஹயொ ஹயொ ஹயொ ஹயொ
வீட்டில் நிற்கிற காவல் காரரும் மொறச்சி பார்க்கிறார்
ஆமாமா
சோலைக் கொள்ளையின் பொம்மை போலவே
வெறச்சி போகிறார்
அட டட டட டட
டிரைவின் ஹோட்டலும் சாந்தோம் பீச்சும்
டல்லாய் தோன்றுதே பாருங்கள்
பன்னீர் பூக்களை பார்க்காதின்று
கண்ணீர் வார்க்கிறோம் நாங்கள்
நெஞ்சம் தாங்குமா... கண்கள் தூங்குமா...
துன்பம் நீங்குமா...

ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா
இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே
போரு போருடா...


தத்தாத தாதத்த தா தா...(இசை)
தத்த தாரத்தா (இசை) 
தத்த தாரா... தாரா... ரத்த தா...ரா...ரா ரா
தா...லாலா லாலா லாலா லா...லாலா லாலா லா


காலேஜ் அழகியும் கான்வெண்ட் குமரியும் 
தியேட்டர் போகிறார்
ஹொ ஹொ ஹொ ஹொ
டாக்சி டிரைவரும் பார்த்து பார்த்து தான்
மீட்டர் போடுவார்
டூ டூ டூ டூ
காலை மாலைதான் வேலை பார்பவர்
மகிழ்ச்சி கொள்கிறார்
ஹ்ஹஹ் ஹஹ்ஹஹ் ஹா
வாலைக் குமரிகள் சாலை கடக்கையில்
வாயை பிளக்கிறார்
டெ டெ டெ டெ டெ
ஸ்டெல்லா மேரிசும் குயின் மேரிசும்
தென்றல் வீசிடும் பூந்தோட்டம்
வஞ்சிப் பாவைகள் தோன்றும்போது
நெஞ்சம் போடுதே ஆட்டம்
எங்கள் பாடுதான் சக்கப் போடுதான்
படா ஜோருதான்

ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா
இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே
போரு போருடா
இது தேவையா... அட போங்கையா...
ஜூன் ஜூலையா...

பட்டாம் பூச்சிகள் பறக்குது பறக்குது 
கண்ணா மூச்சிகள் நடத்துது நடத்துது 
பச்சைப் பசுமைகள் தெரியுது தெரியுது
அழகு கிளிகள் நமது விழியில் வலம் வருதே

ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா
இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே
போரு போருடா...

Idhayam - April Mayilae

இதயம் - பூங்கொடிதான் பூத்ததம்மா

பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா
பாட்டெடுத்து தாமதிக்க
வாடைக் காற்று பூப்பறித்து போனதம்மா

பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா

***

ஆசைக்குத் தாழ் போட்டு அடைத்தென்ன லாபம்
அதுதானே குடந்தன்னில் எரிகின்ற தீபம்
மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம்
மழைநீரைப் பொழியாமல் இருக்கின்ற மேகம்
சிலருக்குச் சில நேரம் துணிச்சல்கள் பிறக்காது
துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது
காட்டாத காதலெல்லாம் மீட்டாத வீணையைப் போல்
ஓ..ஓ..ஓ...ஓ...ஓ...ஓ...

பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா
பாட்டெடுத்து தாமதிக்க
வாடைக் காற்று பூப்பறித்து போனதம்மா

பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா

***

தாய்கூட அழுகின்ற பி்ள்ளைக்குத்தானே
பசியென்று பரிவோடு பாலூட்ட வருவாள்
உன்வீட்டுக் கண்ணாடி ஆனாலும் கூட
முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே
மனதுக்குள் பலகோடி நினைவுகள் இருந்தாலும்
உதடுகள் திறந்தால்தான் உதவிகள் பெறக்கூடும்
கோழைக்குக் காதலென்ன ஊமைக்குப் பாடலென்ன
ஓ..ஓ..ஓ...ஓ...ஓ...ஓ...

பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா
பாட்டெடுத்து தாமதிக்க
வாடைக் காற்று பூப்பறித்து போனதம்மா

பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா

Idhayam - Poonkodi Thaan

இதயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா

ஆண் : பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா
வாழ்நாள் தோறும்
தினம்தான் காதோரம்
பாடல் கூறும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா

***

ஆண் : ஆறாத ஆசைகள் தோன்றும்
எனைத் தூண்டும்
ஆனாலும் வாய் பேச
அஞ்சும் இந்த நெஞ்சம்
அவள் பேரை நாளும்
அசை போடும் உள்ளம்
அவள் போகும் பாதை
நிழல் போல செல்லும்
மௌனம் பாதி மோகம் பாதி
என்னை கொல்லும் எந்நாளும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா
வாழ்நாள் தோறும்
தினம்தான் காதோரம்
பாடல் கூறும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா

***

ஆண் : யாப்போடு சேராதோ
பாட்டு தமிழ் பாட்டு
தோப்போடு சேராதோ
காற்று பனிக்காற்று
வினா தாள் போல் இங்கே
கனா காணும் காலை
விடை போலே அங்கே
நடை போடும் பாவை
ஒன்றாய் கூடும் ஒன்றாய் பாடும்
பொன்னாள் இங்கு எந்நாளோ

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா
வாழ்நாள் தோறும்
தினம்தான் காதோரம்
பாடல் கூறும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா

Idhayam - Pottu Vaitha

இதயத்தை திருடாதே - விடிய விடிய நடனம் சந்தோஷம் விழியில்

விடிய விடிய நடனம் சந்தோஷம் விழியில் வழியும் தருணம் ஒன்றான
இளைய கரங்கள் எழுதும் மண்மேலே புதுயுகம்
பிறந்து பிறந்த எதுவும் நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும் மீண்டும்தான்
புதிய புதிய ஜனனம் பயமென்னடா யமனிடம்
நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம் நம் கண்களில் நாளைய காவியம்
நாம் இட்டது இங்கொரு சட்டமாகக் கூடும்

விடிய விடிய நடனம் சந்தோஷம் விழியில் வழியும் தருணம் ஒன்றான
இளைய கரங்கள் எழுதும் மண்மேலே புதுயுகம்
பிறந்து பிறந்த எதுவும் நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும் மீண்டும்தான்
புதிய புதிய ஜனனம் பயமென்னடா யமனிடம்
நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம் நம் கண்களில் நாளைய காவியம்
நாம் இட்டது இங்கொரு சட்டமாகக் கூடும்

காலங்கள் உதயமாகட்டும் கவலைகள் விலகி ஒடட்டும் காட்டாறு நாமல்லவோ
வா மனிதா உலகை ஆளலாம் வாழ்க்கை என்ன வாழ்ந்து காட்டலாம் ராஜாதி ராஜாக்கள் போல்
ஏனென்று கேள்வி கேட்கவும் யாரும் இல்லை எங்கேயும் கால்கள் போகலாம் ஏது எல்லை
கொண்டாட்டம் கும்மாளம் தானே தப்பாத தாளங்கள் நாம் போட…
தக தக திமி தக தக

விடிய விடிய நடனம் சந்தோஷம் விழியில் வழியும் தருணம் ஒன்றான
இளைய கரங்கள் எழுதும் மண்மேலே புதுயுகம்
பிறந்து பிறந்த எதுவும் நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும் மீண்டும்தான்
புதிய புதிய ஜனனம் பயமென்னடா யமனிடம்
நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம் நம் கண்களில் நாளைய காவியம்
நாம் இட்டது இங்கொரு சட்டமாகக் கூடும்

பாடுங்கள் புதிய கீர்த்தனம் எழுதுங்கள் புதிய சாசனம் வாழட்டும் சமுதாயமே
ஆடுங்கள் புதிய தாண்டவம் அழியட்டும் பழைய தத்துவம் அச்சங்கள் நமக்கில்லையே
ஓர் நாளும் ஓய்வதில்லையே நம் போராட்டம் ஓர் நாளும் சாய்வதில்லையே நம் தேரோட்டம்
ஆரம்பம் ஆனந்த கீதம் தப்பாத தாளங்கள் நாம் போட….
தக தக திமி தக தக

விடிய விடிய நடனம் சந்தோஷம் விழியில் வழியும் தருணம் ஒன்றான
இளைய கரங்கள் எழுதும் மண்மேலே புதுயுகம்
பிறந்து பிறந்த எதுவும் நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும் மீண்டும்தான்
புதிய புதிய ஜனனம் பயமென்னடா யமனிடம்
நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம் நம் கண்களில் நாளைய காவியம்
நாம் இட்டது இங்கொரு சட்டமாகக் கூடும்

Idhayathai Thirudathe - Vidiya Vidiya Nadanam

இதயத்தை திருடாதே - ஓம் நமஹ உருகும் உயிருக்கு

ஓம் நமஹ உருகும் உயிருக்கு ஓம் நமஹ உயிரின் உணர்வுக்கு ஓம்
ஓம் நமஹ உணர்வின் உறவுக்கு ஓம் நமஹ உறவின் உயிருக்கு ஓம்

வான் வழங்கும் அமுத கலசம் வாய் வழியே ததும்பி ததும்பி வழியிதோ ஓ
தேன் பொங்கும் தெய்வ வடிவம் தோள் தழுவி தலைவன் மடியில் விழுந்ததோ

மூங்கிலில் காற்று நுழைந்து மோகனம் பாடுதா
நால்வகை நாணம் மறந்து நாடகம் ஆடுதா
ஆயிரம் சூரியன் நாடியில் ஏறுதா
ஆதியும் அந்தமும் வேர்வைகள் ஊறுதா
நூலாடை விலகி விலகி நீரோடை பெருகி வழியும் வேளை
முத்தங்கள் வைத்ததும் மூன்று உலகை மறந்த நெஞ்சுக்கு ஓம்

ஓம் நமஹ உருகும் உயிருக்கு ஓம் நமஹ உயிரின் உணர்வுக்கு ஓம்
ஓம் நமஹ உணர்வின் உறவுக்கு ஓம் நமஹ உறவின் உயிருக்கு ஓம்

செவ்விதழ் சேரும்போது ஜீவன்கள் சிலிர்த்தது
ஒவ்வொரு ஆசையாக உள்ளத்தில் துளிர்த்தது
மெல்லிய மேனியும் சில்லென ஆனது
வெட்கமும் சீக்கிரம் விடை பெற்றுப் போனது
ஏடென்று இதயம் இருக்க நூலொன்று இதயம் எழுதாதோ
இளமையின் இலக்கணம் எடுத்து சொல்லிய இளைய கன்னிக்கு ஓம்

ஓம் நமஹ உருகும் உயிருக்கு ஓம் நமஹ உயிரின் உணர்வுக்கு ஓம்
ஓம் நமஹ உணர்வின் உறவுக்கு ஓம் நமஹ உறவின் உயிருக்கு ஓம்

Idhayathai Thirudathe - Om Namaha

இதயத்தை திருடாதே - காட்டுக்குள்ளே பாட்டு சொல்லும்

காட்டுக்குள்ளே பாட்டு சொல்லும் 
கன்னிப் பூவும் நான்தானோ
கிட்ட வந்து கொஞ்ச சொல்லும் 
சின்னப் பொண்ணு நான்தானோ
நிழலாய் தான் ஓட நானோ உன் கூட

என் ஊர் என்ன

என்ன

என் பேர் என்ன

என்ன

நான் தான் யாரு

யாரு

என் வழி யாரு

கேகேகேகே

ஓ ஓ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ


எந்நாளும் ஆசைகள் என்னை விடுமோ
நீ தழுவ நான் வரவோ
இந்நாளில் சூடாகும் என் மனமும் 
கண் விழிமேல் நீ இல்லையோ
மோகினி பிசாசு என் இனம்தான் 
சாத்தானின் பேய் கூட என் நிழல்தான்
மோகினி பிசாசு என் இனம்தான் 
சாத்தானின் பேய் கூட என் நிழல்தான்

ஓ ஓ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ
ஓ ஓ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ
ஓ ஓ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ
ஓ ஓ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ} (ஓவர்லப்)

பருவத் துணை மயக்கி உன்னை 
பாய் போட நீ வாடா

காட்டுக்குள்ளே பாட்டு சொல்லும் 
கன்னிப் பூவும் நான்தானோ

ஆண்:பூத பிரேத பிசாசு வேதாள 
பேயின் ஜம்பம் ஜடம்பாம்பாம்

காட்டுக்குள்ளே பாட்டு சொல்லும் 
கன்னிப் பூவும் நீதானோ
கிட்டவந்து கொஞ்ச சொல்லும் 
சின்னப் பொண்ணு நீதானோ
நிழலாய்த் தான் ஓட 
நானோ உன் கூட
ஏன் சபலம் வருதா 
நீயும் காட்டுக்கு புதிதா
நீ மயங்கும் பொழுதா 
நானும் புடிச்சுக்க தோதா
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா 
ஓ ஓ ஓஹோ ஹோஹோ

ஹஹ்ஹா

ஹ்ரர்ர்ர்ரர்ர்ர்ர்

ஹஹ்ஹா

ஹ்ரர்ர்ர்ரர்ர்ர்ர்


வாவ் வாவ் வவ்வாவாவ் வாவ் வவ்வா
வாவ் வாவ் வவ்வாவாவ் வாவ் வவ்வா
ஹூவ்வா ஹூவ்வாஹூவ்வா 

ஆண்:ராத்திரி நேர பூஜைகள் எல்லாம் இப்போ இனிமேல்தான்
அருகினில் வருவேண்டி ஆசையில் தொடுவேண்டி
குண்டலி ஏற சொக்குற பூஜை இப்போ இனிமேல்தான்
சட்டுன்னு போடத்தான் சுள்ளுன்னு ஏறாதா

ஓ ஓ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ
ஓ ஓ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ
ஓ ஓ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ
ஓ ஓ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ} (ஓவர்லப்)

ஆண் :நில்லடி மானே போக்கிரிப் பெண்ணே 
பெண் பேய் உன்னைப் பார்த்தா
நாளொரு மோகம் ஏறிடும் கண்ணே 
அதுதான் அடங்காதா
நில்லடி மானே போக்கிரிப் பெண்ணே 
பெண் பேய் உன்னைப் பார்த்தா
நாளொரு மோகம் ஏறிடும் கண்ணே 
அதுதான் அடங்காதா
அடி ஆத்தி பட் பட் பட் பட்
விலகாதே ஜட் ஜட் ஜட் பட்
போப் பெண்ணே மயக்கங்கள் எதுக்கு நான் கூட

காட்டுக்குள்ளே பாட்டு சொல்லும் 
கன்னிப் பூவும் நீதானோ ஓ ஹஹா
கிட்ட வந்து கொஞ்ச சொல்லும்
சின்னப் பொண்ணு நீதானோ 
நிழலாய்த்தான் ஓட டொய்ங் டொய்ங்
நானோ உன் கூட
ஏன் சபலம் வருதா 
நீயும் காட்டுக்கு புதிதா
நீ மயங்கும் பொழுதா 
நானும் புடிச்சுக்க தோதா
ஆஹ ஆஹ ஆஹ ஆஹ ஆஹ ஆஹ ஆஹ ஆஹ

காட்டுக்குள்ளே பாட்டு சொல்லும் 
கன்னிப் பூவும் நீதானோ
கிட்டவந்து கொஞ்ச சொல்லும் 
சின்னப் பொண்ணு நீதானோ..ஒ..ஒ..

Idhayathai Thirudathe - Kattukulle Paatu Sollum

இதயத்தை திருடாதே - ஓ பாப்பா லாலி

ஓ பாப்பா லாலி 
கண்மணி லாலி 
பொன்மணி லாலி
பாடினேன் கேளடி

நான் தொடைகளில் தாங்கியே தாலாட்டிட
காதலன் குழந்தைதான் காதலி
செவ்விழி கலந்தது பூந்தென்றலில்
கொதித்ததா குளிர்ந்ததா கூறடி
தலை சாய்த்திட மடிபாய் மேல்
திருமேனிக்கு சுகமோ
எந்த நாளிலும் வாடாத
இளந்தாமரை முகமோ
இதைக் காப்பது என்றும் பார்ப்பது
இந்த தாய் மனமே

(ஓ பாப்பா லாலி)

மேகமே ஓரமாய் நீ ஒதுங்கிடு
இரைச்சலோ இடிகளோ வேண்டுமோ
குயிலியே பாடிவா என் பாடலை
நல்லிசை இதயத்தின் நாதமோ
எழும் சந்தமும் இனிதாக
அதன் ஓசைகள் சுகமோ
இந்த நாளொரு அலைபாய
வரும் ஆசைகள் கனவோ
எந்த ஆசையும் நிறைவேறிட
நல்ல நாள் வருமே

(ஓ பாப்பா லாலி)

Idhayathai Thirudathe - Oh Paapaa Laali

Followers